Tuesday, May 19, 2020

மனிதர்கள் மனிதர்களை பற்றி கணிக்கும் கணிப்பு (மதிப்பீடு) சரியா?


நாம் அனைவரும் அவசரமாக முடிவு எடுத்து கருத்துச் சொல்பவர்கள்தான் அல்லது மனதில் நினைத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறோம் அதற்கு நானோ நீங்களோ இந்த நிமிஷம் வரை விதிவிலக்கு அல்ல. இது பொதுவான மனித இயல்புதான்.இப்படி ஒரு முடிவு எடுக்கும் இயல்பு சரியானதாக என் மனதிற்குப் படவில்லை. நாம் மற்றவர்களை விட உயர்வாகவோ தாழ்வாகவோ இருப்பதாக நினைத்து நாம் எடுக்கும் அவசர முடிவு இருவருக்குள்ளும் ஒரு பெருத்த இடைவெளியை ஏற்படுத்திவிடும்

ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்: நாம் ஒருவரைப் பார்க்கிறோம், அவர்களின் தோற்றம் அல்லது செயல்களின் அடிப்படையில், அவர்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு வருகிறோம் .அது சரியான முடிவாக(மதிப்பீடு) இருக்குமா  என்றால் இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். நாம் பொது இடங்களுக்குச் செல்லும்போதோ அதாவது உணவகம்,  பொது நிகழ்வுக்கிற்கு, பேருந்து ,ரயில் ,விமானம் பயணம் மேற்கொள்ளும் போது நம் அருகில் ஒரு பிராமணர், இஸ்லாமியர்,கிறிஸ்துவர்,குஜராத்தி,படித்தவன்,படிக்காதவன்.கூலித் தொழிலாளி,அழுக்கு உடையை அணிந்து இருப்பவர் இப்படிப் பலரைச் சந்திக்க நேரிடும்.. உடனே நாம் அவரின் தோற்றம் மதம் சாதி இப்படிப் பலவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக நாம் ஒரு முடிவிற்கு(மதிப்பீடு) வந்துவிடுவோம்.
  

ஒருவரை பற்றி நமக்கு ஏதும் தெரியாத நிலையில் அவர் கூட எந்த ஒரு வித உரையாடல் இல்லாமல் அந்த நபரைப் பற்றித் தெரிந்துகொள்ளவோ அல்லது அவர்களைப் புரிந்துகொள்ளவோ முயற்சி செய்யாமல் கணிப்பை(மதிப்பீடு) உருவாக்குவது எப்படிச் சரியாக இருக்க முடியும்



அது போல நமக்குத் தெரிந்தவர்கள் மீதான கணிப்பை(மதிப்பீடு) எடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதைக்  சற்று பார்ப்போம்.

அவர்கள் செய்யும் ஒரு காரியத்தை நாம் காண்கிறோம், அதனால் நாம் உடனே கோபமோ ஏமாற்றமோ அடைகிறோம், அல்லது அவர்களைப் பற்றி மோசமாக நினைக்கிறோம் அல்லது  புரியாமல் ,அவரின் சூழ்நிலை என்னவாக இருக்கிறது என்பதை அறியக் கூட முயலாமல் அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம்.

அப்படி ஒரு முடிவிற்கு வராமல்  அவருடன் பேசுவது அல்லது உரையாடுவதை தொடங்குவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் ஆரம்பிக்கிறோம், மேலும் அந்த  புரிதலின் மூலம் இருவர்க்களிடையே ஒரு நல்லுறவு என்ற பாலத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

 ஆனால் இப்படி நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருடனும் ஒரு உறவை உருவாக்க முடியுமா என்றால் பதில் அநேகமாக இல்லை என்றுதான் இருக்கும் காரணம். அதற்கு நேரமும் முயற்சியும் தேவை, ஆனால் இந்த இரண்டிற்கும் கொஞ்சம் நம் மனதை ஒதுக்க முடியுமானால் அது நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி
 
நம்மிடம் நேரமில்லாத போது அடுத்தவரை பற்றி தவறாக நினைப்பதற்கு பதிலாக அவர்களைப் பற்றி நல்லதாகவே நினைத்து அவர்களை பார்த்து புன்னகை செய்யலாம்தானே அப்படி செய்வதால் இருவருக்குள்ளும் மனதளவில் ஒரு நல்ல எண்ணம் தோன்றத்தானே செய்யும்

நம் கணிப்பு வழங்குவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக இரண்டு மனிதர்களிடையே ஒரு உறவை உருவாக்க முயற்சி செய்வோம்


அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.


