Thursday, May 28, 2020

#corona virus today update
எங்கள் வீட்டில் புகுந்த கொரோனாவிடம்இருந்து மீண்ட அனுபவங்கள்

மார்ச் இரண்டாம் வாரத்தில் க்ரோனோ நீயூஜெர்ஸிபக்கம் தன் ஆட்டத்தைத் தீவிரப்படுத்திய போது என் மனைவியின் அலுவலகத்தில் எல்லோரும் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தார்கள் .எல்லோரையும் ஆபிஸிக்கு வரச் சொல்லுவதா அல்லது பாதிப் பேரை மட்டும் வொர்க் பரம் ஹோம் செய்யச் சொல்லுவதா அப்படிச் செய்வதென்றால் யார் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் யார் அலுவலகத்திற்கு வரச் சொல்லுவது என்பது பற்றி அவர்களின் தலைமைக்கே முடிவு எடுக்க முடியாமல் திணறியது என்று சொல்லாம். கடைசியாக லோக்கல் டீம் மெம்பர்களே முடிவு எடுக்கட்டும் என்று சொல்லி பொறுப்பில் இருந்து கைகழுவ முயன்றது.
 
அதன் பின் சில டீம் எல்லோரும் வீட்டில் இருந்து வேலைசெய்வதும் என்றும் மேலும் சில டீம் ஒரு நாள் பாதிப் பேர் அலுவலகத்திற்கு வரவும் மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் அடுத்த நாள் வீட்டில் இருந்து வேலை செய்தவர்கள் அலுவலகம் வரவும் அலுவலகம் வந்தவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும் முடிவு செய்தார்கள்... ஆனால் என் மனைவியின் டீம் லீடரோ தான் அந்த டீமிற்கு மிக முக்கியம் அதனால் அவர் மட்டும் வீட்டில் இருந்து வேலை செய்யப் போவதாகவும் மற்றவர்கள் அலுவலகம் வரவேண்டும் என்று சுயநலமாக ஒரு முடிவை அறிவித்தார் அதைக் கேட்ட அந்த டீம் மக்கள் கொந்தளித்துப் போய்விட்டார்கள்

corona today tips
அதன் பின் ஒரு சில நாட்கள் வேலைக்குச் சென்ற என் மனைவி சிக்காகிவிட்டார்....... காய்ச்சல் உடம்பு முழுவதும் எரிச்சல் லூஸ்மோசன் என்று பல் சிம்டங்களைக் காண்பித்துப் பயமுறுத்த ஆரம்பித்துவிட்டது. tylenol மருந்தை உடனே கொடுக்க ஆரம்பித்துவிட்டு பேமிலி மருத்துவருக்குத் தகவல் தந்தோம் அவரும் சில மணி நேரத்தில் ஃபேஸ்டைம் மூலம் பார்த்துச் சிகிச்சை அளித்து (antibiotics) நுண்ணுயிர்க்கொல்லி
மருந்துகளைக் கொடுத்துத் தனியாக இருக்கச் சொன்னார்.

எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கம் இரவு தூங்கும் போது மனைவி,குழந்தை, நான் அனைவரும் தனித்தனி அறையில்தான் தூங்குவது வழக்கம்...ஆனால் யாருக்காவது உடம்பிற்கு முடியாவிட்டால் அவர்கள் என் பெட் ரூமிற்கு வந்துவிடுவார்கள்... இந்தச் சமயத்தில் கொரோனா பயத்தில் என் மனைவி தான் தனியாகவே படுத்துக் கொள்வதாகச் சொன்னாள், நான் அதற்கு மறுத்து என் ருமிலே படுக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன் என் படுக்கையை 6 அடி இடைவெளிவிட்டு அமைத்துக் கொண்டோம். இரண்டு தினங்களில் அவள் சற்று குணமடைய ஆரம்பித்தாள்.. இந்தச் சமயத்தில் கொரோனா மிகத் தீவிரமாகப் பரவியதால் அவள் அலுவலகத்தில் எல்லோரையும் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவும் வந்துவிட்டது.



