Saturday, May 16, 2020

                  
இனிமேல் மோடியை ஆதரிப்பதாலோ எதிர்ப்பதாலோ இனி எந்த விதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை இது நிதர்சனமான உண்மை

இனிமேல் மோடியை ஆதரிப்பதாலோ எதிர்ப்பதாலோ இனி எந்த விதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை இது நிதர்சனமான உண்மை..

சர்வதிகாரியாக உருமாறிவரும்  மோடியை இனிமேல் ஆதரிப்பதாலோ எதிர்ப்பதாலோ இனி எந்த விதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை இது நிதர்சனமான உண்மை..


நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்தான் இந்தியாவின் நிரந்தர அதிபர் அதில் எந்த வித மாற்றமும் இல்லை. இனி அதை மாற்றுவதும் அப்படி எளிதல்ல.

வருங்காலத்தில் மோடியை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படலாம்  அதே மாதிரி ஆதரிப்பவர்களுக்கு அவர் சொர்க்கத்தைக் காண்பிக்கப் போவதில்லை... ஆதரிப்பவர்கள் ஒரு சராசரியான பிரஜையாக மட்டும் வாழ வேண்டும் வாழ முடியும்,


மோடி தன்னை சுற்றிச் சிறந்த எலைட் குருப் ஆளுமைகளை  வைத்துள்ளார் அந்த எலைட் குருப்ஆளுமைகள்தான்  உண்மையான ஆதரவாளர்கள்  மற்ற ஆதரவாளர்கள் உதாரணத்திற்கு மோடிக்கு  ஹெச்.ராஜா, ராகவன் போன்ற பலர் தெரு நாய்களைப் போன்றவர்கள் . மோடி  வீசும் எச்சில் பதார்த்தங்களுக்காகத்தான் இவர்கள் தெருவில் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஒரு மோசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவர் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்ப்பது   என்பது  விஷ விதையை விதைத்துவிட்டு அதிலிருந்து உடலுக்கு நலம் தரும் பழங்களை எதிர்பார்ப்பது போலத்தான்

 
எனக்கு என்ன தோனுதுனா இந்தியா இந்துஸ்தனாக மாறும். அந்த இந்துஸ்தானின் ஒரே முதல் அதிபர் மோடிதான் அது போல அவர் நியமிக்கும் ஆள்தான் முப்படைக்கும் ஒரே ராணுவ தளபதி . இந்த தளபதியை நியமிக்கும் அல்லது விலக்கும் முழு அதிகாரம் அதிபருக்கு மட்டும்தான் உண்டு  இந்த இந்துஸ்தானில் உண்டு. அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைதான் இருக்கும். அந்த அதிபர் அரசைக் கவனிக்க சில அமைச்சர்களை நேரடியாக நியமிப்பார்.  அது போல மாநிலங்களில் நேரடியான ஆளுநர் ஆட்சி மட்டும். இப்படிதான் வருங்கால புதிய இந்தியா இருக்கும்.

அதாவது ஜனநாயக பெயரில் நடக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சிதான் இந்துஸ்தானில் இருக்க முடியும்.... இந்த இந்துஸ்தானில் சிறுபான்மையினர் இரண்டாம் அல்லது மூன்றாம் தரக் குடிமகன்களாகவே நடத்தப்படுவார்கள்


 இப்படி ஒரு சர்வாதிகார நாடாகும் நிலை இன்னும் அதிக தூரத்தில் இல்லை( இதற்கு கீழே உள்ளக் கருத்துகள் ஆங்கில இணைய தளத்தில் வந்த கருத்துகளைப் படித்து மனதில் உள்வாங்கிக் கொண்டு  அவைகளை அப்படியே மொழி பெயர்க்காமல் அந்த கருத்துகளை ஞாபகம் வைத்து அதில் என் கருத்துகளையும் கலந்து என் பாணியில் அதை மோடி அவர்களின் செயல்பாடுகளோடு பொருத்தி எழுதி இருக்கிறேன்)

பழைய நாட்களில், எதேச்சதிகாரர்கள் பெரும்பாலும் இராணுவ சதி மற்றும் வன்முறை ஒடுக்குமுறைகள் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். இப்போது ஜனநாயகத்திலிருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறுவது  பாலில் தண்ணீரைக் கலப்பது போலவெளிப்படையாக நடக்கிறது

