Thursday, May 21, 2020

#charu #nivedita  #charunivedita #tamil writter

சாரு நிவேதிதாவும்  மற்றும் மாற்றம் என்பது மட்டும்தான் மாறாதது போல


மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது போல் நாம் நமது வாழ்வில் மாற்றத்தைத் தேடியே பயணித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் பஜனைப் பாடிக் கொண்டிருப்பது எழுத்தாளர் சாரு நிவேதிதா மட்டும்தான்

கடந்த ஐந்தாண்டுக் காலத்திற்குப் பின் சில நாட்களுக்குப் பின் ஒரு நண்பரின் வலைப் பக்கத்திற்குச் சென்ற போது அங்குச் சாருவின் வலைத்தளத்திற்கான இணைப்புக் கண்ணில் தென்பட்டது .சரி என்று அவர் தளத்திற்குச் சென்றேன் .அதுவும் கடந்த 5 வருடங்களுக்குப் பின். அப்போது அவர் பதிவு ஒன்று கண்ணில் பட்டது அது அவரின் புலம்பல் பற்றிய பதிவுதான். கடந்த 5 வருடத்திற்கு முன்னால் விஜய் தொலைக்காட்சி தன்னை ஏமாற்றிவிட்டது என்று புலம்பிக் கொண்டிருந்தாரோ அதே புலம்பல்தான். இப்போதும் அதோடு இப்ப விண் தொலைக்காட்சி மற்றும் அவரின் வீட்டிற்கு அருகில் உள்ள இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் குறை கூறி எழுதிவிட்டு. எழுத்தாளர்கள் என்றால் வறுமையில்தான் வாட வேண்டுமா என்று நாகரிமாகக் கேட்டு தனக்கு நன்கொடைகள் அனுப்பும் மாறு கேட்டு ,அதை எப்படி அனுப்புவது என்று மிக மிக விளக்கமாகத் தன் பக்கம் கொடுத்திருக்கிறார்.. அது அவர் விருப்பம் ஆசை சொந்த விஷயம் என்று சொல்லிக் கடந்து விடலாம் அவர் சாதாரண ஆளாக இருந்தால் ஆனால் அப்படி இல்லாமல் அவர் ஒர் எழுத்தாளர் அதிலும் கீரிடம் சூடிய எழுத்தாளராகக் கருதி பொதுவில் வரும் போது நாம் விமர்சனம் செய்வதில் தப்பேதுமில்லையே..
 
எனக்கு ஒரு கேள்வி அவருக்கு அழகான சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு மனைவி, நல்ல வீடு, ஸ்மார்ட்டான நாய். இவரும் ஒரு எழுத்தாளர்..இப்படி இருந்தும் அவருக்கு வருமானம் பற்றவில்லை என்றால் அதற்கான முயற்சியில் இறங்குவதுதானே சரி அதைவிட்டுவிட்டு நான் சிறந்த எழுத்தாளன். எழுத்தாளர்களை இந்தச் சமுகம் கவனிக்கவில்லை அவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள் என்று புலம்பும் போது நமக்கு எரிச்சல்தான் வருகிறது.

நான் கேட்கிறேன் எழுத்தாளன் என்றால் உழைத்துச் சம்பாதிக்கக் கூடாது என்று எங்காவது கூறியிருக்கிறார்களா?
அப்படி உழைத்தால் அவரைச் சிரச்சேதம் யாரும் பண்ணிவிடுவார்களா என்ன? அவர் தகுதிக்கு(படித்த) ஏற்ற ஒரு வேலையை வாரத்தில் 5 நாட்களுக்குச் செய்து விட்டு மாலை நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் தன் எழுத்து பணியைத் தொடரலாம்தானே? என்ன அவர் வாசகர்கள் ஐடியில் வேலை செய்யும் வேலைக்குச் சமமான வேலை கிடைக்காது .ஆனால் அவர் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையைச் செய்து சம்பாதிக்கலாம்தானே?

சரி அதைவிடுங்கள் தமிழர்கள் புத்தகங்கள் அதிகம் வாங்குவதில்லை அதனால் எழுத்தாளர்கள் கஷ்டப்படுகிறார் என்று தமிழர்களின் மீது இரு குற்றச் சாட்டு...சரி புத்தங்களை வெளியிட்டு விற்பனையாளர்களிடம் கொடுத்து விட்டு ,வீட்டில் பஜனை பாடிக் கொண்டிருப்பதற்குப் பதிலாகத் தானே தன் புத்தங்களைப் பொது இடங்களில் அதுவும் கூட்டம் வரும் இடங்களில் நேரடியாகத் தினமும் சில மணிநேரம் விற்கலாமே.. இப்படி உழைத்துச் சம்பாதிப்பது கேவலமா என்ன?



