Sunday, June 28, 2020

 
I support tamilnady police. #people of the Tamilnadu blaming and criticizing only  police
போலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்


சாத்தான்குளம் படுகொலை சம்பவத்திற்கு இரு காவலர் முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்...அவர்களைக் காவலர் என்று சொல்வதற்குப் பதிலாகக் காவலர் உடையில் ஒழிந்திருக்கும் கிரிமனல்கள் என்று கூடச் சொல்லாம்... இந்தச் சம்பவம் மிகப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கதக்கதுதான் அதில் சிறிதும் மாற்றம் இல்லை. இப்படித் தவறு செய்யும் காவல்துறையினர் மீது கட்டாய நடவடிக்கை வேண்டும் தான் இல்லையென்று கூறவில்லை.ஆனால் இதுதான் சாக்கு என்று தமிழகத்தில் உள்ள ஆட்டு மந்தைக்கூட்டங்கள் எல்லாப் காவலரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறது மற்றும் அவர்களைக் கேவலப்படுத்திப் பதிவுகள் கண்டனங்கள் மீம்ஸ்கள் போட்டுக் கொண்டு இருக்கின்றனர்

  
போஸீஸ்சார் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்...இப்படி குற்றம் சாட்டுபவர்கள்தான் பல சமயங்களில் காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் போது ஆரவாரித்து மகிழ்கிறார்கள். லாக்கப்பில் இருக்கும் குற்றவாளிகள் வழுக்கி விழுந்த போது அதற்கு ஆரவாரித்து மகிழ்கிறார்கள்...என் கவுண்டரில் சுட்டுக் கொள்ளும் போதும் ஆராவரிக்கிறார்கள்அப்படி நடக்கும் போது ஆதரவு அளிக்கிறார்கள் காரணம் நீதி சரிவரக் கிடைப்பதில்லை அதனால் காவல்துறை செய்வது சரிதான் என்று சொல்லுகிறார்கள்.

நீதி சரிவரக் கிடைக்கவில்லை என்றால் அதற்குக் குற்றம் சொல்ல வேண்டியது நீதித்துறையையும் அதற்கு ஆதரவாக இருக்கும் தலைவர்களையும்தானே...ஆனால் அப்படிக் குறை சொல்ல யாருக்கும் மனது வரவில்லை...

நாட்டை ஆளும் பிரதமர் முதல் முதல்வர் மற்றும் ஆளுநர் வரை காவல்துறை துறை நீதித்துறையைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு தங்களின் சொந்த சுய நல லாபங்களுக்கு அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறார்கள். நாட்டில் மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் கிரிமனல்கள் போன்றவர்களைக் காவல்துறை பிடிக்க முடிந்தாலும் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பிப் போவதற்குக் காரணம் யார் காவல்துறையா அல்லது குற்றவாளிகளுக்குத் துணை போகும் நம்மை ஆளும் தலைவர்களா? வானாளவிய அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் சுயநலன் களுக்காக அதிகாரத்தை பயன்படுத்தும் போதும் போஸீஸ்துறையை சார்ந்தவர்கள் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்கள தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்


தூத்துக்குடியில் 13 பேரைச் சுற்றுக் கொண்டது வேண்டுமானால் போலீஸ்சாரக இருக்கலாம் ஆனால் அதை அவர்களாகவே செய்து இருக்கமாட்டார்கள். தமிழகத்தை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கொடுத்த உத்தரவுகளால் மட்டுமே அந்தப் போலீஸ்காரகள் செயல்பட்டு இருக்கிறார்கள். அப்படியானால் அந்த 13 பேர் சாவிற்குக் காரணமான அந்தத் தலைவரும்தானே கிரிமனல்தானே.

அந்தக் கிரிமனலை நாம் என்ன சொல்லுகிறோம் அவர் திறமையாக ஆட்சியைத் தக்க வைத்துச் சிரித்துக் கொண்டு ஆட்சி செய்கிறார் என்றுதானே பாராட்டுகிறோம் அந்தக் கிரிமனலுக்கும் இந்தச் சாத்தான்குளம் படுகொலை சம்பவத்திற்குக் காரணமான இரு போலீஸ்சாருக்கும் என்ன வித்தியாசம்.. இந்தச் சாத்தான் குளத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் மட்டும்தான் பாதிப்பிற்கு உள்ளானதா?


