Tuesday, May 19, 2020


#neechalkaran

சத்தமில்லாமல் எதையும் எதிர்பாராமல் கணினித்தமிழுக்காகச்   சாதனை செய்யும் தமிழக இளைஞர்

பலரும் தமிழ் தமிழன் என்று வெறுமே மேடையிலும் ஊடகங்களிலும் பேசியும் எழுதியும் உணர்ச்சிகளை மட்டுமே தூண்டிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்த  இளைஞர்  சத்தமில்லாமல்  தமிழை வாழ்விப்பதற்கான பல ஆக்கப்பூர்வமான  முயற்சிகளை இணையம் வழியாகத் தொடர்ந்து செய்து வருகிறார் இந்த தமிழகத்தைச் சார்ந்த இளைஞர் அதுவும் எந்தவொரு நிர்பந்தம் இல்லாமல் ஒரு சேவையாக இவர்  தமிழுக்கு அளப்பரிய தொண்டு ஆச்சிரியம் அளிக்கிறது.

தமிழகத்தில் தற்போது உள்ள இளைய சமுதாயத்திற்குத் தமிழ் பேசவருகிறது ஆனால் பலருக்கும் எழுதப் படிக்கத் தெரியாத நிலை உருவாகி இருக்கும் நிலையில் தமிழ் எங்கே அழிந்துவிடுமோ என்று அஞ்சிய கொண்டிருந்த வேலையில் இவரைப் போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை தமிழுக்கு அழிவே இல்லை எனலாம்.

ஆமாம் யார் அவர் ?
 
எங்கள் ஊர்க்காரர்
வைகைக் கரையில் பிறந்தவர்;
கொளவாய் ஏரிக்கரையில் கிடப்பவர்;
தமிழருவியில் குதித்துப் பழகும் இளைஞர்;
இந்திய மக்கள் வெள்ளத்தில் இவரும் ஒருவர்;
திரைகடலோடி உங்கள் நட்புக்களைத் தேடுபவர்,
வலைக்கடலில் வலைவிரித்து நீந்துகிறவர்
கணித்தமிழுக்காக தன்னார்வப்பணிகளை ஆரவாரம் இல்லாமல் செய்து வருபவர்
.
அவர்தான் வல்லமைமிகு நீச்சல்காரன்” என்ற  ராஜாராமன் அவர்கள்

அவரைப்பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கே ஒரு சிறு க்ளிக் 

அவரை மின்னஞ்சலில் பாராட்டி உற்சாகப்படுத்த அல்லது அவரை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி: neechalkaran@gmail.com

இணைய தள முகவரி http://www.neechalkaran.com/

விளக்கம்

இணைப்பு

தமிழ் சொல்லாய்வுக் கருவி

சுளகு

தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி

நாவி

தமிழ் பிழைதிருத்தி

வாணி

தமிழ் அகராதிகளின் ஒருங்கிணைந்த தேடல் தளம்

அகராதி

சொற்பகுப்புத் திறன் கொண்ட தொகுப்பகராதி

தொகுப்பகராதி

தமிழ் ஒருங்குறி மாற்றி; எழுத்து சீராக்கி

ஓவன்

பல்குறியீட்டுத் தமிழ் எழுதி

மென்கோலம்

பிழைதிருத்தி குழுமம்

நோக்கர்

புதிர்கள் (பி.பி.ஸ்ரீனிவாஸ்)

சொற்புதிர்

கட்டங்களுடன் ஒரு கொண்டாட்டம்

ஆடு புலி ஆட்டம்                                           

கோலம் வரையும் செயலி

கோலசுரபி        


12,வலைத்தளங்களான திரட்டி   தமிழ்சரம்
13.பதிவு திருட்டை தடுக்க பூட்டுப்பட்டறை

இவரைப் பாராட்டி இப்படியே விட்டுச் செல்லாமல் இவரின் முயற்சிக்குத் தமிழக அரசின் தமிழ்துறையின் பாராட்டுகளும் அங்கிகாரமும் பெற அதற்கான செல்வாக்கு மிக்கவர்கள் முயற்சி செய்ய வேண்டுகோள் விடுவிக்கிறேன்....

