Sunday, April 19, 2020

யோசித்துப் பார்க்கையில் ...... என் மனதில் தோன்றிய  எண்ணங்கள்


பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களை நீக்கிய சமுகம் அந்த சாதியை தம் மனதில் விதையாக விதைத்ததால் இன்று சாதி வெறி கொண்டு அலைகிறார்கள்


சாதியைப் புதைக்க வேண்டிய நம் தலைவர்கள் அதை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்... தலைவர்கள் விதைத்துச் சென்றதை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்

மனித ரத்தத்தில் சாதி இல்லை ஆனால் மனிதன் மனதில்தான் சாதி உள்ளது

சமுக இணைய தளங்கள் ஒரு பெரும் சாக்கடை ஆனால் அதை நாம் கடல் என்று நினைத்து முத்து எடுக்க விரும்புகிறோம். தவறான இடத்தில் தேடுவதே இன்றைய சமுகத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது


ஒரு காலத்தில் பெண்கள் அருமையான பில்டர் காபி போடுவார்கள் ஆனால் இன்றைய பெண்களோ தங்கள் படங்களை அழகாக பில்டர் செய்து போடுகிறார்கள்...


இன்றைய சமூகத்தினர் உலகை பேஸ்புக்கின் மூலமாகவும் சமுக இணையதளங்களின் மூலமாகவும் பார்ப்பதால்தான் உலகம் மோசமாகத் தெரிகிறது.. ஆனால் இதைவிட்டுவிட்டு நம் அருகில் வசிப்பவர்களை, நம்முடன் பணி புரிகிறவர்களை, நமக்காக உழைப்பவர்களை வாழ்பவர்களை நம் இதயம் மூலம் பார்த்தால் உலகம் இனிமையாக இருக்கும்


 ஒருவன் எல்லா துறைகளிலும் மிகத் திறமையானவராக இருந்தாலும் உள்ளம் சுத்தமாக இல்லை என்றால் அந்த திறமையால் யாருக்கும் எந்த வித பலனும் கிடைக்காது

கின்னஸ் புக்கில் பல சாதனையாளர்கள் பெயரைப் போடுகிறார்கள் ஆனால் ஒரு வேளை உணவு இல்லாமல் பசித்திருக்கும் ஒரு எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு வேளை உணவைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சாதனைதான் ஆனால் அது கின்ன்ஸ் புக்கில் வரவே வாரது

மூளையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துபவர் யார் என்று பார்த்தால் அவர்கள் கேடியாகத்தான் இருப்பார் அய்யா நான் சொன்னது கே
டி நீங்கள் மோடி என்று நினைத்தாலும் அதில் தப்பே இல்லை காரணம் என்னைப்  பொறுத்தவரையில் அவரும் மிக மிகச் சிறப்பாகத்தான் பயன் படுத்துகிறார் ஆனால் என்ன கேடியும் சரி மோடியும் சரி அதைத் தவறான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. தீவிரவாத இயக்கங்கள் அப்படித்தான்...

    ReplyDelete
  2. தங்களது எண்ணங்களை ரசித்தேன் தமிழரே...

    ReplyDelete
  3. எண்ணங்கள் நல்லா இருக்கு மதுரை. நல்ல கருத்துகள்.

    ஃபில்டர் காபி! கர்ர்ர்ர்ர்ர்ர் நான் நல்லா போடுவேனாக்கும்...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.