Tuesday, May 12, 2020


உலகத்தில் உள்ள ஹேக்கர்ஸ்களால் ஹேக் பண்ண முடியாத ஒன்று  மோடிஜியின் PM CARES மட்டுமே
Modiji's PM CARES is the only thing hackers in the world can't hack

*******************************************************************************

மேலே ரெட்கலரில் இருக்கும் கருத்துமட்டும் நான் எழுதியது மற்றவையெல்லாம் பேஸ்புக் டிவிட்டர் போன்ற பல இடங்களில் பலர் ஆங்கிலத்தில் கேட்டதை  நான் சற்று மாற்றி அமைத்து தொகுத்து தந்திருக்கிறேன்.

ஹேக் பண்ண முடியாத ஒன்று மோடிஜியின் PM CARES மட்டுமே Modiji's PM CARES is the only thing hackers in the world can't hackபொதுமக்கள்  மோடியிடம் இப்படிக்  கேள்வி கேட்டால்?


1. PM CARES நிதி நம்பிக்கை பத்திரம் பொது ஆய்வுக்கு ஏன் கிடைக்கவில்லை?

2. அறக்கட்டளைக்கு பிரதமர் நியமித்த மூன்று சிறந்த நபர்கள் யார்?

3. இதுவரை சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் செலவு எவ்வளவு?


இதற்கு பதிலாக மோடி சொல்வது இப்படியாகத்தான் இருக்கும் அதுமட்டுமல்ல அவ்ரும் நம்மை இப்படி கேள்விகள் பதிலுக்கு கேட்க ஆரம்பித்துவிடுவார்

முதலில் அவர் பதில் அதன் பின் அவரின் கேள்விகள்

PM CARES எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நான் காட்ட மாட்டேன்

எலக்ட்ரோல் பாண்ட்ஸ் பிஜேபிக்கு எவ்வளவு கிடைத்தது என்பதை நான் காட்ட மாட்டேன்

எரிபொருள் வரி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை நான் காட்ட மாட்டேன்

எனது டிகிரி சான்றிதழைக் காட்ட மாட்டேன்

ஆனால் 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்துள்ளது மற்றும் உங்கள் தாத்தாவின் பிறப்புச் சான்றிதழ் பற்றிய கணக்குகளை நான் கேட்பேன்! நம்மை பார்த்து இப்படி கேள்விகள் கேட்பார்


1. நீங்கள் ஏன் PM கேர்க்கு  அதிக நன்கொடை அளிக்கவில்லை?

2. எனது கண்காணிப்பு  (app) பயன்பாட்டை ஏன்  எல்லோரும் நிறுவவில்லை?

3. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை உருவாக்குவதைத் தவிர, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று ஊடகங்கள் கேள்வி கேட்குமா?


----------------------
PM CARES நிதி ஏழைகளுக்கு உணவளிக்க பயன்படுத்தப்படாவிட்டால்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு செல்ல PM CARES பயன்படுத்தப்படாவிட்டால்

பிபிஆர் களை மருத்துவர்களுக்கு வழங்க PM CARES பயன்படுத்தப்படாவிட்டால்

PM CARES சோதனை மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாவிட்டால்

பின்னர் அது பிரதமரின் PR க்கு பயன்படுத்தப்படுகிறதா?

இதற்கு பயன்படுத்தவில்லை என்றால் வேற என்ன ---க்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையாவது  சொல்லித் தொலைங்களடா சங்கிகளே


அன்புடன்
மதுரைத்தமிழன்


**************************************************************************************************************************************************************

4 comments:

 1. பொய்யின் உருவமாக இருக்கும் போது, திருட்டு ஒரு அங்கம்...

  ReplyDelete
  Replies
  1. மோடிஜி அரிச்சந்திரன் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் நிறையவே இருக்கிறது தனபாலன்

   Delete
 2. சில விஷயங்கள் பதிவில் எத்தனை முறை வரும்

  ReplyDelete
  Replies

  1. படமாக போட்டதை எழுதுவடிவில் தந்து இருக்கிறேன் காரணம் சில சமயங்கள் கணணி ஸ்பீட் ஸ்லோவாக இருக்கும் போது படம் தெரிய நேரம் எடுக்கும் அதனால் வந்தவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க அதையே சாதாரண எழுதுவடிவில் வெளியிடுகிறேன்.... அது தவிர வேறு ஏதௌம் கண்ணில்பட்டால் குரிப்பிட்டு சொல்லுங்கள்

   Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.