டிவிட்டரில் படித்ததும் பிடித்ததும் :தன் நாடு தன் ஊர் என்று ரொம்ப அலட்டிக் கொள்ளாதீர்கள்
@கல்வெட்டு : தன் நாடு தன் ஊர் என்று ரொம்ப அலட்டிக் கொள்ளாதீர்கள். அது ஒரு கட்டப்பட்ட பிம்பம்.குறைந்த பட்சம் "மாபியா கேங்ச்டர்"கள்கூட தன் ஆளுக்கு உதவ, ஒரு வழி வைத்திருப்பான் எங்கிருந்தாலும்.ஒரு சமூகம், பசியோடு நடந்து கொண்டிருப்பவனை சாகவிடுகிறது என்றால் எவ்வளவு கொடுமாயானது அது.இருக்கும் இடத்தில் உங்களுக்கான ஒரு நட்புகளை, அமைப்புகளில் இருத்திக் கொள்ளுங்கள்.மனிதன் ஒரு சமூக விலங்கு. இரண்டு பேர் என்பது இமாலய ஆற்றலைக் கொடுக்கும்.
இது போன்ற நேரங்களில், இவர்களிடம் பிச்சை எடுத்தே கோடிகளைக் குவித்த கோவில் எனப்படும் கொள்ளைக்கூடங்கள் (திருப்பதி ,திருரங்கம் etc) ஏதாவது களமிறங்கி உதவினவா?இல்லை. மதம் ,கடவுள் அனைத்தும் ஒரு வழிப்பாதை. உங்களிடம் இருந்து வாங்கி அவர்களின் மேனியில் தங்க கீரிடம் வைத்துக்கொள்வான்கள்.எனது ஊர் என்றாலும் நான் செத்தால் ஊரே வரவா போகிறது?
எனக்கு உணவில்லையென்றால் ஊர் மக்கள் ஓடிவரவா போகிறார்கள்? இரண்டும் இல்லை.ஏதோ தெரிந்த சிலரே உதவுவார்கள்.அது எந்த இடத்தில் இருந்தாலும்.சொந்த ஊர்/நாடு/இனம்/மொழி எல்லாம் பசியாறிய பிறகு பேசப்படும் அரசியல்.Build your nest where you are. Don't waste your energy for your so called land. Nothing exist like that.
அடிப்படைத் தேவைகளை உறுதியாக்காத நாடு,ஊர் என்ற அமைப்புகள், அந்த தேவைகளை கடந்தவர்களுக்காகவே இருக்கும் ஒன்று. சாமான்யன் என்பவனுக்கு ஒரு ஊரோ நாடோ ஒரு அமைப்பாக உதவவில்லை என்றால் அவனுக்கு எப்படி அந்த நாட்டை ஊரை தனதாகக் கருதுவான்? என்ன தேவை அவனுக்கு?
மக்கள் ஓட்டுக்கு காசை "கேட்டு வாங்குவது" என்பதே, அந்த அமைப்பின் மீது அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை காட்டுகிறது.ஆம் அது அவர்களின் அரசு அல்ல என்பதால் கிடைக்கும் காசுக்கு ஓட்டை விற்றுவிட்டு அடுத்த நாள் பிழைப்பை பார்க்கப் போய்விடுகிறான்.காசு வாங்காமல் ஓட்டுப் போட்டாலும் அவனின் வீடு,சோறு நலன்களுக்கு ஒரு உத்திரவாதமும் இல்லை எனும் போது, அரசும் அரசியலும் அவனுக்கானது அல்ல என்று முடிவெடுக்கிறான்.
இதுவரை நடந்து செத்த ஏழை மனிதர்களே சாட்சி. இந்த சமூகத்தின் புரையோடிய நிலைக்கு.
வலியுடன்
@Rangaraj Pandey :வீடெல்லாம் பூனை என்றால், சகுனம் எந்த மூலைக்கு?
@தமிழ் கிறுக்கு :காய்கறி கடைக்கு போனா 2 ரூவா காயின் 4 ரோட்டுல கிடக்குது.
எவனோ சங்கி ஓட்ட ஜோப்போட கடைக்கு வந்திருக்கான்..
@இராஜசேகர் :குஜராத் மாநிலத்தில் மும்முறை ஆட்சி செய்த நரேந்திர மோடி கல்வி, மருத்துவ துறைகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன?குஜராத் மாடல் சாதனைகள் ஏதேனும் இருந்தால் அதை பட்டியலிட முடியுமா ?
@சிவா ஸ்வாமி .P :எப்போதுதான் இவன் வீழ்ந்துபோவான் என்று காத்திருப்பவர்கள் ஏராளம்...!!!
உன்னை தூங்க வைத்தபிறகு தூங்க மறந்தவர்கள் தவித்துக்கொண்டு இருப்பார்கள்
@மேல்மாடி
யார்தான் உழைக்கவில்லை,
அத்யாவசியத் தேவைக்காக,
"ஏழைகள்"
உழைக்கிறார்கள்.
ஆடம்பரத் தேவைக்காக,
"பணக்காரர்கள்"
உழைக்கிறார்கள்..
@கோழியின் கிறுக்கல்!!
ஆண்களின் ரசனை தான் எத்தனை விசித்திரமானது!!
திருமணத்திற்கு முன் காதலியை தவிர, வேறு எந்த பெண்ணும் அழகாக தெரிய மாட்டார்!
அதற்கு பின்போ, அவரைத் தவிர எல்லா பெண்களும் அழகாக தெரிவார்கள்!!
சிவா ஸ்வாமி .P :இந்த லாக்டவுனின் போதுகூட மூன்றுவேளை சாப்பிட முடிகிறது என்றால், கண்டிப்பாக கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு,
மூன்றுவேளை சாப்பிட முடியாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்
@அஹத்: வலிக்கும் எனத் தெரிந்தும் உன்னை வார்த்தைகளால் குத்தி காயப்படுத்துபவர்களிடம்;
உன் வலிகளை வெளிப்படுத்தாமல் அவர் கண் முன் சிரித்து விட்டு செல்வதே புத்திசாலித்தனம்..!!
அன்புடன்
மதுரைத்தமிழன்

#கல்வெட்டு : மிக்க வேதனை தரும் உண்மைகள்...
ReplyDeleteநாடாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி வாழ்க்கைத் தரமும் கவனிப்பும் உயர வேண்டுமானால் முதலில் சனத்தொகையை கட்டுப்படுத்த வேண்டும். சனத்தொகை கட்டுப்பாட்டில் ஒரு சாராருக்கு சலுகை அளித்தால் இன்னொரு சாரார் முரண்டு பிடிக்க வாய்ப்புள்ளது. மத ரீதியான சலுகைகளை நிறுத்தி அனைவருக்கும் பொதுவான குடும்ப கட்டுப்பாட்டு சட்டம் கொண்டுவந்து அதை இறுக்கமாக கடைபிடித்தால் தவிர இந்தியாவில் இந்த அவலம் ஒழிய போவதில்லை. சனத்தொகை அடர்த்தி குறைந்த நாடுகளில் அரசியவாதிகள் என்னதான் ஊழல் செய்தாலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்க இதுதான் காரணம்.
ReplyDeleteநல்ல பகிர்வுகள். நன்றி.
ReplyDeleteஅதனால்தான் தமிழன் சொன்னான். யாதும் ஊரே யாவரும் கேளிர். இன்னொருவிதமா சொன்னா எந்த ஊரும் நமதில்லை. கொரோனா வந்தார் யாருமே கேளிர் இல்லை.
ReplyDelete