Saturday, April 25, 2020


திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?Jyothika's speech

திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?


திருமதி. ஜோதிகா அவர்கள் ஒரு விருது வழங்கும்  விழாவில், ``தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன் மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள்.


மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது, நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம் தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்” எனப் பேசியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை கோயிலுக்கு அருகே  அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்க இந்தக் காட்சிதான் காரணம். இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற போர்வை எங்கே உள்ளது?


ஆனால் ஜோதிகா என்ன சொல்லுகிறார் என்று பலருக்கு நன்கு புரிந்தாலும் சங்கிகள்  மட்டும் உடனே கம்பு எடுத்துச் சுழற்ற ஆரம்பித்து விட்டனர்
ஜோதிகாவுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி என்ன தெரியும்? அவருக்கு உதாரணம் கூறுவதற்குக் கோயில்தான் கிடைத்ததா வேறு எதுவுமே இல்லையா, தஞ்சைப் பெரிய கோயிலை இழிவுபடுத்திவிட்டார்’ என்று சங்கிகள் கடந்த சில நாள்களாக ஜோதிகாவை விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


இப்படி நாம் பொதுவாக நல்ல கருத்துகளை நம் மந்தில் பட்டதைச் சொல்லும் போது இந்த சங்கிகள் விஷயத்தைத் திரித்து எழுதி ஒன்றும் அறியா மக்களின் மனதில் விஷத்தை விதைக்கின்றனர்..

உண்மையிலே இந்த சங்கிகள் கோவில்களை நேசிப்பவர்களாக இருந்தால் அல்லது தங்கள் மதத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இப்படி விஷயங்களைத் திரிப்பதற்குப் பதிலாக உடனே களத்தில் இறங்கி தமிழகத்தில்  உள்ள அனைத்து கோவில்களை அது சிறிதோ அல்லது பெரிதோ சுதம செய்து மூன்று வேளை பூஜை  செய்யலாமே எத்தனை எத்தனை கோவில்கள் ஒரு வேளை பூஜைக் கூடச் செய்யமுடியாமல் தவிக்கின்றன. அங்குள்ள குருக்கள் கஷட்ப்படுகின்றன அவர்களுக்கு எல்லாம் உதவிகள் செய்யலாமே.. அதற்குப் பதில் இப்படி கம்பை சுற்றுவதில் இரு மயிருக்கும் பிரயோஜனம் இல்லை


இறுதியாக இந்த சங்கிகளை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து கோவிலுக்கும் ஜோதிகாவின் கருத்தை ஆதரிப்பவர்கள் மருத்துவ மனைகளுக்கும் பள்ளிகளுக்கும் உதவி செய்ய ஆரம்பியுங்கள்.. விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?



திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?Jyothika's speech



அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. மற்ற புகழ் பெற்ற பழனி,ஸ்ரீரங்கம்,மீனாட்சி கோவில்களைப் போல தஞ்சைப் பெரிய கோவிலில் கூட்டம் இருக்காது.அங்கு பராமரிப்பும் சரியில்லை என்றுதான்கேள்விப் பட்டிருக்கிறேன். அது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கோவில்கள் இப்படித்தான் இருக்கும். சமீபத்தில் கும்பாபிகேஷம் செய்ததால் அது கொஞ்சம் பளபளப்பாக இருக்கிறதே தவிர மற்றபடி வருமானம் மிக்க கோவில் அல்ல.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தொன்மை வாய்ந்தது தொல்லியல் துறை கட்டுப்பாடில் உள்ளது.ஆனால் பராமரிப்பு பூச்சியம். பாழடைந்தே கிடக்கும். அங்கு கூட்டமே அதிகம் இருக்காது.
    நீங்கள் சொல்வது போல் இதை பெரிது படுத்த வேண்டியதில்லை. ஆதரவுக் கூட்டம் ஒன்று எதிர்ப்புக் கூட்டம் ஒன்று பரபரப்புக்காக மோதிக் கொண்டிருக்கிறது. ஜோதிகா ஆதரவுக் கூட்டம் ஆஸ்பிட்டலுக்கு உதவப் போவதும் இல்லை. எதிர்ப்புக் கூட்டமும் கோவில் உண்டியலில் காசு போடாத கூட்டமாகத்தான் இருக்கும்/
    சந்திரமுகிக்கு வந்த சோதனை.

    ReplyDelete
    Replies
    1. ஆதரவு கூட்டம் எதிர்ப்பு கூட்டமும் பரபரப்பாக மோதிக் கொண்டாலும் எதிர்ப்பு கூட்டதினர் கிடைக்கும் விஷயங்களை எல்லாம் திரித்து கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை விதைக்கிறார்கள் விபரம் அறியாதவர் வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக மனதில் வளர விட்டுவிடுகிறார்கள் என்பதுதான் கவலை குறியதாக இருக்கிறது

      Delete
  2. அவர்களுக்கு வயித்தெரிச்சல் அகரம் மீது தான்... அதுவும் பலரையும் படிக்க வைப்பது முதன்மை எரிச்சல்...

    ReplyDelete
  3. இவர் சொன்னதை உங்கள் பதிவு மூலம் தான் அறிகிறேன். இது சர்ச்சைக்குரிய பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

    துளசிதரன்

    நீங்கள் சொல்லியிருப்பது போல் எத்தனையோ கோயில்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. அவற்றை மராமரிக்கலாம் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலையை மேம்படுத்தலாம். சர்ச்சைகள் செய்வதை விட அந்த நேரத்தில் பரமாரித்தல், மேம்படுத்தல் இவற்றைக் கவனிக்கலாம். கலெக்டர் மருத்துவமனையை இன்ஸ்பெக்ட் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் செய்தி வந்ததே.

    கீதா

    ReplyDelete
  4. ஜோதிகா சொன்னதில் தப்பு என்ன இருக்கிறது? கோவிலுக்கு கொடுப்பது போல் மருத்துவமனைக்கும், பள்ளிக்கும் கொடுங்கள் என்றார்.

    கல்விகண் கொடுப்பது புண்ணியம், இந்தக்காலகட்டத்தில் மருத்துவமனைக்கு உதவிகள் செய்வது மிகவும் புண்ணியம் மக்கள் சேவையே மகேசன் சேவை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.