செய்தி: மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள்.. இவர்கள் கடமையைச் செய்யும் போது தாக்குதல் நடத்தினால், சிறைத் தண்டனை, தரும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் !!
மருத்துவர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடும் சுகாதார பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் நின்று தைரியமாகப் போராடும், ஒவ்வொரு சுகாதார பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டைத் தொற்றுநோய்கள் திருத்த அவசரச் சட்டம் வெளிப்படுத்துகிறது. இந்த சட்டம், நமது நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
The Epidemic Diseases (Amendment) Ordinance, 2020 manifests our commitment to protect each and every healthcare worker who is bravely battling COVID-19 on the frontline.
It will ensure safety of our professionals. There can be no compromise on their safety!
— Narendra Modi (@narendramodi) April 22, 2020
இந்த சட்டம் தொடர்பாக அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: மருத்துவர்களைத் தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தினால், குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சுகாதார பணியாளர்கள், கொரோனா தொற்றில் இருந்து நாட்டை காக்கப் போராடுகின்றனர். எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த உடன் அமல்படுத்தப்படும். இதற்காக 1897 ம் ஆண்டு தொற்று நோய் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பிணையில் வெளிவர முடியாத குற்றம். விசாரணை 30 நாட்களில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
இந்த செய்தி மோடி அவர்களைத் திட்டிக் கொண்டும் நையாண்டி செய்து கொண்டிருக்கும் என்னையும் பாராட்டிப் பதிவிட வைக்கச் செய்து இருக்கிறார் மோடி அவர்கள்.... இதற்காக அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சபாஷ் மோடி குட் ஜாப்... கீப் இட் அப்
மோடி செய்யும் நல்லவற்றைப் பாராட்டவே மாட்டீர்களா என்று இது வரை கேள்வி கேட்டவர்களுக்கு இப்போதுதான் அவர் செய்த நல்ல செய்கை என் கண்ணில் பட்டது அதனால் பாராட்டி விட்டேன். இதற்கு முன்பு காஷ்மீருக்குக் கொடுத்த சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய போதும் பாராட்டி இருக்கிறேன்..( ஆனால் அதற்குப் பின் நடக்கும் தொடர் ஊரங்குகிற்கு என் ஆதரவு இல்லை )
இதோடு மேலும் சில நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன் சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளால் மோடியின் மீது எனக்குப் பச்சாதாபத்தை ஏற்படுத்தியது.
முதல் நிகழ்வு.. மோடி அமெரிக்கா வந்து டெக்ஸாஸ் மாநிலத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டி அதில் ட்ரெம்பை கௌரவித்தார்... அதே மாதிரி இந்தியாவிற்கு வரவழைத்து அதைவிட மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி மீண்டும் ட்ரெம்பை கௌரவித்தார்.... ஆனால் பதிலுக்கு ட்ரம்ப் என்ன செய்தார்.... தன் நாட்டுக்குத் தேவையான மருந்துக்காகத் தேவையில்லாத வார்த்தையை வாரி இறைத்து இருக்கிறார். அமெரிக்காவின் இன்றைய பிரச்சனைக்கு உங்கள் உதவி தேவை என்று கேட்டு இருந்தால் மோடியே உடனடியாக செய்து கொடுத்திருப்பார் ஆனால் ட்ரம்ப் தன்னை கௌரவித்த மோடிக்கு மறைமுக எச்சரிக்கை விடுவித்தது சரி இல்லை.. தன்னை கௌரவித்த மோடிக்காவது பக்குவமாகப் பேசி இருக்க வேண்டும்
இரண்டாவது மோடி பல அரபு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மன்னர்களுடன் நல்ல நட்பு உறவை ஏற்படுத்தியதுமட்டுமல்ல ஏதோ ஒரு அரபு நாட்டில் கோவில் கட்ட அனுமதி பெற்று அதைச் சாதித்தும் காட்டி இருக்கிறார் இப்படி அவர் செய்ய ஆனால் அவரின் கட்சிக்காரர்களோ அந்த அரபு நாட்டில் சம்பாதித்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் போது தேவையில்லாமல் இஸ்லாம் மதம் மீது வெறுப்பை அள்ளி தெளித்து நல்ல உறவை நாசப்படுத்தி இருக்கிறார்கள் மத வெறுப்பை அவர்கள் அள்ளி தெரிப்பதற்கு பதிலாக இஸ்லாம் மதத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டி பதிவிட்டு இருந்தால் பிரச்சனைகளே வந்து இருக்காது.... ஆனால் பிழைக்கப் போன இடத்தில் வெறுப்பை விதைத்தது மட்டுமல்லாமல் மோடி அவர்களையும் மறைமுகமாக மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள்.. இப்படிச் செய்தது யார் என்று பார்த்தால் மோடியின் ஆட்கள்தான்
இப்படி மோடியின் ஆட்களும் ,மோடி நண்பராக நினைத்து கௌரவப்படுத்திய ட்ரெம்பும் மோடியைத் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள்
படிக்க மிஸ் பண்ணியவர்களுக்காக எனது முந்தைய
பதிவுகள்
|
மதுரைத்தமிழன்
இதுலாம் மனப்பூர்வமாய் தானாய் சிந்தித்து சொன்னதில்லை. அரசின் அலட்சியத்தால் அத்தியாவசிய பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்களை என பல தரப்பினரும் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் வேறு வழியின்றி அறிவித்த அறிவிப்பு இது.
ReplyDeleteஆன்டி இந்தியனே.. கிறிஸ்துவ மெஷினரி கைக்கூலியே ! :)
Deleteநீங்கள் சொல்வது சரிதான் ராஜி ஆனால் இந்த சட்டத்தால் சில மருத்துவ துறையை சார்ந்தவர்கள் சிறிதாவது பனல் அடைந்தால் அது நமக்கு சந்தோஷமே
Deleteஉங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteஆனால்...
நடக்கப்போகும் விபரீதம் வேறு...
நீங்கள் சொல்வது சரிதான் நண்பர்கள் சிலர் எப்ப பார்த்தாலும் மோடியை குறையே சொல்லுகின்றீர்கள் அவர் செய்த நல்லது இருந்தால் அதையும் பாராட்டுங்களேன் என்று சொன்ன போது இந்த் சட்டம் நல்ல சட்டம் என்பதால் பாராட்டிவிட்டேன் அவ்வளவுதான் தனபாலன்
Deleteஆனால் அவர் மீது ஆரம்பத்திலிருந்து சிறிதும் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கிறேன்
மதுர..
ReplyDeleteமோடி அவர்கள் ரயில் நிலையத்தில் டீ விற்று கொண்டு இருக்கும் நாட்களிலே சவூதி அரேபியாவை தவிர மற்ற அரபு நாடுகளில் கிறிஸ்துவ மற்றும் இந்து கோயில்கள் இருக்கின்றன.
மோடி தான் கோவில் கட்டி கொடுத்தாரு குளம் வெட்டி கொடுத்தாரு என்பதெல்லாம் கட்டு கதை தான்!
ஓ அப்படியா? நேக்கு அந்த விஷ்யம் சரியாக தெரியவில்லை போல
Delete