Tuesday, April 21, 2020

வல்லரசு 'அமெரிக்கா' வீழ்ந்த கதை என்று எள்ளி நகையாடும் கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம். Real american heroes..


போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்.

எல்லாப் புகழும் மகத்தான மனிதத்துக்கே.



வல்லரசு வீழ்ந்த கதை என்று

எள்ளி நகையாடும்

கள்ளச் சிரிப்பினர்க்கு அர்ப்பணம்.



புவி தனில் எங்கு இப்படி

புண்ணியரல்லா பொதுவர்க்கு மரியாதை?



முன்ணனி வரிசையில்

முகம் மறைத்து

தன் இன்னல் மறைத்து

தன்னலம் இல்லாத மானிடரை

தலையில் தூக்கி வைத்து ஆடும்

இந்நாட்டினை எண்ணி

நான் கொள்ளும் பெருமிதம்.





முதலில் உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது கனக்டிகட் மாகாணத்தில் தீ நுண்மிக்கு எதிராய் போராடிக் கொண்டு இருக்கும் மருத்துவர் உமா மதுசூதனா என்பவர்க்கு அவர் வசிக்கும் நகர மக்கள் வைத்த மரியாதை தெரிவிக்கும் அறிவிப்பு.

அதை அடுத்து அவர் வசிக்கும் வீதியில் உள்ளூர் மக்கள், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் மரியாதை செலுத்திக் கடக்கும் காட்சி.

https://youtu.be/rik2EAOqe6o




தயவு செய்து இந்திய எழுபது அடி கட் அவுட் இல்லை என கலங்க வேண்டாம். அடுத்து இந்த மருத்துவர் இந்தியாவில் எந்த மாநிலம், என்ன மொழி பேசுபவர், என்ன சாதி என தயவு செய்து தேடிக் கலங்கப்படுத்தி விடாதீர்கள்.



அடுத்து மருத்துவர் சவூட் அன்வர். இவர் செய்தது ஒரு நேரத்தில் ஒரு நோயாளிக்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என இருக்கும் வெண்டிலேட்டரை ஒரே நேரத்தில் ஏழு நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில் ஒரு துணைக் கருவி செய்து, அதை காப்புரிமை ஏதும் பெறாமல், சுய லாபம் இன்றி, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இலவசமாகத் தந்தவர் இவர். ஆனால் பாவம் இவருக்கும் கட் அவுட் இல்லை. மக்கள் செய்வதெல்லாம் அவர் வீட்டினைக் கடக்கும் போது மரியாதை நிமித்தம் வேகம் குறைத்து மெல்லத் தங்கள் கார்களின் ஹாரனை ஒலிக்க விட்டு கடப்பது.

https://youtu.be/nqzJvx_Lwn0




இருவர் மட்டுமே இங்கு முகம் காணத் தரப்பட்டாலும், எத்தனை எத்தனை மனிதர்கள், அத்தனையும் துறந்து சமூகத்துக்காய், மனிதத்துக்காய் போராடுகிறார்கள்.



இனம், மதம், மொழி, பால் என எதுவும் தடை இல்லை இங்கே. நீங்கள் அளிக்கும் சேவைக்கு எங்களால் இப்போது தர இயன்ற ஒரே காணிக்கை. இந்நாட்டினை நான் கொண்டாட இதுவும் ஒரு காரணம்.



கொடுத்த சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு என்ன மரியாதை என வாதம் செய்பவர்கள் தயவு செய்து தள்ளிப் போய் நின்று நிந்தியுங்கள். உங்கள் கல்லறைகளில் உங்கள் சாதியையோ, இல்லை மதத்தின் உட்பிரிவினையோ இன்றே பொறித்து வைத்து விட்டுப் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்.