சரி பெரிய எழுத்தாளன் அது எனக்குத் தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைத்தால் ஊரெல்லாம் பட்டிமன்றம் மோட்டிவேஷன் பேச்சு என்று பேசி பலரும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்களே அது போலச் சம்பாதிக்க முயற்சி எடுக்கலாம்தானே

சரி அப்படி  நல்லதைப் பேசிச் சம்பாதிக்க முடியவில்லை என்றால் பேஸ்புக்கில் ஒரு போலி ஐடியை உருவாக்கிக் கொண்டு அரசியல் கட்சிச் சார்பாகப் பதிவிட்டால் ஒரு பதிவிற்குச்  சில கட்சிகள் 2 ரூபாயும் சிலகட்சி 200 ரூபாயும் தருகிறதே அப்படியாவது வீ
ட்டில் இருந்தே சம்பாதிகலாம் தானே

இப்படித் தன் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு இதில் எது என்பதை யோசித்துச் செயல்படுவதை விட எழுத்தாளர் என்று சொல்வதுதான் சௌகரியமானது என்பதைத் தேர்வு செய்துகொண்டு அந்தப் பிரச்சினைகளுடனேயே வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்...


சில மாற்றங்கள் நமக்கு நல்லதாக இருக்கும் என்று நாம் அறிந்தாலும் கூட அந்த மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்குக் காரணம், தற்போது இருக்கும் சௌகரியத்தை இழக்க விரும்பாததே. இப்படித்தான் தன் சாரு தன் சௌகரியத்தை இழக்க விரும்பவில்லை போல இருக்கிறது

தற்போதைய சௌகரியங்களை இழக்காதவரை, முன்னேற்றத்துக்கான கடுமையான செயல்களில் ஈடுபடாதவரை நாம் நன்கொடை என்ற பெயரில் கையேந்திக் கொண்டுதான் இருக்கவேண்டும்

இப்படி உழைக்காமல் சும்மா எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவுவதைவிட ஓர் நாளைக்கு 10 அல்லது 12 மணிநேரம் உழைக்கும் உழைப்பாளி இந்தக் கொரோனா காலத்தில் ஒரு வேளை உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறேனே அவனுக்கு உதவுவது மிகப் பெரிய உதவிதானே.

ஒருவேளை சாரு மேலே சொன்னபடி உழைத்து அதன் பின்னும் அவருக்கு வருமானம் பற்ற வில்லை என்றால் அதன் பிறகு மற்றவர்கள் உதவுவதில் தப்பே இல்லை

பச்சை தமிழன் என்றால் எனக்கு பணம் அனுப்புங்கள் இல்லையென்றால் நாம் மோடியை ஆதரிப்பேன்-சாரு

இனிமேல் அவர் பேச்சுக்களைக் கேட்கவேண்டும் என்றால் அதற்குப் பணம் தர வேண்டும் என்று சொல்லி அவர் தளத்தில் சொல்லி இருக்கிறார் அதில் தப்பு இல்லை அப்படி சொல்லி செல்லாமல் இப்படிப் பதிந்து இருக்கிறார்.

///ஏன் இப்படிக் கறாராக இருக்கிறேன் என்றால், தமிழர்களின் 4000 ஆண்டுப் பழக்கத்தை நான் முதல் ஆளாக மாற்ற முயற்சிக்கிறேன். ஞானத்தை இலவசமாகப் பெறாதீர் என்பதே என் செய்தி. அதற்காகப் பணமே குறி என்றும் கிடையாது. மாதம் ஒரு பத்து டாலர் என்று ஆண்டுக்கு நூறு டாலர் அனுப்பினால் கூடப் போதும். இப்படி நூறு பேர் முன்வந்தால் போதுமே?

பணம் தந்துதான் பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் அந்தப் பணத்திற்கு ஏற்றுத் தகுதியான பேச்சு இருக்க வேண்டுமல்லவா?

ஆமாம்மப்பா இவரிடம்  100 டாலர் கொடுத்து ஞானஸ்தானாம் வாங்கி செல்லுங்கள்
    
@charu nivedita


டிஸ்கி : வயதாகிவிட்டதே  இந்த முதியவரை போய் உழைக்க சொல்வது தப்பு இல்லையா என்று என் மனது கேட்டது ஆனால் இவரின் வாய் கொழுப்பை பார்க்கும் போது இப்படிக் கேட்பது தப்பே இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது

மனைவியும் இவரும் போஸ்டல் டிபார்ட்மெண்டில்  நல்ல வேலையில் இருந்தவர்கள் மகன் மெரைன் இஞ்சினீயர் இருந்தும் பணம் பணப்பற்றாகுறை...ஹும்ம்

**********************************************************************************

சாருவைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள படிக்க தவறவிடக் கூடாத பதிவுகள்

*************************************************************************************************************************************************







 
 
 


**********************************************************************************
அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. நீங்கள் சொல்லி விட்டீர்கள்... ஆனால் எனக்கு தொண்டை வரை வந்து அடைத்துக் கொள்கின்றன... விடுங்கள் அனைத்து உயிர்களுக்கும் பசி மாறுவதில்லை... ஆனால் அந்த பசியை நீக்க...

