Sunday, April 26, 2020


இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லைonly natural save India and there are no leaders
இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லை


இந்தியாவில் கோவிட் -19  கொரோனா வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்  27,000 அருகில், இறப்பு எண்ணிக்கையோ 826 ஆக உள்ளது.

 உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது,  இன்னும் பார்க்கப்  போனால் இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கையை அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பாதிக்கும் மிகக் குறைவாகவே இருக்கிறது...


சொல்லப் போனால் இந்திய மக்கள் தொகை மற்றும் மக்கள் மிக நெருக்கமாக வாழ்வதால் பாதிப்பு மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.. ஆனால் கடவுளின் அருளோ அல்லது இயற்கை நமக்குக் கொடுத்த வரமோ பாதிப்பு அதிகம் இல்லை என்பதை அறியும் போது மிகச் சந்தோஷமாகவே இருக்கிறது

அதுமட்டுமல்ல இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு அவர்களின் நிலமை அதிக மோசமாக இல்லை சொல்லப்போனால் வெண்டிலேட்டர்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாமலே குணப்படுத்தபட்டு வீட்டிற்கு நலமுடன் செல்வதாகவே செய்திகள் கூறுகின்றன..அமெரிக்க போன்ற நாடுகளைப் பொருத்தவரை இந்த கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் நிலைமை மிகவும் சீரியஸாகி வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறையால் பலரையும் கைவிடும் நிலமை ஏற்பட்டு இருக்கிறது அதுபோன்ற நிலமை இன்னும் இந்தியாவில் ஏற்படவில்லை என்பதும் சந்தோஷமான செய்திதான்

மற்றவர்கள் எப்படியோ ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் அரசு தேவையான அளவு சோதனை செய்யவில்லை அவர்கள் தகவலை மூடி மறைக்கிறார்கள் என்று குறை  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்


அவர்கள் தகவலை மூடி மறைக்கலாம் என்றாலும் சமீபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கைகளை மயானங்களுக்கு வரும் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது வழக்கமான சாவுகளை விட மிகவும் குறைவாகவே வருகின்றது என்ற தகவல்கள் தான் வந்து கொண்டு இருக்கிறது  இந்த குறைவுக்குக் காரணம் தற்கொலை குறைந்து இருக்கிறது சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது கொரோனாவிற்கு முன்பு பேஸ்புக்கிற்கு வரும் போது என் நண்பர் இறந்துவிட்டார் அம்மா அப்பா தாத்தா கெளரவக் கொலைகள் பாலியில் கொலைகள் கள்ளக் காதல் கொளைகள் என்று தினசரி யாரவது தகவலைப் பதிந்து கொண்டே இருப்பார்கள் ஆனால்  கடந்து ஒரு 3  வாரங்களுக்கும் மேலாக அப்படிப்பட்ட ஒரு செய்தி கூட என் கண்ணில்படவே இல்லை  எது எப்படியோ இயற்கை நமக்கு வரத்தைக் கொடுத்து  இந்திய மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது இதுவரை...


இயற்கையின் அருளால் இந்திய மக்கள் கொரோனா சாவிலிருந்து தப்பினாலும் நம் தலைவர்களிடம் சரியான திட்டங்கள் இல்லை என்பதால்  இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு பட்டினி சாவுகள் அடி தடி கொலைகளினால்  ஏற்படும் சாவுகள் கொரோனா சாவுகளை விட மிக அதிகருக்கும் என்றே தெரிகிறது அப்படி எல்லாம் நடக்காது என்று  வொர்க் ஃ பரம் ஹோம் செய்து கொண்டு சம்பளம் வாங்குபவர்கள் சமுக வலைத்தளங்களில் எழுதலாம் ஆனால் அப்படிச் செய்து கொண்டிருப்பவர்களின் வேலைகளுக்கோ உத்தரவாதம் இல்லை என்பதுதான் உண்மை



உலகப் பொருளாதாரமே அடிக் கொண்டிருக்கும் போது இந்தியப் பொருளாதாரம் மட்டும் எம்மாத்திரம்.....

இந்தியாவில் oreign முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் மட்டும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் சுமார் ரூ 6861 கோடியை   எடுத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றனர் என்ற தகவல் இன்று வெளி வந்திருக்கிறது..