இந்த பதிவை  நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுதித் தந்தவர் பிரபு சின்னதம்பி... IT துறையில் வேலை பார்க்கும் இவர்  தமிழை மிகவும் நேசிப்பவர், இங்குள்ள தமிழ்ப் பள்ளியில் தமிழை கற்றுக் கொடுப்பவராக மட்டுமல்ல சிறந்த பட்டி மன்ற பேச்சாளரும் கூட.  சில தினங்களுக்கு நீயூசெர்சி தமிழ் பேரவையில்  முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் நடந்த வாழ்க்கை என்பது இனிய பூந்தோட்டமா ? நெடிய போராட்டமா ?  என்ற பட்டிமன்றத்தில் இவர் கலந்து பேசி இருக்கிறார் அதற்கான லிங்க் இங்கே https://youtu.be/Ovh-4whxVXo   எல்லோருடனும் மிக நட்புடன் பழகக் கூடியவர். அதுமட்டுமல்ல பறை என்னும் இசையை கற்றுக் கொண்டு இங்குள்ள தமிழ்ச் சங்க விழாக்களில் வாசிக்கக் கூடியவர். தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் பேரவைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்


அன்புடன்
மதுரைத்தமிழன்

America is now witnessing a new class of heroes who are risking their own lives to save the lives of others, and we should find very visible and public ways of honoring those who are on the frontlines of a new and different kind of war for which America has little experience.

18 comments:

  1. மதுர - பிரபு..

    அட்டகாசம் போங்க. பார்க்கையிலே நெகிழ்ந்தேன்.. தாம் அறிந்தது போல் அடியனின் துணைவியாரும் இங்கே ஒரு மருத்துவமனையில் செவிலியராக பனி புரிகிறார்கள். ஒவ்வொரு நாள் பணி முடிந்து வருகையில் பூ - பழம் - உணவு - Gift Card - Thank you card மற்றும் புத்தம் புது துணி மணிகளோடு தான் வருவார்கள். அவர்கள் மேல் மற்றொரு அவ்வளவு அன்பு.

    இந்நாட்டை நான் நேசிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இது ஒரு கிறிஸ்துவ நாடாக பொதுவாக பார்க்கப்படினும் அனைத்து மதத்தினரையும் மதித்து வருகின்றது.

    நம்மில் பல விஷ கிருமிகள் இங்கே அமர்ந்து கொண்டு இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்துவர்களை இஸ்லாமியர்களையும் இழிவாக பேசி கொண்டு இருப்பதை பார்த்தால் மனது கனக்கிறது.

    அதுமட்டுமில்லாமல் . இங்கே வாழ்ந்து கொண்டு இந்நாட்டையே அவலப்படுத்தி கொண்டும் இருப்பது மிகவும் விசனமே.

    கேட்டால் என்னமோ தாம் தான் உலக மகா மேதை போல ஒரு பதில்.

    இந்த மாதிரி தான் பல மனநோயாளிகள் வளைகுடா பகுதியில் அமர்ந்து கொண்டு சென்ற வாரம் வரை சமூக வலைத்தளங்களில் மற்ற மதத்தினரை கொச்சை படுத்தி வந்தனர். இரண்டு நாட்களு முன்பு அங்கே அரசு ஒரு எச்சரிக்கை விட்டடவுடன் அவனவன் வேலை பளு காரணமாக முகநூலில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லிட்டு ஓடிவிட்டனர்,

    நெஞ்சு பொறுக்குதில்லை மதுர!

    நீ எழுது மதுர. விதைத்து கொண்டே இரு. வளர்ந்தால் மரம், இறந்தால் உரம் !
    பின் குறிப்பு :

    தம்பி பிரபு, அந்த தாடியை வழியுமாப்பா! இந்த படத்தில் உள்ளதை போல் முகத்தில் பால் வடியும் வடிவுக்கு வாருமப்பா!


    ReplyDelete
    Replies

    1. விசு உங்களது மனைவிக்கு எப்போதும் எங்களது ராயல் சல்யூட்

      Delete
  2. மதுர - பிரபு..

    அட்டகாசம் போங்க. பார்க்கையிலே நெகிழ்ந்தேன்.. தாம் அறிந்தது போல் அடியனின் துணைவியாரும் இங்கே ஒரு மருத்துவமனையில் செவிலியராக பனி புரிகிறார்கள். ஒவ்வொரு நாள் பணி முடிந்து வருகையில் பூ - பழம் - உணவு - Gift Card - Thank you card மற்றும் புத்தம் புது துணி மணிகளோடு தான் வருவார்கள். அவர்கள் மேல் மற்றொரு அவ்வளவு அன்பு.

