Monday, May 4, 2020

சில நொடி கொரோனா கால சிந்தனைகள் corona time thoughts
சில நொடி கொரோனா கால சிந்தனைகள்

சில நாட்களுக்கு முன்னால் தனிமையாக என்  வளர்ப்பு பையனுடன்( நாய்க்குட்டி) வாக்கிங்க் சென்ற போது மனதில் சில எண்ணங்கள் எழுந்தது அது இங்கே எழுத்தாக வெளி வந்து இருக்கிறது... அதோடு  சில பெரியவர்கள் சொன்ன கருத்துகளும் இங்கே பதிவாக வந்து இருக்கிறது..

சில பேர் தாங்கள்  கஷ்டப்படுக் கொண்டிருக்கும் நிலையிலும் அவர்கள் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது உதவி இல்லை அவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்புதான் என நினைக்கத் தோன்றுகிறது அப்படியில்லை என்றால் அது இரக்கமாகவும் இருக்கக்கூடும் எது எப்படியோ அவர்களின் கஷ்டகாலங்களின் போது நம் மீது அன்பு கொள்ளவோ அல்லது இரக்கம் காட்டவோ முடிகிறது என்றால் அவர்கள் நிச்சயம் மனித நேயம் மிக்கவர்களாகத்தான் இருக்கக் கூடும் இப்படி சிலர் இருப்பதால்தான் உலகம் இன்றும் உயிர்ப்போடு இயங்குகிறது


வாழ்க்கையில்  சில நேரங்களில் சில  விஷயங்களை  எளிதாகப் போக விட்டுவிட வேண்டும் அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டு எல்லாம் இருக்கக் கூடாது  காரணம் இப்படி சில விஷயங்கள் நம்மை விட்டுப் போகும் போது அந்த இடங்களை நிரப்ப  இடம் இருந்தால்தான் வாழ்க்கையில் மிகச் சிறப்பான  விஷயங்கள் வர இடமுண்டு


 எல்லோரும் அவரவர் வீட்டு வாசலிலிருந்து குறைந்து 6 அடி தூரம் வரை சுத்தம் செய்தாலே உலகம் சுத்தமாகிவிடும் அது போல   6 அடி தூரம் தள்ளி நிற்க ஆரம்பித்தாலே கொரோனோவும் நம்மை விட்டு விலகி விடும்

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இயற்பியலாளர் மேரி கியூரி கூறியதை இப்போது நாம் நினைத்துக் கொள்வோம்: "வாழ்க்கையில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, அதைப் புரிந்துகொள்வது மட்டுமே. இப்போது மேலும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது, இதனால் நாம் குறைவாகப் பயப்படுவோம்."


இரண்டாம் உலகப் போரின்போது அதன் நகரங்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் மூன்று சுவரொட்டிகளை வெளியிட்டுக் காட்சிப்படுத்தியது. அவற்றில் ஒன்று, "அமைதியாக இருங்கள், தொடருங்கள்" "Keep calm and carry on," என்பது பல ஆண்டுகளாகப் பிரபலமடைந்துள்ளது, ஏனெனில் அதன் செய்தி அதன் அசல் நோக்கத்திற்கு அப்பால் பொருந்தும்படியாக இருந்ததுதான்.


கொரோனா வைரஸ் உலகப் போருடனான ஒப்பீடுகளைத் தூண்டுகிறது என்பது இப்போது நம்மை ஆழமாகப் பாதிக்கிறது.




கொரோனா வைரஸ்ஸை  கண்டு அஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம் "முடிவில் எல்லாம் சரியாகிவிடும். அது சரியில்லை என்றால், அது முடிவல்ல."
 
தமிழ் ஊடக பேச்சு நிகழ்ச்சியின் போது மக்கள் விவாதிக்கிறார்களா அல்லது வாதிக்கிறார்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

இந்த பதிவை படிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்

நீங்கள்  வீட்டில் இருக்கும் போது  காலில் என்ன அணியிறீர்கள்?

A. வெறுங்காலுடன்
B.   ஷூஸ்
C.  சாக்ஸ்
D. செருப்புகள்
E.  வேற ஏதும்

7 comments:

  1. சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியவிதம் அருமை...வாழ்த்துகள்...நான் A வகை..

    ReplyDelete
  2. வெளிநாட்டைப் பொறுத்தவரை நம்மவர்கள் எப்பவும் சுத்தமாகத்தான் இருக்கின்றனர், சில நாட்டினர்தான் குப்பையாக வாழ்கின்றனர் எனச் சொல்லலாம்.

    வீட்டில் நான் எப்பவுமே வீட்டு ஷூ தான் போட்டிருப்பேன்[பெரும்பாலும் பூட்ஸ்], கடும் வெயில் காலத்தில் மட்டும், வீட்டு சிலுப்பர்.. ஆனா படியில்கூட அதனோடு இறங்க மாட்டேன், உள்ளே மட்டுமே, வெளியே இறங்குவதாயின் மாற்றி விடுவேன்.

    ReplyDelete
  3. கொரோனா காலசிந்தனைகள் நன்று.
    தேவையான பதிவு.

    ReplyDelete
  4. சிந்தனைகள் நன்று நண்பரே கொரோனாவின் பயம் இந்திய மக்களுக்கு இல்லை என்றுதான் தெரிகிறது காவல்துறை சொல்வதை யாரும் மதிப்பதில்லை.

    ReplyDelete
  5. சிந்தனைகள் நன்று...

    இங்கே வெறுங்காலுடன்...

    ReplyDelete
  6. செருப்போடு...

    ReplyDelete
  7. கோடையில் வெறுங்கால், குளிரில் சாக்ஸ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.