Tuesday, July 7, 2020

 
வயதானவர்களை கேலி செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா?Is there an increasing tendency to tease the elderly?


வயதானவர்களை கேலி செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா?இன்றைய காலக் கட்டத்தில் இளைய தலைமுறையினரால் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வயதானவர்களைத் தேவையில்லாத பெரும் சுமை என எண்ணும் மனநிலை அதிகரித்து வருகிறது. நிறையக் குடும்பங்களில் வயதானவர்கள் கேளிக்கைக்கு இலக்காகிறார்கள். காரணம் இனிமேல் அவர்களிடம் இருந்து பெற வேண்டியது எதுவும் இல்லை என்பதாலோ என்னவோ அல்லது சுயமாக நம் காலால் நிற்க முடிகிறது என்ற நினைப்பாலோ கூட இருக்கலாம்
 
அந்த முதியவர்களின் மனம் தங்கள் பிள்ளைகளை ஒரு பொழுதும் பெரும் சுமையாகக் கருதியதில்லை. தாங்கள் கஷ்டப்பட்ட நிலையிலும், எல்லாத் தருணத்திலும் பிள்ளைகளுக்கு நல்ல உணவையும், கல்வியையும் அவர்களின் தகுதிக்கு அதிகமாகவே தந்திருக்கிறார்கள். இப்படி வளர்த்தலின் பொருட்டு அவர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்த்து அவர்களுக்குப் பதிலுக்கு நன்றி உணர்ச்சியுடன் நம்மால் முடிந்த அளவிற்காவது அவர்களுக்கு வேண்டியதை நாம் செய்து கொடுக்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் பல சமயங்களில் அவர்களின் மனதைக் காயப்படுத்துவதுதான் நடக்கிறது.


பல சமயங்களில் அவர்களின் சுயமரியாதை கேள்விக்குறியாகிறது. சிறிய சிறிய நலவிசாரிப்புகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்ல, தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள உலகை அறிந்துகொள்ள, தம்மோடு இயல்பாய் புன்னகை பூத்திட எல்லா நாட்களிலும் தவமியற்றுகின்றனர். (எங்களது உறவினர் அமெரிக்காவில் வசிக்கிறார் அவர்களது உதவிக்குப் பெற்றோர்களை இங்கு அழைத்து வந்து இருக்கிறார். அவரின் பெற்றோர்களிடம் பேசும் போது அவர்கள் தங்களை மகளைப் பற்றிச் சொல்லும் போது குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கிப் பேசுகிறாள் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்கிப் பேசுகிறாள் ஆனால் அவளது குழந்தைகளைக் கவனிக்க வந்த எங்களுடன் நேரம் செலவழித்துப் பேசத்தான் அவளுக்கு நேரம் இல்லை ....)முதியவர்கள் உணவு சாப்பிடும் போது இலையின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலை இலைகளா என்ன?உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளைத் துறந்து ஓடி ஓடி உழைத்த பெற்றோர்கள், தங்களின் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளைய தலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும், வயதானவர்கள் சின்னம் சிறிய சில எளிய ஆசைகளைக் வெளிப்படுத்துப் போது குறித்து "பெரிசுக்கு இந்த வயசிலும் வந்த ஆசையைப் பாருய்யா என்று கிண்டல் அடித்து அவர்களின் மனதை நோக அடிக்கக் கூடாது... உதாரணமாக வயதானவர்கள் குழந்தைத்தனமான விருப்பத்துடன் ஐஸ்கீரீமோ பீட்சாவோ இனிப்போ பிரியாணியோ அல்லது நல்ல டீ சர்ட்டாகவோ ஆசைப்பட்டுக் கேட்டால் அதைக் கிண்டல் கேலி செய்யாமல் முடிந்தால் நிறைவேற்றுவதுதான் நாம செயலாக இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் அது அவரது குழந்தைகளுக்குச் சிரிப்பும் எரிச்சலும் தருகிறதென்றால் பிரச்சினை வயதானவர்களிடம் அல்ல . நம்மிடம்தான் இருக்கிறது. தாங்கள் சம்பாதிக்கும் போது ஆசைகளை எல்லாம் அடக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு நமக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தவர்கள்தான் இந்த வயதானவர். அப்படிப்பட்டவர்கள் ஆசைப்பட்டாலோ அல்லது ஆசைபடமலோ இருந்தாலும் கூட அவர்களது தேவைகளை நாம் பூர்த்திச் செய்வது முக்கியமானது.


