Sunday, May 3, 2020

தமிழ் ஊடக பேச்சு நிகழ்ச்சியில், மக்கள் விவாதிக்கிறார்களா அல்லது வாதிடுகிறார்களா? 


தமிழ் ஊடக பேச்சு நிகழ்ச்சியில், மக்கள் விவாதிக்கிறார்களா அல்லது வாதிடுகிறார்களா? in the Tamil media talk show, peoples are discussing or arguing?


விவாதங்கள் எப்போதுமே வாதங்களை விடச் சிறந்தவை, ஏனென்றால்  வாதம் பண்ணும் போது பல சமயங்களில் திறமையாக வாதம் செய்பவர்களால் தவறுகளும் சரியானவைகளாக தோன்றும். அதே சமயத்தில் வாதத் திறமை இல்லாதவர்களால் சரியான விசயங்களும் தவறாகத் தோன்றிவிட வாய்ப்புக்கள் அதிகம். அதுமட்டுமல்ல வாதம் செய்யும்போது வாதம் செய்பவர்களின் நோக்கங்களும் எண்ணங்களும் அப்பட்டமாக வெளியே தெரிந்துவிடும்... வாதத்தில் வென்றவர்கள் பல நல்ல நட்புகளை இழக்க நேரிடும். ஆனால் விவாதம் என்பதில்  யார் பேசுவது சரி என்பதைக்  கண்டுக் கொள்வதைவிட  எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் சிறப்பு


 கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கோபமாகவும் உரத்தும் பேசுபவைதான் 'வாதம்'    என்று பொருள். இதன்படி உரத்த சண்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், பொதுவான பயன்பாட்டில் இது வழக்கமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் கருத்துக்களைக் கூற கத்துகிறார்கள் அல்லது குரல் எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வருகிறார்கள்


'கலந்துரையாடல்' அதற்கு மிகவும் நேர்மறையான உணர்வைக் கொண்டுள்ளது. இருந்தாலும்  விவாத்தின் வரையறை 'வாதத்திற்கு' ஒத்ததாகத்தான் இருக்கிறது, ஏனெனில் இது கருத்துக்கள், தகவல் அல்லது கருத்துக்களை முன்வைப்பதை உள்ளடக்கியது.

இருப்பினும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே 'கலந்துரையாடல்' என்ற வார்த்தையின் பயன்பாடு கோபமான அல்லது சூடான சூழ்நிலை அல்ல. மற்றவர்களுடனான உரையாடல்  நியாயமான முறையில்  அமைதியாகப் பேசுவது என்று பொருள்.

விவாதம் பொதுவாக  நட்பு ரீதியான சூழ்நிலையாகும், அங்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை அல்லது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதை மிக எளிதாக விளக்க ஒரு உதாரணம்... கணவன் & மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளி செல்லும் வயதில் ஒரு குழந்தை . அந்த குழந்தைக்குப் பள்ளி முடிந்தது பெற்றோர்களில் யாரவது ஒருவர் அந்த குழந்தையைப் பள்ளி சென்று அழைத்து மாலை நேர சிறப்பு வகுப்பிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

 இந்த பிரச்சனையின் போது கணவன் மனைவியிடம் நீ தான் அந்த குழந்தையை பிக்கப் பண்ணும் என்றும் மனைவி இல்லை நீ தான் பிக்கப் பண்ணுமென்று ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டிக் கத்திக் கொண்டிருப்பது வாதம்

அதே பிரச்சனையின் போது இருவரும் அமைதியாகப் பேசி ,முடியாது என்றால் அதற்கான காரணங்கள் என்ன? அதனால் யாருக்கு என்ன பிரச்சனைகள் தோன்றும்? அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? அதை எப்படிச் சமாளித்து கையாலாம்?, என்று பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவதுதான் விவாதம் என்பது... வாதத்தினால் நல்ல முடிவுகள் எடுக்க முடியாது ஏன் அதனால் இருவருக்குள் பிரிவும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு அதுவும் இக்காலத்தில் ஆனால் விவாதத்தின் போது நல்ல முடிவுகளாக இருக்கும் போது அந்த குடும்பம் சந்தோஷமாக இருப்பதுடன் அங்கு வளரும் குழந்தையின் மனநிலையும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் இதுதான் விவாத்தின் முடிவால் கிடைக்கும் பாசிடிவ் செய்தி