சர்வாதிகார போக்குகளைக் கொண்ட மோடி போன்ற இன்றைய தலைவர்கள் அதிகாரத்திற்கு உயர முரட்டுத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை

இந்த தலைவர்கள் மிகப்  புத்திசாலித்தனமானவர்கள் அவர்கள் நாட்டின் முன்னேற்றம் , உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம்  மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய முன்னேற்றங்களைப் பற்றிப் பேசியே தாங்கள் நினைத்தை சாதிக்கின்றனர். இதில் மோடியும் விலக்கு அல்ல அதனால்தான் மோடி புதிய இந்தியா இந்துஸ்தான் ஒரே நாடு ஒரே தலைவர் எல்லாம் ஒரே ஒரே என்று பேசிக் கொண்டு இருக்கிறார்

மோடி மட்டுமல்ல இவரைப் போன்ற  தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை எப்படிப் பலப் படுத்தினார்கள் விரிவாக்குகிறார்கள் என்று பார்ப்போம்

இந்த தலைவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பலப்படுத்தும் அதே நேரத்தில் அரசின் பலதுறைகளை உதாரணமாகப்   பாராளுமன்றம் மற்றும் judiciaries, அரசு நிறுவனங்கள், பலவீனப்படுத்திவிடுகிறார்கள் . நமது பாராளுமன்றத்தில்  எது நல்லது கெட்டது என்று விவாவதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை விவாதம் நடக்கும் ஆனால் ஆளும் அரசு கொண்டு வரும்  சர்வாதிகார தீர்மானம்  நிறைவேற்றப்படும் நீதித் துறையைப் பாருங்கள் அங்கே நீதிக்கு இடமில்லை என்பதால் நீதி பலவின படுத்தப்பட்டு ஏதோச்சிகார தீர்ப்பு வழங்கப்படுகிறது ஒரு வேளை நீதியரசர்கள் நியமாகத் தீர்ப்பு வழங்கினால் ஒன்று அவர்கள் மீதே வழக்குகளும் அல்லது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது என்பதை நாம் கண் கூடாகவே பார்க்கிறோம்

அதுமட்டுமல்ல இந்த சர்வாதிகார தலைவர்கள் அரசுத்துறைகளின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு இறுதியில் ஜனநாயக நியாயத்தை வழங்கும் சட்ட வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்  .இதற்கு உதாரணமாகச்  சீனாவில் கொண்டுவரப்பட்ட  ஜனாதிபதியின் கால வரம்புகளை நீக்குவது அடங்கும் ; மற்றும் துருக்கியைப் போலவே ஜனாதிபதி அதிகாரத்தையும் விரிவாக்குவதற்கான பிற்போக்கு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இது போலப் பல சட்டத் திருத்தங்கள் நம் நாட்டிலும் வரும் நாளுக்கு தூரம் அதிகமில்லை

அடுத்தாக  அரசுக்கு எதிரான மாறுபட்ட  கருத்துகளைக் கொண்ட குடிமக்களின் முயற்சிகளை அடக்கி ஒடுக்குவது

நிதி மற்றும் பிற அதிகாரத்துவ வரம்புகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகாரத்தில் இருப்பவர்களை பொறுப்புக்கூற வைக்கும் திறனைச் சத்தமில்லாமல்   செயலிக்க வைக்கின்றனர்  . உதாரணமாகத் தகவல் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகவைப்பது இந்த தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பல முக்கிய துறைகளைப் பற்றி கேள்வி எழுப்ப முடியாத நிலையை உண்டாக்குவது. இதற்கு எதிராகப்  போராடும் குடிமக்கள் அமைப்புகளைச் செயல்படவிடாமல் முடக்குவது.

50க்கும் மேற்பட்ட நாடுகள் குடிமக்கள் குழுக்களைத் தடுக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஜனநாயக நாடுகளும் இப்போது இந்த ஆயுதத்தை எடுத்துக் குதித்துள்ளன. பொது எதிர்ப்பிற்கான அனுமதி மீதான வரம்புகள், எதிர்ப்பாளர்களைத் தடுத்து வைத்தல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உடைக்க அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துதல் ஆகியவை அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவிகள். இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்ட பல சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடிய போது இப்போதைய ஆளும் அரசு இதைத்தான் கடைப் பிடிக்கிறது


அதுமட்டுமல்லாமல்  எலைட் குருப்பை தன் வசப்படுத்தித் தேவைப்படும்போது அவர்களும் மூலம்  ​​மக்களை மிரட்டுவது

ஊடகங்கள் மற்றும் மிகப் பெரிய நிறுவன அதிபர்களுக்குத் தேவையான ஏன்  தேவைக்கு மேலாக அரசின் நிதி உதவிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுத்து அவர்களை தங்களுக்குச் சாதமாக்கி அவர்களின் ஆதரவோடு மக்களை மிரட்டிப் பணியவைத்து இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு நச்சு கலவையாக இருக்கலாம். 

