Saturday, June 27, 2020

கொரோனா வைரஸும் தமிழக அரசு மற்றும் ஊடகங்களின் தவறான அணுகுமுறைகளும்



தமிழகத்தில் கொரோனா தொற்றைக் காட்டிலும் அது தொடர்பான தமிழக அரசின் தவறான அணுகுமுறைகளும் மிகைப்படுத்தி ஊடகம் தரும் செய்திகளும் மக்களிடையே பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்குத் தேவை எச்சரிக்கை உணர்வும், நோய் தொற்றாமல் காத்துக்கொள்ளக்கூடிய விழிப்புணர்வும்தானே ஒழியப் பயமல்ல அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் பாதித்தவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் மீளக்கூடிய தகவலையும் அழுத்தமாக அரசும் ஊடகங்களும் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த நோய் குறித்த அச்சத்தால், வசதி படைத்த தொழில் அதிபர்களே தற்கொலை செய்து கொள்வதாக வரும் தகவல்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
  
செய்திகள் அனைத்தையும் ஆழ்ந்து பார்த்தால் கொரோனா தொற்று வந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே இதுதான் உண்மை நிலை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ஊடகங்கள், தொடர்ந்து பீதியை ஏற்படுத்துகிற மாதிரியாகவே நெகட்டிவான செய்திகளை ப்ரேக்கிங்க் செய்திகளாக வெளியிடுகின்றன. இதற்குக் காரணம் ஊடகத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஊடகத்தின் வலிமையை நன்கு புரிந்து எப்படிச் செய்திகள் தரவேண்டும் என்பதை அறியாத பலர் அத்துரையில் இயங்குவதும் ஒரு காரணம் எனலாம்

கொரோனா உடல் எதிர்ப்புச்சக்தியைப் பலமிழக்க வைக்கும் ஒரு தொற்று நோய். தொற்று ஏற்பட்டவர்களுக்கு உடல் எதிர்ப்புச் சக்தியை இழக்கும் போது அவர்களுக்கு ஏற்கனவே வேறு சில நோய்கள் நீண்டகாலமாக இருப்பதினால் மரணம் ஏற்படுகின்றதே தவிரச் சரியான நேரத்தில் தக்க நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் குணமடைந்து சென்றிருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம். இந்தச் செய்தியை அரசும் ஊடகங்களும் சரியான முறையில் எடுத்துச் சொல்லி பொது மக்களைச் சென்றடையச் செய்யவில்லை என்பதாகவே நான் கருதுகிறேன் .

இதனால் தேவையற்ற பயம் பல நேரங்களில் நம்மைத் தீவிர மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி, தேவையற்ற விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது. அல்வா கடைக்காரரின் தற்கொலையும் அதுபோன்ற தவறான முடிவினால் விளைந்ததேயாகும். கரோனா தொற்று ஒருபுறம் அச்சுறுத்த, இன்னொரு பக்கம் அதைச் சுற்றி ஊடகங்களால் எழுப்பப்படும் தேவையற்ற பீதியும் அச்சுறுத்துகிறது.


இதனை உறுதி செய்யும் வகையில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடலைப் புதைக்கச் சிலர் செய்கின்ற நாடகங்களும் உடலைக் குழிகளுக்குள் தள்ளி விட்டுப் போவது போன்ற செயல்களும் மக்கள் பீதியில் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதும் மேலும் அறிவியலையும் ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நம்பவில்லை என்பதையுமே காட்டுகிறது.


தமிழக அரசு என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்..


தினசரி எத்தனை பேர் பாதித்து உள்ளனர் எத்தனை பேர் செத்தார்கள் என்பதைச் சுகாதாரத் துறை அமைச்சர் அல்லது செயலாளர் ஊடகங்களைக் கூட்டி செய்திகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.. காரணம் அமைச்சர் அல்லது செயலாளர்கள் தகவலைத் தரும் போது இந்த ஊடகங்கள் ப்ரேக்கிங்க் செய்தி என்ற பெயரில் மக்களைப் பீதிக் உள்ளாக்குவது தவிர்க்கப்படும்

அதுமட்டுமல்ல ஊடகங்களையும் எப்படிச் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். உதாரணமாக யாரவது கொரோனாவால் இறந்தால் அவர்களின் உடலை எப்படிக் கொண்டு செல்லுகிறார்கள் அவர்களின் குடும்பத்தார் எப்படிக் கதறி அழுகிறார்கள் என்பதை மிகைப்படுத்திச் சொல்வதைத் தவிர்க்க வழிவகைகளைக் கொண்டு வர வேண்டும்..


