ஏன் அமெரிக்காவில் அதிக மக்கள் கொரோனவினால் இறக்கிறார்கள்?
1) கொரோனாவில் உலகளவில் இறப்பவர்கள் 80 வயதிற்கு அதிகமானவர்கள்தான் அதிகம் . அமெரிக்காவில் 80 வயதிற்கு மேலானவர்கள் 1.5 கோடிக்கு மேல் வசிக்கிறார்கள். அது சனத்தொகையில் 3.3%. ஒரு ஒப்பீட்டுக்கு அமெரிக்காவை விட 4 மடங்கு சனத்தொகை அதிகமான இந்தியாவில் 80 வயதிற்கு மேல் 80 லட்சம் பேர்தான் வாழ்கிறார்கள். இந்தியாவின் சனத்தொகையில் அது 0.6%. அமெரிக்காவை விட 6 மடங்கு குறைவு.
2) அமெரிக்காவில் 80 வயதிற்கு மேலானவர்கள் முதியோர் இல்லத்தில் அதிகமாக வாழ்கிறார்கள். ஒருவருக்கு நோய்த் தொற்றினால் மற்றவருக்கு இலகுவாகத் தொற்றி விடும்

3) அமெரிக்காவில் இறப்பவர்களில் அதிகமானோர் கறுப்பின மற்றும் மெக்ஸிகன் மக்கள். பெரும்பாலும் இவர்கள் ஏழைகள். அமெரிக்காவில் சாதாரண மருத்துவம் மற்றைய நாடுகளைப் போல இலவசம் இல்லை. emergency என்றால் கொஞ்சம் இலவசமாக மருத்துவம் கிடைக்கும். அதுவும் ஹாஸ்பிடல் விட்டு வந்தவுடன் கடன்காரன் வீடு தேடி வருவான். எனவே ஏழைகள் தமது சக்கரை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து எடுக்காமல் உடல் நிலை மோசமாகி இருப்பார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்றினால் இறக்கும் விகிதம் அதிகம். தவிர இந்த மக்கள் கொழுப்புணவு அதிகம் உண்பதால் உடல் பருமன் அதிகம்.
அமெரிக்காவில் பட்டினியால் கொரோனாவில் இறக்கிறார்கள் இன்று இந்தியாவிலும், கனடாவிலும் இலங்கையிலும் உலா வரும் செய்தி தவறு. ஹாஸ்பிடல் போனால் உணவு எல்லோருக்கும் இலவசம். ஹாஸ்பிடல் போகத்தான் பயம்..
நியூயார்க்கில் இறக்கும் தருவாயில் ஒருவர் கேட்ட கேள்வி ஒரு டாக்டரை உலுக்கி விட்டது.....
"எனக்கு நீங்கள் செய்த மருத்துவத்திற்கு யார் பணம் தருவார்கள்? என்னிடம் கொஞ்சம் கூட பணம் இல்லையே..""
சொல்லிவிட்டு கண்ணை மூடினாராம்

==================
அமெரிக்காவை அறிந்து கொள்ளுங்கள்..
என்ன நடக்கிறது அமெரிக்காவில்? ஏன் நியூயார்க் நகருக்கு டிரம்ப் உதவி செய்ய மறுக்கிறார் என்று என் இந்திய இலங்கை நண்பர்கள் உறவினர்கள் கேட்டார்கள்.
அமெரிக்காவில் அதிகமாக மக்கள் வாழும் மற்றும் அதிகமாக வியாபாரம் நடக்கும் மாநிலங்கள் பெரும்பாலும் (டெக்சாஸ் புளோரிடா தவிர) அமெரிக்காவின் நீல (ஒபாமா, கிளின்டன் ) கட்சிக்கு வாக்களிப்பவை. மற்றவை சிகப்பு (டிரம்ப்) கட்சிக்கு வாக்களிப்பவை.
இந்தியாவில் எப்படி தமிழகம் அதிகமாக வரி செலுத்திக் குறைவாகப் பயன் பெறுகிறதோ அதேபோல் அமெரிக்காவிலும் இந்த நீல மாநிலங்கள்தான் அதிகமாக வரி செலுத்துகின்றன. பெரும்பாலும் அமெரிக்காவின் நடுவில் இருக்கும் இந்த சிகப்பு மாநிலங்கள் நீல மாநிலங்கள் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்கின்றன.