    இருங்க... உங்கள் பதிவை மீண்டும் வாசிக்க...

    (!)

    ReplyDelete
    Replies
    1. ஏழைகளாவது வாய் திறந்து பசி என்று கேட்கவாவது முடியும் ஆனால் படித்த நடுநிலை வர்க்கத்தினரின் நிலை யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது.... நம்மால் எத்தனை பேருக்குதான் உதவ முடியும் மனது உண்மையில் கனத்து போய்கிறது

      Delete
  2. ஆமாம் மதுர..

    இப்படி தான் என்னை கூட..

    "நீ சுஜாதா மாதிரி எழுதுற , சரோஜாதேவி மாதிரி எழுதுற, சாவித்திரி மாதிரி எழுதுற.. முழு நேர எழுத்தாளரா மாறிடுன்னு சொன்னாங்க..

    நானும் இங்க சொல்ராங்களேன்னு ரெண்டு மூணு புக்கை வேற வெளியிட்டேன். அது என்னமோ நல்ல பீலிங் தான். நம்ம எழுத்தை நாலு பேர் படிக்குறாங்களேன்னு..

    ஆனா ஒரு விஷயம் பாரு.. ஆண்டவன் புண்ணியத்தில் வேலையை மட்டும் விடல. இன்னும் கணக்கு பிள்ளை தான். கணக்கு போடாத நேரத்தில் எழுத்து.

    பின் குறிப்பு :

    அந்த சுஜாதா, சரோஜாதேவி, சாவித்திரினு சொன்னதுல நீயும் ஒருத்தன். நீ நல்லவனா கெட்டவனா ? :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒரு மில்லியனராக இருந்தாலும் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பார்க்கும் மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது
      என்னது 3 புத்தகம் வெளியிட்டு இருக்கிறீர்களா? ஒன்னுதான் எங்கிட்டே இருக்கு அதையும் மனைவி ரவுண்டில் விட்டு கொண்டு இருக்கிறாங்க


      "நீ சுஜாதா மாதிரி எழுதுற , சரோஜாதேவி மாதிரி எழுதுற, சாவித்திரி மாதிரி எழுதுற.. அப்படி நான் சொன்னது அவர்களின் எழுத்து நடை மாதிரி உங்க நடை இருக்குன்னு சொல்லல. நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க போல இருக்கு நான் சொன்னது அவங்கள் மாதிரி நீங்க ஒரு ரும்மில் சேர் போட்டு உட்கார்ந்து யோசிச்சு எழுதுறீங்க என்று

      சரியா போச்சு

      Delete
    2. //நீங்க ஒரு மில்லியனாரா இருந்தாலும்//

      ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னா உண்மையாகும்னு கேள்வி பட்டு இருக்கேன். உன் வாக்கு பலிக்க வாழ்த்துக்கள், மதுர !

      Delete
  3. இந்தக்கூத்து நல்லாத்தான் இருக்கு இணைப்புகளுக்கு செல்கிறேன் தமிழரே...

    ReplyDelete
  4. ஒரு பதிவில் ஒரு முறையாவது பணத்தைப் பற்றி எழுதி விடுவார். ஆனால் பணத்துக்கு ஆசைப்படுபவன் அல்ல என்றும் கூறுவார்/அவருடைய புத்தகங்களின் விலை 1000 ரூபாய்க்கு குறைந்து கிடையாது. இதில் பூனை வளர்ப்புக்கு வேறு பணம் அனுப்ப சொல்வார். 1000 ரூபாய்க்கு மேல் உள்ள பேனாவைத்தான் பயன்படுத்துவாராம். அதிக டிமாண்ட் இருந்த சுஜாதாகூட வேலையைவிடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பணத்தின் மீது அவருக்கு ஆசை ஆனால் இல்லை என்று சொல்வதே அவரது வழக்கம் அவர் ஆசைப்படுவதில் தப்பு இல்லை அது போல அவருக்கு கொடுப்பவர்களையும் தவறாக நினைக்கவில்லை ஆனால் அவறை ஒப்பிடும் போது மிக ஏழமை நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமே என்பதுதான் என் கருத்து மற்ற சமய்ங்களில் அவர் பதிவு என் கண்ணில் பட்டு இருந்தால் கடந்து சென்று இருக்கலாம் ஆனால் கொரோனா சம்யத்தில் பலரும் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கடந்து செல்ல முடியவில்லை அத்னால்தான் இந்த பதிவு

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.