எந்த ஒரு விஷயத்திலும் நாம் நம் கணிப்பை உடனடியாக வழங்க வேண்டாம். நாம் ஒரு கணிப்புக்கு அல்லது முடிவிற்கு வரும் போது அதை அப்படியே நிறுத்துங்கள் அதன் பின் நம் எண்ணங்களைச் சில நாட்கள் அவதானித்து , அதன் பின் நாம் ஒரு முடிவிற்க்கு வரும் போது அல்லது உணரும் போது  அதை அப்படியே நிறுத்தி அடுத்தக் கட்டத்திற்குச் செல்வோம்

இங்கே நாம் அவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் அவர் என்ன செய்தார் என்பதைக் கண்டு அவர் மீதான கணிப்பை எடுக்கும் முன் அந்த நபரைப் புரிந்துகொள்ள முயலவேண்டும் அதற்கு ஆங்கிலத்தி
ல் இப்படி Put yourself in their shoes என்று சொலவது போல என்று நினைத்து நாம் செயல்பட வேண்டும் முடிந்தால் அவரிடம் பேசுங்கள் அவரது பின்ணணியைக் கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொருவருக்கும்  ஒரு செயலை செய்வதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு பின்னணி இருக்கும் அதை அறிய முயலுங்கள் இல்லையென்றால், அந்த நபர் செயல்படுவதற்கோ அல்லது அவர்கள் தோற்றமளிப்பதற்கோ வழிவகுத்த சூழ்நிலைகளைக் கற்பனை செய்து பாருங்கள்.  
அப்படி அவரை நாம் புரிந்து கொண்ட பின், அவரை மாற்ற முயற்சிக்காமல் ,அவர் யார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் யாரும் எளிதில் மாறமாட்டார்கள் அதுதான் உலகத்தில் இருக்கும் பொதுவான் நடை முறை .அது புரியாமல் நாம் முயற்சி செய்தால் கொஞ்சம் மட்டுமே அவரை மாற்ற முடியும் ஆனால் நீண்ட காலத்திற்குப் பின் அந்த மாற்றமும் காணாமல் போய்விடும் அது நமக்குத் தெரியவந்தால் நமக்கு விரக்தி ஆகிவிடுவோம் அதனால் யாரையும் மாற்ற முயற்சிக்காமல் அவரை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் அல்லது அவருக்குப் புரிய வையுங்கள்

அவரை உள்ளது உள்ளபடியே நாம் ஏற்றுக்கொண்டவுடன், அவரை நேசிக்க முயற்சி செய்யுங்கள்.நீங்கள் அவரை அறியாவிட்டாலும் கூட. கடந்த காலத்தில் நீங்கள் அவரை வெறுத்திருந்தாலும் கூட. அவரை ஒரு சகோதரனாக , சகோதரியாக அவர்கள் யாராக இருந்தாலும், வயதானவர்களாகவோ, இளமையாகவோ, கருப்பாகவே சிவப்பாகவோ , ஆணோ பெணோ, பணக்காரனோ ஏழையோ ,பிராமணனோ, இஸ்லாமியனோ, கிறிஸ்துவனோ, குஜராத்தியோ பஞ்சாபியோ, அரேபியனா ஆப்பிரிக்க அமெரிக்கக் கண்டத்தைச் சார்ந்தவனோ எதையும் பொருட்படுத்தாமல் நேசியுங்கள்

அன்பை ஒருவரிடம் வெளிப்படுத்தும் போது அவர் நமக்குத் தீமையா செய்வார்.? நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பு பரிவு இதெல்லாம் நமக்குத் திரும்ப மகிழ்ச்சி என்ற வடிவத்தில் நம்மை வந்தடையும்.மற்றவர்களை நேசிப்பது மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும், அந்த அன்பை வெளிப்படுத்த நீங்கள் தேர்வு செய்தால் அது உங்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றும் என்பது மிக உறுதி

நேற்று என்பது முடிந்த விஷயம். அது இறந்து போன காலம். அதே போல நாளை என்பது யாரும் அறிந்துகொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தைச் செலவிடுவது மடமை.

அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ அதற்கு நாம் மற்றவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும் அவர்களைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு போகவேண்டும்


அன்புடன்
கொரோனா ஞானி
மதுரையானந்தா (மதுரைத்தமிழன்)

16 comments:

  1. வணக்கம் மதுரையானந்தா...

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே...
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை...
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
    புரிந்து கொண்ட மதுரையைப் போல் நண்பன் வேறில்லை...

    இப்படிக்கு
    கொரோனா காலத்து முந்தைய ஞானி
    திண்டுக்கலானந்தா...!

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாட்டு நல்ல கருத்து....

      நோமோர் திண்டுக்கலானாந்தா .... ஒன்லி வலையுலக சித்தர்தான்

      Delete
  2. மதுரையானாந்தா... :)

    நல்ல சிந்தனை. இங்கே அனைவருமே அடுத்தவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே முடிவு செய்து விடுகிறார்கள் - தனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றிவிட்டால் என்ன செய்தும் அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்வதில்லை! அனுபவங்கள் நிறையவே உண்டு. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை நம்பும் உலகமிது! :)))

    ReplyDelete
    Replies
    1. உங்கள்து கருத்தும் மிக சரி பலபேர் - தனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றிவிட்டால் என்ன செய்தும் அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்வதில்லை! அது போல - தனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றிவிட்டால் என்ன நடந்தும் அந்த எண்ணத்தினையும் மாற்றிக் கொள்வதில்லை!