ஒரு குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் சோதனை செய்து பாதிக்காதவர்களைப் பாதித்தவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்க அறிவுறுத்த வேண்டுமே தவிர அவர்களின் வீட்டு வாசலில் போஸ்டர்ஒட்டுவது மேலும் அந்தத் தெருவையே அடைத்து வைப்பது என்பது போன்ற முட்டாள் தனமான செயல்களைத் தவிர்க்க வேண்டும்


மேலும் பாதித்தவர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதுவும் வசதி குறைந்தவர்களுக்கு நல்ல சத்துணவு அல்லது அதற்கான பொருட்கள் மலிவு விலையில் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும்

குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கும் போது அதே வீட்டில் வசிக்கும் மற்றவர்களும் நோயாளியும் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற மருத்துவ வழிமுறைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் மேலும் இப்படிப்பட்ட வழிமுறைகளைக் குறும்படமாக அதுவும் மிகப் பிரபல நடிகர்களை நடிக்க வைத்து ஒரு விளம்பர படமாக அரசு எடுத்து எல்லா ஊடகங்களிலும் வரச் செய்ய வேண்டும்

இதை அரசு மட்டுமல்ல ஊடகங்களும் மக்களுக்குப் பயன்படும்படி இது போன்ற தகவல்களைக் குறும்படமாக எடுத்து வெளியிட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை எடுத்துச் சொல்லாம்

அரசு நியாயவிலைக்கடை கடைகள் மூலம் மக்களுக்குப் புரோட்டின் உணவு வகைகளைக் குறிப்பாகப் பருப்பு நட்ஸ் முட்டை சிக்கன மட்டன் மாட்டுக்கறி போன்றவைகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யலாம்.. ஏழைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் புரோட்டின் உணவுகள் இறைச்சிகள் மூலம்தான் கிடைக்கின்றன. அதற்குத் தடை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்

  
Coronavirus and the misconceptions of the tn state and media


கரோனா தொற்றுக் கண்டவர்களில் அதிகச் சதவீதம் பேருக்கு எப்போது அது வந்தது, எப்போது போனது என்று கூட அறிய முடியாத அளவுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போயிருக்கிறது. அறிகுறிகள் தோன்றிய நோயாளிகளிலும் கூடப் பெரும்பாலானோர் சாதாரணச் சளி, இருமல் போன்ற அறிகுறி இருக்கும்போதே குணமாகிவிடுகிறார்கள். மரண விகிதமும் குறைவாக இருக்கிறது. எனவே, கரோனா வந்தாலே பீதியடையத் தேவையில்லை. குணமாகியவர்களைத் தீண்ட தகாதவர்கள் மாதிரி ஒதுக்கி வைக்கவும் தேவையில்லை.

இறுதியாகக் கொரோனாவை வைத்து COVID-19 ஐ அரசியல் செய்ய வேண்டாம்.

வைரஸ்கள் அரசியலுக்கானது அல்ல; அது ஒரு பக்கச் சார்பான பிரச்சினையாக மாறினாலும் அவை மக்களைப் பாதிக்கும். COVID-19 ஐ ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றுவது நமக்கு எதிராகவே பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்




"மக்கள் இப்போது மிகவும் துருவ முனைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் ஒரு குழுவை மற்றொன்றுக்கு மேல் நம்புவார்கள்இதை அரசியலாக்கும் போது எதிர்க்கும் குழுக்களாகப் பிரிந்து (மக்கள், கருத்துக்கள் போன்றவை). நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளை ஏற்படுத்திவிடும் அதனால் இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறினால், மக்கள் பயனுள்ள தகவல்களை விலக்கக்கூடும், ஏனெனில் இது ஒரு பாகுபாடான பார்வையிலிருந்து வருவதாக அவர்கள் கருதுவார்கள்."அதனால் பிரச்சனைகள் தீர்வதற்குப் பதிலாக அதிமாகிவிட வாய்ப்புக்கள் அதிகம்

 
Coronavirus

 
Coronavirus and the misconceptions of the tn state and media


மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் சாவு விகிதம் மிகக் குறைவாகவே இருக்கிறது இது இறைவன் கொடுத்த வரம் என்று சந்தோஷமாக எடுத்துக் கொண்டு அரசியல் செய்யாமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்து க்ரோனா பயம் நீங்கி அதை எதிர்கொண்டு சமாளித்து வாழ்வோம்





http://avargal-unmaigal.blogspot.com

பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

அன்புடன்.
கொரோனாவால் பாதித்து மீண்டு எழுந்த
மதுரைத்தமிழன்

14 comments:

  1. ஊரில் சொல்வார்கள், காலாரா கால்வாசி - காப்ரா(பீதி) முக்கால்வாசி என்று.

