கொரோனா பாதிப்பிற்கு அப்புறம் நீயூஜெர்ஸியும் நானும்
கொரோனாவால் பாதித்த நானும் என் மனைவியும் பூரணக் குணமடைந்துவிட்டோம். எனக்குத் தெரிந்த எங்கள் நட்பு வட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் இரண்டு பேர் மட்டுமே.... என் நிறுவனத்தில் என் கிளையில் என்னைச் சேர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பேர். நாலு பேரும் வேலைக்குத் திரும்பிவிட்டோம்....கொரோனா காலத்திலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து இயங்கியது. அதுமட்டுமல்ல 2வது காலாண்டில் எனது கிளைஅதிக லாபம் ஈட்டியதால் எங்களுக்குப் போனஸும் கிடைத்தது. ஒவ்வொரு காலாண்டிலும் எங்களுக்குப் போனஸ் கிடைத்துவிடும் அது போலக் கொரோனா பாதித்த காலத்திலும் அது தடைபடாமல் கிடைத்ததது.
எனது மனைவியின் நிறுவனம் இன்னும் திறக்கப்படவில்லை அது திறக்க நாலு ஐந்து மாதங்களுக்கு மேலாகும். அதனால் அவர் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் என் மனைவியின் நிறுவனத்திலிருந்து வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்காக அனைவரும் இரண்டு பெரிய மானிட்டரையும் கீ போர்ட் மற்றும் மவுஸ்ஸையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள் அதை அவர்களின் மடிக்கணினியில் இணைத்து வேலை பார்க்க வேண்டும்.
எனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் முதலில் டெம்ரெச்சர் செக் செய்து பார்த்துவிட்டு அதன் பின் தான் அனுமதிப்பார்கள். இப்போது கொரோனா தீவிரம் குறைந்துவிட்டதால் அதுவும் கழுதை தேய்த்துக் கட்டெறும்பு ஆனா கதையாகிவிட்டது... அது போலக் கணணியையும் அடிக்கடி சுத்தம் செய்வதும் குறைந்து போய்விட்டது...அதை இப்போது யாரும் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை. எங்கள் நிறுவனம் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் அனைவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் எங்கள் நிறுவனத்திற்கு வருபவர்கள் அனைவரும் அணிந்து வருகிறார்கள் ஆனால் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் மாஸ்க் அணிந்து இருந்தாலும் பலரும் மூக்கிற்குக் கீழ்தான் அணிந்து வேலை செய்கிறார்கள். கொரோனவிற்கு முன்பு கை குலுக்கும் பழக்கம் உண்டு ஆனால் அதற்குப் பதிலாக இப்போது சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் பஞ் செய்து கொள்கிறோம்
எனது டிபார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர்கள் என்னை மிஸ் செய்தார்களோ இல்லையோ ஆனால் நான் அடிக்கடி வாங்கிச் செல்லும் டோனட்டையும் சமோசாவையும் நிறையவே மீஸ் செய்துவிட்டார்கள் நான் வேலைக்குத் திரும்பிய முதல் நாள் டோனட்டை வாங்கிச் சென்றதில் அவர்களுக்கு முகம் எல்லாம் சந்தோஷம் சில நாட்கள் கழித்துச் சமோசா எடுத்துச் சென்றதில் மிக மிகச் சந்தோஷம். எதுவும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குச் சந்தோஷம் இல்லாமலா இருக்கும்
என் கூட வேலைப் பார்ப்பவர்களைச் சந்தோஷப்படுத்தினால் மட்டும் போது நானும் சந்தோஷமாக இருந்தால்தானே நல்லது அதனால் நான் சந்தோஷமாக இருக்க வோட்காவை அருகி மகிழ்ந்தேன்
