Thursday, June 25, 2020

We are not anti-police, we are anti-police brutality. #Sathankulam
போலீஸ் உடைக்குள் ஒழிந்து இருக்கும் சாத்தான்குளம் கிரிமனல்கள்


சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலை மிக அதிர்ச்சி அளிக்கக் கூடியதுமட்டுமல்ல கண்டிக்கக் கூடியதும்தான்...இன்றைய காலங்களில் மன உலைச்சல் என்பது எல்லோருக்கும் அதிகரித்து இருக்கிறது. அதுவும் கொரோனா காலத்திற்குப் பிறகு அது இன்னும் அதிகரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகள் காவலர்கள் மருத்துவர்கள் செவிலியர் சிறு தொழில் அதிபர்கள் மன உலைச்சலில் இருக்கிறாகள். அதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்திப்பதே இல்லை
  

மருத்துவர்கள் எப்படி மக்களைக் காக்கப் போராடுகிறார்களோ அது போலத்தான் காவல்துறையும் மக்களையும் மக்கள் நலனையும் காக்க உழைக்க வேண்டும்...மருத்துவர்களின் புனித தொழில் போலத்தான் காவல்துறையின் தொழிலும்...ஆனால் இப்போது இது உலகெங்கிலும் மாறிக் கொண்டு வருகிறது எனச் சொல்லலாம்.


காவலரின் வேலை சட்ட ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமல்லாமல் தவறு செய்வார்களைத் தடுத்து அப்படித் தவறு செய்பவர்களைச் சட்டத்திற்கு முன்பு அழைத்துச் சென்று தண்டனைகள் வாங்கித் தருவது மட்டுமே .ஆனால் இப்போது உள்ள காவலர்கள் அதைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தண்டனைகளை அவர்களே தருகிறார்கள்... அதாவது நீதியை, அவர்கள் நீதிபதிகளின் கையில் கொடுக்காமல் அதை அவர்களிடம் இருந்து தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்..
 
இன்றைக் காலக் கட்டங்களில் போலீஸ்சார் மட்டுமல்ல தலைவர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சேவை மனப்பான்மை என்ற எண்ணமே இல்லாமல் சுயநலம் மற்றும் சுயக் கெளரவத்துடனும் மட்டுமே வாழ்கிறார்கள்...அதனால்தான் எங்கெங்கும் எதிலும் பிரச்சனைகள்.

இந்தச் சாத்தன் குள படுகொலையில் காவலரை மட்டும் நோக்கி நம் கைவிரல் நீண்டும் அதே நேரத்தில் அதே கைகள் இறந்தவர்களையும் நோக்கியும் சென்று இருக்கவேண்டும்.. இறந்தவர்கள் மட்டும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேர அளவில் மட்டும் கடை திறந்து வியாபாரம் பண்ணி இருந்தால் இப்படி ஒரு பிரச்சனையே வந்து இருக்காது அல்லவா? அப்படியே திறந்து இருந்த போதிலும் போலீஸ்சார் வந்து கடை அடைக்கும் சொல்லும் போது சாரி சார் என்று ஒரு வார்த்தை சொல்லி உடனடியாகக் கடையை அடைத்திருந்தால் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்குமா என்று யோசிக்க வேண்டும் அப்படிச் சாரி கேட்கவில்லையென்றாவது பரவாயில்லை அதிகாரத்தை எதிர்த்துப் பேசினால் அந்த அதிகாரம் கொண்டவர்கள் பேசாமல் வாய்மூடிக் கொண்டிருப்பார்களா என்ன?

வலிமை குன்றியவர்கள் மீதுதான் காவல்துறை அதிகாரத்தைக் காட்டுமா என்றால் காவல்துறை மட்டுமில்லை உலகெங்கும் வலிமை குன்றியவர்கள் மீதுதான் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள் .அதிகார வலிமைமிக்க நாடுகள் அதிகாரம் குறைந்த நாடுகளின் மீது தம் வலிமையைச் செலுத்தும் .சீனா இந்தியாவின் மீது அதிகாரத்தைச் செலுத்தி எல்லைக்குள் நுழைந்து அடிக்கிறது அது போல இந்தியா வலிமை குன்றிய பாகிஸ்தான் நாட்டை அடிக்கிறது... அது போல அதிகாரம் மிக்கத் தலைவர்கள் மற்றவர்களின் மீது தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுகிறார்கள் உலக நாடுகளின் தலைவர்களுடன் பம்மும் மோடிதான் உள்ளுர் தலைவர்களிடம் தம் அதிகாரத்தைச் செலுத்தி தம் நெஞ்சை நிமி
ர்த்தி காட்டிக் கொண்டு இருக்கிறார்.


இந்தப் காவல்காரர்களின் தவறனான முடிவால் ஒரு தந்தையும் மகனும் செத்து இருக்கிறார்கள்.. நாமும் உடனே அதற்காகப் காவல் துரை அதிகாரத்தைப் பற்றி இன்னும் ஒரு சில நாட்கள் பேசிக் கொண்டிருப்போம் .ஆனால் அது போல மோடியின் தவறான கொள்கைகளால் எத்தனை எத்தனை மக்கள் செத்தனர் இன்னும் செத்துக் கொண்டிருக்கின்றனர்... ஆனால் அதையெல்லாம் நாம் கேள்விகள் கேட்காமல் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் காவல்கரருக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா?