அது போல உலகில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் இவரின் முயற்சியைப் பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுவிக்கிறேன்... ஊடக செலிபிரட்டிகளை கூப்பிட்டு விழா நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் இப்படிப்பட்ட இளைஞரைக் கூப்பிட்டுத் தட்டிக் கொடுக்கவேண்டும்...

வருகிற நாட்களில் அப்படி எந்த தமிழ்ச் சங்கம் முதலில் ஒரு முயற்சி எடுக்கின்றது என்பதைப் பார்ப்போம்

அதுவரை இதைப் படிக்கும் அனைவரும் அவரை உற்சாக மூட்டிக் கொண்டிருப்போம்

வாழ்க வளமுடன்

அன்புடன்
மதுரைத்தமிழன்


28 comments:

  1. இனிய நண்பருக்கு அன்பான வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களால் அவரை அறிய வாய்ப்புக்கள் கிடைத்தது... நன்றி

      Delete
  2. நேற்று மேலும் இரு இணைப்புகளை சேர்த்துள்ளேன்...!

    ReplyDelete
    Replies

    1. நானும் இணைத்துவிட்டேன்

      Delete
  3. உண்மை உன்மை. உதய சந்திரன் ஐ.ஏ.எஸ் இணையக் கல்வி கமிழகத்தின் இயக்குநராக இருந்த போது அவருக்கு உறு துணையாக இருந்தவர். மைக்ரோசாஃப்டில் பணிபுரிவதாக சொன்னதாக ஞாபகம்.. ஒய்வு நேரத்தை இவ்வியக்ககத்தில் செலவழித்து பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் விக்கி பிடியா கட்டுரை எழுத பயிற்சிகள் அளிக்கத் தூண்டுகோலாக இருந்தவர். புதுக்கோட்டை வலைபதிவர் திருவிழா சமயத்தில் இவரை சந்தித்தேன்.சமீபத்தில் விக்கி பிடியா போட்டியில் தமிழ் முதலிடம் பெற்றதற்கு இவரும் ஒரு காரணம். இவரது பிழைதிருத்தியை தவறாமல் பயன்படுத்துபவர் நமது ஜோதிஜி. அதனால்தான் அவரது கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் காண்பதுஅரிது. மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது. அசாதாரண அறிவு கொண்டவர். இவருக்கு உரிய சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு இவரைப் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் தமிழின் சிறப்பு மேலும் உலகறியச் செய்ய முடியும். மதுரைத் தமிழனின் வேண்டுகோளை நானும் வழி மொழிகிறேன். இது சார்ந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட வேண்டும். இணையத் தமிழுக்கு அரும்பணி ஆற்றுபவர்களில் நான் அறிந்த இரண்டு முத்துக்கள் 1. மூத்தவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் 2. இளையவர் ராஜாராமன் ஊடகங்களுக்கு இவர்களைப் போன்றவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. இணையத்தில் வலைப்பூக்கள் எழுதும் சில பத்திரிக்கையாளர்களுக்கும் இவரைப் பற்றித் தெரியும் ஆனாலும் இவரைப் பற்றி தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டதாக தெரியவில்லை.

    தகுதியுள்ள இளைஞரை பெருமைப் படுத்திய மதுரைத் தமிழனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
    கொசுறு ;தமிழ்ச்சரம் திரட்டி நடத்திய போட்டியில் எனக்கு பரிசுத்தொகையை இவர்தான் அனுப்பினார்.

