Friday, May 22, 2020


#vikatan #avargal #unmaigal Vikatan for laying off 176 employees
விகடனின் ஆட் குறைப்பு விருதுகள் நியாயமானதா?

பல வருடப் பாரம்பரியம் கொண்ட பத்திரிகை விகடன்... ஒரு காலத்தில் மக்களை இதைப் பொக்கிஷமாகவே கருதினார்கள் ஏன் இன்று வாழும் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பலரும் பழைய கால விகடனைப் பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தனர். அந்நாளைய விகடன் சமூகத்துக்குச் செய்த
து எந்த எதிர்பார்ப்புமில்லாத பெரும் கடன். அப்படி பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட விகடன் கடந்த 30 ஆண்டுகளாகத் தடுமாறி தடம் மாறிக் கொண்டே வந்து கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சி சேனல்கல் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பல வார இதழ்கள் நாளிதழ்கள் ஆட்டம் கண்டன அதில் விகடனும் விலக்கு அல்ல இழந்த சர்குலேசனை அதிகரிக்கத் தரத்தைக் கூட்ட வேண்டிய விகடன் தரத்தை இழந்து சர்குலேஷனை மீட்கும் முயற்சியில் இறங்கியது எனச் சொல்லாம் .இந்தத் தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களால் மத விஷங்கள் ஆரம்பத்தில் மேல்மட்டத்தில் விதைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை விகடனுக்கும் வந்ததது. காரணம் விகடனின் நிர்வாகம் மேல்மட்ட ஜாதியைச் சார்ந்தவர்களின் கையிலிருந்தது. அதனால் அவர்கள் தங்கள் கடந்து வந்த பாதையைச் சற்று மாற்றிப் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து இழந்து போன தங்களின் வருமானத்தைப் பெருக்க முயன்றனர்... அதனால் பாரம்பரிய விகடன் தன் சுயத்தை இழந்து மக்களிடம் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. இதுதான் விகடனின் கதை

இப்போது நாம் விகடனின் ஆட்குறைப்பு விஷயத்திற்கு வருவோம்.
ஆட்குறைப்புச் செய்வது சரியா இல்லையா என்று பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்திலிருந்து பார்க்கும் போது சரி என்றும் நிர்வாகத்தினர் பக்கம் இருந்து பார்க்கும் போது அது தவறு இல்லை என்றுதான் தோன்றும்

விகடன் சேவை நோக்கில் செயல்படும் ஒரு நிறுவனம் அல்ல லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம்
.. அதன் வருமானம் பாதித்து இருக்கும் நிலையில் எந்த ஒரு நிறுவனம் செய்யக் கூடியதை அது இன்று செய்து இருக்கிறது..மற்ற சமயங்களில் இப்படி ஒரு ஆட்குறைப்புச் செய்து இருந்தால் இப்போது இருப்பதை விட மிகக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும்..இப்போது கொரோனா அவர்களுக்குக் கொடுத்த ஒரு நல்ல கொடை என்றும் சொல்லாம். அதனால் கொரோனாகாலத்தில் ஆட் குறைப்புச் செய்து இருக்கிறது. இந்தச் சமயத்தில் வேலையிழப்பு உலகம் முழுக்க நிகழ்கிறது. இதில் விகடன் மட்டும் விதிவிலக்கல்ல. இதைத் தவறு என்று சொல்லுபவர்களுக்கு அவர்களின் நிதி நிலைமை பற்றித் தெரிந்துதான் தவறு என்று சொல்கிறார்களா என்ன? உழைக்கும் மக்களைச் சுரண்டி கொழுத்த திருப்பூர் நிறுவனங்கள் தொழிலாளிகளைக் கைவிட்ட போது அமைதி காத்த மக்கள் இன்று விகடனுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். இந்தத் திருப்பூர் நிறுவனத்திற்கும் விகடன் குழுமத்திற்கும் ஒரு சிறிய அளவு கூட வித்தியாம் இல்லை என்பதுதான் உண்மை


ஆட்குறைப்பைச் செய்வதற்கு முன் விகடன் என்ன செய்து இருக்கலாம்? நிர்வாகத்தினர் தமிழக முதல்வரையோ அல்லது மத்திய நிதி அமைச்சரையோ தொடர்பு கொண்டு செய்தி நிறுவனங்கள் அதுவும் இந்தக் கொரோனாகாலத்தில் படும் கஷ்டங்களை எடுத்துரைத்து ஒரு குறுகிய காலத்திற்குச் செய்தியாளர்களுக்கு உதவித் தொகை மாதிரி ஒரு நிவாரணம் பெற்றுதர முயன்று இருக்கலாம்.. அப்படி முயற்சி செய்து இயலாத சமயத்தில் ஆட்குறைப்பை படிபடியாக் செய்து இருக்கலாம் ஒருவேளை இப்படிச் செய்யும்போது அரசு சார்பாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புண்டு... ஆனால் அதைத்தானே இப்போது நாம்மறைமுகமாகச் செய்து வருகிறோம் அதனால் என்ன?

