Thursday, May 21, 2020


corona times thoughts
பழக்கத் தோஷமும் "அந்த" ஒரு லைக்ஸ் கொடுக்கும் சந்தோஷமமும் : கொரோனா காலக் கிறுக்கல்கள்



பழக்கத் தோஷத்தில்
ஒருவர் நலமா என்று கேட்டால்
நாமும் பழக்கத் தோஷத்தில்
நலம் என்று சொல்லிவிடுகிறோம்

பசி என்று வாய் திறந்து
ஏழைகள் கேட்கும்
இந்த உலகத்தில்
படித்த நடுத்தரவர்க்கம்
வாய் திறந்து கேட்க முடியாத
சூழ்நிலையில் பயணிக்கிறது
   
கண்கள் பேசும் காதல் மொழி
இப்போது
கஷ்டங்களைப் பேசும்
மொழியாக மாறிவிட்டது
கண்கள் பேசிய
காதல் மொழியைப் புரிந்து கொண்டவர்கள்
கஷ்டங்களைக் கண்களால் மொழி பெயர்த்துச் சொன்னாலும்
கண்ணிருந்து குருடர்களாகக் கடந்து செல்லுகிறார்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சாரு நிவேதிதாவும் மற்றும் மாற்றம் என்பது மட்டும்தான் மாறாதது போல
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"அந்த" ஒரு லைக்ஸ் கொடுக்கும் சந்தோஷம் ஓராயிரம் லைக்ஸ் பெறுவதில் இல்லை

ஊரடங்கு நேரத்தில்
நன்றாகச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு
ஸ்நாக்ஸ் வாங்க ஒடியத் தருணத்தில்,
பல குழந்தைகள்
ஒரு வேளை உணவைத்தேடி அலைந்தன

இரண்டு வாரத்திற்குத் தேவையான
ஸ்நாக்கை பை நிறைய வாங்கி வந்த
சந்தோஷம் அவருக்கு,
பசிக்காக உணவைத் தேடிய ஒடியக்
குழந்தைகள் ஒரு வேளை சாப்பிடாவவது
உணவு கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷம்
அந்தக் குழந்தைகளுக்கு .

அந்த உணவைக் கொடுத்தது
இரக்கமுள்ள ஒரு மனிதன்
அதுவும் எந்த வித லைக் எதிர்பார்க்காமல் ,
ஆனால் இவர்களோ
ஸ்நாக் வாங்கச் சென்ற போது
உணவிற்காக அலைந்த குழந்தைகளைப்
படம் எடுத்துப் பேஸ்புக்கில் போட்டு
தன் இரக்கத்தைக் காண்பித்து
வாங்கிய லைக்ஸை எண்ணிக் கொண்டிருக்கிறார்
ஆனால் அதிலோ மனத் திருப்தி இல்லை

இரக்கம் உள்ளவன்
ஏழைகளுக்குச் சத்தமில்லாமல் கொடுத்து
அந்த ஒரு குழந்தையின்
சந்தோசத்தைப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்

---------------------------

யார் நடிப்பு சிறந்தது

நண்பர்களாக இருந்து
நம் முன் நடிப்பவர்களைக்கண்டு, 
நாமும் நம்பியது போல
நடிப்பது என்பது இருக்கிறதே
அது  நண்பணின் நடிப்பை விட
மிக சிறந்த நடிப்புதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்
21 May 2020

16 comments:

  1. பசியுடன் இருந்த  குழந்தைகளை படமெடுத்து போட்ட :(  என்ன சொல்வது :( 
    இந்த பதிவு  பறவைகளும் அணில்களும் சிற்றுயிரும் எவ்வுயிரும்  பசியோடு இருக்கக்கூடாது என்ற எண்ணமுடைய எனக்கு  மனசுக்கு வலி தந்தது ..
    நான்  ஹோம்லெஸ் பீப்பிலை  பார்த்தா ஏதாச்சும் வாங்கி கொடுத்துடுவேன் ட்ரூத். 

    ReplyDelete
    Replies
    1. என் மனைவியும் உங்களைப் போலத்தான் ஹோம்லசை கண்டால் பர்சில் இருப்பதை எடுத்து கொடுப்பாள் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதுவும் அமெரிக்காவில் உள்ள ஹோம்லஸ்க்கு .காரணம் பலர் ட்ரக் அடிக்ட் அவர்களுக்கு தேவை பணம்தானே ஒழிய பசிக்கு உணவு அல்ல.

