Sunday, June 14, 2020

The plight of Indians who came to America அமெரிக்கா வந்த இந்தியர்களின் பரிதாப நிலைகள்
அமெரிக்கா வந்த இந்தியர்களின் பரிதாப நிலைகள்



வேலை வாய்ய்ப்பிற்க்காக  இந்தியாவிற்குள் பல்வேறு மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையைவிட மிக மோசமாக இருக்கிறது அமெரிக்காவிற்கு வேலைவாய்ய்ப்பிற்க்காக  வந்த இந்தியர்களின் நிலமை...


இப்போது அமெரிக்காவிற்கு வேலை வாய்ப்பிற்காக H-1B விசாவில் வந்தவர்கள் வேலைகளை இழந்த நிலையில் அவர்கள் உடனடியாக இந்தியா செல்ல வேண்டும் அவர்கள் அப்படிச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள்  தங்கள் குழந்தைகளை அனாதைகளாக விட்டுச் செல்லும் நிலைமைதான் ஏற்பட்டு இருக்கிறது .அப்படிச் செல்ல எந்த பெற்றோர்கள்தான் விரும்புவார்கள் தங்கள் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லவே முற்படுவார்கள். இப்போது அதில்தான் பிரச்சனை உள்ளது

 
அமெரிக்காவிற்கு வேலை வாய்ப்பிற்காக H-1B விசாவில் வந்து வேலை பார்க்கும் தம்பதியினர் இங்கு வந்து குழந்தை பெற்றதால் அந்த குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளாகிவிட்டனர். அதாவது அமெரிக்க மண்ணில் பிறந்த எவரும் அமெரிக்கர்கள்.. அதன் படி இப்படி வேலைக்கு வந்தவர்கள் பெற்ற குழந்தைகள் அமெரிக்க குழந்தைகளாகிவிட்டன். ஆனால் அரபுநாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் சென்றவர்கள் அங்குக் குழந்தை பெற்றால் அது இந்தியக் குழந்தையாகவே கருதப்படும்


கடந்த மாதம் தொடங்கப்பட்ட வந்தே பாரத் பணி, கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தனது நாட்டினரைத் திருப்பி அனுப்புவதற்கான இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.


கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் இந்தியாவுக்குச் செல்ல தகுதியற்றவர்கள் என்பதால்  எச் -1 பி விசாவில் உள்ள இந்தியர்கள் தங்களை இந்திய அரசு கைவிட்டுவிட்டதாகக் கதறுகிறார்கள்.அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுடன் H-1B இல் உள்ள இந்தியர்கள் அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக உணர்கிறார்கள், உதவி கேட்டு இந்திய அரசிடம் மன்றாடுகிறார்கள். ஆனால் இந்திய அரசின் செவிகள் இதுவரை திறக்கவில்லை


தங்களது  பணி விசா காலாவதியாகிவிட்டதால் அமெரிக்கச் சட்டங்கள் விசா காலாவதியானவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன, ஆனால் தற்போதைய இந்தியச் சட்டம் அப்படிப்பட்ட இந்தியர்களை அனுமதித்தாலும் அவர்களுக்கு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளை அனுமதிக்காது.

பலரின் குழந்தைகளுக்கு  நுழைவு மற்றும் அவசர விசா உள்ளது ஏன் OCI கார்டு கூட உள்ளது, ஆனால் தற்போதைய பயண விசா கட்டுப்பாடுகள் காரணமாக, எல்லா விசாக்களிலிருந்தும் அவர்கள் மீண்டும் இந்தியா செல்ல முடியாது ..


இப்படித்தான் இங்குள்ள ஒரு தம்பதியருக்கு விசா முடிந்துவிட்டது. அவர்களுக்கு நான்குமாத குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை குழந்தையின் நிலைமையோ மோசம் ஆனால் அந்த குழந்தை இந்தியா வர மத்திய அரசு இட்ட சட்டதிட்டங்கள் அனுமதி கொடுக்கவில்லை... அமெரிக்கச் சட்டமோ அந்த பெற்றோர்கள் விசா முடிந்துவிட்டதால் அவர்கள் இங்கு வசிக்க அனுமதி கொடுக்கவில்லை.. என்ன கொடுமை இது