என் வேலையோ எசன்சியல் கேட்டக்ரியில் இருப்பதால் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை.அதனால் நானும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்மார்ச் 23 ம் தேதி இரவு எனக்குக் காய்ச்சல் போல இருந்தது. மனைவியிடம் தெர்மாமீட்டர் இருந்தது அவளிடம் கேட்டால் நான் சொன்னதைக் கேட்காமல் வேலைக்குப் போனதால் என்று லெக்சர் தொடங்கிவிடும் என்பதால், அவளிடம் சொல்லாமலே அட்வில் என்ற மாத்திரையை எடுத்து போட்டு தூங்கினேன் காலை வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து இன்னொரு மாத்திரையைப் போட்டுவிட்டு 6 மணிக்கு எல்லாம் வேலைக்குப் போய்விட்டேன். வேலை மும்மரத்தில் காய்ச்சல் இருப்பதையே மறந்துவிட்டேன். ஈவினிங்க் வீடு திரும்பும் போது இன்னொரு மாத்திரை.. அதன்பின் வழக்கம் போல இரவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கும் போது உடம்பு ரொம்பவும் சுட்டது.. சரி இனிமேலும் மறைக்க வேண்டாம் என்று நினைத்து மனைவியிடம் சொல்லிவிட்டு தெர்மாமீட்டர் வைத்துப் பார்க்கும் போது 102 என்று வந்தது. உடனே தைய்லினால் என்ற மாத்திரையை எடுத்து போட்டு தூங்கினேன் அதிகாலையில் செக்கப் பண்ணும் போதும் 101 என்று வந்தது அதனால் காலை 10 மணியளவில் மருத்துவரை தொலைப்பேசியில் அழைத்துப் பேஸ்டைம் மூலம் செக்கப் பண்ணினேன், அவர் பரிசோதித்துவிட்டு
நுண்ணுயிர்க்கொல்லி மருந்து கொடுத்தார். அதைத்தவிர வேறு எந்த மருந்தும் காய்ச்சலுக்காக சாப்பிட வேண்டாம் அதுவாகவே குறையும் ,குறையனும் என்று சொன்னார். இந்த நேரத்தில் என் மனைவியின் உடல் நலம் சரியாகியது... நான் ஆண்டியயடிக் எடுத்தும் காய்ச்சல் கூடுவது குறைவதுமாக இருந்தது அதனால் மருத்துவருக்கு சந்தேகம்மேலும் அதிகரித்தது அதனால் அவரது க்ளினிக் வரச் சொல்லீ இரத்தப் பரிசோதனை  செய்தார். என் மனைவி மற்றும் குழந்தைக்கும் அதே சோதனை செய்து பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் பின் வீட்டில் வந்து படுத்து இருந்தேன் அப்போது என் மனைவி அவளது தங்கைக்குப் பேஸ்டைம் பண்ணி பேசிய போது நான் படுத்திருப்பதைத் தற்செயலாகப் பார்த்த அவள் பதறிப் போய்விட்டாள்.. காரணம் நான் அமெரிக்க வந்த 23 வருடத்தில் இரு தடவை கூடக் காய்ச்சல் வந்து படுத்ததில்லை ஜலதோஷம் வந்திருக்கிறது ஆனால் காய்ச்சல் இப்படி வந்தது இல்லை என் மனைவியின் தங்கையும் அவ்லது கணவரும் அமெரிக்காவில் மருத்துவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் சிம்படம்ஸை கேட்டு இது கொரோனாவாக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொன்னார்கள் அவர்கள் மருத்துவர்கள் என்பதால் அவர்கள்கூடப் படித்த பலரும் பல் நாடுகளில் மருத்துவர்களாக இருப்பதால் தினமும் வாட்ஸப் மூலம் ஒருத்தருக்கு ஒருத்தர் தகவலை பறிமாறிக் கொள்வது வழக்கம். நம் மக்கள்தான் வாட்ஸைப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் மருத்துவர்கள் இதை மிகவும் பயனுள்ளதாக  நல்ல முறையில் பயன்படுத்துகிறார்கள். அவர்களும் நல்ல ஆலோசனைகளையும் சொன்னார்கள்


எனது காய்ச்சல் ஒருவாரத்திற்கு மேலாகத் தொடர்ந்தது என் மனைவிக்கோ பயம் அதனால் அவர் மேலாளரின் தங்கை எங்கள் ஊரிலே மருத்துவர் என்பதால் அவரை அழைத்தார் அவருக்கும் இது நிச்சய்மாகக் கொரோனாவாகத்தான் இருக்கும் என்று சொல்லி அவருக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் அவரது எமர்ஜென்ஸு க்ளினிக்கில் கொரோனா சோதனை செய்கிறார் அங்கே சென்று சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த மருத்துவருக்குத் தகவல் சொல்லினார் அடுத்தாள் நான் என் மனைவி குழந்தை மூவரும் சோதனை செய்தோம் அதன் பின் 2 நாட்கள் கழித்து முடிவு நெகட்டிவ் என்று வந்ததும் மூன்று பேருக்கும் மிகச் சந்தோஷம் அதிலும் என் மனைவி மற்று குழந்தைக்கு மிக மிகச் சந்தோஷம் காரணம் கொரோனாவாக இருக்கும் என்பதால் என்னைக் சமையலறைக்கு விடாமல் அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்... இந்தக் காயச்சலின் போது நான் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் தூங்கி இருப்பேன் அப்படி ஒரு உடம்பு வலி..களைப்பு... இரண்டு வாரம் கழித்துக் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது....

