Tuesday, May 5, 2020

நல்ல மனிதர் நல்ல விஷயம்...

நல்ல மனிதர் நல்ல விஷயம்... Thulasidharan Thillaiakathu



நாம் கேள்விப்படும் பல விஷயங்களை  நாம் ஷேர் செய்கிறோம் அதனால் பலருக்கு என்ன பயன் என்று கூட நாம் சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் அப்படி நாம் கேள்விப்படும் விஷயங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது நாம் பாராட்டிச் சென்றுவிடுகிறோம் ஆனால் அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யத் தவறிவிடுகிறோம். ஒருத்தர் நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் நாம் அந்த நல்ல செயலை நாலு பேர் அறிய எடுத்துச் சொல்லும் போது  அதை பார்க்கிறவர்கள் ஒரு சிலராது அது போல நாமும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் அல்லவா?

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.


 உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

அதனால் எனக்குத் தெரிந்து நல்லது செய்த சக வலைத்தள பதிவர், ஆசிரியர், குறும்பட இயக்குநர்  இணைய முலம் கிடைத்த  ஒரு நல்ல சகோதரர் உயர்திரு. துளசிதரன் அவர்கள் கொரோனா காலத்தில் செய்த நல்ல செயல் ஒன்றை இங்கே பதிகிறேன். இது அவரின் பேஸ்புக் தளத்தில் வந்த தகவல்



Thulasidharan Thillaiakathu


AUTHORIZATION

FROM
Thulasidharan V
THILLAIAKATHU
Karunechi, Edakkara (P.O)
Malappuram (Dt) 679331
PPO :- xxxxxxxx PTSB A/c No xxxxxxxxxx
Code :- Edakkara, xxxxx

To
The Sub Treasury Officer,
Sub Treasury,
Edakkara,
Malappuram (Dt).

Sir,
I, Thulasidharan Thillaiakathu, Edakkara, Malappuram Dt, (PPO :- xxxxxx PTSB A/c No xxxxxxxx) do, hereby authorize the Subtreasury officer, Edakkara, Malappuram Dt, to deduct a sum of rupees 25032 (Twenty five thousand and thirty two rupees only) in twelve equal instalments of two thousand and eighty six rupees only (2086 – 2086x12= 25032) w.e.f May (from May 2020 to April 2021) from my pension towards the contribution for the Chief Minister’s Disaster Relief Fund, Kearala, Thiruvananthapuram.

Place: Edakkara
Date: 30-04-2020
Yours faithfully,
(Thulasidharan)

இதை வெளியிடுவதைத் தவிர வேறு வழி இல்லை. உதவி என்பது ஒருபோதும் விளம்பரப்படுத்தக் கூடாதுதான். எனக்குத் தெரியும். வலதுகரம் செய்யும் உதவி இடதுகரத்திற்குக் கூடத் தெரியாமல் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு நாம் செய்யும் உதவிகள் ரகசியமாகத்தான் வைக்கப்பட வேண்டும். அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், தற்போதைய சந்தர்ப்பச் சூழல்கள் என்னை இதைச் செய்தே தீர வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்குக் கொண்டுவந்துவிட்டது. எனவே இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

கேரள அரசு மாதத்தில் ஆறு நாள் ஊதியங்களாக ஐந்து மாதங்களில் அரசு ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை, பொருளாதார நிலை சீராகும் போது திருப்பித் தரும் தீர்மானத்துடன் பிடிக்க ஓர் உத்தரவு பிறப்பித்தது. எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு ஆசிரிய சங்கத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் அதை எதிர்த்து அந்த உத்தரவை தீக்கிரையாக்கி அதை வாட்சப்பில் பகிர்ந்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி அந்த உத்தரவுக்கு ஸ்டேயும் வாங்கிவிட்டார்கள். (கடந்த தினங்களில் அரசு அதை ஒரு ஆர்டினன்ஸ் ஆக்கி ஊதியம் பிடிப்பதை உறுதிப்படுத்திவிட்டது) இச்செயல் மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களுக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு ஒரு இழிவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தவிர்க்க முடியாத பயணத்தின் போது எனக்கு கோவிட்19 வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழைக் கையில் பிடிப்பது போல் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும், குறிப்பாக, ஆசிரியர்கள் மக்களால், மக்களுக்காக, மக்கள் மத்தியில் வாழும் நாங்கள் இது போன்ற பொருளாதார நெருக்கடி நிலையில் எங்களால் இயன்றவரை அரசுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் இருக்கிறார்கள். எனவே இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