போலீஸ்சார் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று ஒட்டு மொத்தமாகக் குற்றம் சாட்டுகிறோம் அப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று பார்த்தால் ஏசி அறைக்குள் உட்கார்ந்து ஒரு சில கையெழுத்துக்கிற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்களும்தான்..... நீங்கள் இப்படிச் செய்வது குற்றம் இல்லை ஆனால் போலீஸார் லஞ்சம் வாங்கினால் அது குற்றமாம்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதைப் பலரும் கேலி செய்கிறார்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள் இப்படி மோசமாகவா இருப்பார்கள் என்று கேள்வியும் கேட்கிறார்கள் அப்படிக் கேள்வி கேட்டவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்.காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லும் போது அந்த நண்பன் இராப்பகலாக வெயில் மழையில் நனைந்து  பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு ஊரைவிட்டு நமக்காகத் தலைவர்களின் கூட்டங்களுக்காக கோயில் திருவிழாக்களுக்காகப் பணியாற்றும் போது அந்தப் போலீஸ் நண்பர்களுக்காக நாம் என்ன செய்தோம் வெயில் காலங்களில் நட்ட நடுரோட்டில் அவர்கள் பணியாற்றும் போது அவர்களுக்குக் குளிர் பானங்கள் ஏதும் வாங்கித் தந்தோமா? விழக்காலங்களில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று அங்குப் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தோமா? போலீஸ்காரர்கள் என்ன லட்சக்கணக்கிலா சம்பாதிக்கிறார்கள் அவர்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் போது அவர்களுக்கு நாம் உதவித் தொகை ஏதும் தந்து உதவினோமா என்ன? அப்படி நாம் ஏதும் செய்யாமல் போலீஸ்சார் நம் நண்பன் அவர்கள் மட்டும் நமக்கு உதவ வேண்டும் நாம் அவர்களுக்கு ஒன்றும் செய்யக்கூடாது என்று நினைக்கும் நம் கேடுகெட்ட மனப்பான்மையை என்ன வென்று சொல்வது

காவல்துறையைச் சார்ந்த குடும்பங்களுக்குப் பால் முகவர்கள் பால் வழங்கமாட்டார்களாம் என்ன ஒரு ஆணவம்.... ஏதோ ஒரு சிலர் செய்யும் தப்புக்கு ஒட்டு மொத்த துறையைச் சார்ந்த குடும்பங்களைப் பழி வாங்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு வேளை இது போலப் போலீஸ்சாரும் பாலில் தண்ணீர் கலந்து விற்கும் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த பால் முகவர்கள் அனைவரின் மீது வழக்குப் பதிந்து தினமும் அவர்களை நீதிமன்றம் படி ஏற வைக்கலாம்தானே

இப்படித்தான் தமிழக மக்கள் ஆட்டு மந்தைக் கூட்டங்களாகச் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில டாக்டர்கள் செய்யும் தவறுகளுக்காக டாக்டர்களை ஒட்டு மொத்தமாகக் குறை கூறினார்கள் கேலி செய்தார்கள் ஆனால் அந்த டாக்டர்கள்தான் இப்போது தங்கள் உயிரையும் பணயம் வைத்து இராப்பகலாக இந்தக் கொரோனா காலங்களில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் யாரோ ஒருவர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக அந்தத் தொழிலைச் செய்பவர்களையோ அல்லது சாதி மற்றும் மதத்தைச் சார்ந்தவர்களையோ குறை சொல்லாதீர்கள்.. தவறு செய்பவர்கள் யார் என்று பார்த்து அவர்கள் தண்டனை பெறும் வரை போராடுங்கள் அதுதான் படித்தவர்களுக்கும் அறிவார்ந்த சமுகத்திற்கும் அழகு



குடித்துவிட்டு வண்டி ஒட்டுவோம்
ஹெல்மேட் அணியமாட்டோம்
உரிமம் வைத்திருக்கமாட்டோம்.
பள்ளிச் சிறுவர்களுக்கு வயதிற்கு வரும் முன் பைக் வாங்கிக் கொடுத்து ஒட்டச் சொல்லி அழகு பார்ப்போம்
மாஸ்க் போடமாட்டோம் ....
ஊரடங்கைக்கடைப்பிடிக்கமாட்டோம்...
இபாஸ் இல்லாமல் பயணம் செய்வோம்....
அல்லது போலி இபாஸ்ஸை பணத்திற்காக விற்போம்
இப்படி இது போலப் பல செயல்களை மீறுவோம் அப்படிச் செய்யும் போது நம்மை யாரும் எதுவும் செய்யக்கூடாது கேள்வி கேட்கக்கூடாது,
காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை கண்டும் காணாமல் போக வேண்டும் அப்படிக் காவல் துறை செய்தால் அவர்கள் நல்லவர்கள் அப்படி இல்லாமல் ஒருவேளை அவர்கள் கேள்வி கேட்டால் அவர்களை மிரட்டுவது அல்லது குறை சொல்லுவது...

