Monday, June 8, 2020

india upper caste people vs lower caste
அமெரிக்காவில் வாழும் இந்திய மேல் மட்ட சாதியை சார்ந்தவர்களின் வேஷம்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் அதுவும் மேல் மட்ட சாதியை சார்ந்த சங்கிகள் போலீஸசாரல் கொல்லப்பட்ட கருப்பருக்கு ஆதரவாக தங்கள் கண்டணங்களை  சமுக இணைய தளங்களில் தெரிவிக்கிறார்கள் .இன சமத்துவத்துக்கு ஆதரவாக எப்போதும் நிற்போம்  ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு  துணையாக இருப்போம் என்று சொல்லி இவர்கள் இனவெறியை கண்டிக்கிறார்கள் ஆனால் அவர்கள்தான் தம் இனத்தை சார்ந்த கருப்பு இனத்தவரை அதாவது கீழ் சாதியினரை தமிழக போலீஸ்  அல்லது மாற்று சாதியை சார்ந்த மக்கள் அடித்து கொல்லும் போது   இப்படிக் கண்டணங்களை பதிவதில்லை...காரணம் அவர்கள் தீண்டதாகதவர்கள்... இப்படித்தான் அமெரிக்க வாழ் மேல்மட்ட சாதியை சார்ந்த இந்திய சங்ககிகள் இரு முக வேஷம் போடும் வேஷதாரிகளாக இருக்கின்றார்கள்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டாடேபூர் ஊரில் (May 27, 2020 ) தாழ்த்தப்பட்ட பெண் பொதுக் கிணற்றில் குடிநீர் எடுத்ததாக கூறி அந்தப் பெண்ணை பெண்ணென்றும் பாராமல் ஆதிக்க நாய்கள் அவர்கள் செய்யும் அநியாயத்தை பாருங்கள்.



Two dalits murdered in Tamil Nadu’s Tuticorin district   May 9, 2020,

4 Dalits Killed in 4 Days, Activists Say Upper Castes in TN Using Lockdown as Opportunity for Assaults  May 12, 2020,

Dalit woman ‘killed’ by upper caste man in Rajkot, accused attempts suicide  May 19, 2020

Dalit boy, two friends killed by upper caste girlfriend''s family in Nepal 26 May 2020

India: Dalit father, son beaten to death over property dispute June 07, 2020





இதற்கு எல்லாம் குரல் கொடுக்க மாட்டார்கள்... ஆனால் கருப்பருக்கு ஆதரவாக தங்கள் கண்டணங்களை  சமுக இணைய தளங்களில் தெரிவிக்கிறார்கள்  இப்படி பட்ட சங்கிகளின் வீடுகளில் கருப்பினத்தர்வர்கள் வந்து உண்ண முடியும் ஏன் இஸ்லாமியர்கூட வந்து அமர்ந்து நட்பு பாராட்டி உண்பதைக்  கூட காணலாம் ஆனால் கீழ்சாதியினர்கள் மட்டும் இப்படி எல்லாம் செய்ய முடியாது என்பதுதான் உண்மை

 அடேய்  உங்க வேஷம் கண்டு ஊரே சிரிக்குதுடா அமெரிக்க வாழ் சங்கிகளே



அமெரிக்காவில் போலீஸாரால் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டங்களால் அமெரிக்காவே பற்றியெரிகிறது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பாக போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால், பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்தார் ட்ரம்ப். மற்ற நாடுகளிலும் போராட்ட்ங்கள் பரவுகின்றன என்று செய்திகள் வந்து கொண்டி இருக்கின்றன. 

உண்மை நிலை என்னவென்றால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் சில இடங்களில்தான் இந்த போராட்டம் நடை பெறுகின்றது அதாவது நியூயார்க், சிகாகோ, பிலடெல்ஃபியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்தான் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளன. கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து போராட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடிக்கிறார்கள்.இந்த போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட  சில கும்பல்கள் கடைகளை உடைத்து பொருட்களை அள்ளி செல்கின்றனர் எப்படி தமிழகத்தில் போராட்டம் நடக்கும் போது சில பேர்கள் பிரியாணி அண்டாவை தூக்கி சென்றது போலவும் தலைவர்கள் இறந்தால் அதை பயன்படுத்தி கடைகளை சூறையாடி கொள்ளை அடிப்பது போலத்தான் இங்கும் நடை பெறுகின்றது..


கடந்த ஒரு வாரமாக நானும் வேலைக்கு சென்று வந்து கொண்டு இருக்கிறேன் என் நிறுவனத்திற்கு தினமும் பல்வேறு இனமக்கள் மிக அதிக அளவில் தினமும் வந்து செல்கிறாகள் அவர்களில் ஒருவரேனும் இந்த நிகழ்வு பற்றி பேசியதில்லை ஏன் என் நிறுவனத்தில் வேலை செய்யும் எவரும் அது பற்றி பேசாமல்  வந்த வேலையை முடித்து கொண்டு செல்கிறார்கள்...

ஆனால் இந்தி டிவி மற்றும் சமுக வலைதளங்களை பார்த்தால் மட்டும் என்னவோ அமெரிக்காவே பற்றி எரிகிறது மாதிரி செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன

ஹேமா சங்கர் மாதிரியான ஆட்கள்  எதற்கு அமெரிக்கா வரணும் வந்த பின் மூக்கால் அழுகனும் திராவிடம் பேசிக் கொண்டே இந்தியாவில் இருந்திருக்கலாமே  



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. என்ன மதுர...இப்படி திடுதிப்புன்னு உண்மையை போட்டு உடைச்சிட்ட? இந்தியாவில் இருக்குற சங்கிங்க 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி போட்டாங்கன்னு சொன்னா இங்கே இருக்க சங்கிங்க.. அதுக்கு ..
    அடே அடே... பேஷ் பேஷ்ன்னு சொல்லிட்டு..

    என்னமோ போ மதுர.. நம்ம ஆளுங்க நிலைமையை இப்ப எவ்வளவோ தேறலைன்னு தான் நினைக்கிறேன். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு பாரு ..

    மவனே நிலைமை இன்னும் கேவலமா இருக்கும்.

    First they came for the muslims, and I did not speak out—because I was not a muslim.

    Then they came for the christians, and I did not speak out— because I was not a christian .

    Then they came for lower castes and I did not speak out—because I was not a lower காஸ்ட்.

    Then they came for me—and there was no one left to speak for me.

    என்று சொல்லும் நாள் அருகில் வந்துவிட்டது.

    ReplyDelete
  2. சங்கிகள் எங்கிருந்தாலும் இவ்வாறே...

    ReplyDelete
  3. "சங்கி" களின் கதை அப்படி அங்கே?

    குஜராத் சம்பவ காணொளி கண்ணீர் வரவழைத்தது இது "மங்கி"களின் கதை.

    காலம் மாறவேண்டும், மாறுமா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.