நாங்கள் வசிக்கும் மாநிலமான நீயூஜெர்ஸியில் இப்போது கொரோனா தீவிரம் குறைந்துவிட்டது எனச் சொல்லலாம். எங்களைப் போலப் பொது இடங்களில் வேலை செய்பவர்கள் தைரியமாக உலாவ ஆரம்பித்துவிட்டார்கள் ஆனால் என் மனைவி போல வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள்தான் இன்னும் பயந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த மாதம் 22ம் தேய்யில் இருந்து சலூன் கடைகள் திறந்ததால் முதல் காரியமாக முடி வெட்டிக் கொண்டேன்... அப்ப முடி வெட்டிய பிறகு கிடைத்த சுகம் அலாதியானது. பெண்ணுடன் உறவு கொள்வதா அல்லது முடி வெட்டிக் கொள்வதிலா எதில் சந்தோஷம் அதிகம் என்றால் என்னைப் பொருத்தவரை உறவைக் கூடத் தள்ளிப் போட்டுக் கொள்ளாலாம் ஆனால் முடிவெட்டாமல் இருப்பதுதான் கடினம் என்பேன்
இன்றிலிருந்து நீயூஜெர்ஸி நீயூயார் கனடிக்கெட்டைச் சேர்ந்த மாநில ஆளுநர்கள் பிற மாநிலங்களிலிருந்து அதுவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் ரூல்ஸ் கொண்டு வந்து இருக்கிறார்கள்
இங்குக் கொரோனா தீவிரமாக இருந்த காலங்களில் டாய்லெட் பேப்பருக்கு மிகவும் தட்டுப்பாடாகிக் கிடைப்பதே அரிதாக இருந்தது.. இப்போது அது தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது... ஆனால் சைக்கிளுக்கு மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது... அதுமட்டுமல்ல வீட்டிற்கு வெளியே பயன்படுத்து மரங்களுக்கு மிகவும் தட்டுபடாகி இருக்கிறது இது நீயூஜெர்ஸியில் மட்டும் ஏற்பட்ட தட்டுப்பாடு அல்ல அமெரிக்க முழுவதும் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடாக மாறி இருக்கிறது..

கொரோனா வைரஸ் சிகிச்சை அனுபவ பதிவு
http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
அனைத்தும் எங்கும் சரியாகட்டும்...
ReplyDeleteஇங்கேயும் நடைமுறை வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது என்று தான் சொல்ல வேண்டும் மதுர, இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களின் கொரோனா எண்ணிக்கை கொஞ்சம் அதிகமா இருப்பதை பார்த்தால் டென்ஷன் தான்.
ReplyDeleteஇங்கேயும் சலூன் திறந்தபடியால் மீண்டும் எந்த நேரத்திலும் மூடுவார்கள் என்று முன்னேர்ச்சரிக்கையாக மொட்டை போட்டு கொண்டேன்.
போனஸ் வந்தது நல்ல விஷயம், வோட்க்கா வாழ்த்துக்கள்.
ஹ்ம்ம்.. ரெண்டுமே எனக்கு இல்லை!
கொரோனாவை விட்டு வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteசூழல் எல்லா இடங்களிலும் சரியாகட்டும்.
கொரோனாவின் பிடியிலிருந்து வெளிவந்தமையறிந்து மகிழ்ச்சி. இயல்பு நிலைக்கு வாழ்வு திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteகொரோனவிலிருந்து மீண்ட தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். புதிய வாழ்க்கை மேலும் சிறப்பாக அமைய எனது பிரார்த்தனை..!
ReplyDeleteநீங்களும் உங்கள் மனைவியும் மீண்டு நல்லப்டியாகக் குணமானது மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்கள் பகுதியில் குறைந்து இயல்பு நிலை தொடங்கியிருப்பதும் மகிழ்வான விஷயம். உலகம் முழுவதும் சீக்கிரம் இயல்பு நிலை வந்திட வேண்டும்.
உங்கள் நலத்திற்கு எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
துளசிதரன்
கீதா
போனஸ் கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteதுளசிதரன்
கீதா