      நான் என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு அதிலும் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவேன் அதுமட்டுல்ல என்னால் முடிந்த அள்வு நன்கொடையும் கொடுப்பதுண்டு....தமிழகத்தில் புயல் வந்த போது எனக்கு தெரிந்தவர் மூலம் அனுப்பி ஒரு குடும்பத்திற்கு பணம் அனுப்பி உதவினேன் ஆனால் செய்வது எதையும் வலைத்தளத்தளத்திலோ அல்லது பேஸ்புக்கிலோ சொல்லி விளம்பரம் தேடிக் கொள்வதில்லை..முன்பு கஷ்டம் கடன் கொடுங்கள் என்று கேட்பவர்களுக்கு எல்லாம் என்னால் முடிந்த உதவிகள் செய்து இருக்கிறேன் ஆனால் பலர் மிஸ் யூஸ் பண்ணுவது தெரிந்து இப்போது அப்படி வரும் கோரிக்கைகளுக்கு நேரிடியாகவே இல்லை என்று சொல்லிவிடுகிறேன்

      Delete
    2. காலணி ,சாக்ஸ் உள்ளாடைகள் ஆண் பெண் இருவருக்கும் அப்புறம் முக்கியமா வின்டர் ஜாக்கெட்ஸ் /குவில்ட்  இதெல்லாம் கொடுத்ததுண்டு.இதை சொல்ல காரணம் இதை படிக்கிறவங்க அதேபோல் செய்தா மனமகிழ்வு அடைவேன்  .பொருள் உதவியா பெரும்பாலும் கொடுப்பேன் . பணமா கொடுத்தா சைடர் பியர்தான் வாங்குவாங்க அதனால் அப்படி என்கரேஜ் செய்வதில்லை ..மாமிக்கு மிகவும் இளகிய மனசு போலிருக்கு ..சொல்லுங்க பணம் கொடுத்தா அவங்க நிச்சயம் உற்சாகபானமோ அல்லது ட்ரக்ஸோ தான் வாங்க ஓடுவாங்கன்னு .

      Delete
    3. சகோ நீங்கள் ஸ்மார்ட்

      Delete
  2. அருமை...

    எதையும் எதிர்பாராதது அன்பு மட்டுமல்ல... இரக்க உணர்வும் தான்...

    ReplyDelete
    Replies
    1. இரக்க உணர்வு இல்லாதவனைமனித இனத்திலே சேர்க்க கூடாது

      Delete
  3. கொரோனா கால கவிதைகள் அருமை.

    படமும் அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதும் தட்டு பாடு இல்லாமல் உணவு கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்த தோன்றுகிறது.

    நிறைய பேர் சத்தம் இல்லாமல் உதவி கொண்டு இருக்கிறார்கள்.

    தங்கை பெண் ஒரு வேலையை விட்டு விட்டு வேறு வேலை சேர வேண்டிய நேரம் கடந்து விட்டது வேலையில் சேர அழைப்பு வரவில்லை. வருமா என்ற எதிர்ப்பார்ப்புகளுடன் நடுத்தர வர்க்கம் நிலை இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இவைகள் மனிதில் எழுந்த கருத்துக்கள்தான் கொஞ்சம் மாறுப்பட்ட வடிவில் கொடுத்து இருக்கிறேன் அதனால் இதை கவிதை என்று சொல்லமாட்டேன் காரணம் எனக்கு கவிதை எழுத தெரியாது ஆமாம் சத்தமில்லாமல் பல்ரும் உதவிக் கொண்டிருக்கிறார்கள் கஷ்டம் உணர்ந்தவர்கள் அடுத்தவர்களின் கஷ்டத்தில் பங்கேற்கிறார்கள்

      ஆனால் ஆடம்ப்ரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கவலைகள் அப்படி அல்ல அதைத்தான் இங்கே ஸ்நாக் வாங்க சென்றவர் மூலம் சொல்ல விழைந்திருக்கின்றேன்