சாதாரண மக்கள் எப்படி எவ்வாறு வாழலாம் என்பதைத் தீர்மானிக்க அதிகாரம் உள்ளவர்கள் இந்த எலைட் குருப்புக்கள்.இந்தியாவின் மிகப் பெரிய ஊடகங்கள் மற்றும் அம்பானி அதானி டாட்டா போன்ற எலைட் குருபு மோடிக்கு ஆதரவாகவும் மோடி அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது நம் கண்ணுக்கு எதிரே நடக்கிறதுதானே.


 தேசியவாதத்தை முதன்மைபடுத்ததுதல் :
சர்வாதிகார தலைவர்களில் பெரும்பாலோர் இன்று தங்கள் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக  சமூகங்களுக்குள் இருக்கும் பதட்டங்களை  தங்களுக்குச் சாதமாக்கிச் சுரண்டிக்கொள்கிறார்கள்.பல நாடுகளில் பல இடங்களில், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் அச்சங்கள் மீண்டும் எழுந்த தேசியவாதத்தைத் தூண்டிவிட்டன , . இந்தியாவில், மத அடிப்படையிலான தேசியவாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது .

ஒரு நாட்டின் பிரச்சினைகளுக்கு வெளி சக்திகளைக் குற்றம் சாட்டி அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி மத தேசியவாதத்தின் அடிப்படையில் ஒரு பகுதியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

 உள்நாட்டுத்  தகவல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டிற்குச்  சரியான தகவல்  செல்லுவதை  தடுப்பது  : அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் பண்ணுவது  புதியவை அல்ல என்றாலும், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் தகவல்களைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய போர்க்களமாக மாறியுள்ளது.  தேவையற்ற தகவல்களைப் தணிக்கை செய்வதற்கும் தடுப்பதற்கும் மற்றும் சமூகத்தில் தனிநபர்களைக் கண்காணிப்பதற்கும் சீனா அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது . அதன் ஒரு பகுதியாகத்தான்  கூகுள் பேஸ்புக் போன்ற இணையதளங்களைத் தடை செய்து தகவல்கள் வெளியே போகாமல் பார்த்துக் கொள்கின்றது.

ஆனால் இந்திய அரசோ  இணைய இருட்டடிப்புகளைப் பயன்படுத்துகின்றன .தகவல் தொழிநுட்ப வசதிகளை அப்படியே முடக்குகிறது.. உதாரணமாக இன்று காஷ்மீர் நாளை இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்கள்.

வெளிநாடுகளில் இருந்து அரசுக்கு எதிராக வரும் தகவல்களை ,ரஷ்யா உள்நாட்டில் அரசு ஊடகக் கட்டுப்பாட்டின்  மூலம் தடுப்பதில்   முன்னணியில் உள்ளது .இதை இன்னும் சில காலங்களில் இந்தியாவிலும் நாம் பார்க்கலாம்

 எதிர்ப்பை முடக்குவது :எதிர்க்கட்சிகளைச் சேதப்படுத்துவது, ஆனால் அவற்றை முற்றிலுமாக அழிக்காமல் வைத்திருப்பது

எதிர்க் கட்சிகளுக்குள்  ஊடுருவுவது, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்லீப்பர் செல்லாக மாற்றுவது  சட்டங்களை வைத்துப்  பயமுறுத்துவது  போன்ற  தந்திரங்களைப் பயன்படுத்துவது ஆகியவை தன்னியக்கவாதியின்  சில சாத்தியமான செயல்கள். இப்படிச் செய்வது  போலி-அரசியல் போட்டிக்கான இலக்கைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நோக்கத்திற்கு உதவுகிறது, அதே நேரத்தில் புதிய  ஜனநாயக சக்திகளை நோக்கிச் செல்லும்  திறனைக் குறைக்கிறது