இந்த உதாரணத்தை  மனத்தில் கொண்டு, இன்றைய தமிழ் ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியைப் பாருங்கள். அவர்கள் விவாத நிகழ்ச்சி என்று சொல்லிக் கொண்ட போதிலும் ,அங்கு வாதம்தான் இருக்கிறதே ஒழிய விவாதம் ஒன்றும் நடை பெறவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு பொருளை அல்லது நிகழ்வை உண்மையில் அவர்கள் விவாதித்து இருந்தார்கள் என்றால் எல்லோரும் சரியானது எது என்று ஒரு முடிவிற்கு வந்து விவாதத்தை முடித்து இருப்பார்கள். ஆனால் இங்கு வாதத்தில் ஈடுபட்டு இருப்பதால் எல்லோரும் கத்திக் கொண்டே செல்லுகிறார்கள்... இவர்கள் விவாதம் என்று சொல்லி வாதிப்பதால் அவர்களின் எண்ணங்களும் அயோக்கியத்தனம் யாருக்காக எதற்காக முட்டுக் கொடுக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது

இவர்களின் இந்த விவாதம் என்ற 'வாத" நிகழ்வுகள் மூலம் நாம் அறிவது ,இந்த முட்டாள்களையும் கொண்டும் ஊடகங்கள்  ஒரு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களையும் முட்டாள் ஆக்கி கொண்டிருக்கின்றன என்பதுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. பல சமயங்களில் ஏன் வீணாக நேரத்தை வீண் செய்தோம் என தோன்றும்...

    ReplyDelete
    Replies

    1. அறிவில் சிறந்தோரை வைத்து ஷோ நடத்தில் நேரம் வீணாகுவதில்லை ஆனால் இன்றைய ஊடகங்கள் ரோட்டில் வருகிறவன் போகிறவர்கலை எல்லாம் பிடித்து அவர்களுக்கு சமுக ஆர்வலர் விமர்சகர் பத்திரிக்கையாளன் என்பது போன பட்டத்தை கொடுத்து ஷோ நடத்தில் நேரம் கண்டிப்பாக வீணாகத்தான் செய்யும் இந்த ஷோவினல் மீம்ஸ் கரியேட்டர்கள் மற்றும் டிவிட்டர் பதிவர்களுக்கு ஏதாவது எழுத கண்டென்ட் கிடைக்கும் அது மற்றும்தான் பலன்

      Delete
  2. ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்வதும் விடாது குரைத்தலையுமே இங்கு விவாதமேடை என்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. வீணாக வாதம் செய்வதைத்தான் இவர்கள் விவாத மேடையாக்கி இருக்கிறார்கள்