எல்லாம் சரியாகிவிட்டது என்ற சமயத்தில் திரைப்படத்தில் வருவது போலக் கதை தலைகீழாக மாறியது அதாவது என் மனைவிக்கு உடல்நிலை மீண்டும் பாதித்தது பாதிப்பு அதிகமாகியதால் மீண்டும் அவளுக்கு எங்கள் மருத்துவர் அவளுக்குக் கொரோனா சோதனை செய்த போது அவளுக்குப் பாஸிடிவ் என்று ரிசல்ட் வந்து எங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன் பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மனைவியைத் தனி அறையில் இருக்க வைத்துக் கவனித்துக் கொண்டோம்

அந்த ரூமில அவளுக்குத் தேவையான க்ளீனிங்க் பொருட்கள் சாப்பிடத் தட்டு கப்  க்ளாஸ் போன்றவைகளை கொடுத்து அவளுக்குத் தேவையான உணவுகளை தயாரித்துக் கொடுத்து வந்தேன் சாப்பிடக் கொடுக்கும் போது மட்டும் கதவுகளைத் திறந்து உணவுகளை வாங்கிக் கொள்வாள்... நான் அடுத்த அறையில் படுப்பதற்குப் பதிலாக என் மனைவி படுத்திருக்கும் அறைக்கு வெளியே சில அடி தள்ளிப் படுத்துக் கொண்டேன் என்  மனைவிக்கு இந்த சமயத்தில் இருமல் உடல் எரிச்சல் காய்ச்சல் மூன்று இருந்தன. அது ஒரு வாரத்திற்குப் பிறகு குறைய ஆரம்பித்தது அதன் பின் இரண்டாவது வார இறுதியில் மீண்டும் வீட்டில் உள்ள எல்லோரும் கொரோனா சோதனை செய்து வந்து ரிசல்க்காக வெயிட் பண்ணினோம்

முடிவும் வந்தது அதில் என் குழந்தைக்குப் பாதிப்பு ஏதுமில்லை என் மனைவிக்கோ பாசிடிவும் இல்லை நெகடிவும் இல்லை inconclusive  என்று வந்தது அப்படியென்றால் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவர் சொல்லி முன்பு இருந்தது போலவே மீண்டும் தனி அறையில் இருக்கச் சொன்னார்.. அடுத்தாக என் ரிசல்டை பார்க்கும் போது எனக்கு பாசிடிவ் என்று வந்தது என் மனைவி இருந்தது போலவே என்னையும் தனி அறையில் இருக்கச் சொன்னார். என்னடா இப்படி பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வருகிறதே என்று யோசித்தோம் சரி பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும் வேற வழியில்லை  .

கடவுள் ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியைத் திறப்பார் என்று சொல்லுவார்கள் அதன் படி எங்கள் குழந்தையின் மூலம் அவர் எங்களுக்கு உதவ ஆரம்பித்தார் ஆமாம் என் குழந்தைதான் தினமும் இணையம் மூலம் பள்ளியில் நடத்து
ம் பாடங்களைப் படித்து ஹோம்வொர்க்க பண்ணிக் கொண்டு, எங்களுக்கு வேண்டிய உணவுகளை மூன்று வேளையும் அவளே தயாரித்துக் கொடுத்தாள்,  எங்களது நாயை  3 வேளை வெளியே அழைத்துச் சென்றாள் . சமைத்த பாத்திரங்களைக் கழுவி வைத்தாள் எல்லா வேலைகளையும் பெரிய மனுசி செய்வது போல எல்லாம் செய்து கொடுத்தாள். ஹோம் வொர்க் அதிகமா இருந்த நேரங்களில் உணவகங்களில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சமாளித்தோம். எங்கள் வீட்டு நாய் எப்போதும் என் கூடத்தான் என் பெட்டில்தான் உறங்கும் அதையும் இந்த சமயத்தில் பிரிந்து படுக்க வேண்டிய நிலைமை . முதல் இரண்டு நாள் அது என் குழந்தையின் அறையில் தூங்கச் சென்றது அதற்கு அங்கே தூங்க முடியவில்லை அதன் பின் இப்போது என் குழந்தை கூட தூங்கப் பழகிக் கொண்டது முதலில் என்னை கண்டதும் அருகில் ஒடி வரப் பார்க்கும். நான் சிக் இப்போது வரவேண்டாம் என்று சொன்னதைக் க அதுவும் மிகச் சமத்தாகக் கேட்டுக் கொண்டது


