Monday, April 20, 2020

@avargal unmaigal
மோடி அல்ல மோடியின் ஆதரவாளர்கள் இந்தியாவை எங்கே இழுத்து செல்லுகிறார்கள்?

கொரோனாவிற்கு முன் மோடி உலகின் பல நாடுகளுக்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்து நாடுகளுக்கிடையே உறவை மேம்படுத்தி அதன் மூலம் நிதி மற்றும் பல விதமான உதவிகளைப் பெற்று நாட்டின் வளர்ச்சிக்குச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்று அவர் மீது பலர் நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது எல்லாம் தலைகீழாகச் சென்று கொண்டிருக்கிறது..

மோடியின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கையில்( இது மோடி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பார்வை என்னுடைய பார்வையில் அல்ல) கொரோனா வருகைக்குப் பின் எல்லாம் தலைகீழாகிக் கொண்டிருக்கிறது நாடே ஊரடங்கு நிலையில் இருப்பதால் பொருளாதாரம் சரிவை நோக்கி ஓடுகிறது இது இங்கு மட்டுமல்ல உலக நாடுகளின் கதையும் இதுதான்.


ஆனால் கொரோனாவால் பல நாடுகள் பாதிக்கப்படும் நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டம் நம் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறது ஆனால் அதௌ தெரியாமல் நாம் இருந்து கொண்டிருக்கிறோமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது..

ஆம் கொரோனா பிரச்சனைகளால் உலகில் உள்ள பல நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அதன் பார்வை இந்தியா போன்ற நாடுகளின் மீது விழுகிறது.... ஆனால் நாம் இதைப் பயன்படுத்தி அந்த நிறுவனங்களை நம் நாட்டில் வர ஏற்பாடு செய்து அதன்மூலம் பாதிப்படைந்த பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்..


ஆனால் இப்போதைய நிலைமையை உற்றுப் பார்க்கும் போது நிலமை மோசமாகிப் போய்க் கொண்டு இருக்கிறது... இதற்கு மோடி காரணம் அல்ல அவரின் ஆதரவாளர்களே காரணம் என்று சொல்லலாம்...


இவரின் ஆதரவாளர்கள்  செய்யும் முட்டாள்தனங்களால் மோடியின் தலைமைக்கு அவப்பெயர் மட்டுமல்ல இந்தியாவிற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும்..


இந்தியாவில் பிழைக்க வழியில்லாமல் சரியான வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் இப்போது அரபு நாடுகளில் வேலை பார்த்து பணத்தை ஈட்டிக்கொண்டிருக்கும்  மோடியின் ஆதரவாளர்களான இந்துத்துவா வாதிகள் பிழைக்கப் போன இடத்தில் மத துவேஷ கருத்துகளைச் சமுக இணைய தளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்...இதைக் கண்டித்து அரபு நாடுகளில் உள்ள அரச குடும்பத்தினர் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதோடு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.. இதனால் அரபு நாடுகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு நிலை மோசமடையாலாம். இதனால் பாதிக்கப்படுவது அரபுநாடுகள் அல்ல இந்தியாதான்.
ஒவ்வொரு ஆண்டும், 55 பில்லியனுக்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மாற்றப்படுகின்றன, மேலும் அனைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தும் ஆண்டுக்கு 120 பில்லியினுக்கும் அதிகமானவை மாற்றப்படுகின்றன. இந்த நாடுகளில் இந்தியர்கள் (பெரும்பாலும் இந்துக்கள்) நன்றாக நடத்தப்படுகிறார்கள்.பதிலுக்கு, இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? என்றும் கேள்விகள் எழுப்புகின்றனர்...

சரி ஒரு பேச்சுக்கு நாம் அரபுநாடுகளின் உதவிகள் தேவையில்லை என்று எளிதில் சொல்லிவிட முடியுமா என்ன?

ஒரு வேளை அரபு நாடுகளுடனா  உறவுகள் பாதிக்கப்படும்  நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் நாம் நாட்டிற்கு வர யோசிப்பார்கள் அல்லவா? மதப் பிரச்சனைகள் உருவாகும் நாட்டில் யார் வந்து முதலீடு பண்ணுவார்கள் சற்று யோசித்துப் பாருங்கள்

இனியும் மோடி கண்ணை மூடிக் கொண்டு பேசிக் கொண்டிருக்காமல் தமது ஆதரவாளர்களால் நாட்டிற்கு மட்டுமல்ல தனக்கும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணி உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்

இதுவரை மோடிக்கு எதிரான கருத்துகளை எழுதிக் கொண்டிருந்த நான் இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மோடி நினைத்தால் இந்தியாவை மாற்ற இயலும் என்று நினைத்து அவருக்குக் கோரிக்கை வைக்கிறேன் இந்தியாவில் வாழும் மற்ற மதத்தினருக்காக அல்ல பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தினரின் நல்வாழ்விற்காக மோடி நடவடிக்கைகள் எடுப்பாரா அல்லது இந்து மதத்தினருக்கும் மதத்திற்காகவும் நான் உயிர் மூச்சு உள்ளவரைப் பாடுபடுவேன் என்று சொல்லி அவர்களை பாடாகப் படுத்துவாரா? எனற கேள்விக் குறியோடு இந்த பதிவை முடிக்கிறேன்..