      Delete
    2. 2018 ல் நான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டேன் காரணம் நான் செய்து வந்த வேலை கமிஷன் அடிப்படையில்தான் சம்பளம் அதாவது பொருளை விற்றால் மட்டும்தான் துட்டு அப்படி வாங்கிய பொருளை ஒருவருடம் கழித்து கஸ்டம்ர் ரிட்டன் பண்ணினால் கொடுத்த கமிஷன் திரும்பு எடுத்துவிடுவார்கள் இந்த வேலையைத்தான் கடந்த17 வருடங்கள் செய்து வந்தேன் 2018 பிஸின்ஸ் மிகவும் டல்லாக ஆரம்பித்தது கட்டுபிடியாகவில்லை அதனால் வேலையை நானாக விட்டுவிட்டேன் வேலை எளிதாக கிடைத்துவிடும் என்று நம்பி அதன் பின் மீண்டும் வேலைக் கிடைக்க 10 மாதங்கள் ஆகியது அந்த நேரத்திலே அப்படி... ஆனால் இப்ப நினைச்சு பார்க்க முடியவில்லை

      Delete
  4. மதுரைத் தமிழனும் கவிதைகள் எழுதத் தொடங்கிவீட்டிர்களே! கொரோனா நிறைய கற்றுத் தருகிறது இல்லையா?

    பாவம் குழந்தைகள். உலகில் எத்தனையோ பேர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அதுவும் இந்த இக்கட்டான சூழலில். மனம் வேதனைப்படும். நம்மால் முடிந்த அளவு உதவுவோம். அதில் அவர்களுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. கொரோனா நிறைய யோசிக்க கற்றுக் கொடுத்து இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது எப்படி வாழனும் எப்படி வாழக் கூடாது. நம்மை சுற்றி உள்ள நண்பர்கள் பற்றியும் நிறைய படிப்பினை கற்றுக் கொண்டடேன் ஆனால் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய நிறைய


      நீங்கள் மக்களுக்கு செய்த உதவி மிக மிக பாராட்டக் கூடியது மனிதநேயம் உள்ள மனிதர் நீங்கள் சல்யூட்துளசிதரன் சார்

      Delete
  5. அந்தக் குழந்தைகளின் மகிழ்வைப் பாருங்கள்! என்ன ஒரு கள்ளம் கபடமற்ற மகிழ்க்சிப் பிரதிபலிப்பு!

    பாவம் அக்குழந்தைகள் இது போல எப்பவும் இன்னும் மகிழ்வுடன் வாழ்ந்திட பிரார்த்திப்போம்.

    இவர்களைப் போல எத்தனை எத்தனை குழந்தைகள் வாடுகிறார்கள். இவ்வுலகில் எந்த உயிரினமும் பசியால வாடக் கூடாதுன்னு நினைப்பதுண்டு. பதிவு கொஞ்சம் மனதை என்னவோ செய்தது மதுரை...அதுவும் உங்கள் வரிகள் அத்தனை இம்பேக்ட்...ஊர்வன பறப்பன நடப்பன நாலு காலும் சரி இரண்டு காலும் சரி துன்பப்படக்கூடாதுனு நினைப்பதுண்டு. கருணையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உதவிடுவோம் நம்மால் இயன்றவரை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் க்ஷ்டப்படுகிறார்கள் ஆனால் எல்லோருக்கும் நம்மால் உதவ முடிவதில்லை ஆனால் நம்மால் முடிந்த அளவிற்கு நமக்கு தெரிந்த நம்மை சுற்றி அருகில் இருப்பவர்கள் நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும் இப்படி நாம் மனிதர்களுக்கு மட்டுமல்ல நம் அருகில் வசிக்கும் விலங்கினங்களுக்கும் உதவ வேண்டும்

      Delete
  6. மதுர!

    எங்க அம்மாவிடம் நான் கற்று கொண்ட ஒரு உன்னதமான விஷயம். "GIVING IS A PREVILIGE".

    நம்மால முடியும் போதே, திராணி, பலன், வசதி இருக்கும் போதே கொடுக்க முடிந்த அளவுக்கு கொடுத்துடனும்.

    அவங்கள மாதிரி இல்லாட்டியும், எதோ என்னால முடிஞ்சதை ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை என்ற கணக்கில் செய்ய முயல்கிறேன்.

    அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தெய்வத்தின் குழந்தைகள்... ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

      Delete
  7. சிறிதளவு உதவினால் நமக்கும் மகிழ்ச்சியே.கொரோனாவால் பலருக்கும் உணவு கஷ்டம் உண்டு அருகே மரக்கறி வாங்க சென்றபோது உதவி செய்யும் படி கேட்டார்கள் அரிசியும் தேங்காயும் வாங்கி கொடுத்தோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.