Sunday, May 24, 2020

has the  intellectual community lost love and ethic?
அறிவார்ந்த சமுகத்திடம் அன்பும் அறமும் தொலைந்துவிட்டனவா?


நம் சமுகம் அறிவார்ந்த சமுகமாகமட்டுல்ல அன்பும் அறமும் உடைய சமுகமாகத்தான் இருந்தது. இருந்தது என்று நான் கூறக் காரணம் இப்போது அது தொலைந்து போய்விட்டதால்... அந்த அன்பும் அறமும் 15 / 20 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாகவே இருந்தது....ஆனால் இன்று அது தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. பிறப்பு தொடங்கி வாழ்க்கை முடியும் வரை மனித வாழ்வு அறத்தோட இயங்குவதாக அமைய வேண்டும்
 
மோடி மீதான நமது விமர்சனத்தை இந்த அறிவார்ந்த சமுகம் இந்து மதத்தின் மீது வெறுப்பாகத் திரித்து மக்களின் மனதில் விஷ விதைகளைத் தூவி வளர்த்துவருகிறது அதோடு விடவில்லை தங்கள் மோடி ஆதரவைக் காண்பிக்க இஸ்லாம் மதத்தையும் கிறிஸ்துப மதத்தையும், மதத்தினரையும் களங்கப்படுத்தவும் செய்கிறார்கள் இதற்குத்தான் இவர்கள் அறிவு பயன்படுகிறது

has the  intellectual community lost love and ethic?
இன்றைய ஊடக விவாதங்களில் வரும் அறிவார்ந்தவர்களைக் கவனியுங்கள் உதாரணத்திற்குச்  மாலன் நாராயணன்  மேலும் இது போல உள்ளவர்கள் ஒரு 20 ஆண்டுக்கு முன்னால் பேசிய பேச்சையும் எழுதிய எழுத்தையும் பாருங்கள் அப்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும் இது ஏன் உங்களுடைய நட்பு வட்டத்தில் உங்களுக்கு மிகத் தெரிந்த அறிவார்ந்தவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இது ஏன் நம்முடன் நன்றாகப் பழகிய அறிவார்ந்த ப்ளாக்கர் நண்பர்களையே பாருங்களேன் அவர்களின் கடந்த கால நடத்தைகளுக்கும் இப்போது உள்ள நடத்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் தெரியும், அவர்களிடம் அறிவு இருக்கிறது ஆனால் அன்பும் அறமும் இல்லாமல் போய்விட்டது அதனால் அவர்கள் இருமுகமாகச் செயல்படுகிறார்கள்.


has the  intellectual community lost love and ethic?
ஏன் இப்படி இவர்கள் மாறிப் போனார்கள் என்றால் சில தலைவர்கள் விதைத்த விஷத்தை உண்மையன நம்பி மோசம் போய் இருக்கிறார்கள். அப்படித் தாங்கள் மோசம் போனதையும் உணராமல் இவர்களும் தம் அறிவை பயன்படுத்தி விஷங்களைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் எப்படி இஸ்லாமியத் தீவிரவாதிகள் நன்கு படித்த அறிவார்ந்தவர்களை மதத்தின் பெயரால் முளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றினார்களோ அதைப் போலத்தான் இந்தத் தலைவர்கள் இந்த அறிவார்ந்தவர்களை இந்துத்துவா வாதிகளாக அதாவது தீவிரவாதிகளாக மாற்றி இருக்கின்றனர்.

செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். ஆனால் இவர்களின் எண்ணங்களைத் தலைவர்கள் மாசுபடுத்திச் சிதைத்துவிட்டதால் அன்பும் அறமும் அவர்களிடம் இல்லாமல் போய்விட்டது



அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.




அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.



என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.


அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனசாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்


சக மனிதரை எப்படி மதிக்க வேண்டும் என்பது நல்ல வளர்ப்பில் இருக்கிறது. அப்படி ஒரு நல்ல வளர்ப்பில் வளராதவர்தான் நாட்டை ஆண்டுக் கொண்டு இருக்கிறார்

பொது வெளியில் அன்பும் அறமும் இல்லாமல் பேசுபவர் எல்லாம் பெரிய மனிதராகிவிட முடியாது. என்ன பேசுகிறோம் அதை எப்படிப் பேசுகிறோம் என்பதைப் பொருத்தே...

இல்லை இல்லை அவர் எங்கள் தலைவர்தான் என்றால், பன்றி கூட்டத்திற்கும் தலைமை உண்டு அந்தத் தலைமையாக உங்கள் தலைவரும் அந்தப் பன்றிக் கூட்டமாக நீங்களும் அன்பும் அறமும் இல்லாமல் வாழ்ந்து வாருங்கள்

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.

இந்தப் பதிவைப் படித்துப் புரிந்து கொள்ளும் நல்லறிவு இருந்தால் முதலில் நல்ல மனிதராக இருக்க முயற்சியுங்கள்...


has the  intellectual community lost love and ethic?

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. "அன்பும் அறனும் என்றால் கிலோ எவ்வளவு விலை...?" எனக்கேட்கும் அவர்களைப்பற்றி என்னவென்று சொல்வது...?

    ReplyDelete
  2. அனைவரிடமும் அன்பு கொள்வோம்... அன்பை மட்டுமே பரப்புவோம்.

    ReplyDelete
  3. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்வோம் .

    ReplyDelete
  4. சக மனிதரை நேசிப்போம். எல்லா உயிர்களும் அடங்கிய இவ்வுலகையே நேசிப்போம்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  5. இனிய ரமலான் வாழ்த்துகள்! அனைவருக்கும்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  6. அறம் சார் பதிவு...
    மாப்பிள்ளை நலம்தானே ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.