சிந்திப்பவர் சிந்தியுங்கள் மற்றவர்கள் வழக்கமான பதிவுகளைச் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்வுறுங்கள் . டாட்


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படிக்க சிந்திக்க வேண்டிய சில பதிவுகள்

 வரும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து ஒரு சிலரையாவது உயிர்ப் பலி கொடுக்க நேரிடும் அவலம் ஏற்படுமா?
Will Indians have to sacrifice at least a few lives from their families over the next 5 years?

யோசித்துப் பார்க்கையில் ...... என் மனதில் தோன்றிய  எண்ணங்கள்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. மதம் என்று நினைப்பை அகற்றி, மனிதம் ஒன்றே சிறந்தது என்று நினைத்தால் தான்... ஆனால், ம்ஹீம்...

    உங்களின் நற்சிந்தனைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மதத்தின் நினைப்பை அகற்ற வேண்டியதில்லை காரணம் எந்த மதத்திலும் தவறாக ஏதும் போதிக்கப்படவில்லை. ஆனால் மனிதர்கள் மதம் சொல்வது படி செயலாற்றாமல் தன் அழுக்கடைந்த மனம் சொல்லுவதை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. அதுதான் பிரச்சனையே தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் அறியாமல் செயல்படுகிறார்கள் அதனை அவர்களை மன்னித்தருளும் என்றுதான் பைபிளில் சொல்லி இருக்கிறது இப்படி எல்லா மதங்களிலும் மனித நேயத்தை பற்றிதான் சொல்லி இருக்கிறது...

      ஆனால் என்ன செய்ய தனபாலன் மக்கள் இன்னும் தெளிவடையாமல் மந்தைகளாகவே இருக்கிறார்கள்

      Delete
    2. மதுர .. என்ன சொல்ற மதுர ! மன்னிப்பை பத்தி பைபிளில் சொல்லி இருக்கா. போன வாரம் கூட ஒரு அறிவு ஜீவி.. நான் மன்னிப்பு கேக்குறேன்.. ஏன்னா நான் ஒரு ஹிந்துன்னு பெருமையா மன்னிப்பு கேட்டாய்ங்களே!

      Delete
  2. மதுர..

    இந்த மோதி ஆதரவாளர்களின் கண்மூடித்தனம் மோதியின் வெற்றியே! இதை தான் அவர் எதிர் பார்த்தார். வெற்றியும் பெற்றார்.

    காங்கிரஸின் ஊழல் மற்றும் குஜராத் மாடலின் பொய்யான பிரச்சாரம்... அதை இரண்டும் தாண்டி.. ஹிந்துத்துவா... கோயில் கட்டுகிறோம் என்ற கோஷம், பாமர மக்களை கவர்ந்தது.

    இன்றைய நாட்களில் தொலைக்காட்சியில் வரும் சோ கால்ட் வலது சாரி பொருளாதார நிபுணர்களின் பேச்சை கவனியுங்கள். சொல்வதும் அனைத்தும் பொய் என்று தெரிந்து கொண்டே முகத்தை இருக்கு வைத்து கொண்டு பொய்க்கு மேல் பொய் !

    கொரோனா வருவதற்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் அகல பாதாளத்தை நோக்கி போய் கொண்டு இருந்தது. இப்போது கொரோனா. மூன்று மாதம் கழித்து நடுத்தர மற்றும் வறுமை கோட்டின் கீழே இருக்கும் இந்தியர்களை நினைத்தாலே நடுங்குகின்றது.

    இதில் இன்னொரு வருத்தம் என்னவென்றால்..

    டெல்லியில் இருந்து குடும்பத்தாரோடு கால்நடையாக பல நூறு கிலோமீட்டர் சென்ற மக்களை சற்று கவனித்து கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் வரும் போது.. அயோத்தியாவில் கோவில் தயார் என்று மோடி அறிவிக்க இவர்களும் பாரத் மாதாக்கி ஜே என்று ஆர்ப்பரித்து அவரை கொண்டாடுவார்கள்.