அதுமட்டுமல்ல இங்கு வேலை இழந்துவிட்டால்  நாம் மருத்துவம் காப்பீட்டையும் இழந்துவிடுகிறோம்... மருத்துவம் காப்பீடு இல்லாமல் நம்மால் இங்கு வசிக்கவே முடியாது.... ஓரளவிற்குக் காசு சேர்த்து வைத்திருந்தாலும் எத்தனை மாதங்களுக்கு அதை வைத்துச் சமாளிக்க முடியும்.இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பல உதவி வந்தாலும் அது போதுமானதாக இல்லை

இப்படி ஒன்று அல்ல இரண்டு அல்ல ஆயிரக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் திரிசங்கு நிலையில் அந்தரங்கத்தில் தொங்கி மோடியை நோக்கிக் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.. மோடி அரசு இப்படிப்பட்டவர்களுக்குச் செவி கொடுத்து சட்ட திட்டங்களைச் சற்று மாற்றி அமைக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது


இப்படிப்பட்ட இந்தியர்கள்தான் மோடியை இங்கு வரவழைத்து ஒரு பெரிய மாநாடு நடத்தி உலக அளவில் மோடிக்கு ஒரு பெருமையைத் தேடி தந்தனர்... அப்படிப்பட்ட இந்தியர்கள் கதறுகிறார்கள்...... ஆனால் அந்த கதறல்கள் மோடியின் காதில் ஒலிக்கவே இல்லை.. இப்படிக் கதறுபவர்கள் அமெரிக்கா வாழ் சங்கிகள் அதிகம்

மோடிக்கு அமெரிக்காவில் விழா எடுத்துக் கொண்டாடிய இந்தியர்களை அந்தரங்கத்தில் தொங்கவிட்ட மோடி அரசு




அன்புடன்
மதுரைத்தமிழன்



http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

4 comments:

  1. ஐயோ... அந்தக் குழந்தைகளின் வருங்காலம்...?

    ReplyDelete
  2. அமெரிக்க மண்ணில் பிறந்த எவரும் ///அமெரிக்கர்கள்.. அதன் படி இப்படி வேலைக்கு வந்தவர்கள் பெற்ற குழந்தைகள் அமெரிக்க குழந்தைகளாகி விட்டன்//

    இது எனக்கு புதிய, அதிசய தகவல்.

    இப்படியொரு சட்டம் இருப்பதை அறிந்தும் இந்தியர்கள் எதற்கு பிரசவ காலத்தில் அமெரிக்காவில் இருக்கிறார்கள் ?

    இது தவிர்க்கப்பட வேண்டிய சட்டம்.
    மூன்றுமாத குழந்தையைகூட பிரிந்து வந்து வாழலாம்.

    மூன்று வயதுக் குழந்தையை பிரிய முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி..

      நீ கொஞ்சம் வெள்ளந்தியான ஆளுன்னு தான் நினைச்சேன் அதுக்குன்னு இம்புட்டு வெள்ளந்தியா இருப்பேன்னு நினைக்கலை.

      பிள்ளைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கனும்னு உலகம் முழுக்க ஆயிர கணக்கிலுள்ள மக்கள் அலை மோதுவாங்க.

      இப்ப மதுர சொன்ன இந்த இந்தியர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வாங்கணும்னு கட்டாயம் இல்ல. அவங்க அந்த குடியுரிமையை வேணாம்னு சொல்லிட்டு இந்திய குடியுரிமை வாங்கி இருக்கலாம். ஆனா அப்படி யாரும் செஞ்சதா நான் இதுவரை கேள்வி பட்டதே இல்லை.

      அம்மணி முழுவாம இருக்குறது தெரிஞ்சவுடனே அடுத்த பிளைட்டில் அமெரிக்கா வந்துடுவாங்க. புள்ளைய இங்கே பெத்து இந்த குடியுரிமை வேணுங்கிறதாலா.

      Delete
  3. I think Indian government will make "small adjustments" to accommodate those American-born children of H1-b visa holders. The pity is by the time they get there, coronovirus infections might reach its peak in India. Y'day it spiked from 400 death to 2000 deaths. Today it came back to 400 deaths. It is likely that it will reach peak in India after they get back to India. Well, dying in your home country is better? Idk. It all depend on what you believe. We cant change the natural cause no matter where you live. It is what it is..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.