உதாரணமாக கென்டக்கி மாநிலத்தில் உள்ள ஓவிசிலி எனும் ஊர். 100% வெள்ளையின மக்கள் வாழும் ஊர். அதில் உள்ளவர்கள் 95% சிகப்பு (டிரம்ப்) கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால் அந்த'ஊரில் உள்ள மக்களில் 90% அரசாங்கம் கொடுக்கும் பணத்தில்தான் வாழ்கிறார்கள். அந்த பணம் பெரும்பாலும் நியூ யார்க் நியூ ஜெர்சி மக்கள் கொடுப்பது.
மற்றைய நாடுகளைப் போல இல்லாமல் அமெரிக்காவில் இரண்டு சட்டசபைகள் உள்ளன. ஒன்று "house" அது ஒரு மாநிலத்தின் மக்கள்'தொகைக்கு அமைய MPகளை தெரிவு செய்யும். அப்படித் தெரிவு செய்தால் அரசாங்கம் சனத்தொகை அதிகம் உள்ள நீல மாநிலங்களுக்கு ஆதரவாகப் போய்விடும் என்று கருதி எல்லா மாநிலங்களும் சரி சமமாக அங்கத்துவம் பெற செனட் எனும் ஒரு முறையை அறிமுகப் படுத்தினார்கள். செனட் பெரும்பாலும் ட்ரும்பின் சிகப்பு கட்சிக்கே பெரும்பான்மையாக இருக்கும்..
நியூயார்க் நகருக்குப் பணம் குறைவாகக் கிடைக்க இந்த செனட் தான் காரணம். மற்றும் ட்ரும்பிக்கு எப்படியும் நியூயார்க் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. எனவே இந்த பாகுபாடு..
எல்லா நாட்டிலும் உள்ள அரசியல்தான்.. இலங்கையில் ராஜபக்சே தனது ஊரில் ஆளே இல்லாத ஒரு காட்டுக்குள் குரங்குகள் ஓடி விளையாடச் சீனாவிடம் கடன வாங்கி ஏர்போர்ட் கட்டவில்லையா? அந்த கடனை கட்டப்போவது யார் அவர் ஊர் மக்களா?
அந்த அது போலத்தான் இதுவும்.
இந்த இரு பதிவையும் எழுதி வெளியிட்டது எழுதியது சிவா நடராஜ்
_______________________________________________________
_______________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
நல்ல விளக்கம்... சிவா நடராஜ் முகநூல் நண்பர் தானே...?
ReplyDeleteஅமெரிக்க கொரோனா மரணங்கள் பதைபதைக்க வைக்கின்றன .இங்கிலாந்திலும் இப்போதான் கணக்கில் சேர்க்கிறார்கள் முதியோர் இல்ல மரணங்களை :( இறக்கும் தருவாயில் கேட்ட கேள்வி :(((((((
ReplyDeleteஅமெரிக்க நிலவரத்தை விவரித்தமைக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteஇன்னாது ... அமெரிக்காவில் பட்டினியில் மக்கள் சாகவில்லையா? என்ன சொல்றீங்க? ஒரு வேளை சாப்பாட்டுக்காக ஆறுமைல் தூரத்துக்கு வரிசையா வாகனம் நின்னு இருக்குன்னு செய்தி எல்லாம் ...
ReplyDeleteஎன்னத்த சொல்வேன் மதுர...நெஞ்சு பொறுக்குதில்லையே,,,
√
ReplyDeleteAre you (the author) saying people who died in US are mostly 80 plus age? What percentage of people who died 80 plus? Ask the author to give a reliable data with source cited here.
ReplyDeleteOkay, only hispanics and blacks are dying in US? Because they are poor. Fine. Let us look at Italy, Spain, England. they are not doing better than US either. They dont have poor blacks and hispanics there. How would the author of this article explain that?
Japan has lots of old people too. They have 1/2 the US population too. Why are old japanese are not dying like here in US or Spain or Italy or UK?
Japan has only 430 deaths and 14,000 positive cases? Japan is more crowded than US or Newyork.
Do not give false information for defending "your country".
என்னுடைய வைத்தியத்திற்கு யார் பணம் தருவார்கள்? என்னிடம் கொஞ்சம் கூட பணம் இல்லையே இந்த வார்த்தைகள் மனதை கனக்க வைக்கிறது.
ReplyDeleteஆண்டவா எப்போ நிலை மாறும் என்று நினைக்க வைக்கிறது.
மக்களுக்கு மருத்துவ காப்பீடு எட்டாக் கனியாக உள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெற வசதியற்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆகும் செலவைச் சமாளிக்க முடியாத காரணத்தினால்தான், பலரும் சிகிச்சை பெறாமல் மடிகிறார்கள் என்கின்றது ஒரு அமெரிக்கப் பத்திரிகை செய்தி.
ReplyDelete