Monday, April 20, 2020


@avargal unmaigal
வரும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து ஒரு சிலரையாவது உயிர்ப் பலி கொடுக்க நேரிடும் அவலம் ஏற்படுமா? Will Indians have to sacrifice at least a few lives from their families over the next 5 years?

மத வெறுப்பு அதிகமாக இப்போது இந்தியாவில் விதைக்கப்படுகிறது.. அதனால் வருங்காலத்தில் இந்தியா சிரியா, பாகிஸ்தான் மற்றும் இது  போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கலவரங்கள் போல இந்தியாவிலும் ஆரம்பித்து அன்றாட சாரசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என் அஞ்சுகிறேன் இதைப் படிக்கும் இந்தியருக்கு நான் சொல்லப் போவது இதுதான் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பங்களில்  ஒரு சிலரையாவது வரும் நாட்களில் ஏற்படப் போகும் கலவரங்களில் பலியாகப் போகிறார்கள் இப்போது சிரித்து மகிழ்ந்து ட்வீட் போடும்  நீங்கள் அன்று அழுது புலம்பிக் கொண்டிருப்பீர்கள் என்பது நிச்சயம், இதை வேண்டுமானால் போட்டு எடுத்து ப்ரேம் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த 5லிருந்து  8 ஆண்டுகளுக்குள் இது நிச்சயம் நடக்கும்


 இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை இஸ்லாமிய அச்சுறுத்தல்தானே தவிரப் பயங்கரவாதம் அல்ல, மேலும் மக்கள்தொகை மாற்றம், வேலையின்மை  அரசியல் தலைவர்கள் ஆடும் விளையாட்டில் பலியாகப் போகிறவர்கள் எல்லா மதத்தையும் சார்ந்தவர்கள்தானே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் சார்ந்தவர்களாக இருக்கப் போவதில்லை.....கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் பட்டினி சாவுகள் அதிகரிக்கலாம் அப்படிப்பட்ட  ஒரு சூழ்னிலை வரும் போது மதவெறுப்புகளும்  கூட்டுச் சேரும் போது ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்வது நிச்சயம் நடக்கும் அப்படி நிகழும் போது உங்கள் குடும்பங்களிலும் பல உயிர்ப் பலிகள் கொடுப்பதிலிருந்து நீங்கள் தப்ப முடியாது

இந்த பலியில் நீங்கள் கொஞ்சும் குழந்தைகளை இழக்கலாம்.  குடும்பத்திற்காகச்  சம்பாதித்துக் கொட்டும் தந்தையை இழக்கலாம், குடும்பத்திறாக தியாகம் செய்யும் அம்மாவை இழக்கலாம். சகோதர சகோதரி தாத்தா பாட்டி  மற்றும் நண்பர்களை இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி இழக்க போகிறீர்களா அல்லது இணைந்து வாழப் போகிறீர்களா? யோசியுங்கள்


இந்தியாவில் ஒரு சில தலைவர்களின் மீதான வெறுப்பை அப்படியே  சற்று திரித்து மதத்தின் மீதான வெறுப்பாக மாற்றும் செயல்கள்   அதிகாரப் பசியுள்ள ஊடகவியலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்துவ வாதிகள் மற்றும்  கல்வியாளர்களின் ஒரு பகுதியினரின் உதவியும் நடை பெறுகின்றன  இதிலிருந்து இந்தியர்கள் தப்புவது அவ்வளவு எளிதல்ல என்பதாகவே என் மனதிற்குப் படுகிறது


இது நாள் வரை எந்தவொரு மனவிலக்கங்களும் இன்றி ஒன்றாகப் பழகிக்கொண்டிருந்த சமூகங்களுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டு  இருக்கிறது ஆங்காங்கே சிறு சிறு முனு முனுப்பாக கேட்க ஆரம்பித்திருக்கும் இந்த சத்தம் கூடிய சீக்கிரம் பெரும் குரலாக வளர அதிகநாட்கள் ஆகாது,அப்படி ஆகும் போது சமுகத்தில் ஏற்படும் விபரீதங்களைக் கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன் .அதன் பின் புரியும் என்ன மாதிரியான விபரீதங்கள் ஏற்படப் போகின்றன என்று... இந்த விபரீதத்தால் உங்கள் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்றாவது உங்களுக்குப் புரிகிறதா? ஒரு நாள் அடி வாங்கினால் அடி வாங்கியவன் சும்மா போய்விடுவான் ஆனால் தொடர்ந்து அடி வாங்கும் போது ஒரு நாள் அவனும் சீறீ பதிலளிக்கத் தொடங்கும் போதுதான் விபரீதத்தின் சீறீய தன்மை நமக்குப் புரியத் தொடங்கும்... அப்போது அதனைத் தடுத்த நிறுத்த நினைத்தால் அவ்வளவு எளிதில் நிறுத்த முடியாது என்பதை உலக வராலாற்றை பார்த்து நாம் கற்றுக் கொள்ளலாம்