      Delete
  3. நல்லா ஆராய்ச்சிப் பதிவு. ஒருவர் மட்டும் ஒரு கருத்தை முன்னிலைப் படுத்தினால் வாதம்.அதனை எதிர்த்தும் ஆதரித்தும் ஒன்றுக்கு மேற்பட்டவர் வாதம் செய்தால் அது விவாதம். எனக்குத் தெரிந்து விவாதங்களினால் பயன் அதிகம் இல்லை. பொழுது போக்குக்கு உதவலாம். .விவாதத்தில் ஒருவரின் கேள்விகளுக்கு இன்னொருவர் பதில் சொல்லமுடியாத நிலை ஏற்படும்போது தான் வென்றதாகக் கருதிக் கொள்வர்.ஆனால் தோற்றவர் அதனை ஏற்றுக் கொண்டு தன் கருத்தைக் மாற்றிக் கொள்வாரா என்றால் நிச்சயம் மாட்டார். அப்படி உண்மையிலேயே மனம் மாறினால்தான் விவாதத்தால் பயன் விளைந்ததாக அர்த்தம். அப்படி இதுவரை நடந்ததாக சரித்திரம் இல்லை. பதில் இல்லாதவர் இன்னொரு சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பார். அல்லது மனதுக்குள் கருவிக் கொண்டிருப்பார்.நீங்கள் சொல்வது போல நட்பை முறிக்கும் அல்லது எதிரிகளை உருவாக்கும். இதற்குக் காரணம் என்ன்? வேறொன்றுமில்லை .நாம் ஒரு கருத்தை மனதில் பதியவைத்துக் கொண்டு அதற்கான சாதகமான காரணங்களை தேடுவோம் எதிர்கருத்து உடையவர் தனக்கு சாதகமான கருத்துகளை தேடுவார். கருத்துகளை வைத்து நம் நிலையை முடிவு செய்வதில்லை. நம் நிலையை வைத்து கருத்துகளை தேர்ந்தெடுக்கிறோம். நமது மனப்பூர்வமான முடிவுகளுக்கு அறிவுபூர்வமான காரணங்களை உருவாக்க முனைகிறோம். கலந்துரையாடல் என்பது பெரும்பாலும் ஒத்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதே, குடும்பத்தில் இதனைப் பயன்படுத்துதலே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. இது ஆராய்ச்சி பதிவு அல்ல அரசியல் இல்லாமல் ஏதாவது எழுதலாம் என்று யோசித்த போது மனதில் தோன்றியதுதான் இது, வாதம் மற்றும் விவாதம் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் தேவை.. வாதம் என்பது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல பேசுவது அதுமட்டுமல்ல எல்லா முயலுக்கும் மூன்று கால்கள்தான் என்று தான் பிடித்த முயலைக் கொண்டு உதாரணம் காட்டி பேசுவது

      விவாதம் செய்பவர்களோ முதலில் அவர் பிடித்தது முயலா இல்லையா முயல்தான் என்றால் ஏன் அதற்கு 3 கால்கள் ஒரு வேளை அது உடல் ஊனமுற்ற முயலா? அல்லது முயலில் மூன்று கால் முயல் என்பது முயல் குடும்பத்தில் ஒரு வகையான் பிரிவா என்று இப்படி பல விதமாக பேசி ஆரயுந்து இறுத்யில் ஒரு பொது முடிவிற்கு வருவது.. இதைத்தான் விவாவதம் நான் கருதுகிறேம் ஆனால் இன்றைய ஊடங்களி வருவது நீங்கள் சொல்வது போல தன் கருத்துதான் சரி அதற்கேற்றவாறு உள்ள ஆதாரங்களை மட்டும் சேகரித்து அந்த ஆதாரங்கள் தவறாக இருந்தாலும் அதுதான் உண்மையான் ஆதாரம் என்று அடித்துபேசிகிறார்கள் வஞ்சம் வளர்க்கிறார்கள் இப்படி வஞ்சம் வளர்க்கதான் இந்த ஊடகங்கள் முயல்கின்றனவே தவிர மக்களுக்கு நல்ல செய்தி போய் சேர வேண்டும் என்று எந்த ஊடகங்களும் நினைப்பதில்லை

      Delete
  4. நான் இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதே இல்லை. எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு வந்து கடமைக்குப் பேசி விட்டுச் செல்பவர்கள். அதனால் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தினை வீணாக்குவது வேண்டாத வேலை.

    ReplyDelete
    Replies

    1. நான் சில சமயங்களில் பார்ப்பதுண்டு ஆனால் பாடி பார்க்கையில் பாதியிலே டிவியை அணைத்துவிட்டு போவதும் உண்டு.. இப்படி பேசுபவர்களுக்கு பணம் தருகிறார்களா? அப்படியானால் பணத்தை கொடுத்து ஊரைக் கெடுக்கதான் இந்த ஊடகங்கள் முயல்கின்றன போலும்

      Delete
  5. தலைப்பில் கத்துகின்றார்களான்னு இன்னொரு ஆப்ஷனை சேர்த்திருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. அப்படி சேர்த்து கொண்டே போனால் பதிவின் தலைப்பே ஒரு பதிவாகி விடும் என்பதால் சேர்க்கவில்லை

      Delete
    2. அவர்கள் கத்துகிறார்கள் என்பதைவிட தெருநாட்களை விட மோசமாக குரைத்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.