பொதுநல சேவைகர்களாகிய அரசு ஊழியர்கள் உண்மையிலேயே மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேன்மைக்காக சாதி, மத, இன, மொழி, நிற மற்றும் அரசியல் வேற்றுமை பாரமல் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். அப்படிப்பட்டப் பொதுநலம் பேணும் அரசு ஊழியர்களுக்கு அரசியல் அணியும் ஆடையாக இருக்கலாமே தவிர உடலின் பாகமான தோலாகிவிடக் கூடாது. இல்லையேல் அவர்கள் அரசு ஊழியர்களாகத் தகுதியற்றவர்களாகி விடுவார்கள். இது போன்ற இக்கட்டான ஒரு சூழலில் மக்களுக்கு உதவ அரசு உதவி கோரும் போது, அதற்கான ஆணை பிறப்பிக்கும் போது அதைத் தீக்கிரையாக்குவதற்குப் பதிலாக அதற்குத் தடையாய் நிற்கும் அவர்கள் அணிந்திருக்கும் அரசியல் ஆடையைத்தான் தீக்கிரையாக்க வேண்டும். அதுதான் அரசு ஊழியர்களுக்கு அழகு. எனவே இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

சுகாதாரம், மருத்துவம், காவல், நிதி மற்றும் உள்ளூர் அமைப்புத் துறை, தன்னார்வ அமைப்புகள் ஏன் தனிப்பட்ட நபர்கள் கூட (கொல்லத்தில் ஒரு தாய் தன் இரண்டு ஆடுகளை விற்று அரசுக்கு வழங்கியிருக்கிறார். கோழிக்கோட்டில் ஒரு சியாஸ், வெயிலில் போக்குவரத்தைக் கண்காணிக்கும் காவல்துறையினருக்கு கடந்த ஒரு மாதகாலமாகத் தேநீரும், ஸ்னாக்சும் வழங்கிக் கொண்டிருக்கிறார்) வியத்தகு சேவைகளைச் செய்யும் போது, மாணவர்களுக்கு முன்மாதிரியாக, குருவாக, வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர்கள் ஒருபோதும் தரம் தாழ்ந்திடக் கூடாது. சேவைகளில் முந்த வேண்டும். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இங்கு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. ஒருமனதாக இந்த கோவிட்19 வைரஸைக்கு எதிரே போராடி வெற்றி கொண்டு நம் பொன்னான நாட்களை மீட்டெடுப்போம். மனமிருந்தால் நம் வெற்றிக்கான வழி பிறக்கும்.




அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி. திரு துளசிதரன் அவர்களை வாழ்த்தி உற்சாக மூட்டுவோம்


25 comments:

  1. திரு துளசிதரன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல..

      Delete
  2. அருமை , அருமை !

    நண்பர் துளசிதரனை அறிந்தது பாக்கியம் தான் மதுர! அவரின் இந்த செயல் மிகவும் பா ராட்டுக்குரியது।

    ReplyDelete
    Replies
    1. விசு உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல..

      Delete
  3. ஒருவர் செய்யும் நற்செயல்கள் இப்படி பகிரப்படும்போது நிச்சயம் அதனால் நிறைய பாசிட்டிவிட்டி பரவும் .துளசி அண்ணா முன்மாதிரியான ஒரு நல்லாசிரியர் .வாழ்க நல்மனது .
    பகிர்ந்ததற்கு நன்றி ட்ரூத் .

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல..

      Delete
  4. திரு துளசிதரன் அவர்களது செயல் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும்.

    வாழ்க அவர்தம் தொண்டுள்ளம்.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல..

      Delete
  5. நல்ல முன்மாதிரி நன்செயல். வாழ்க வளமுடன் திரு துளசிதரன் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ் உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  6. நல்லதொரு விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் துளசிதரன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  7. துளசி அண்ணாவிற்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. பிரியசகி உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  8. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை...

    அவரோட நட்பு வட்டத்தில் இருப்பதற்கு பெருமைப்படுறேன்..
    வாழ்த்துகள் துளசி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ராஜி உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  9. நல்லதொரு விசயம்...பகிர்ந்து பாராட்டியதும்...

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார் உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  10. ஒருவர் நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து.........என்று நினைப்பார்கள் இல்லையா? //

    ஆம். இந்த இக்கட்டான நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த, செய்யும், செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலும் கோவிட் 19 வைரஸை அழிக்கும் மருந்தே. நன்றி.

    நன்றி இதற்கு மட்டுமல்ல.

    இருந்தமிழனே தமிழனால் இருந்தேன்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

    எனும் நிலையை எனக்கு அருளியதற்கு. வார்த்தைகளால் நன்றி சொல்லி முடிக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் தமிழ்குடிக்கு நன்மை பயக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டத்தான் முடியும். கருத்துப் பகிர்ந்த, நினைவு கூர்ந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து இன்று போல என்றும் வாழ பிரார்த்திக்கின்றேன்

      Delete
  11. சகோ துளசிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. கோமதிம்மா உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  12. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி உங்களின் வருகைக்கும் மற்றும் துளசிதரன் சாரை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

      Delete
  13. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.