ஆனால்  அதே சமயத்தில் சீனாவிலிருந்து வெளியேறும் பெரும் நிறுவனங்களின் பார்வை இந்தியாவின் மீது திரும்பலாம் ஆனால் இந்த சமயத்தில் மதவாதம் பேசிக் கொண்டு இருந்தால்  இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யாமல் வேறு நாடுகளின் பக்கம் பார்வைகளைத் திருப்பலாம்.
இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது இயற்கைதானே தவிரத் தலைவர்கள் இல்லைonly natural save India and there are no leaders

இதைச் சற்று உணர்ந்திருப்பதாலோ என்னவோ அரபு நாடுகளுடன் பகைத்துக் கொள்ளாமல் செயல்பட வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்

எது எப்படியோ பட்டினி சாவுகள் விழுவதைத் தடுக்க முடியாது ஆனால் அதைக் குறைக்க முயற்சிக்கலாம் அதற்கு மனசாடிபடி இந்தியத் தலைவர்கள் முயல்வார்களா என்பதுதான் இப்போது  கேள்விக்குறி


----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------

 

திருமதி.ஜோதிகா பேசி விஷயம் ரொம்ப சிம்பிள் இதுக்கு போய் அலட்டிக்கலாமா?


----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
 அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. பட்டினிச்சாவுகள் நிச்சயமாக நிறைய உண்டாகும் வாய்ப்பு இந்தியாவில் உண்டு நண்பரே

    ReplyDelete
    Replies

    1. சாதாரண நாட்களிலே விவசாயிகள் தற்கொலைகள் செய்து கொண்டனர் இப்ப விவசாயிகள் மட்டுமல்ல ஏழைகளும் வட்டிக்கு வாங்கி சிறு தொழில்கள் நடத்துபவர்களும் அந்த வரிசையில் வந்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது

      Delete
  2. நல்ல அலசல்...

    மாத சம்பளம் வாங்கு கிறவர்கள் எப்படியும் சமாளிக்கலாம்...ஆனால் தினம் சம்பாதிக்கும் மக்கள் நிலை...மிக கடினம்

    ReplyDelete
    Replies
    1. அரசாங்க சம்பளம் வாங்குபவர்கள் தவிர்த்து மற்ற தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மத்திய வர்க்க குடும்பங்ககளில் இருந்து ஏழைகள் வரை கடுமையாக பாதிக்க கூடிய காலம் இது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  3. தீநுண்மி தனது அடுத்த அத்தியாயம் தொடங்கயுள்ள நிலையில், பசிப்பிணி போக்குவதே முதல் செயலாக இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஏழைகளின் பசிப் பிணி போக்க...என் சிறு வயது சமயத்தில் வறட்சி ஏற்பட்ட பொழுது அங்காங்கே கஞ்சி தொட்டி திறந்து வைத்த மாதிரி ஏழைக்கென்றே இலவச உணவு வழங்க அம்மா உணவங்கள் மேலும் பல திறக்க வேண்டும் இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் திறக்கப்பட வேண்டும்

      Delete
  4. வேலையில்லா சூழ்நிலை நிறைய உருவாகி உள்ளது. அடுத்து படித்து முடித்து வருபவர்களுக்கு வேலையில்லை,
    பட்டினிச்சாவுகளை போக்க திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

    அன்றாட கூலி தொழில் செய்பவர்கள் பாடு கஷ்டம் . பேப்பர் மற்றும் குப்பைகளை பொறுக்கி விற்பவர்கள், அம்மி, ஆட்டுகல் கொத்துபவர்கள், கூடை, முறம் பின்னி விற்பவர்கள், கத்தி தீட்டி தருபவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால்தான் சாப்பாடு அவர்களை வெளியே போகக்கூடாது என்றால் அவர்கள் நிலை?

    ReplyDelete
    Replies

    1. ஏழைகளின் பசிப் பிணி போக்க அரசு உடனடியாக போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்

      Delete
  5. தனியார் வேலைகள் பலருக்கும் வேலை இழப்பு நிகழ்ந்துள்ளது. எல்லா நாடுகளிலுமே. அது போல பலருக்கும் சம்பளம் கட் செய்கிறார்கள். பல ஐடி கம்பெனிகள் வேலைகளைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. ப்ரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்கள் சாதாரண மக்களில் இருந்து தினக்கூலி வேலை செய்பவர்கள் வரை கண்டிப்பாக பாதிக்க்படுவார்கள். அரசு கண்டிப்பாக வழி வகுக்க வேண்டும்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.