    அதுபோலத்தான் உண்மை எதுவென்றே புரிந்துகொள்ளமுடியாத படி செய்திகள் வாசிக்கப்பட்டு மக்களின் பீதியை அதிகப்படுத்துகின்றதோ இந்த மீடியாக்கள்?

    ReplyDelete
    Replies
    1. அவர்களது நோக்கமே டி ஆர் பி ரேட்டை ஏற்றுவதுதான் அதற்காக அவர்கள் செய்தியை திரித்தும் வெளியிடுவார்கள்

      Delete
  2. உண்மைதான். இவர்கள் செய்வதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. முன்னுக்குப் பின் முரணாக எடுக்கும் முடிவுகள், ஊடகங்களில் மாறி மாறி வருகின்ற செய்திகள் போன்றவை ஒரு பீதியை ஏற்படுத்துகின்றன. அவரவர்களின் மன உறுதியும், கட்டுப்பாடும்தான் காப்பாற்றும்போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் நல்ல சிந்தனை எண்ணமும்தான் மக்களை என்றும் காப்பாற்றும்

      Delete
  3. தீயை வேண்டுமென்றே மூட்டி, குளிர் காய்பவர்கள் அதிகம்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன்

      Delete
  4. உண்மையே. மிகவும் அழகான சரியான பதிவு மதுரை தமிழன்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி துளசி& கீதா

      Delete
  5. இந்தியால தமிழ்நாட்டில் கசாயம் குடிக்கிறாங்க, என்னவோ ஒரு தண்ணீர் குடிச்சா சரியாயிடும், இந்த உணவு வகைகள் சாப்பிட்டால் சரியாயிடும்னு என்னன்னவோ உளர்றாங்க. இப்படியெல்லாம் செய்து ஒருவர் "இன்னேட் இம்யுனிட்டியை' அதிகமாக்க முடியாது இது பத்தாதுனு நமக்கு வேற வாங்கி அனுப்பவா?ணு கேள்வி வேற. அந்தக்காலத்தில் மந்திரிச்சா சரியாயிடும்னு சொல்வதுபோல் ஏதோ மனசை சரி படுத்த சாமி கும்பிடுவதுபோல் நோயிலிருந்து தப்பிக்க இதுபோல் ஏதோ செய்றாங்க.

    எனக்கென்னவோ இது எல்லோருக்கும் வந்துதான் போகும். ஒரு சிலருக்கு எசிம்டமேடிக்கா போயிடும், ஒரு சிலருக்கு கொஞ்சம் சிவியரா வந்து போகலாம். இந்தியாவில் இனிமேல் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பது கஷ்டம். இன்னும் ஒரு வருடத்திற்கு என்ன என்ன கூத்து எல்லாம் பண்ணப் போறாங்களோ தெரியலை.

    உங்களூக்கு வந்து போனது போல் போச்சுனா, அட் லீஸ்ட் அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம். இப்படி தப்பிச்சு தப்பிச்சு வாழ்ந்தால், வாழ்க்கை பூராம் பயந்தே சாக வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நோய் வந்தவர்களுக்கு மீண்டும் வரலாம் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அது மிக குறைந்த சதவிகிதம்தான்....நம்மால் முடிந்தது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதுமட்டுமே

      Delete
  6. சில சமயம் எல்லாருமே போட்டி போட்டுக்கிட்டுக் குழப்புற மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மிக அதிகமாகவே குழப்புகிறார்கள்.. அதனால்தான் நான் நோய்யுற்ற போது செய்திகலை முற்றிலும் தவிர்த்தேன்

      Delete
  7. (அபயா அருணா ) ஆனால் ஏனென்று தெரியவில்லை என் ஜப்பானீசு பிளாக் ID (abayaarunajp)தான் வருகிறது )

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.