இப்படியாக நாட்கள் கடந்தன . கடந்த வாரத்தில் மீண்டும் பரிசோதனை செய்தோம் ரிசல்ட் நேற்று வந்தது அதில் எனக்கு நெகடிவாகவும் என் மனைவிக்கு பாசிடிவாகவும் வந்து இருக்கிறது அவளுக்கு பாசிடிவ் என்று வந்தாலும்  உடல் நலம் நன்றாகவே இருக்கிறதுஆனால் சிறிது டையர்டாகவே இருக்கிறார் அடுத்தவார சோதனையில் அவள் பூரண குண்மடைந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. கடவுள் சோதனைகளைப் பல சமயங்களில் எங்களுக்குக் கொடுத்தாலும் அதையும் அவரே தீர்த்துவிடுகிறார் என்பதுதான் ஆறுதலான விஷயம்..


இந்த கொரோனாவிற்கு சாதி மதம் இனம் பேதமல்ல எல்லோரையும் தாக்குகிறது அதிலும் குறிப்பாக வயதானவர்களையும் சுகர் பேஷண்டுகளையும் தாக்குகிறது.. இதற்குக் காரணம் நோய் எதிர்ப்புச் சக்தி இவர்களிடம் குறைவாக இருப்பதே.. சிலரை இது தாக்கி இருந்தாலும் அதற்கான சிம்டம்ஸ் தெரியாது... சுத்தமாக இருந்தாலே போதும் இதைத் தவிர்த்துவிடலாம் அல்லது வந்தாலும் எளிதில் குணமாகிவிடும். இதனால் எப்போது பிரச்சனை என்றால் மூச்சுத் திணறல் அல்லது காய்ச்சல் 102 அல்லது அதற்கும் அதிகமாகினால் பயப்படவேண்டி
திருக்கும் அந்த சமயத்தில் மட்டும் ஹாஸ்பிடலில் வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் வீட்டில் சுத்தமாக இருந்து சத்தான உணவுகளைச் சாப்பிட்டு வந்தாலே போதும். வீட்டில் ஒருத்தருக்கு வந்தால் அதற்காக் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும்  வீட்டிற்குள்ளே பூட்டி வைப்பது, தெருவையே அடைப்பது ஏதும் தேவையில்லை.. இந்திய அரசுதான் இப்படி முட்டாள்தனமான வேலைகளை செய்கிறது அதுமட்டுல்ல பாதிப்படைபவர்களும் அரசு செய்யும் அட்டகாசங்களை கண்டு பயந்து சிகிச்சைக்கு போகாமல் பயந்து ஒடி மறைவதும் நடக்கிறது. அப்படி எல்லாம் யாரும் பயப்பட தேவையில்லை. சமுக இடைவெளியை கடை பிடித்தாலே போதும்..

கொரோனா பாதித்த சமயத்தி
ல் நாங்கள் என்ன செய்தோம் எப்படி ரெக்கவர் ஆனோம் என்பதை கிழே பார்ப்போம்

நாங்கள் தினமும் காலையில் ஓட்மீல் மதியம் பாசி பருப்பினால் செய்த கூட்டும், சாதம் வித் நெய்யும், இரவில சப்பாத்தி அல்லது சாதமும் சாப்பிட்டு  வந்தோம். இடையிடையே நட்ஸ் அதிலும் குறிப்பாக பிஸ்தா அதிகம் சேர்த்துக் கொண்டோம் .அது போலப் பழவகைகளை சாப்பிட்டு வந்தோம் அதிலும் குறிப்பாக ஆரஞ்சு வாழைப்பழம் ஆப்பிள் எடுத்துக் கொண்டோம் . நான்  தினமும் ஒரு முட்டை சாப்பிட்டேன்,என் மனைவி சுத்த  வெஜிடேரியன் என்பதால்  பாசிப் பயிர் கூட்டு அதிகமும் சாதம் குறைவாகவும் சாப்பிட்டாள்  அதுமட்டுமல்லாமல் நான் இரவிலும் என் மனைவி பகலிலும் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வெஜிடபுள் பராத் அதாவது பலவகை காய்கறிகளைத்  தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீரை எடுத்து அதனுடன் மிளகு தூள் சால்ட் மஞ்சள் தூள் சேர்த்து சூடாகக் குடித்து வந்தோம்  இந்த வெஜிடபுள் பராத் கடைகளில் டப்பாக்
களில் கிடைக்கும் அதில்தான் நாங்கள் மிளகு தூள் சால்ட் மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டோம் நான் வெஜ் சாப்பிடுபவர்கள் இது  போல சிக்கன் பீஃப் ப்ராத் வாங்கி சாப்பிடலாம்

அதோட வைட்டமின் டி. வைட்டமின் பி12 , வைட்டமின் சி போன்றகளையும் மருத்துவர் அறிவுரைப்படி சாப்பிட்டு வந்தோம்....