    A nation deserves its Leader மதுர..

    ReplyDelete
    Replies
    1. மோதியின் பேச்சில் மயங்கினார்கள் ஆனால் அப்படி மயங்கியவர்கள் இன்னும் அதே போதையில் இருந்து தெளியாமல் குடிகாரர்கள் போல உளறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் விசு

      நம்மால் முடிந்தது நல்ல விதைகளை விதைப்பதுதான்

      Delete

    2. நாம் பிறந்து வளர்ந்த மண் அது நாசமாகி போவதை பார்த்து பேசாமல் இருப்பது நல்லது இல்லை அதனால் நாம் பேசுவோம் நம் ஆதங்கததை பதிவு செய்வோம் நம் இந்தியா வல்லரசு ஆக வேண்டாம் நல்லராசாக நம்மால் முடிந்ததை எடுத்து சொல்வோம்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒரு சிறிய நகரில் ஒரு ஒரு சாக்கடை இருந்தது. அந்த சாக்கடையில் அருகில் இருந்த "சாய் வாலா" கடை நடத்தி வந்தார். அண்ட் நபரின் அறிவை பாருங்கள்.

    அந்த நபர், ஒரு சிரிய பாத்திரத்தை அந்த சாக்கடையில் மேல் கவிழ்த்து போட்டு அதில் ஒரு டுயூப் சொருகி அதில் வந்த கேஸ்ஸை பற்றவைத்து அதில் "சாய்" போட்டு அதை மற்றவர்களுக்கு பராமரித்து விற்பனை செய்தார்.

    மதுர, உங்கப்பாரானை இது நமது பிரதமர் அவர் வாயாலே ஒரு சர்வதேச Bio Fuel " கூட்டத்தில் உளறியது. இதை சொல்லுகையிலேயே அவர் முகத்தில் இவ்வளவு பெரிய பொய் மொட்டையை அவிழ்த்து விடுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி எதுவுமே இல்லை. அருமையான புன்முறுவல் தான். சரி அதை விடுங்க.

    சாக்கடையில் காஸ் இருக்கும் அதை பற்ற வைக்க முடியும் என்று ஒரு மனிதன் நினைத்தால் அம்மனிதனின் IQ எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும்.

    அப்புறம் அதே உரையில் ஒரு நாள் நான் அலுவலக விஷயமாக பயணித்து கொண்டு இருந்தேன். அப்போது வழியில் பசுவின் சாணியில் இருந்த காஸை லாரி டுயுபில் ஒருவர் எடுத்து கொண்டு சென்றார் என்று செல்லுகையில் .. அடேங்கப்பா.. புல்லரித்தே விட்டது.

    ஆனால் , அந்த மீட்டிங்கில் பிரதமர் இந்த கட்டு கதையை சொல்லி முடித்ததும். அங்கே இருந்தா பக்தால்களின் கைத்தட்டல் மற்றும் ஆரவாரத்தை பார்க்க வேண்டும். என்னத்த சொல்வேன்.

    என்னாது.. இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாரா? வாய்ப்பே இல்லையா ? ஒரு வேலை பண்ணுங்க. யு டுயூப் போய் "Even a chaiwala's jugaad can trigger innovation " ன்னு தேடி பாருங்க. சிரிப்பதா அழுவுறதான்னு இருக்கும்.

    Again, A Nation deserves its Leader! Period!

    ReplyDelete
  5. //அரபு நாடுகளில் இந்தியர்கள் (பெரும்பாலும் இந்துக்கள்) நன்றாக நடத்தப்படுகிறார்கள்.பதிலுக்கு, இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் ? என்றும் கேள்விகள் எழுப்புகின்றனர்//

    உங்கள் சிந்தனைக்கு ஒரு சல்யூட் தமிழரே மிகச்சரியான பார்வை.

    ReplyDelete
  6. சமீப காலமாக இந்த பக்தர்கள் பேசக்கூடாததையெல்லாம் பேசி, வலைத்தளத்தில் எழுதி வெறுப்புணர்வை தூண்டிக்கொண்டேயிருக்கும் போக்கு அதிகரித்திருக்கின்றது. பல சாதாரண மனிதர்களிடமும் இந்த வெறுப்புணர்வு மெல்ல வளர்வதை காண முடிகின்றது. இது மிகவும் அபாயகரமான போக்கு ஆகும். தலைவர்கள் இதை மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும், ஆனால் நடப்பதில்லை.
    இப்போதைய தேவை பொருளாதார முன்னேற்றமும், மக்களின் நல்வாழ்வுமே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.