    ReplyDelete
    Replies
    1. ஜம்புலிங்கம், நீச்சல்காரன் போன்ற பலரும் சத்தமில்லாமல் எதையும் எதிர்பாராமல் அவர்களின் தாய்க்கு சேவை செய்வது போல தமிழுக்கும் சேவை செய்து வருகிறார்கள் அவர்களின் செயல்கள் மிகவும் பாராட்டுகுரியது

      Delete
    2. தாய்மொழிக்கு நம்மால் ஆன பங்களிப்பு என்ற நிலையில் தொடர்கிறேன். நம் பெருமையை தமிழர் அல்லாதோரும்/தமிழ் மொழி அறியாதோரும் அறியவேண்டும் என்ற நன்னோக்கில் ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஆரம்பித்துள்ளேன். உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பு இன்றி எனக்கு இது சாத்தியமில்லை என்பதை அறிவேன். அன்புக்கு நன்றி.

      Delete
  4. "கணணி" என்பதை கணினி என்று மாற்றி விடுங்கள்...

    இனிய நண்பரைப் பற்றிய சில சிறப்புகள் : பழகுவதில் இனியவர்... சென்ற வருடம் புதுக்கோட்டையில் இருநாட்கள் பயிற்சி நடந்த போது, நாங்கள் மேலும் பலவற்றை உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது... தொழினுட்பம் சொல்வதில், அவரின் தொழினுட்பத்தை விட வேகமாக சொல்வார்... ஹா... ஹா... ஆனால், மீண்டும் கேட்டால் சலிக்காமல் புரிய வைப்பார்...

    தமிழ்ச் சங்கம், அரசு இவையெல்லாம் அவருக்கு சர்வசாதாரணம்... ஏனெனில் அவரின் தொடர்பு எல்லை நீங்கள் சொன்னதையும் தாண்டி நீண்டது... தல, உங்கள் பதிவில் நேற்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்... அது, "சாதனை செய்பவர்கள் எல்லாம் சத்தம் செய்வதில்லை" என்று...! அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள முயலுங்கள்...

    ஒரே ஒரு உண்மையை சொல்கிறேன்... நேற்று சுளகு பற்றிய எனது பதிவு, வரைவு பதிவில் (draft post) இருந்தது... அதை மேம்படுத்தி வெளியிட்டேன்...! ஏனென்றால் 2016 ஆண்டே அவர் அதை வெளியிட்டு விட்டார்... (கவனிக்க வருடம் : https://tech.neechalkaran.com/2016/01/sulaku.html) அந்த வருடம் தான் வியாபார சுற்றலில் மிகவும் அதிகமாக இருந்த நேரம்... அதனால் அதைப்பற்றி எழுதுவே நேரம் இல்லை... இப்போது தான் எந்நேரமும் - பாரத் மாதா... அதே அதே...!

    அதுமட்டுமில்லாமல், எனது பதிவில் கொடுத்தது 13 மட்டுமே... இன்னமும் உள்ளன... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உலகம் அறிந்த அவர் எனக்கு உங்கள் பதிவின் மூலம்தான் தெரியவந்ததது.... பாராட்டப்பட வேண்டியவட் என்பதால் இந்த பதிவின் மூலம் பாராட்டி விட்டேன்

      Delete
  5. தங்களது வேண்டுகோள் சிறப்பானது எனது வாழ்த்துகளும் கூடி...

    ReplyDelete
  6. நீச்சல்காரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். ட்றுத் உங்களின் வேண்டுகோள் விரைவில் நிறைவேறட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் ராஜாராமன் அவரை பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக நன்றி

      Delete
  7. நீச்சல்காரன் என்கிற திரு ராஜாராமன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் ராஜாராமன் அவரை பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக நன்றி

      Delete
  8. நீச்சல்காரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் ராஜாராமன் அவரை பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக நன்றி

      Delete
  9. சிறப்பான அறிமுகம் .அறிமுகப்படுத்தியதற்கு நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் ராஜாராமன் அவரை பாராட்டி வாழ்த்தியதற்கும் மிக நன்றி

      Delete
  10. ட்ரூத் இப்போ என் பதிவில் கொஞ்சத்தை டெஸ்ட் செஞ்சேன் சூப்பரா இருக்கு  பிழை திருத்தி ..

    ReplyDelete
    Replies
    1. நானும் அதை பயன்படுத்தி வருகிறேன்

      Delete
  11. மதுர ,

    இவரை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டுள்ளேன். தற்போது நீங்கள் வெளியிட்ட பதிவால் மேலும் அறிந்து கொண்டேன்.