மிக மிக முக்கியம் இந்த காலகட்டத்தில் கொரோனா பற்றிய தொலைக்காட்சி செய்திகளையும் வாட்ஸப் செய்திகளையும் முற்றாக நிறுத்திவிட்டோம்  அரசு தரும் செய்திகளை மட்டும் https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html அதன் தளத்தில் சென்று படித்துக் கொண்டோம் இதில் பயனுள்ள பல தகவல்கள்  இருக்கின்றன..ஆனால் இதில் கூறப்பட்ட செய்திகளைப் பார்க்காமல் மக்கள் வாட்ஸப் வதந்திகளையும் ப்ரேக்கிங்க் செய்திகளையும் பார்த்துக்  கவலைப்பட்டு மனதைக்  கெடுத்துக் கொள்கிறார்கள்...

இந்த சமயத்தில் நமக்குத் தேவை பாசிடிவ் செய்திகள் மட்டுமே அது மட்டும்தான் நம்மைக் குணப்படுத்த முடியும்

எங்களுக்கு தனி தனி பெட் ரூம் மற்றும் டாய்லெட் பாத் ரும் இருக்கிறது. இங்கே அமெரிக்காவில் உள்ளவிடுகளில் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் எல்லார் வீட்டிலும் இப்படி இருக்காது,  ஒரு பெட் ரூம்தான் இருக்கும் பட்சத்தில்  மற்றவர்கள் ஹாலில் படுத்து கொள்ளலாம் அதுவும் இல்லாத பட்சத்தில் இருவருக்குமிடையில் ஒரு திரையைப் போட்டு   எவ்வளவு தூரம் தள்ளிபடுக்க முடியுமோ அவ்வளது தூரம் தள்ளிபடுக்கலாம் அது  போல பாத்ருமை நோயாளி பயன்படுத்திய பின் அவரே அதை ப்ளீச்போட்டு சுத்தம் செய்துவிட்டு வந்த பின் கொஞ்ச நேறம் கழித்து மற்றவர்கள் பயன்படுத்தலாம்


அமெரிக்காவில் அதிக பாதிப்பிற்குக் காரணம் இங்குள்ள அதிபரின் கோமாளித்தனங்கள்தான் காரணம் அவர் இதை மிக சீரிய்ஸாக எடுத்துக் கொள்ளவில்லை... ஆனால் மாநில கவர்னர்களின் செயல்பாடுகளில் சிறிதும் குறை சொல்ல முடியாது அவர்கள் மட்டும் நமது முதல்வர்கள்மாதிரி செயல்பட்டு இருந்தால் சாவுகளின் எண்ணிக்கை கோடியை எளிதில் தொட்டு இருக்கும்...

நல்லவேளை அப்படி இல்லாததால் பலரும் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

.இதுதான் எங்கள் அனுபவம்... இப்போது மீண்டு விட்டோம், அதனால் இனிமேல் வாராது என்று நினைக்க முடியாது .அது மீண்டும் வந்து எந்த நேரமும் கதவை தட்டலாம்... அதற்காக பயந்து வாழ்க்கை நடத்த முடியாது,. இறைவன் கொடுத்த உயிர் அதை எப்போது, எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்பதை நாம் பிறக்கும் போதே எழுதி இருக்கிறார். நாம் இப்படித்தான் சாவ வேண்டுமென்றிந்தால் அதை தடுக்க யாராலும் முடியாது, Life is Very short அதனால் வாழும் வரை சந்தோமாக வாழ முயற்சியுங்கள் மற்றவர்களுக்கு உதவியும் வாழுங்கள்

சில நட்புக்கள் கேட்டு கொண்டதால் இந்த பதிவை எழுதி இருக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி; அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு செல்ல விருப்பதால் இணையதளம் வருவது சற்று குறைவாகவே இருக்கும் .


49 comments:

  1. கொரோனாவின் பிடியில் இருந்து தாங்களும் தங்கள் குடும்பமும் மீண்டது கண்டு மகிழ்கிறேன் நண்பரே
    இனி வரும் காலங்களிலும் கவனமாக இருங்கள்
    தங்களின் அனுபவம் இப்பதிவினைப் படிப்பவர்களுக்கெல்லாம் ஒரு பாடமாக, விழிப்புணர்வுப் பாடமாக அமையும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அக்கறையான கருத்துக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

      Delete
  2. ஆஆஆவ் இவ்ளோ விசயம் நடந்திருக்குதோ ட்றுத்.. பொதுவாக நியூயோர்க் அண்ட் அதனை அண்டிய பகுதிகளில் யாரும், கொரோனாத்தாக்கத்தில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பில்லை எனத்தான் சொல்கின்றனர்.

