Wednesday, May 13, 2020

இந்திய மக்களே எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது lockdown warning
இந்திய மக்களே எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது


மோடி, மே 18க்கு அப்புறம் லாக்டவுன் இருக்கும். ஆனால் அதில் மாற்றம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். கொரோனா அதிகம் பரவாத போதே லாக்டவுன் எப்படி இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும் .ஆனால் இப்போது அதிகம் பரவிக் கொண்டிருக்கும் போது அதை மேலும் தளர்த்துவார்களா அல்லது  இதைவிட அதிகம் கட்டுப்படுத்தி மேலும் 2 வாரங்களுக்கு  நீட்டிப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். பொருளாதாரம் கீழே விழுந்து கிடக்கிறது .அதனால் நீடிக்கமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் .விழுந்த பொருளாதாரத்தை யாரும் உடனே தூக்கிவிட்டு ரேஸிலில் ஓட வைப்பது போல ஓட வைக்க முடியாது.  அதனால் மேலும் கடினமான ஒரு லாக் டவுன் வரலாம் .

india lockdown 4th stage


அந்த சமயத்தில் வீட்டிலிருந்து வருபவர்களைச் சுட்டுகூட தள்ளலாம் என்று சட்டம் வரலாம். காஷ்மீரில் உள்ள சட்டம் போல நாடு முழுவதும் வரலாம்.

மோடி கொஞ்சக் கால அவகாசம் கொடுத்திருப்பது அவரைச்சார்ந்த நாடு முழுவதிலும் உள்ள பணக்கார கூட்டங்கள், தங்களுக்கு வேண்டியதை பாதுகாப்பாக வாங்கி வைத்துக் கொள்ளக் கொடுத்திருக்கும் அவகாசமாகக் கூட இருக்கலாம்..... அதனால் மக்களே மோடியின் அடுத்த மாற்றத்துடன் வரும் லாக்டவுன் அறிவிப்பிற்கு முன்னால் உங்களுக்கு  2 வாரங்களுக்குத் தேவையானதை நீங்களும் வாங்கி வைத்து கொள்ளவது உங்களுக்கு பாதுகாப்பானது மட்டுமல்ல நல்லதும் கூட.. எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது... ஒரு வேளை அப்படி ஏதும் இல்லை என்றால் நாம் இழக்கப் போவது ஏதும் இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கும்  என்ற பட்சத்தில் ல் வாங்கி வைக்கவில்லை என்றால் கஷ்டப்படப் போவது நீங்களும் உங்கள் குடும்பம் மட்டுமே


டிஸ்கி: ஒரு வேளை நல்ல உடல் நலத்துடன் இருக்கும் தொழிலாளர்களை மட்டும்  அவர்களின் உடலை பரிசோத்துவிட்டு அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு  வரவழைத்து ,அதன் பின் அவர்களை  வேலை செய்யும் இடங்களுக்குள்ளே இருக்குமாறு லாக்டவுன் செய்து,  அவர்களுக்குத் தேவையான சாப்பாடு வசதிகளைச் செய்து கொடுத்துவிட்டு, ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படலாம். அதற்காகவே இந்த கொரோனா காலத்தில் லேபர் லா விதிகள் தளர்த்தப் பட்டிருக்கலாம் அல்லவா?

இன்று இந்தியா ஜனநாயக போர்வையில் ஒழிந்து கொண்டிருக்கும் சர்வதிகார நாடாக மாறிக் கொண்டு இருக்கிறது. மோடி நினைத்ததைச் சாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டார், அவரின் செவிக்கு உங்களின் குரல் கேட்பதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்
கொரோனா கால கிறுக்கல்கள்




9 comments:

  1. இங்குள்ளவர்களிடம் செவியே இல்லாமல் போய் விட்டதே... அமாவாசையின் பஜனை பாடும் வேலையாக உள்ளார்கள்...

    ReplyDelete
    Replies

    1. செவி இல்லாமல் இருந்தக்கூட அவர்களுக்கு புரிய வைத்து சமாளித்துவிடலாம் ஆனால் அவங்களுக்குதான் மூளையே இல்லையே

      Delete
  2. மக்கள் கவனமாதான் இருக்காங்க. ஆட்சியாளர்களும் வெகு கவனமாதான் இருக்காங்க. அவங்க பெட்டியை நிரப்புவதில்...

    ReplyDelete
    Replies

    1. நச் என்ற பதில் குட்

      Delete
  3. என்ன சொல்வது என்றே தெரியவில்லையே!
    முன்னெச்சரிக்கை நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நான் சென்னையில் வசித்த போது சென்னை எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தது அதனால் அன்றிலிருந்து இன்று வரை முன்னேச்சரிக்கை இருந்து கொள்வது வழக்கம்... கொரோனா ஆரம்பித்துவிட்டது என்ற கேள்விபட்டவுடனே வீட்டிற்கு தேவையான பல பொருட்களை வாங்கி சேமித்தது இன்று வரை பயனுள்ளதாக இருக்கிறது கடைகள் இங்கு திறந்து இருந்தாலும் கொரோனாவால் நானும் மனைவியும் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே அடைபட்டதால் வாங்கியவைத்து சமாளித்து கொண்டிருக்கிறோம்

      Delete
    2. இப்போது நலம் தானே?
      உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள்.

      Delete
  4. எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக கூறக்கூடாது. நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் தப்பித்தீர்கள். உங்களை பார்த்து தான் OCI காரங்களுக்கு இந்தியா வர அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அப்ப இன்னும் அதிகமாக உண்மைகளை போட்டு உடைத்தால் அமெரிக்காவில் கால் வைத்த இந்தியர்கள் இனிமேல் இந்தியாவிற்கு நுழைய அனுமிதி இல்லை என்ற சட்டத்தை கொண்டு வந்துவிடுவார்களோ ஹீஹீ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.