    வாழ்த்துக்கள் நீச்சல் காரன் அவர்களே..உங்கள் தொண்டு தொடரட்டும்.

    அது சரி மதுர..

    இம்புட்டு அழகான அறிவான பதிவை போட்டுட்டு கூடவே தமிழ் சங்கத்தை கோத்து விட்ட பாரு.. அங்கே தான் உன் மதுர குசும்பு இருக்கு.

    எங்க தமிழ் சங்கத்துக்கு எல்லாம்..இப்படி பட்ட அறிவார்ந்த ஆட்கள் தேவையில்லை.
    ஓய்வு பெற்ற இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள்.. அரைத்த மாவையே அரைக்கும் பட்டிமன்ற அறிவாளர்கள்,70களில் வார இதழ்களில் வந்துள்ள கடி ஜோக்குகளை .."இந்த மாதிரி தான் எங்க ஊரில் ஒருத்தன்னு " சொல்ற நகைசுவையாளர்கள், இதெல்லாம் கூட பரவாயில்லை..

    காமடி என்று அரை டஜன் ஆட்களை அழைத்து கொண்டு டிராமா போட வரும் அதிக மூளை ஆட்கள்..

    அவங்க தான் தமிழ் சங்கத்துக்கு வேணும்!

    இவரை மாதிரி ஆட்களை ஊக்குவிப்பதற்கு பதிலா.. நான் மேலே சொன்ன ஆட்களை முதல் வகுப்பில் அழைத்து ஆடம்பர விடுதியில் தங்கவைத்து தலைக்கு 10000- 15,000 டாலர் கொடுத்தாதான் எங்க தமிழ் சங்ககளுக்கு தமிழ் வளர்க்க முடியும்.

    நல்லா சொன்ன போ!

    ReplyDelete
    Replies
    1. அது குசும்பு அல்ல சங்கங்களுக்கு இதன் மூலம் ஒரு தகவல் கொடுக்கும் முயற்சி... இதை பார்த்து ஒரு சில சங்கங்களாவது பாராட்டாதா என்பதுதான். பொருப்போம் பார்ப்போம்

      Delete
  12. இத பாரு மதுர...
    நம்ம நல்லவர் முரளிதரனுக்கு பரிசுத்தொகை வந்துடுச்சாம். அடுத்த முறை இந்தியா போகும் போது புகாரியில் ஒரு பிரியாணி... அவர் செலவில்.

    ReplyDelete
    Replies
    1. என்ன உங்களுக்கு பிடித்த பிரியாணியோட விட்டுடீங்க அப்ப எனக்கு பிடிச்ச அதாவது மதுபிரியர்களுக்கு ஒன்றும் கிடையாதா?

      Delete
  13. இளம் வயது+சுறுசுறுப்பு+ஆர்வம்+கனிவான பேச்சு+மாற்றுக்கருத்துடையோரையும் ஈர்க்கும் குணம்+நிறைகுடம் இவ்வாறாக அனைத்து நேர்மறை குணங்களையும் கொண்ட திரு நீச்சல்காரனுக்கு அறிமுகமே தேவையில்லை. புதுக்கோட்டையில் அண்மையில் ஒருமுறைதான் சந்தித்தேன், வியந்தேன். நம்மைப்போன்றோர் இவ்வாறு எழுதும்போது அவர் இன்னும் சாதிப்பார். அவரால் நாமும் பயன்பெறுவோம். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல உள்ளவர்கள் அவரை பாராட்டுவதுதான் இன்னும் சாலச் சிறந்தது.... நீங்களும் தொடர்ந்து சாதனைகள் செய்து வருவது மிக மகிச்சி.. பாராட்டுக்கள் இருவருக்கும்

      Delete
  14. போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் உரிய சாதனை நாயகர்
    போற்றுவோம் வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் ராஜாராமன் அவர்களை வாழ்த்தியதற்கும் நன்றி கரந்தைஜெயக்குமார் சார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.