இப்படி எல்லாம் செய்துவிட்டு இறுதியில் நியாயத்திற்காகப் போராடுவது போல நடிப்பது. அடே உங்களை எல்லாம் என்ன செய்யலாம்




அன்புடன்
மதுரைத்தமிழன்


http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

19 comments:

  1. கடைசியாக போல்டில் சொன்னதும், அதன் கீழே சொல்லியிருப்பதும் மிகவும் சரியே மதுரை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹை மீதான் 1 ஆ

      கீதா

      Delete
    2. என் தளத்தில் மீ பர்ஸ்ட் வருவது எளிது ஏனென்றால் சைலண்ட் வாசகர்கள் படித்துவிட்டு சைலண்டாக போய்விடுவார்கள் இங்கே வந்து கருத்து சொல்பவர்கள் சில பேர்தான் ஹீஹீ

      Delete
    3. கருத்து சொல்வாங்க. ஆனா நீங்க பெரும்பாலும் மறுமொழி கொடுக்க மெனெக்கிடறதில்லையே.

      Delete

    4. நெல்லைதமிழன் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதில் சொல்லி இருக்கிறேன் சொல்லி இருப்பேன் சொலுவேன்..... தளம் ஆரம்பித்த காலங்களில் கருத்துக்களை எதிர்ப்பார்த்தேன் ஆனால் இப்பொழுது யாரிடமிருந்து கருத்துகளை எதிர்பார்ப்பது இல்லை.... முக்கியமாக அரசியல் பதிவுகள் அதிகம் எழுத ஆரம்பித்த பின் சிலர் அல்ல பலர் பொது வெளியில் இட வேண்டாம் என்று சொல்லி தங்கள் கருத்துக்களை இமெயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள். அவர்களின் ஆதரவினால்தான் நான் இன்னும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் இட்டுவருகிறேன்.

      Delete
  2. https://www.hindutamil.in/news/opinion/columns/561635-the-world-after-post-covid-19.html.

    இன்றைய செய்திகளில் அமெரிக்காவின் நிலை பற்றி கருத்து

    ReplyDelete
  3. https://www.hindutamil.in/news/opinion/columns/560978-america-in-danger.html

    ReplyDelete
  4. இடுகையின் முதல் பாதியைப் படித்த உடனே எனக்கு, சாலை விதிகள் எதையும் கடைபிடிக்காமல் போகும் மக்களுக்கு போலீஸ்காரர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல என்ன உரிமை இருக்கு என எழுதணும்னு நினைத்தேன். நீங்களே மாக்கள் செய்யும் தவறுகளைக் குறிப்பிட்டிருக்கீங்க.

    நம்மைக் கண்ணாடியில் எப்போதும் பார்த்துக்கொள்வதுதான் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் தவ்று செய்கிறார்கள் ஆனால் பாதிப்பு தங்களுக்கு என்றால் உரிமைக் குரல் எழுப்புகின்றனர் அவ்வளவுதான்

      Delete
  5. நீதி சரிவரக் கிடைக்காததற்கு வழக்கறிஞர்கள் போர்வையில் இருப்பவர்களும், அரசியல்வாதிகளும் நீதித்துறையும்தான். யாராவது வழக்கறிஞராக இருப்பவரோ இல்லை நீதித்துறையினரோ உண்மையை எழுதினால் நமக்கெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இது எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது என்பதால் அதிர்ச்சி எல்லாம் இருக்காது... வேண்டுமென்றால் சிறிது நாள் பேசப்படும் பொருளாக இருக்கும் அவ்வளவுதான் நெல்லைத்தமிழன்

      Delete
  6. "தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்" என்று சொல்லும் அடிமையை என்ன செய்வது...?

    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பட்ட அடிமையும் நன்றாக தொடர்ந்து ஆட்சி செய்கிறார் என்று மனது நண்பர்களே பதிவுகள் போடுகிறார்களே அவர்கலை என்ன சொல்வது.... ?

      Delete
  7. நான் போலிசாரை மட்டும் குற்றம் சொல்லவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்படியிருக்க, ஆட்டுமந்தைக்கூட்டங்கள்தான் தமிழக மக்கள். என்னையும் சேர்த்தோ? சற்று நெருடலாக உள்ளதே?

    ReplyDelete
    Replies

    1. இங்கு தவறு செய்யும் தமிழக மக்களைத்தான் ஆட்டுமந்தைகள் என சொல்லி இருக்கிறேன்

      Delete
  8. இதோ என் மலர்க்கொத்தை பிடியுங்கள் மதுரைக்காரரே! மீண்டும் உங்களிடமிருந்து மிக சிறந்த நடுநிலையான ஒரு பதிவு.
    தமிழ்நாட்டில் மட்டும் இல்லை எங்கும் இப்படித்தானே நடக்கிறது? அமெரிக்காவில் கூட ஒரு திருடனை தியாகியாக்கியதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.

    ReplyDelete
    Replies

    1. என் மனதிற்கு எது சரியெனபட்டதை எழுதி இருக்கிறேன்.... அவ்வளவுதான் நடுநிலை பதிவு எழுத வேண்டும் என்று எழுதவில்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.