    காச்சல் வந்து உடல் தாக்கமடைந்தால் அதிலிருந்து மீள, ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, நாட்கள் கூடிக் குறையும்தானே, எதுக்கும் உங்கள் மனைவியை நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்.

    பலருக்கு கொரோனா இருக்கும், ஆனா சிம்டம்ஸ் எதுவும் இருக்காதாமே.. இவர்களால்தான் ஏனையோருக்கு ஆபத்து என்கிறார்கள்.

    எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies


    1. அமெரிக்காவில் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது எல்லாம் உங்கள் பாய்ப்ரெண்டால் வந்த விளைவுகளே

      Delete
    2. ட்றம்ப் அங்கிளை திட்டாதீங்கோ ட்றுத்:)... பாவம் அவர்:)... உங்கள் வோட் அவருக்கே விளோழும் சொல்லிட்டேன்:)

      Delete
  3. இனி மேலும் வராது... நம்பிக்கையுடன் செயல்படுங்கள்... மனதை மட்டும் தளர விடாதீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் வராது என்று சொல்ல முடியாது ஆனால் வருவதை தடுப்பதற்காக நம்மால் முடிந்த அளவு ஜாக்கிரதையாக இருக்கணும் அப்படி மீண்டும் வந்தால் எப்படி சமாளிக்கனும் என்று அனுபவம் இருக்கு. கவலை ஏதும் இப்போதும் இல்லை இனிமேலும் இல்லை..

      Delete
  4. சோதனைகளில் இருந்து மீண்டு வந்தது நல்லது. தொடர்ந்து பாதுகாப்பாக இருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அக்கறையுடன் கூடிய் கருத்துக்கு நன்றி பாஸ்கர்

      Delete
  5. இறைவன் அருளாலும், மனதைரியத்தாலும் மீண்டு வந்து இருக்கிறீர்கள்.
    உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம்.
    விழிப்புணர்வு பதிவு.
    இறைவன் அருளால் வராது, வர வேண்டாம்.
    சந்தோஷமாக இருங்கள்.

    உங்கள் மகள் பொறுப்போடு நடந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் மகளுக்கு நல்ல மனபலத்தை உடல் நலத்தை இறைவன் தருவார்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அக்கறையுடன் கூடிய கருத்துக்கு நன்றி கோமதிம்மா

      Delete
  6. இவ்வளவு நடந்ததா...படிக்கும் போது கலங்கிடுச்சு.. உங்க பாப்பா கிரேட் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சு வீட்டையும் பார்த்து.. இனி எந்த கஷ்டமும் வராது... உங்க அன்பான குடும்பத்தோடு சந்தோஷமா இருங்க .. உங்க தைரியம் ,நம்பிக்கை ,எழுத்து எல்லாமே எங்களுக்கு பூஸ்ட்..

    ReplyDelete
    Replies
    1. நமது செயல்களுக்குதான் நாம் கவலை கொள்ளனும். இது இயற்கையால் வந்த பாதிப்பு அதனால் கவலை ஏதும் இதுவரை இல்லை இறைவன் கொடுத்த உயிர் அதை எப்போது எப்படி எடுக்க வேண்டும் என்பது அவனது விருப்பம்.. இப்படி நினைத்து கொண்டால் கவலை ஏதும் இல்லை

      Delete
  7. நான் வலை பக்கம் வருவதில்லை ஆனால் இந்த சூழ்நிலையில் உங்கள் நலன் அறிய உங்களுக்கு மெயில் பண்ணி இருந்தேன்.. பார்த்து இருக்க மாட்டீங்க.. இன்னிக்கு உங்க இந்த பதிவு பார்த்துட்டேன்... நன்றி கடவுளுக்கு....

    ReplyDelete
    Replies
    1. ஹலோ வாரம் ஒரு முறை இப்போது எல்லாம் மெயில் செக் பண்ணுறேன் ஆனால் உங்க கிட்ட இருந்து இந்த நிமிடம் வரை எந்த மெயிலும் வரவில்லை....