    இந்நாட்டை நான் நேசிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இது ஒரு கிறிஸ்துவ நாடாக பொதுவாக பார்க்கப்படினும் அனைத்து மதத்தினரையும் மதித்து வருகின்றது.

    நம்மில் பல விஷ கிருமிகள் இங்கே அமர்ந்து கொண்டு இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்துவர்களை இஸ்லாமியர்களையும் இழிவாக பேசி கொண்டு இருப்பதை பார்த்தால் மனது கனக்கிறது.

    அதுமட்டுமில்லாமல் . இங்கே வாழ்ந்து கொண்டு இந்நாட்டையே அவலப்படுத்தி கொண்டும் இருப்பது மிகவும் விசனமே.

    கேட்டால் என்னமோ தாம் தான் உலக மகா மேதை போல ஒரு பதில்.

    இந்த மாதிரி தான் பல மனநோயாளிகள் வளைகுடா பகுதியில் அமர்ந்து கொண்டு சென்ற வாரம் வரை சமூக வலைத்தளங்களில் மற்ற மதத்தினரை கொச்சை படுத்தி வந்தனர். இரண்டு நாட்களு முன்பு அங்கே அரசு ஒரு எச்சரிக்கை விட்டடவுடன் அவனவன் வேலை பளு காரணமாக முகநூலில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லிட்டு ஓடிவிட்டனர்,

    நெஞ்சு பொறுக்குதில்லை மதுர!

    நீ எழுது மதுர. விதைத்து கொண்டே இரு. வளர்ந்தால் மரம், இறந்தால் உரம் !
    பின் குறிப்பு :

    தம்பி பிரபு, அந்த தாடியை வழியுமாப்பா! இந்த படத்தில் உள்ளதை போல் முகத்தில் பால் வடியும் வடிவுக்கு வாருமப்பா!


    ReplyDelete
    Replies
    1. தம்பி பிரபி நித்தியானந்தாவின் நாடான கைலாசத்திற்கு செல்ல இப்படி தாடி வைத்து பிரபனந்தாவாக மாறி இருக்கிறார் அவ்வளவுதான் அவருக்கு இடம் கிடைத்தால் என்னையும் அழைத்து போவதாக சொல்லி இருக்கிறார்... ஆனால் என்ன ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார் அப்படி போகும் போது தோழிகளையும் உடன் அழைத்து வர வேண்டுமாம்... இப்ப நான் தோழிக்கு எங்க போவேன்???

      Delete
  3. இதுவல்லவா அறம்! இதுவல்லவா நன்றி! பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது சகோ. மருத்துவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். இதையெல்லாம் நம்மூரில் புரிந்துகொண்டால் நல்லது.
    பகிர்விற்கு நன்றி சகோ. பதிவு எழுதிய பிரபு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies

    1. நம் ஊரில் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது புரியாதவர்கள் சில பேரினால்தான் பிரச்சனையே சகோ

      Delete
  4. உங்களின் கோபமும் ஆதங்கமும் புரிகிறது...

    பட்டிமன்ற காணொளி இணைப்பிற்கு செல்கிறேன்...

    முந்தைய பதிவில் ஒரு இணைப்பு கேட்டீர்கள்... அதில் ஒரு பகுதி :
    https://dindiguldhanabalan.blogspot.com/2020/04/FATE-Explanation-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கோபமோ ஆதங்கமோ இல்லை தனபாலன் அது போல அமெரிக்க கிரேட்டுன்னும் சொல்ல மாட்டேன் ஆனால் இது போல நடக்கும் சம்பவங்களினால் மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது மேலை நாட்டு பார்த்து கற்க கூடாததையெல்லாம் கற்றுக் கொள்ளும் மக்கள் இது போல உள்ளவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் அதை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் இதனால் நல்லது செய்யும் மக்களுக்கு ஒரு உற்சாகம் உண்டாகும் என்றுதான் இது போல நடக்கும் நிகழ்வுகளை இங்கே பதிவிடுகிறேன்

      கேட்தற்கு இணங்க லிங்க் இணைப்பை கொடுத்தற்கு நன்றி

      Delete
  5. நாங்கள் வளர வேண்டும். (ஆனால் வளர மாட்டோம் என்று தான் நினைக்கின்றேன்)