      Delete
  3. உங்கள்அரசியல் மோடி கணிப்பும் மாறுமா

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தில் எனது கணிப்பு மாற இரண்டு சாத்தியங்கள் மட்டும்தான் இருக்கின்றன. ஒன்று அவர் மாற வேண்டும் அல்லது நான் சங்கியாக மாற வேண்டும்... அவர் மாறப் போவதில்லை பேசாமல் நான் சங்கியாக மாறிவிடலாமா என்று யோசிக்கிறேன் அட்லீஸ்ட் பல பதிவர்கள் சந்தோஷத்திற்காக

      Delete
  4. நேசிக்கப் பழகுங்கள் நல்ல அறிவுரை.

    ReplyDelete
    Replies
    1. நேசிக்க பழகணும் அட்லீஸ்ட் நாம் தினசரி பார்ப்பவர்களிடம் பழகுபவர்களிடம்

      Delete
  5. Replies

    1. ஆமாம் ஐயா அதுவும் இன்றைய காலத்தில் நேசிப்பது மிகவும் அவசியம்

      Delete
  6. பணக்காரனோ ஏழையோ ஆணோ பெண்ணோ எந்த மதமோ எல்லாம் சரி.. இந்த குஜராத்திகளை மட்டும் கொஞ்சம் தவிர்த்து கொள்கிறேன் ப்ளீஸ். இனிமேலும் இவங்கள சகிக்கறது தற்கொலைக்கு சமம்.

    ReplyDelete
  7. ஆஆவ் !!! மெண்டல் ஹெல்த் மாதிரி இருக்கே பதிவு ..நான் எல்லாரையும் அப்படியே ஏற்றுக்கொள்வேன் கொண்டிருக்கிறேன் . நம்பிக்கை துரோகம் மட்டும் ஏற்க கஷ்டம் என் பெயரை கீழ்மைப்படுத்தினால் அவரை விலக்கி வசிடுவேன் .அப்புறம் ஒரு விஷயம் எங்கப்பா எப்பவும் மற்றவரை இவர் இன்ன மதம் பிரிவுன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லிவளர்த்ததால் அதை அப்படியே தொடர்கிறேன் ..பதிவு சூப்பர் நாளாக நாளாக உங்கள் தலையை சுற்றி ஒரு பிரகாச ஒளிவட்டம் உருவாகி கொண்டு வருது அதை செக் பண்ணிங்களா நண்பா :) 

    ReplyDelete
  8. மதுரையானந்தா!!! மதுரை தமிழன் நல்ல பதிவு. யாரையுமே மதிப்பீடு செய்வதை விட எல்லோரையும் நேசித்தலே சிறப்பு. அருமையான பதிவு.

    துளசிதரன்

    ஆஹா இது என்ன புது புது அவதாரம்..மதுரையானந்தா!!!! ஹா ஹா ஹா...நான் நினைச்சது சரியா போச்சு!! ஹா ஹா ஹா ஹா கொரோனா காலம் வீட்டுல இருக்கடறதால ஞானியா ஆகிட்டீங்களா தேம்ஸ் புலாலியூர் பூஸானந்தா பிஞ்சு ஞானிக்குப் போட்டியாவா!! ஹையோ அவங்கள காணலியே..ஹா ஹா ஹா அவங்க் மியாவ் சத்தத்தைக் கானளியே அவங்க செக் தான் வந்திருக்காங்க..

    சரி சரி...பதிவு அசத்தல் பதிவு மதுரை. மதிப்பீடு என்பது என்னைப் பொருத்தவரை தவறான ஒன்று. அது பழகும் முன் பார்த்தும் சரி, பார்க்காமலும் சரி, பார்த்து பழகிய பின்னும் சரி...எல்லோரிடமும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். யாரையும் எந்த விதத்திலும் மதம், இனம், ஜாதி என்று எந்த விதத்திலும் பார்க்காமல் அன்பு செலுத்துவது என்பது நம்ம பாலிஸி மகனுக்கும் அப்படியே. இதைப் பற்றி பல தடவை கருத்துகளிலும் சொன்ன நினைவு.

    அன்கண்டிஷனல் லவ் இது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான் இருந்தாலும் அக்செப்ட் பீப்பிள் ஆஸ் தெ ஆர் என்று இருப்பதே நல்ல விஷயம். என்னைப் பற்றி மிக மிக இழிவாகப் பேசிய நபரையே இப்போது அவர் பேசும் போது மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் அவருடன் இயல்பாகப் பழக முடிகிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் இது நான் என் பள்ளியில் என் ஆசிரியைகளான மேரி லீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சருக்குத்தான் உரித்தாக்குவேன். அருமையான ஆசிரியைகள். அன்று போட்டவை இன்றும் எனக்குக் கை கொடுக்கிறது ப்ளஸ் என் அனுபவங்களில் கற்றவை..

    செம பதிவு மதுரை....

    கீதா

    ReplyDelete
  9. மற்றவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரிதலும், சகிப்புதன்மையும் இருந்து விட்டால் எல்லோருடனும் அன்பாய் இருக்கலாம்.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.