இந்த முறையைத்தான் மோடி மிக அதிகமாகப் பயன்படுத்துகிறார். மோடி நினைத்து இருந்தால் காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல மற்றைய எல்லாக் கட்சிகளையும் துவம்சம் செய்து அழித்து இருக்க முடியும் அப்படி அழித்து இருந்தால் மக்களின் கவனம் முழுவதும் மோடி அரசின் மீதுதான் இருக்கும் அந்த அரசு தவறு செய்யும் பொது மக்கள் முழுமூச்சா எதிர்க்க ஆரம்பிப்பார்கள் ஜனநாயக போராட்டம் வலுக்கும் ஜல்லிக்கட்டில் பார்த்தது மாதிரியாக நாடு முழுவதும் எழும் போது இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் அதன் பின் என்ன விளைவுகள் தோன்றும் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே அதனால் அப்படிச் செய்யாமல் இந்த எதிர்க்கட்சிகளை வைத்து விளையாடும் போது மக்கள் கவனம் சிதறும் அதுவே சர்வாதிகாரிகளுக்குக் கிடைக்கும் மிக எளிதான வெற்றி அதைதான் மோடி திறம்படச் செய்து கொண்டிருக்கிறார்

மறைமுகமாகத்  தேர்தல் தில்லுமுல்லுக்களைக் கையாளுதல் : தேர்தல் முறைகளையும் தேர்தல் ஆணையத்தையும் தன் அதிகாரத்திற்குள் வைத்து மாயாஜால சித்துக்களை அரேங்கேற்றி தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுதல்

இந்த முறையையும் மோடி மிக அற்புதமாகக் கையாளுகின்றார்... பொதுத் தேர்தல் வரும் போது அதை எப்படி கையாள்வது மாநில தேர்தல்கள் வரும் போது அதை எப்படிக் கையாள்வது என்பதை மிகத் தந்திரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் இதன் காராணமாகவே அவர் இரண்டாம் தடவை மிக அதிக பெரும்பான்மையுடன் வந்து  இருக்கிறார்.  இதற்குத் தேர்தல் கமிஷ்னை மட்டுமல்ல ஊடகங்களை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்துகிறார்.

கடந்து ஆட்சிக்காலத்தில் அவர் போட்ட பல திட்டங்கள் மிக மோசமாகத் தோல்வி அடைந்து நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தது அப்படி எதிர்ப்பு இருந்த நேரத்தில் மிக அதிக பெரும்பான்மையுடன் ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அதற்குத் தேர்தல் தில்லுமுல்லுதான் காரணம்.. ஆனால் அந்த தேர்தல் தில்லுமுல்லுக்கள் உலகின்  மற்ற நாடுகளுக்குத் தெரியாமல் இருக்க மாநில தேர்தல் நடக்கும் போது அதை முழுவதும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளாமல் எதிர்க்கட்சிகளுக்குக் கொஞ்சம் சாதமாக்கி விட்டு  பிறகுத் தன் ஆள்பிடி வேலையால் தன் பக்கத்திற்கு  இழுத்து சாதகமாக்கிக் கொள்கிறார் இதை வெளிநாடுகள் பாலிடிக்ஸ் என்று கருதிக் கொள்ளும் என்று நினைத்துக் கொள்கிறார்.. மற்ற நாடுகளுக்கு இது தெரியாமல் இல்லை  இதில்  வேற நட்பு நாடுகளைத் தேர்தல் ஆணையங்களில் பார்வையாளராக வைப்பதும் அடங்கும் .

இதுமட்டுமா  எமர்ஜன்சி விளையாட்டு : சில எதேச்சதிகார தலைவர்கள் மேலும் அடக்குமுறையைச் செயல்படுத்த அவசரக்கால நிலைகளை அறிவிப்பது போன்ற பாரம்பரிய வலுவான கை தந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

இப்போது மோடிஜி மறைமுக எமர்ஜன்சி விளையாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம்  கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள் , எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை வக்கீல்களை அச்சுறுத்த முடிகிறது .

