Sunday, April 5, 2020

அழகானசில வரிகள் அது உணர்த்தும் பல உண்மைகள்



சிலருக்கு பணம் சம்பாதிப்பதிப்பது என்பது மிக எளிது. ஆனால் நம்மை போல உள்வர்களுக்கு பணம் சம்பாதிப்பது என்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போலத்தான் ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!


ஒருவர் பிறரின் கஷ்டங்களைப் பார்த்த்து ஒன்றும் அவருக்கு பிச்சை போடுவதோ அல்லது உதவி செய்வதோ இல்லை. அவரவர் மத புனித நூல்களில் இப்படி தான தர்மம் செய்தால் புண்ணியங்கள் பெருகும் என்று சொல்லி இருப்பதால் மட்டுமே  தங்களுக்கு புண்ணியம் பெருகட்டும் என்ற சுயனலத்தால் அவர்கள் பிறருக்கு பிச்சை போடுவதோ உதவி செய்வதோ நடக்கிறது. அதுதான் உண்மை


உண்பது என்பது நம் பசியை ஆற்றவும் நம் உடலுக்கு வேண்டிய சக்தியை கொடுப்பதற்காகவும்தான் உண்கின்றோம். ஆனால் இன்றைய உலகில் பலர் நோய் வரும் வரை உண்கிறார்கள்  அந்த நோய் தீரவேண்டுமென்றால் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!



எவ்வலவோ பெரிய தத்துவ ஞானிகளாலும் பெரியவர்களாலும் நமக்கு உணர்த்த முடியாத ஒன்றை நாம் நமது சுய அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் நாம் எப்படி இருக்க வேண்டுமென்றால் ஒரு  குழந்தையை போல் இருக்க வேண்டும். அதற்கு அவமானம் தெரியாது அதனால் குழந்தை விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..விழுந்தது பற்றி அது மீண்டும் நினைவிற்குள் கொண்டு வந்து மீண்டும் அது வருந்துவதே இல்லை

இயற்கை நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது ஆனால் அதிகம் படித்த நம்மால் இயற்கை சொல்லுவதை புரிந்து கொள்வதில்லை. நாம் வெட்ட வேண்டியது குளங்களைத்தான் மரங்களை அல்ல ஆனால் நாம் செய்வது என்பது அதற்கு எதிர்மாறாகத்தான் இதைத்தான் இன்றைய படிப்பு சொல்லிக் கொடுகின்றதோ என்னவோ மரங்களை வெட்டாமலும் குளங்களை வெட்டியும் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன் நீர். அது புரியாமல் பாட்டில் வாட்டருக்கு அலைகிறோம் வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"


வாழ்க்கையில்  நம் முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள். ஆனால் பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.ஏனென்றால் அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு குறிப்பிட்ட சமுகத்தீன் மீது  கலங்கத்தை ஏற்படுத்த செய்தியை எப்படி போடனும் என்பதை இவங்களே முடிவு செய்றாங்க ? (This is what Govt and Media cultivating இப்படித்தான் இந்துத்துவா அரசும் மீடியாவும் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கின்றன

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! இது நிதர்சன உண்மை

ஒருவன் கோயில் உண்டியலில் போடும் பணத்தை வைத்தே அவன் சம்பாதித்த முறையை எளிதில் சொல்லிவிடலாம் எவன் ஒருவன் மிக சிறிய அளவில் கோயில் உண்டியலில் போடுகிறான் என்றால்  அவன் அந்த பணத்தை கடும் உழைப்பில் சம்பாத்தித்தாகவே இருக்கும் ஆனால் இதற்கு மாறாக கோவிலில் கணக்கில்லாமல் அள்ளி போடும் பணம் அது நேர்மையற்ற முறையில் சம்பாதித்தாகவே இருக்கும்.நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.


நாம் இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட பல சமயங்களில் வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..

பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம் அல்லது சோம்பேறித்தனம் என்று அர்த்தம்..ஆனால் துங்க வேண்டிய இரவு நேரத்தில் தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்..

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. அற்புதமான பதிவு நண்பரே ஸூப்பர்.

    ReplyDelete
  2. ஆஹா இது ட்றுத்தின் டயறியோ?:)).. அதுசரி சாப்பாட்டில் நீங்க எந்த ரகம் ட்றுத்?.. :)..

    கொரொனாக் காலத்தில், பகலில் தூங்கவில்லை எனில்தான் உடம்பில ஏதோ பிரச்சனை என்கின்றனர் ஹா ஹா ஹா:))

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டில் செளத் இண்டியன் உணவுகளை ரசித்து உண்ணும் ரகம்... அமெரிக்கா வந்த பிறகு அதாவது 23 வருடங்கள் கழித்து இப்போதுதான் முதன் முறையாக காய்ச்சல் வந்து இருக்கிறது...... முன்பு தினமும் 5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன் இப்பொது காய்ச்சல் வந்த பிறகு 20 மணி நேரம் தூங்குகிறேன் கடந்த சில நாட்களாக 10 மணி நேரம் தூங்குகிறேன்..


      எனது வெயிட் கடந்த 20 வருடங்களாக கூடவும் இல்லை குறையவும் இல்லை

      Delete
  3. தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தாலும் கூட சில பதிவுகள் மட்டுமே பதிலைப் பதியும்டி ....அதில் இதுவும் ஒன்று...காரணம்.கண்மூடித்தனமான ஆதரவை விரும்பாததைப் போலவே கண்மூடித்தனமான எதிர்ப்பும் எனக்கு ஒப்புவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மிக சரியாக சொல்லி இருக்கீங்க ரமணி சார்....ஆனால் ஒரு சிலரை நான் கண்மூடிக் கொண்டு தொடர்ந்து எதிர்ப்பேன் அதில் எனக்கு எந்தவித வருத்தமும் பயமும் இல்லை...காரணம் நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து வாழ்வதில்லை இறவனைத்தவிர

      Delete
  4. நல்லதொரு பதிவு மதுரைத் தமிழன். தேர்ந்தெடுத்து இங்கே தந்த வாசகங்கள் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பல செய்திகளை படிக்கும் போது மனதிற்கு பிடித்த வரிகளை சேமித்து வைத்து கொள்வேன் அப்படி சேமித்து வைத்ததை என் வழியில் இங்கே ஒரு பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்

      Delete
  5. அற்புதம்... தொகுப்பு பல பதிவுகளை எழுத வைக்கும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒரு சிரு துரும்பும் பல பதிவுகளை உங்களின் அட்டகாச பாணியில் வெளிக் கொணர்ந்துவிடுமே தனபாலன்

      Delete
  6. அருமை. அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சொக்கா மிகவும் நன்றி.. நலமா?

      Delete
  7. மிக அருமையான பதிவு.

    மீண்டும் முகம் பார்த்து பேச வேண்டி இருப்பதால் தான் . கோபங்களை வெளி காட்ட முடியவில்லை என்பது மிகவும் உண்மை.

    ReplyDelete
  8. அழகான வரிகள் அவை உணர்த்தும் உண்மைகள் அனைத்தும் உண்மை

    ReplyDelete
  9. பணம் சம்பாதிக்க...
    அருமையான கோட்பாடு (தத்துவம்)

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.