      Delete
  8. கொரோனா வந்தால் நுரை ஈரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல்வந்து அவதிப்படுவார்கள் என்பதேபயத்துக்கு காரண விஷ் யூ அல் த பெஸ்ட் பி ப்லெஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு நிலை வரும் போது ஹாஸ்பிடலில் நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைக்கலாம் அப்படி பிழைத்தவர்கள் அதிகம் மீடியா பிழைத்தவர்களின் எண்ணிக்கையை பற்றி அதிகம் முக்கியத்தும் கொடுக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக பேசுகிறது அப்படி பேசும் போது பேக்கிரவுண்ட் மீயூசிக்கை போட்டு பயமுறுத்துகிறது அதனால் பலருக்கும் பயம் அதனால்தான் சொன்னேன் சிறிது காலம் டிவி நீயூஸை பார்க்காமல் இருந்தாலே கவலைகள் இன்றி வாழலாம்

      Delete
  9. மீண்டு வந்ததில் நிம்மதி. தங்கள் அனுபவத்தை எழுதியது மிக தேவையானது, மற்றவர்களுக்கு உதவும். நன்றி.
    தங்கள் குழந்தைக்கு ஓர் பூங்கொத்து!

    ReplyDelete
    Replies
    1. பயந்து போய் இருக்கும் சிலருக்காவது இந்த பதிவு நம்பிக்கை கொடுத்தால் அதுவே சந்தோஷம் நன்றி ரமேஷ்

      Delete
  10. குடும்பத்துடன் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி நண்பரே பலருக்கும் தன்னம்பிக்கை தரும் சிறப்பான கட்டுரை.

    ReplyDelete
  11. தாங்கும் சக்தி உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் வேண்டும் என உணரும்படி சொல்லிப் போனவிதம் அருமை...

    ReplyDelete
  12. அங்கே டெஸ்ட் எடுப்பது ஒரு வசதி .இங்கே டெஸ்ட் இப்போதான் துவங்கறாங்க சிம்ப்டம்ஸ் இருக்கிறவங்களுக்கு கண்டுபிடிக்க வசதியா  இருக்கு இங்கே மார்ச் மாதம் வந்தவர்களை ஸ்ட்ரிக்ட்டா வீட்டில் இருக்க சொல்லிட்டாங்க .நீங்கள் அனைவரும் மீண்டு வந்ததில் சந்தோஷம் .மாஸ்க்ஸ் பற்றிய விளக்கப்படம் அருமை . ஆர்கானிக் துணி  வச்சிருக்கேன் .இந்த கொரோனா சீக்கிரம் பூமியை விட்டு போகணும் எல்லா உயிரும் நிம்மதியா நோய்நொடியில்லாம வாழணும்னு பிரார்த்திப்போம் .

    ReplyDelete
    Replies

    1. நான் எங்கள் பேமிலி டாக்டரிடம் சென்றதால் எளிதாகவிட்டது அல்லது அரசு நடத்து சோதனை நிலையங்களுக்கு சென்றால் 8 மணி நேரம் கார் க்யூவில் இருக்க வேண்டி இருக்குமாம், எங்கள் அதிர்ஷ்ம் எங்கள் டாக்டர் இந்த சோதனையை செய்ய ஆரம்பித்ததுதான்

      Delete
  13. மீண்டு வந்தது மகிழ்வு சகோ. கடவுளுக்கு நன்றி. மற்றவருக்கு உபயோகமாக எழுதியதற்கு நன்றி சகோ. பிரார்த்தனை எப்போதும் உண்டு.

    ReplyDelete
    Replies

    1. நன்றி கிரேஸ் வேலைக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக சென்று வாருங்கள் நானும் வரும் திங்கள் அன்றிலிருந்து வேலைக்கு செல்ல வேண்டும்

      Delete
  14. பாதிப்பிலிருந்து விடுபட்டதில் மகிழ்ச்சி. நலமே விளையட்டும்.

    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ஜிஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  15. Time and patience will cure .any how with God's grace all in the family recovered.Your daughter's shouldering the household duties along with her studies....amazing!. Remember worthy days .... However the hard days gone!. Praying for all the best.

    ReplyDelete
    Replies
    1. துளசி சார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  16. கஷ்ட நேரங்களில் நம் குழந்தைகள் நம்மை குழந்தைகளாக்கி விடும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே இல்லை.உங்கள் அன்பு மகளுக்கு என் ஆசீர்வாதங்கள் .God bless you all.karthik amma 

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் அம்மா உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  17. மதுரை தமிழன் உடல் நலன் பார்த்துக்கோங்க. மனைவிக்கும் எல்லாம் இறையருளால் சரியாகிவிடும். டெஸ்ட் நெகட்டிவாக வரும். நீங்கள் எல்ளோரும் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாஸ்க் விள்க்கங்கள் நன்றாக இருக்கிறது. நம் உடலின் இம்யூனிட்டி பொருத்துதான் இதன் தாக்கமும்.