இவரது ஆட்சிக்கு எதிராகத் தீர்ப்புக் கூறும் நீதிபதிகள் நிலமை என்ன? எழுத்தாளர்களின் நிலமை என்ன? அரசியல் தலைவர்களின் நிலமை என்ன என்று பாருங்கள்

முழு சர்வதிகாரியாக மாறுவதற்கு முன்பே இவர் இப்படி செயல்படும் போது சர்வாதிகாரியாகவே மாறும் போது என்னென்ன நிகழும்

இது தவிர உள்நாட்டில் மட்டும்   செல்வாக்கை விரிவாக்காமல் மற்ற நாடுகளிலும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வது

இன்றைய எதேச்சதிகார ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்கள் நாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்துகிறார்கள் இதற்குச் சீன அரசை உதாரமாக காட்டலாம்.

சர்வதேச நிலை மற்றும் அவர்களின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி, சீனா போன்ற நாடுகள் ஆசியா முழுவதும் ஐரோப்பாவிற்கு உள்கட்டமைப்பை உருவாக்க பெல்ட் மற்றும் சாலை போன்ற நிதி முயற்சிகள் மூலம் தங்கள் செல்வாக்கைப் பரப்புகின்றன . அவர்கள் தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகளுக்காக வெளிநாட்டுத் தலைநகரங்களுக்கு ஆலோசனை வழங்கவும், வற்புறுத்தவும் தொழில்முறை ஆலோசகர்களை நியமிக்கிறார்கள் .

இந்த முறையை பயன்படுத்தித்தான் மோடியும் பல நாடுகளுக்கு உதவுவதன் மூலம் தன் அதிகாரத்தைச் செல்வாக்கை விரிவுபடுத்துகிறார். உதாரணமாக ஈரானுக்கு உதவுவது ஆப்பிரிக்க நாடுகள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு உதவுவது அமெரிக்காவிற்குச் சாதகமாக செயல்படுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்

இறுதியாக தங்களைப் போல எண்ணம் கொண்ட தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் ஒரு நல்ல புரிதல்களை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கிறார்கள் இந்த மாதிரியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவே மோடி அவர்கள் தொடர்ந்து  வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு மற்ற நாட்டுத் தலைவர்களுடன் ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்க முயற்சிக்கிறார் அதில் பலனும் அடைகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்


அவர் சர்வதிகாரியாக மாற ஆட்சேபனை இல்லைதான்
ஆனால் அப்படி ஒரு தலைவர் ஆனால் பின்னாலாவது மக்களுக்குச் சிறிதளவாவது நல்லது செய்வரா என்பதுதான் ஒரு பெரிய கேள்விக் குறி

டிஸ்கி : பாவம் இதெல்லாம் தெரியாமல்  ஸ்டாலின் பிராசாந் கிஷோருக்கு கோடி கோடியாக அள்ளிதருகிறார். இதற்கு பதிலாக மோடியிடமே அவர் சரணடைந்து விடலமாம் தானே,


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இன்று தமிழகத்தில் உள்ள ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது சில கருத்துகள் மந்தில் தோன்றி பகிர்ந்தேன் அதன் விளைவாக மனதில்எழுந்த எண்ணமும் படித்த செய்திகளும்தான் இந்த மிகப் பெரிய பதிவு உண்டானதற்குக் காரணம்

4 comments:

  1. ராணுவம், ரிசர்வ் வங்கி, நீதி மன்றம், தேர்தல் ஆணையும் என ஒவ்வொன்றாக உடைத்து, அதன் பொறுப்புப்பாளர்களை தனது தலையாட்டி பொம்மைகளாக மாற்றிய பின்...

    என்னவேண்டுமென்றாலும் செய்வார்கள்...

    ஆனால் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்... அந்த அறம் கொடுக்கும் தண்டனை யாருக்கும் தெரியாது...

    ReplyDelete
    Replies
    1. // அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்... அந்த அறம் கொடுக்கும் தண்டனை யாருக்கும் தெரியாது...//

      நிச்சயம் கொடுக்கும் நம் கண் எதிரேயே பார்த்தோமே ஜெயலலிதா கலைஞர் இன்னும் பலர்

      Delete
  2. மோடி சர்வாதிகரியாக மாறும் அறிகுறிகள் முன்பே தெர்ந்தது அது குறித்து ஒர் பதிவும் எழுதிய நினைவு

    ReplyDelete
    Replies
    1. அவரைப்பற்றி பல கோணங்களில் நிறைய பதிவுகள் எழுதி இருக்கிறேன்.. முடிவில் விஷயத்தை பார்த்தால் ஒரு சர்வதிகாரியின் செயலாகவே இருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.