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ளவர்களை விட நீங்கள் நன்றாகவே வளர்ந்து இருக்கிறீர்கள் ஆனால் வளராத சில பேரால்தான் வளரமாட்டோம் என்று நினைக்க தோன்றுகிறது... ஆனால் வளர்ந்த நாம் அவர்களுக்கு முன்னுதாரனமாக இருந்து செய்து காண்பிக்க போது அவர்களும் அதை பார்த்து வளருவார்கள் என்பது நிச்சயம்

      Delete
  6. அருமையான பதிவு.
    இதை எழுதிய பிரபு சின்னதம்பி அவர்களுக்கு நன்றி.
    காணொளிகள் பார்த்தேன்.
    மக்கள் தங்கள் நன்றியை எவ்வளவு அன்பாய் தெரிவிக்கிறார்கள். மருத்துவர்களுக்கு இதைவிட பாராட்டு என்ன வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இங்கு பிடித்தது என்னவென்றால் நன்றியை அல்லது அவர்களுக்கான கெளரவத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்வதுதான் அதனால் அவர்களுக்கு இன்னும் உத்வேகம் அதிகரிக்கும் காலம் கடந்து செய்வது எல்லாம் வேஸ்ட்தான்

      Delete
  7. மதுரை சகோ அண்ட் பிரபு சின்னதம்பி அவர்களுக்கும், முதல் வீடியோ வாட்சப்பில் பார்த்து நெகிழ்ந்து கண்க்ளில் நீர். இங்கும் மீண்டும் பார்த்து சந்தோஷப்பட்டேன். என்ன ஒரு அன்புடன் கூடிய மரியாதை மக்களுக்கு எந்த நாடு என்ன சமூகம் என்று எதுவும் பாராது மருத்துவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமே வாவ்..

    இரண்டாவது காணொலி இப்பத்தான் பார்க்கிறேன். மருத்துவருக்குப்ப் பாராட்டுகள்! சல்யூட்டும் மருத்துவர்கள் அனைவருக்கும்.

    கூடவே விசுவின் மனைவி அவர்களுக்கும் பாராட்டுகள் ராயல் சல்யூட்!!

    கீதா

    ReplyDelete
    Replies

    1. நான் சின்ன தம்பி அவர்களின் பதிவில்தான் இந்த வீடியோவை பார்த்தேன் பார்க்கும் போதே கண்ணில் கண்ணிரோடு உடம்பும் புல்லரித்து போனது இதைவிட வாழ்வில் வேற என்ன வேண்டும் தலைவர்கள் தரும் அவார்ட்களை விட இதுதான் மிகப் பெரிய அவார்ட்

      Delete
    2. அதே மதுரை...இரண்டாவது காணொலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெட் படுத்திவிட்டது. இப்போது முழுவதும் பார்த்தேன். அவரைப் பற்றிய செய்தியும் வாசித்தேன் அசத்திவிட்டார் மனிதர். 7 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் வென்டிலெட்டர் வாவ்! அவர் கைஅசைத்து தன் நெஞ்சிலும் வைத்து ஏற்பதும், பாராட்டுபவர்களையும் பார்த்து அந்த தருணம் எப்படியான தருணமாக இருந்திருக்கும் உந்த உலகமே அதைப்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இருவரும் வேறுநாட்டைச் சேர்ந்தவர்கள்...மனம் நெகிழ்ந்து புல்லரித்து கண்ணில் நீர் இந்த வீடியோவையும் பார்த்து. இவர்கள் என்ன சமூகம் பார்த்தா சேவை செய்தார்கள்? மருத்துவ சேவைக்குக் கிடைத்த அருமையான அங்கீகாரம்.

      கீதா

      Delete
  8. பதிவு அருமை அதற்கு பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சின்னதம்பி இந்த பாராட்டுகள் எல்லாம் உங்களுக்கே உரித்தது... நன்றி தம்பி

      Delete
    2. ஆமாம் சின்னதம்பி அவர்களுக்குப் பாராட்டுகள். நாங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள உதவியதற்கும்.

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.