முதிர்வதில் ஏற்படும் அவர்களுக்குச் சின்னம் சிறிய ஆசைகள் மட்டுமல்ல மன அழுத்தங்களும் ஏற்படுகின்றன வயது முதிர்ந்தவர்களுக்குக் கீழ்க்கண்ட சூழ்நிலையினால் பிரச்சனைகள் தோன்றலாம் .கணவன் அல்லது மனைவி இழந்த நிலை மற்றும் மிகவும் நெருக்கமானவர்களின் இறப்பு. வயதானவர்களைக் கவனிப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடன்பிறப்புகள், உறவினர்களின் நோய், இறப்பைப் பற்றிய பயம்
பொருளாதாரப் பிரச்சனை மற்றும் சுதந்தரமற்ற நிலை.சமூகத்தில் தனித்துவைக்கப்படல் மற்றும் தனித்தநிலை

கீழ்க்கண்ட பிரச்சனைகளாலும் அவர்கள் மனநிலை பாதிக்கப்படும். சோர்வு, பயம், தனிமை, அர்த்தமற்ற வாழ்க்கை மற்றும் குறிக்கோள் இல்லாமல் இருத்தல். படபடப்பு, கோபம், திறமை அ) வலிமையற்ற நிலை மற்றும் மன அழுத்தம். இதையெல்லாம் புரிந்து அவர்களுக்கு நாம் ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர அவர்களைக் கிண்டல் கேலி செய்து கொண்டு நாம்தான் மிகப் புத்திசாலி என்று கருதக்கூடாது... Life is Very Short. காலம் மிக யாருக்காகவும் கட்டுப்படுவதில்லை அது பாட்டில் வேகமாக ஒடிக் கொண்டு இருக்கும். கண்ணைத் திறந்து மூடுவது போல இளம் வயதினராக இருக்கும் நம்மை வயதானவர்களின் இடத்தில்  கொண்டு வந்து நிறுத்திவிடும்.
ஒன்று மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் முதிய பருவத்தைத் தொட்டவுடன் அவர்களின் வாழ்வு ஒன்றும் அஸ்தமிப்பதில்லை. அவர்களுக்கும் பொழுது விடிந்து கொண்டடுதான் இருக்கின்றது.அன்புடன்
மதுரைத்தமிழன்


12 comments:

 1. இன்றைய சூழ்நிலையில் அவசியமான பதிவு..விரிவான பதிவுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார் வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete
 2. அருமையான கட்டுரை நண்பரே மிகவும் பொருப்புடன் எழுதியமைக்கு வாழ்த்துகள். நாமும் நாளை முதியவராவோம் என்பதை மறக்ககூடாது. எனக்கும்கூட சில விசயங்களை உணர்த்தியது நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி நாம் அல்ரெடி முதியவர்களாகிவிட்டோம். ஹீஹீ .வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete
 3. இன்று தப்பு செய்தால், இரு மடங்கு திரும்ப கிடைப்பது உறுதி...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் தப்பி செய்யும் போது தண்டனைகளைப் பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை.. தண்டனைகளை அனுபவிக்க போதுதான் எண்ணி பார்க்கிறார்கள் தங்களின் தவறுகளை....வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete
 4. அனாவசியச் சுமை என்று நினைக்காவிடினும் சில இடங்களில் நேரம் செலவழித்து அவர்களுடன் பொறுமையாகப் பேசுவதைத் தவிர்க்கின்றனர்.  மீண்டும் மீண்டும் கேட்கப்படும் அவர்களின் கேள்விகள் அலட்சியப்படுத்தப் படுகின்றன என்பது வேதனமோயான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. உலகின் எதோ ஒரு மூலையில் உள்ள முகம் அறியாத பலருடன் இணையங்கள் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களுடன் நேரம் செலவழிக்க முயற்படும் பலருக்கும் தங்களை கஷ்டபட்ட்டு வளர்த்த நம் அருகில் இருக்கும் பெற்றோர்களுடன் நேறம் செலவழிக்க இயலாமல் இருப்பதுதான் இந்த காலத்தில் இருக்கிறது ஸ்ரீராம் இது நிச்சயம் வருந்த தக்கதுதான்... வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete
 5. மதுர ..

