Saturday, May 16, 2020

 
#avargal unmaigal #maduraitamilguy #maduraithamizhan

ஒரு பொண்னைத் தேடி......

ஒருத்தர் தன் கணவனை “வாங்க, போங்க” என்று மனைவி அழைக்கும் பழக்கம் இன்னும் எங்கள் ஊரில் இருக்கிறது என்று பதிவு இட்டு இருந்தார். ஆனால் எந்த ஊருன்னு சொல்லாமல் விட்டார்..சொல்லி இருந்தால் அந்த ஊரில் ஒரு பெண்ணைத் தேட ஆரம்பிக்கலாம்.  #சரிதானே

 
நமக்கு புடிச்ச  ஆண் மகனைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதை விட நமக்குப் பொருத்தமான ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான்  ஸ்மார்ட்


இந்த கொரோனா காலத்தில் அநேக பெண்கள் உண்டாகி இருக்கிறார்கள் ஆண்கள் குண்டாகி இருக்கிறார்கள்

ஒரு பெண்களின் கஷ்டம் ஆண்களுக்குத்  தெரியுமா என்று கேட்பவர்கள் ஆண்களின் கஷ்டத்தை அறியாதவர்களா இருப்பார்கள்.

யாரிடம் இருந்து என்பது அல்ல . ஆனால் என்னக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.. இன்றைய டாஸ்மாக் குடிகாரர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பொறுமைதான் அதுமட்டுமல்ல வரிசையில் நிற்கும் பழக்கம் அவர்களிடம் மட்டுமே இருக்கிறது

     
வட நாட்டுத் தொழிலாளிகள் கால் கடுக்க நடந்து செல்லும் போது தமிழ் நாட்டுக் குடிகாரர்கள் கால் கடுக்க டாஸ்மாக் வாசலில் நிற்கிறார்கள்... அய்யகோ தமிழனுக்கு இப்படி  ஒரு சோதனையா ஏய் தமிழினமே ஏன் இன்னும் பொறுத்திருக்கிறாய் கடலென எழுந்து வா நம் குடிகாரர்களின் கஷ்டம் நீக்கப் போராடவா? வாழ்வது ஒரு முறை  அதனால் நாம் குடிகாரகளுக்காக போராடிச் சாவோம் வரலாறு நம்மைப் பற்றி பெருமை கொள்ளும்
    
#avargal unmaigal #maduraithamizhan


டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி குடிப்பதினால் யாரும் மயக்கம் அடைந்து சாலையில் படுக்கவில்லை சரக்கு வாங்க க்யூவில் நின்றதால் களைப்பு ஏற்பட்டு மயக்கம் அடைகிறார்கள் என்பதுதான் உண்மை#fact Verified

#அமெரிக்கர்கள் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளை எளிதாகப் படித்துப் #புரிந்து_கொள்ள_முடியும் எனக்கு...   நன்கு படித்த #தமிழர்கள் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளை என்னால் படித்துப் #புரிந்து_கொள்ள_முடியவில்லை... எங்கிருந்துதான் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்களோ?அவர்கள் எழுதுவதைப் படிக்கப் பக்கத்தில் டிக்சனரியை கூடவே வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.. முடிவில் கட்டுரையைப் படிக்கிறோமா இல்லை ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள டிக்சன்ரியை படிக்கிறோமா என்று குழப்பம் வந்துவிடுகிறது. தெரியாமல்தான் கேட்கிறேன் இவர்கள் கட்டுரை எழுதுவது யாருக்கும் புரிந்துவிடக் கூடாது என்று நினைத்துத்தான் எழுதுகிறார்களோ . பள்ளிக்குச் சென்ற வயதில் கூட இப்படிப் படித்தது இல்லை. என்னவோ சாமி ஆளை விடுங்கடா

இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா இல்லை உங்களுக்கும் இப்படித்தான் இருக்கிறதா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. வரிசையில் நிற்பதற்கும் பொருமை வேண்டும்தான்.

    ReplyDelete
    Replies
    1. வரிசையில் நிற்க வேண்டும் என்ற பழக்கம் ஏசியா நாட்டவர்களை தவிர எல்லோரிடமும் இருக்கிறது. ஏசிய நாஅட்டை சார்ந்தவர்களுக்குதான் வரிசையில் நிறக் பொறுமை தேவைப்படுகிறது கில்லர்ஜி

      Delete
  2. உங்கள் அடையாளத்தை மூலையில் சிம்பல் போல மாற்றிப் போடுங்க. படத்தில் நடுவில் போட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி இந்த படத்தில் நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன்

      Delete
  3. கெட்டதிலும் ஒரு நல்லதை பார்ப்பதும் நல்லதே...

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க தனபாலன்

      Delete
  4. முதல் படத்துக்கும் வரிகளுக்கும் பூரிக்கட்டை பறக்கும் நேரம் கவுண்ட் டௌன் ஸ்டார்ட்டர்ட்!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த நேரத்தில் அப்படி பறக்க வாய்ப்பில்லை அவள் ஒரு ரூமில் நான் ஒரு ரூமில் தனித்து இருக்கிறோம்

      Delete
  5. தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் மக்கள் முண்டியடிப்பது இதற்குத்தானாமே.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. எங்க நாட்டில் தாரளமாக கிடைப்பதால் முண்டியடிப்பதில்லை ஒருவேளை இலவசமாக் தருகிறார்கள் என்றாலோ அல்லது பாதிவிலையில் தருகிறார்கள் என்றாலோ இப்படி முண்டியடிக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு. ப்ளாக் ப்ஃரைடே யின் போது இப்படித்தான் முண்டி அடிப்பார்கள்

      Delete
  6. வரிசையில் நிற்கவும்,பொறுமையும் பழகிக்கொள்வோம்.
    குடிப்பதால் சாகமாட்டேன் கொரோனாவால் செத்துவிடுவேன் என்ற பயமும் காரணமாக இருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. இவங்களுக்கு சாவை பற்றி எல்லாம் கவலை இல்லைம்மா அந்த நேர சுகம் மயக்கதான் முக்கியம்

      Delete
  7. எனக்கும் இவர்கள் ஆங்கிலம் புரிவதில்லை.தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத பொருத்தமில்லா வார்த்தைகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.