சமீபத்தில் சில செய்தி நிறுவனங்கள் ஸ்டாலினைச் சந்தித்து அரசிடம் தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைக்கச் சொன்னபோது அதைக் கேலி செய்த மக்கள்தான் இப்போது ஆட்குறைப்பைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்

இப்படி எதிர்ப்பவர்களோடு விகடனிடம் இருந்து விருது வாங்கியவர்களும் தாங்கள் வாங்கிய விருதைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பிக்கிறார்களாம் என்னமோ இவர்கள் விருது வாங்கிய காலங்களில் விகடன் அறத்தோடு செயல்பட்டது போலவும் இப்போதுதான் அவர்கள் முதல் முறையாக அறமிழந்து விட்டது போல ஒரு போலியான ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்கு ஒரு விளம்பரத்தைத் தேடிக் கொள்கின்றார்கள் இப்படிச் செய்வதற்குப் பதிலாக வேலை இழந்தவர்களில் ஒருவருக்காவது நீங்கள் உதவினால் அது அறம் 
#Vikatan for laying off 176 employees

இறுதியாக ஒரு வியாபார நிறுவனம் இப்படித்தான் இயங்கும். விகடனும் அப்படிதான். என்ன மற்றைய நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயல்பட்டது அது போல விகடனும் வியாபார நோக்கில் செயல்பட்டது மட்டுமல்ல அறம் சமூகநீதி மக்கள் நலன் என்று சொல்லிச் செயல்பட்டதால் மக்கள் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளால் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்

முடிந்தால் மக்கள் சும்மா பேசிக் கொண்டிருக்காமல் இப்படி வேலை இழந்தவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுதான் அறம். சும்மா கேள்விக்கணைகளை எழுதிக் கொண்டிருப்பது அறமல்ல


அன்புடன்
மதுரைத்தமிழன்


Directors Divya Bharati, Lenin Bharati and Kaala writer Magizhnan returns their Vikatan Award
They condemns Vikatan for laying off 176 employees


11 comments:

  1. அறம் எல்லாம் அவர்களுக்கு தெரியாது...

    ReplyDelete
    Replies
    1. அறம் தெரிந்தாலும் அதன் வழியில் போக அவர்களுக்கு மனம் இல்லை அறம் அவர்களை பொருத்தவரையில் தீண்டதகாத ஒன்று

      Delete
  2. நீங்கள் கூறியது போல சிறிது காலத்துக்கு உதவி தொகை கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சிறிது காலம் அவர்கள் உதவி இருக்கலாம் அதுவும் இந்த கொரோனா சமயத்தில் ஆனால்அவர்கள் அனுப்புவது என்று முடிவு எடுத்த பிறகு இந்த உதவியையும் ஏன் செய்யனும் என்று அறம் மறந்து செயல்பட்டு இருக்கிறார்கள்

      Delete
  3. விகடன் மட்டுமல்ல பல இதழ்களும் இப்படித்தான். போகப்போகத்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies

    1. அவர்களின் அதிக அளவு ஆசைகலே இதற்கு காரணம்

      Delete
  4. பதிவில் நீங்கள், இப்படிச் செய்திருக்கலாம் என்று நீங்கள் சொல்லியிருக்கும் சஜஷன்ஸ், கடைசியில் சொல்லியிருப்பதும் நல்லாருக்கு.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முதலில் அடிபட்டவனுக்கு உதவி செய்வதுதான் அழகு அதன் பின் அடித்தவனை கேள்வி கேட்கலாம்.. ஆனால் இங்கே எல்லாம் தலைகிழாக இருக்கிறது

      Delete
  5. உங்களுக்கு தான் விருது.. எங்களுக்கு குப்பை..

    மதுர.. உன் குசும்புக்கு ஒரு எல்லையே இல்லையா?

    ReplyDelete
    Replies

    1. உண்மையை சொன்னால் அது குசும்பா? ஹீஹீ

      Delete
  6. //மத விஷங்கள் மேல் மட்டத்தில் விதைக்கப்பட்டபோது// - இதுக்கு ஒரு உதாரணம் காட்டுங்க. நான் விகடனை பலப் பல வருடங்களாக வாசித்துவருகிறேன். எப்போ சீனிவாசன், விகடன் டெலிவிஸ்டாசுக்காக சன் தொலைக்காட்சியிடம் கை ஏந்தினாரோ அப்போதே விகடனில் நிறைய காம்ப்ரமைஸ்கள் நடந்தன. அதுதான் விகடன் க்ரெடிபிலிட்டியை இழக்கக் காரணம். பாலசுப்ரமணியம் காலத்திலிருந்த அறம், பிறகு வியாபாரமாக மாறியதால் வந்த வினை அது. மற்றபடி விகடன் திமுக சார்பாக செயல்படுகிறதே தவிர (ஷேர் போனதால் மற்றும் சன் டிவி) வேறு கட்சி சார்பாக எழுதி நான் படித்ததில்லை.

    எந்த ஒரு வியாபார நிறுவனத்துக்கும், ஆட் குறைப்போ அல்லது சம்பளக் குறைப்போதான் தீர்வு. விகடன் ஆட் குறைப்பை எடுத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ஸ்ட்ராடஜிதான். நமக்கு அந்த முடிவு வருத்தத்தைத் தந்தால், நியாயமில்லை என்று நாம் நினைத்தால், நாம் அதில் (வேலை போன) ஒருவரைத் தத்து எடுத்துக்கொண்டு, அவரது சம்பளத்தை நாம் அனுப்புவதுதான் தீர்வு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.