  இதுல ஒரு விஷயம் பாரு... அம்மா அப்பாவை நீ பாத்துக்கோ எனக்கு சில பிரச்சனை, அது இதுன்னு சொல்றவங்க எல்லாம் பிள்ளை பெத்துக்குற நேரத்துல மட்டும் ..

  அம்மாவை அனுப்பி வை .. அப்பாவை அனுப்பு வைன்னு சண்டை போடுவாங்க. இங்கே அவங்கள வர வைச்சி வேலைக்க்கு ஆள் வைச்ச மாதிரி பண்றங்க. இன்னும் ஒன்னு.

  இதுக்கு மொத்த காரணமே பணம் தான். டே கேர் அனுப்புனா இம்புட்டு. வேளைக்கு ஆள் வைச்சா இம்புட்டுன்னு பெற்றோர் பிள்ளைகள் எல்லாருமே சேர்ந்து பணத்தை சேக்குறதுக்குக்கான வழிமுறை தான் இது.


  இதுல பாசம் நேசம் அன்பு எல்லாம் சும்மா வீண் பேச்சு. அம்புட்டும் பணத்துக்கும். பிள்ளைகளை மட்டும் தப்பு சொல்லமாட்டேன். இதுக்கு பெற்றோர்களும் தான் கரணம்.

  மற்றபடி... என்னை பொறுத்தவரை மூத்தவர்களை மதிக்குறது நம்ம பெற்றோர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது தான். அவங்கள பாத்து தான் நாம வளர்ந்தோம். நம்ம எப்படி நம்ம பெற்றோர்களை பாராடுறோம்ம்னு நம்ம பிள்ளைகள் பாக்குறாங்க.

  It is a circle of life Mathura, Hakuna Mataada!

  என் பொண்ணுங்க.. இவரு ஏன் பாட்டிம்மாக்கு இப்படி பயப்படுறாருன்னு இன்னுமும் சொல்றாங்களே. நம்ம கொடுத்து வைச்சிக்கங்க தான் ... மூணு தலைமுறை அம்ம்மணிகளோடு வாழ்வது எத்தனை பேருக்கு அமையும்.

  நல்ல தலைப்பில் யோசிக்க வைக்கும் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களில் பெற்றோர்களும் இதற்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்,, வளர்க்கும் போது உறவையும் நட்பையும் நாலு பேருக்கும் உதவும் மன்ப்பான்மையையும் சொல்லி வளர்க்காவிட்டால் கடைசி காலங்களில் இப்படித்தான் வருத்தப்படவைக்கும் விசு வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete
 6. அருமையான பதிவு.

  அவர்கள் கையை ஆதரவாய் பிடித்துகொண்டு அம்மா, சாப்பிட்டீர்களா? என்று கேட்டாலே அந்த பெற்றோர் மகிழ்ந்து இன்னும் கொஞ்சம் வேலையை இழுத்துப்போட்டு செய்வார்கள். அன்பு அது தரும் தெம்பு.

  அவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

  கொரோனா காலத்தில் ஊருக்கு வந்து பார்க்க முடியாத காரணத்தால் போனில், ஸ்கைப்பில் பேசி மகிழ்ச்சி படுத்தலாம்.
  எங்களிடம், பேரன், பேத்திகள், பேசி , விளையாடி கொண்டு இருக்கிறார்கள். வேறு என்ன எதிர்பார்க்க போகிறோம் நாங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதியம்மா நீங்கள் சொல்வதும் சரிதனாம்மா ஆனால் சில குடும்பங்களில் இப்படி ஆறுதலாக கை பிடித்து பேசும் சமயங்களில் எப்போதும் குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்க கூடாது கை பிடித்து பேச வருபவர்களின் மனதிற்கு ஆதரவாகவும் சில சமயங்களாவது பெரியவர்களும் பேச வேண்டும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வருகைக்கும் தங்களின் கருத்து பகிர்விற்கும் நன்றிகள்

   Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.