கொரோனா நேர கிறுக்கல்கள்
மோடியுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய தங்கச்சி மாப்பிள்ளையோட முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய முப்பாட்டனுடைய அக்கா புருசனுடைய தம்பி மனைவியின் சகோதரனின் மனைவி ஒரு இஸ்லாமியரை கல்யாணாம் பண்ணிடுச்சாம் அதை இப்போதுதான் இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து மோடியிடம் சொன்னதால்தான் மோடி இப்படி ஒரு வாழ்த்தை டிவிட்டரில் சொல்லி இருக்கிறாராம்
கொரோனோ போரின் போது அந்தப்புரத்திலிருந்த ரஜினிகாந்த் அவர்கள் இன்று துணிந்து கேட்டை திறந்து இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கிவிட்டு மீண்டும் அந்தப்புரத்தில் பதுங்கி இருக்கிறார். அவர் அந்த புரத்தில் பதுங்கி இருப்பது புலி போல சமயம் வரப் பாயத்தானே தவிரப் பயத்தால் அல்ல
காசு செலவழிக்காமல் கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு ரஜினிகாந்த்தின் பாணியைக் கடைப்பிடிக்கிறது... என்ன புரியலையா? அதுதாங்கக் கேட்டை திறக்காமல் அந்தப்புறத்தின் உள்ளே இருந்து ரஜினிகாந்த் போரிடும் முறைதானுங்க
கடந்த ஒரு வேதகாலமாகப் பேருந்து மற்றும் ரயில்களில் வரும் "இடிமன்னர்களிடமிருந்து" பெண்களைக் காப்பாற்றி வருவது மட்டும்தான் இந்த கொரோனாவால் கிடைத்த நன்மை
கொரோனா காலத்தில்தான் மனைவி கூட சந்தோசமாக இருக்க நேரம் கிடைக்கிறது ஆனால் அதற்கு முன்னால் வேலை வேலை என்று பிஸியாகவே இருந்துச்சு என்று ஒரு பேஸ்புக் நண்பர் என்னிடம் சொல்ல, நான் உடனே கொரோனாக்கு முன்னால் நீங்க மனைவிகூட கூட சந்தோசமா இல்லையென்றால் எப்படி உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்துச்சுன்னுதான் கேட்டேன் அவ்வள்வுதாங்க பதிலே பேசாமல் என்னை ப்ளாக் பண்ணிட்டு போய்விட்டார்? அப்படி நான் என்ன தப்ப கேட்டுட்டேன்

உலகத்தில் எல்லா நாடுகளும் ரேபிட் கிட்டை வைத்து மக்களைச் சோதனை செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் , இந்திய அரசு மட்டும் இன்னும் வாங்கிய ரேபிட் கிட்டை சோதனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்..... ரொம்ப ஸ்பீடாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இதனால்தான் என்னவோ கடவுளே இரக்கப்பட்டு இந்திய மக்களை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
தயாநிதி மக்களைப் பிச்சைக்காரர்கள் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் மோடி எல்லோரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்
பிரியா என்பவர் இப்படிப் பதிவு இட்டார்
சில கணவன்மார்கள் சண்டைபோட்டால் மனைவி அருகில் அமர்ந்து முதலில் கையை தொடுவார்கள்.உடனே மனைவி கோபம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கையை எடுத்துவிடுவார்கள்.பிறகு அவர்கள் தோளில் கையை போட்டு அணைத்து மன்னித்துக் கொள் என்று மன்னிப்புக் கேட்பார்கள். அப்பத் தான் சில பெண்களுக்கு உச்சி குளிரும்:
ஆமாம் ஆமாம் பெண்களுக்கு உச்சி குளிரும் போது ஆண்களுக்கு உடம்பு சூடேறும் என்று அவங்களுக்கு பதில் சொல்லிவிட்டு ஒடி வந்துகொண்டேன் ஹீஹி
தமிழ்நாட்டில் நன்றாகப் பால் கொடுத்த மாடு பயனற்று போனால் அந்த மாட்டைக் கேரளாவிற்கு அடிமாடாக விற்றுவிடுவார்கள் அது போல இந்தியாவில் மூளை மழுங்கி நாட்டுக்குப் பயனற்ற மக்களை பாஜகவில் உறுப்பினர்களாகச் சேர்த்து விடுவார்கள்
மோடி ஒரு வழியா ரமலானுக்கு வாழ்த்து சொல்லிவிட்டார்... இனிமே ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவாரா மாட்டாரா? பொருத்து இருந்து பார்ப்போம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது, பல நிலைகளில்.
ReplyDelete(எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)
சிரிப்பதா...? அழுவதா...? தெரியவில்லை...
ReplyDeleteகொரோனா இப்படியும் கூட தாக்குமா!!
ReplyDeleteதுளசிதரன்