வரும் ஆனால் வராது?
பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடி சிறப்புத் திட்டங்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியா வலுவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
என்னமோ மோடி அப்படியே 20 லட்சம் கோடியை எடுத்து மக்கள் கையில் கொடுத்துவிட்டது மாதிரி உடனே இந்த சங்கிகள் ஆஹா ஒகோன்னு பாராட்டுறாங்க... அடேய் மோடியின் இந்த 20 லட்சம் கோடி திட்டமும் மதுரை எய்ம்ஸ் திட்டமும் ஒன்றுதானாடா.. வரும் ஆனால் வராது
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள விமான எல்லைக்குள் சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததற்குப் பதிலடி தர இந்தியா தயாராகி உள்ளது.
சீனாவிற்குப் பதிலடி தர இப்போது மோடி அவர்கள் PM War என்ற திட்டத்தில் நன்கொடை வசூல் செய்யத் திட்டம் அறிவிப்பார். பணம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் நகையை அதற்குப் பதிலாகக் கொடுக்கலாம்
மோடியின் உரை குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிட்டதாவது:
பிரதமர் அவர்களே.. நாட்டு மக்களிடம் நீங்கள் ஆற்றிய உரை, நாட்டிற்கும், ஊடகங்களுக்கும் வெறும் தலைப்பு செய்தியாக மட்டுமே இருக்கும்
காங்., கட்சியின் மணீஷ் திவாரி தனது டிவிட்டர் பதிவில், 'பிரதமர் மோடியின் உரையை ஒரே வார்த்தையில் கூறிவிடலாம்.. 'தலைப்புச்செய்தி.. 20 லட்சம் கோடி.. விவரங்கள் இல்லை..' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
.
சட்டம், நீதித்துறை அமைச்சராக உள்ள பூபேந்திராசிங் சவுடாஸ்மா என்ற குஜராத் அமைச்சரின் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக பூபேந்திராசிங் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு செல்லாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு, இப்படிதானே நீங்கத் தீர்ப்பு சொல்லப் போறீங்க
உலகிலேயே இந்தியாவில்தான் இறப்பு விகிதம்(3.2%) மிகவும் குறைவு: என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறினார்
ஆனால் சொல்ல மறந்தது இந்த காலத்தில் கர்ப்பம் ஆகிய பெண்களில் இந்தியாதான் முதன்மை வகிக்கிறது என்று
ஊறுகாய் இன்று என்ன சொல்லும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
ReplyDeleteஅவரு என்ன சொல்லுவர் வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டு போவார்... அவ்வளவுதான் செய்வார்
Deleteஇலவு வீட்டிலும் கொள்ளையடிக்கும் கும்பல்தான்....
ReplyDeleteஎன்னத்த சொல்ல நமக்கு வாய்த்தது எல்லாமே அப்படித்தான்
Deleteஏழை, எளிய மக்கள், விவசாயம் செய்யும் மக்களுக்கு கிடைத்தால் நல்லது.
ReplyDeleteபெரிய பெரிய திட்டங்கள் போடட்டும் பரவாயில்லை ஏழைகளுக்கு சத்துணவு கூடங்கள் நடத்துவது போல தினமும் 2 தடவை உயிர்வாழ உணவு கிடைக்க செய்தாலே போதும்
Delete