Wednesday, April 22, 2020

இன்று ஒரு 'பயனுள்ள' தகவல் : ஒவ்வொரு
@avargal unmaigal
பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டியது( பெண்களுக்கான பதிவு )


மதுர எப்ப பார்த்தாலும் அரசியல் நையாண்டி பதிவா போடுறீங்க... நாங்களும் வந்து படித்துத் தொலைகிறோம் . ஆனால் எங்களால் கமெண்ட் பண்ண முடியவில்லை என்று சொல்லும் பெண்களுக்கான பதிவு ஹீஹீஹீ



@avargal unmaigal
உங்களுக்கான ப்ரா அளவை எவ்வாறு தீர்மானிப்பது?



பெண்களின் மார்பிற்குச் சரியாகப் பொருந்தும் ப்ராவைப் பெறுவதில் ப்ராவின் அளவை எவ்வாறு தீர்மானிப்பது என்பதுதான் மிக அடிப்படையான விஷயம் . சரியான ப்ரா அளவு அளவீட்டு பற்றிய இந்த பதிவு  ஒரு ப்ரா அணிந்திருப்பவர் அவர்களின் உடலுக்கான சரியான அளவு வரம்பைக் கண்டுபிடித்து, ஒரு ப்ரா சரியாகப் பொருந்துகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும்,

 இதன் மூலம்  ப்ராவுக்கு ஷாப்பிங் செய்யப் போகும் போது கடைகளில் அனுபவமற்ற வேலை செய்யும்  தொழிலாளியின் தரும் மோசமான  ஆலோசனையைத் தவிர்க்கலாம். . இந்த பதிவில் நாம் ப்ரா வாங்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை,எப்படி அளவிடுவது  மற்று தேர்ந்தெடுப்பது பற்றிப் பார்க்கலாம்


தேவையானவை
டேப்  measuring tape  ,
ஒரு சிறு துண்டு காகிதம்
எழுதுவதற்கு பென்சில் அல்லது பேனா?

என்னடா சமையல் குறிப்புக்கு சொல்லவதுவது மாதிரி தேவையான பொருட்கள் என்று தருகிறான் என்று நினைக்க வேண்டாம்... பெண்களுக்கு இப்படிச் சொன்னால்தான் மனதில் பதியும் ஹீஹீ
  


முதலில் மார்பு கச்சை அளவை ( band size)அளவிட :


  1.  உங்கள் ப்ரா உட்பட, இடுப்புக்கு மேல் உள்ள ஆடைகள் அனைத்தையும் அகற்றவும்.( அப்படி அகற்றுவதற்கு முன்னால் உங்கள் வீட்டு ஜன்னல்கள் அடைத்து இருக்கா கதவுகள் அடைத்து இருக்கா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் )

   2. உங்கள் மார்பின்  கீழ், உங்கள் உட்பகுதியைச்  சுற்றி நாடாவை மடக்குங்கள். உங்கள் மார்பக திசுக்கள் உடற்பகுதிக்கு எங்குச் சென்றாலும் , அது அதிகமாகத் தெரிந்தாலும், இந்த டேப்புக்கள் வருமாறு பார்த்துக் கொள்ளவும்
.
   3.  மூச்சை நன்றாக இழுத்து அதன்  பின் டேப்பை  டைட்டாக வைத்து அளக்கவும்

4.      அளந்த பின் அந்த எண்ணை  காகிதத்தில் குறித்துக் கொள்ளவும் .

அவசரப்பாதீர்கள் இத்தோட வேலை முடிந்தது என்று நினைக்காதீர்கள் இன்னும் நிறை இருக்கிறது

குறிப்பு

    உங்களிடம் 36 அங்குலங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகோல் இருந்தால், டேப்பை முடிந்தவரை இறுக்கமாக இழுத்து அதன் பின் அளவை குறித்துக் கொள்ளுங்கள்.

மார்பின்  சரியான cup size அளவை கண்டு பிடிக்க


    முன்னோக்கி  அதாவது தரையை நோக்கிச் சாய்ந்து கொள்ளுங்கள், , இதனால் ஈர்ப்பு விசையானது  உங்கள் மார்பக திசுக்களை முன்னோக்கி இழுக்கிறது, இதனால்   மார்பக திசுக்கள் கூட முன் நோக்கி வரும்.  அப்படி வரும் மார்பக திசுக்களை       மசாஜ் செய்து, டைட்டாக இருக்கும்படி  முன்னோக்கித் தள்ளுங்கள். அதன் பின்     உங்கள் மார்பளவு சுற்றி டேப் சுற்றி ,  டேப்பைமட்டும்  இறுக்கிக் கொள்ளுங்கள்,  அதன் பின் அளவின் நம்பரை காகிதத்தில் குறிக்கவும்


குறிப்பு

  மார்பகங்கள் மிகவும் சரிந்து இருக்குமானால் இருந்தால் , நீங்கள் சராசரியாக இரண்டு மார்பளவு அளவீடுகளை எடுக்க வேண்டும்  (ஒன்று தரையை நோக்கிச் சாய்ந்த நிலையிலும் மற்றொன்று நேராக நின்றும் எடுக்க வேண்டும்.



band size மார்பு கச்சை அளவைக் கணக்கிடுங்கள்
    உங்கள் கீழ் மார்பளவு அளவீட்டை (முதல் எண்) அருகிலுள்ள முழு எண்ணுக்கு வட்டமிடுங்கள்.
    இது ஒற்றைப்படை என்றால், 1 ஐச் சேர்க்கவும்.
    அந்த எண்தான் உங்கள் மார்பு கச்சை அளவு.

கப் அளவைக் கணக்கிடுங்கள்

    மார்பளவு அளவீட்டிலிருந்து (இரண்டாவது எண்) மார்பி கச்சைஅளவீட்டை (முதல் எண்) கழிக்கவும்.
    அடுத்த முழு எண்ணுக்கு வித்தியாசத்தை வட்டமிடுங்கள்.
    கீழே உள்ள விளக்கப்படத்தில் அந்த எண்ணைப் பாருங்கள்

    அந்த  எண்ணிற்ககேற்ற ஆங்கில லெட்டர்தான்  உங்கள் மார்பு அளவு.

ஒரு வேளை நான் தமிழில் சொல்லி இருக்கும் முறை உங்களுக்குத் தெளிவில்லாமல்  இருப்பதாக நினைத்தால் கீழே உள்ள இந்த காணொளி பாருங்கள்





கொசுறு :

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய Bra Hacks



-------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------

வல்லரசு அமெரிக்கா வீழ்ந்த கதை என்று எள்ளி நகையாடும் கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம்.


-----------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------

 அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :இது ஒரு பயனுள்ள தகவல்தானே? இது பிடிச்சு இருந்தால் யூடியூப் சேனல்காரங்க சொல்லுற மாதிரி லைக் பண்ணுங்க ஷேர்பண்ணுங்க.. பலோவராக அட் பண்ணிக்கிங்க...... பிடிக்கலைன்னா பூரிக்கட்டையை வாங்கி மட்டும் அனுப்பிடாதீங்க.. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் ஹீஹீ

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.