    உங்கள் மகள் சமத்து. பொறுப்பாக உங்கள் இருவரையும் கவனித்துக் கொண்டு தன் பாடங்களையும் செய்திருக்கிறார். வாழ்த்துகள். எங்களின் பிரார்த்தனைகள்.

    துளசிதரன், கீதா

    உங்கள் மகளுக்கு என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் மதுரை. அது போல பைரவ செல்லத்துக்கு என் ஹக்ஸ். சமத்து என்னமா புரிந்து கொள்கிறது. எங்கள் வீட்டு கண்ணழகியும் அப்படித்தான். சமத்து. அவளுக்கும் பலதும் புரிகிறது. வயது 11 ஆகிவிட்டது.

    நாங்களும் இங்கு சிம்பிள் ஹெல்தி ஃபுட் தான். வாழைப்பழம் கண்டிப்பாக உணவில் உண்டு. அது போல சூப்பும். கஞ்சியும். மிள்கு, சுக்கு, இஞ்சி, கறிவேப்பிலை பூண்டு போட்டு.

    கீதா


    ReplyDelete
    Replies
    1. துளசி & கீதா உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  18. உல்க மக்கள் எல்லோரும் இந்தத் தொற்றிலிருந்து விடுதலை ஆகி நலம் பெற்று உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பிட வேண்டும் என்று பிரார்த்திப்போம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  19. நல்லபடியாக மீண்டு வந்துவிட்டீர்கள் ..மிக மகிழ்ச்சி

    இறைவனுக்கு நன்றிகள் பல ...

    உங்களின் உணவு மற்றும் பாதிப்பின் தகவல்கள் விழிப்புணர்வு தருகிறது ...

    மேலும் இங்குள்ள நிலைமை ....கடினமே

    இப்பொழுது எல்லாம் இந்த செய்திகளை காண்பதே இல்லை ...

    இறைவன் மட்டுமே துணை என்னும் வரிகளே துணை வருகிறது ..

    ReplyDelete
    Replies
    1. அனுபிரேம் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  20. I could read this post only now. I am proud of you guys for your spirit. Very proud of your daughter. Stay safe.

    ReplyDelete
    Replies
    1. செல்வநாயகி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  21. நீங்க அனைவரும் நலமடைந்தது மகிழ்ச்சி. இன்னும் பூரணமாக குணமடைய என் பிரார்த்தனைகள். மகளின் உதவி அந்நேரம் பேருதவியாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  22. கொரோனாவிலிருந்து மீண்ட அனுபவங்கள் அனைவருக்கும் உபயோகமாகவும், தைரியத்தையும் தந்திருக்கும் சகோ..மகளுக்கு இந்த அத்தையின் பாராட்டுகள்..க்ரேட். அன்பான குழந்தை..அன்று என் பதிவில் மகள் தான் செய்து கொடுக்கிறாள் என்று சொன்ன போது சாதாரணமாகத் நினைத்தேன்.. இனி உங்கள் குடும்பத்திற்கு எந்தக் குறையும் வராது..

    ReplyDelete
    Replies
    1. ஆதி வெங்க்ட் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி

      Delete
  23. குடும்பத்துடன் தொற்றிலிருந்து மீண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    எங்கள் நாட்டில் நோய் தொற்றிய அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து அருமையாக பராமரிக்கிறார்கள். ஆனால், சுற்றி இருக்கும் மக்களை படுத்தும் பாட்டை தான் சகித்துக் கொள்ள முடியாதுள்ளது. எனக்கு அலர்ஜியினால் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, எனக்கு கொரோனா தொற்றி இருக்குமோ என்ற பயத்தை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் என்ன பாடுபட போகிறார்களோ என்ற பதட்டம் தான் அதிகமாக இருந்தது. நல்லவேளை சோதனையில் எனக்கு தொற்று இருக்கவில்லை.

    ReplyDelete
  24. ஐய்யோ இவ்வல்வு நடந்திருக்கா.

    வாசிக்கும்போது பக்கத்துல இருந்துகிட்டு நடந்ததை சொல்லுர மாதிரி இருக்குது.

    பத்திரமாக இருங்கள் சார்.

    ReplyDelete
  25. கொரோனாவிலிருந்து விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள் . மனைவிக்கு இப்பொழுது சரியாகிவிட்டதா ?

    ReplyDelete
  26. கொரோனாவில் இருந்து மீண்டது
    மதுரை மீனாட்சி அம்பாள் தந்த வரம்!
    பொன்னான எதிர்காலம்
    மீளவும் கிடைத்திருக்கிறது.
    தங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.