இதற்கு எல்லாம் காரணம் நாம் படிக்கிறோம் அந்தப் படிப்பு நாம் வேலைகள் பெறுவதுதற்காக மட்டுமே தவிர மன வளர்ச்சி அடையாவதற்காகக் கொஞ்சம் கூடப் படிப்பதில்லை. அதனால்தான் பலரும் மன உலைச்சல் அடைந்து முறை தவறுகிறோம் அதுதான் உண்மை.


கடைக்காரர் மற்றும் காவல்காரர்தான் தப்பு செய்கிறார் என்றால் நாட்டு மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லும் தமிழக முதல்வர் எடப்பாடியும் நியாயத்தின் பக்கம் நிற்காமல், மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு நெஞ்சுவலிதான் தான் காரணம் என்று அறிக்கை விடுத்து இருப்பதை என்னவென்று சொல்லுவது, சரி முதல்வரின் கூற்றுப்படி அவர்கள் இருவரும் நெஞ்சுவலி காரணமாக இறந்தார்கள் என்றால் அவர்களுக்கு எதற்கு இந்த அரசு நிவாராண நீதி கொடுக்க வேண்டும். அல்லது இப்படிச் சிறையில் இருப்பவர்கள் நெஞ்சு வலியால் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு லட்சக் கணக்கில் அள்ளி கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஏதும் இருக்கா என்ன? படுகொலைக்குக் காரணமான காவலர்களைக் காப்பதற்குத் துணியும் அரசாகத்தான் தமிழக அரசும் இருக்கிறதா என்ன?!

மக்களின் கண்டனக் குரல் அதிகம் ஒலிக்கத்துவங்கியவுடன் உடனே சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை - மகன் ஆகியோரின் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாகவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


முட்டாள்கள் ஆட்சி செய்தால் இப்படிதான் இருக்கும் போல. முதல்வர் நிவாரண நிதி என்பது மக்களின் வரிப்பணம். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு மரணத்தை விளைவித்தவர்களுக்காகத் தண்டனை வாங்கித் தரவேண்டியதற்குப் பதிலாக மக்களின் வரிப் பணத்தைச் செலவழிப்பது எவ்விதத்தில் நியாயம்?


இந்த அரசு இந்தப் போலீஸ்காரர் இருவரையும் கைது செய்து விசாரணையை முடுக்கிவிடுவதற்குப் பதிலாக அவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கச் செய்து இறந்த குடும்பத்தினர் குடும்பத்திற்கு லட்சக் கணக்கில் அள்ளி கொடுப்பதுதான் நல்லாட்சி செய்வதா?



இது போலச் சம்பவங்கள் நிகழும் போது அதற்குரியவர்களின் ஊதியத்திலோ அல்லது பணி ஓய்வின்போது கிடைக்கும் பணத்திலோ பிடித்தம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல தண்டனை கொடுக்கும் போது தண்டனையோடு அப்பாரதத் தொகையும் மற்றும் வழக்குக்கான செலவையும் சம்பவத்துக்குக் காரணமானவர்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும். அப்படி இல்லாமல் அரசு மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தால் அது முட்டாள்தனமான அரசாகத்தான் இருக்கும்.



உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கைக் கண்காணிக்கும் எனவும் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் அவர்கள் இந்த வழக்கில் பிரேத புலன் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதாவது சற்று நியமாகச் செயல்பட வேண்டும்

We are not anti-police, we are anti-police brutality. #Sathankulam


டிஸ்கி :

நம்  தமிழக மக்கள் எல்லோரும் அமெரிக்க பிரஜையாவே மாறிட்டாங்க இது போன்ற விஷயங்கள் அமெரிக்காவில் நடந்தால் பொங்குவாங்க ஆனால் அதே நிகழ்ச்சி தமிழகத்தில் நடந்தால் வெளிநாட்டு செய்திபோல கடந்து போயிடுவாங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்




http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

3 comments:

  1. இதுல பெரிய கொடுமை என்ன தெரியுமா, மதுர? மக்கள் இதை பத்தி பேசவே பயப்படுறாங்க. காவல் துறைனாலே ஒரு பீதி . நமக்கு ஏன் வம்புன்னு.

    இங்கே இன்னொரு கும்பல் இருக்கு. போன வாரம் வரைக்கும் Black Lives Matter ன்னு சொல்லிட்டு இங்கே ஒரு கும்பல்.. ஒரே கம்பு சுத்தல். ஆனால் இதை பத்தி வாய திறக்கலை.

    டே.. இங்கே ஒரு கறுப்பினதவர் கொல்ல பட்டதற்கு கோடி கணக்கில் ஆதரவு. நிறம் மதம் வயது மொழின்னு பார்க்காம ...
    அது போராட்டம் அது உணர்வு.

    இங்கே நடந்தது பயங்கர அநியாயம். காவல் சிறைச்சாலை மருத்துவமனை நீதித்துறைன்னு ரவுண்டு கட்டி அடிச்சி இருக்காங்க.

    போலோ..

    பாரத் மாதா கி ஜெ..

    பாக்கலாம்.. உன்னோட இந்த பதிவுக்கு எத்தனை பேர் பின்னூட்டம் போடறாங்க.. என்ன போடறாங்கன்னு...

    ReplyDelete
  2. ஈவு இரக்கம் இல்லாத மிருகங்கள்...

    ReplyDelete
  3. மிகவும் வேதனையும் துயரமும் தந்த நிகழ்வு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.