அனைத்து மதத்தினருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்காக அறுவடைச் செய்வீர்கள். அது நிச்சயம் அதனால் அன்பை விதையுங்கள் அன்பாக வாழுங்கள்....

----------------------------------------------------------------------------------------------------------------
யோசித்துப் பார்க்கையில் ...... என் மனதில் தோன்றிய  எண்ணங்கள் 

--------------------------------------------------------------------------------------------------------------------
 அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. முடிவில் சொன்னது மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கில்லர்ஜி அதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் புரிந்து கொள்வதற்கு பலரால் முடியாமல் போய்விடுவதுதான் இங்கே பிரச்சனையே

      Delete
  2. வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்தா தப்பில்ல. கூடவே எந்த பாவமும் அறியாத ஆட்களும் பாதிக்கப்படுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் என்னுள் மிகப் பெரிய பயத்தை ஏற்படுத்தியதன் விளைவுதான் இந்த பதிவே.. உங்களுக்கு புரிந்த் அளவிற்கு மற்றவர்களுக்கு புரியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது

      Delete
  3. பதிவில் நன்றாக சொன்னீர்கள். அன்பை விதைப்போம், அன்பை அறுவடை செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நம் குடும்பத்தில் உள்ளவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல மற்ற குடும்பதினரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து நாம் அன்பை விதைப்போம்

      Delete
  4. இப்போது இருக்கும் நிலையில் கொரொனாவால் பிரளயம்மாதிரி இவ்வுலகே அழியலாம்கடவுள் அவதாரம் எத்டு உலகை காப்பாற்றுவார் என்று நம்பலாம் நம்பிக்கைதானே வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. இப்போது நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கிறது சார்

      Delete
  5. இதைப்பற்றி ஒரு ஆய்வுப் பதிவில் சொல்கிறேன்... அதை தான் எழுதிக் கொண்டும் உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக எழுதுங்கள் இங்கே எனக்கும் தகவல் கொடுங்கள். இந்தியாவில் இருந்து வரும் செய்திகளை பார்க்கும் போது எனக்கென்னவோ இந்தியாவின் நிலமை மோசமாக போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது ஆனால் நீங்கள் அங்கு வசிப்பதால் கள நிலவரம் நன் கு தெரியும் என்பதால் உங்களுடைய பதிவை எதிர்பார்க்கிறேன்

      Delete
  6. உண்மைதான் .அன்புதான் பிரதானம் .அதை மட்டும் விதைப்போம் நல்லவற்றை மட்டும் ஏற்போம் .ஒன்றுமட்டும் புரிகிறது இப்போதிருக்கும் இந்தியா 90களில் நான் வாழ்ந்த  இந்தியா  இல்லை :(

    ReplyDelete
    Replies

    1. இப்போதிருக்கும் இந்தியா 90 களில் நான் வாழ்ந்த இந்தியவாக இல்லை என்பது இந்தியாவில் இருந்து வெளி வந்த ஆட்களுக்கு தெரிகிறது ஆனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அந்த மாற்றம் தெரிவதில்லை என்பது தான் கசுக்கும் உண்மை

      Delete
  7. இந்த பதிவு தெரியாத மக்களுக்கும்
    மதவாதத்தை தூண்டும் விதமாக உள்ளது
    ஆனால்
    அதற்கு முன்பாக
    அன்பும்
    சகோதரத்துவமும் விதைக்கப்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மதவாதம் கூடாது அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதாக பதிவு எழுதினால் அதை படித்துவிட்டு இது மதவாதத்தை தூண்டும் பதிவாக இருக்கிறது என்ற சொல்லும் உங்களின் புரிதல் எனக்கு வியப்பளிக்கிறது

      நான் எழுதுவதற்கு மற்றும் சொல்வதற்கு வேண்டுமானால் நான் பொறுப்பு ஏற்க முடியும் ஆனால் நீங்கள் அதை எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பதற்கு எல்லாம் நான் பொறுப்பு ஏற்க முடியாது. டாட்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.