Friday, May 15, 2020



பேஸ்புக்கிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில அனுபவ  வாழ்க்கை பாடங்கள்


பேஸ்புக் என்பது புகைப்படங்களைப் பதிவேற்றுவது, ஸ்டேடஸ் போடுவது மற்றும் மக்களைப் பின்தொடர்வது மட்டுமல்ல. இது தரக்கூடிய  இன்னும் நிறைய உள்ளது. நீண்ட காலமாக தொடர்பிழந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைவதற்கு இது நமக்கு உதவுவது மட்டுமல்லாமல், சீரான வாழ்க்கையை வாழ வாழ்க்கை நெளிவு சுழிவைகளயும் கற்றுக்கொடுக்கிறது


எப்படி என்று யோசிக்கிறீர்களா? பேஸ்புக் நமக்குக் கற்பிக்கும் அனைத்து வாழ்க்கைப் பாடங்களையும் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்,


1.  இங்கு நீங்கள்  பார்ப்பது  படிப்பது கேட்பது  சிலவற்றைத் தவிர அனைத்தும்  எப்போதும் உண்மையானது அல்ல


நீங்கள் பார்க்க விரும்பும் விதத்தில் மட்டுமே மக்கள் தங்களை உங்களுக்கு  முன்னால் காண்பிப்பார்கள்


   

2. யாருடைய ஸ்டேட்ஸ் பற்றியும் கருத்து தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, ஆனால் ஒன்றை  மறந்துவிடவேண்டாம், இது உங்கள் எண்ணம் என்னவென்பதை  மக்கள்  அனைவருக்கும்  வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்து விடும்

                                  


அதாவது உங்கள் ஒவ்வொரு அசைவையும் மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.


3. வாழ்க்கையில்  அன்லைக் பட்டன் இல்லதது போல்தான் , ஃபேஸ்புக்கிலும் இல்லை
 
                                   

சில நேரங்களில் நீங்கள்  என்ன ஃபீல் பண்ணுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பினாலும், உங்களால்  முடியாது. அதுதான் வாழ்க்கையின்
அசிங்கமான உண்மை.


4. மக்கள் தங்கள் வாழ்க்கையின் பாசிட்டிவான பக்கத்தை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள், எனவே அவர்களின் கதையின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள்  அவர்கள் இப்படித்தான் என்று  தீர்மானிக்கக்கூடாது

                                      

பரிதாபப்படுவதை யாரும் விரும்புவதில்லை. மேலும், மக்கள் பெரும்பாலும் ஊரில் உள்ளவர்கள் அனைவர்களாலும் பேசப்பட வேண்டிய  பேச்சாகவும் மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படவும் விரும்புகிறார்கள். இது எல்லாவற்றையும் நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.



5. நீங்கள் கூறும் எந்த கருத்திற்கும்  ஆதரவு  மற்றும் எதிர்ப்பு   பதில் கருத்து  வரும்

                         

அதற்கு நீங்கள்   தயாராக இருக்க வேண்டும். நல்லவற்றுடன் கெட்டதும்  வருகிறது.




6, . நீங்கள்  ஒருவருடன் ப்ரேக் அப் பண்ணிய  பிறகு அந்த நபரை நீங்கள் முழுமையாக இழக்க வேண்டாம். அவர்கள் உங்களது மெமரியில் ரிசண்ட் சர்ச் ஹிஸ்டரியில்  தேடியவைகள் போலத் தங்கி இருக்கட்டும்

                     

அவர்களின் தொடர்பையும் அவர்களைப்   பின்தொடர்வதற்கான வழிகள்மட்டுதான்  மாறிவிட்டன.. ஆனால் அது இன்னும் அனைவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.


7. சில  விஷயங்களை பெர்சனலாகவும் மற்றும் பொதுவில் வைத்திருக்க நீங்கள் நாம் விரும்பலாம். வெளி உலகத்தால் நீங்கள்   கவலைப்படாமல் இருக்க சில விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்

                  

நீங்கள்  எந்த அளவிற்கு பொது இடத்தில் நட்பைப் பெறுகிறோமோ அந்த அளவிற்கு  உங்களைப் பற்றிய அதிகமான கருத்துக்களைக் கூறுவார்கள் . உங்கள்  வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிலும் அனைவரையும் ஒரு பகுதியாக நீங்கள்  அனுமதிக்க முடியாது.



8. உங்கள் வாழ்க்கையில் எந்த விதமான ஏற்ற தாழ்வுகள் வருகிறது என்பது அவர்களுக்கு  முக்கியமல்ல,  இது ஒரு ஷோ அது  தொடர்கிறது. மக்கள் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் தங்கள் கருத்துக்களை மீண்டும் மீண்டும் வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்
              


முடிவில் ஏது எப்படியோ   நல்லதோ கெட்டதோ வாழ்க்கை அது பாட்டுக்கு முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்



9. மற்றவர்களின்  தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் குழப்பத்தை உண்டாக்க  முடியாது,  அப்படி நீங்கள்   செய்தால்  ப்ளாக்  செய்யப்படுவீர்கள்

                      

நீங்கள்  கோடுகளைப் போட்டுக் கொள்வது  வேண்டியது அவசியம், நீங்கள்  எவ்வளவு அடுத்தவர்களின் பெர்சனல் விஷயங்களில் தலையிட  முடியும் என்பதை  நீங்கள்  அறிந்து கொள்ள வேண்டும்.



10.  உங்களுக்கு  வயதாகும்போது, ​​உங்களிடம் எஞ்சியிருப்பது புகைப்படங்களும் நல்ல நினைவுகளும் மட்டுமே

                 

இப்போது நீங்கள்  வெளியிடும் நூற்றுக்கணக்கான  புகைப்படங்களைப் பார்த்து மக்கள்  உங்களை  ஜட்ஜ் பண்ணி கருத்துகள் கூறக்கூடும் ஆனால் உங்களுக்கு வயதாகும்போது இந்த புகைப்படங்கள் உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் என்பது உறுதி.


 
11. உலகம் மிகப்  பெரியது,  நீங்கள்   மனதை திறந்து வைத்திருந்தால் நீங்கள்   தினமும் நிறையச் சுவாரஸ்யமான நபர்களைச் சந்திக்கலாம்

             

சுவாரஸ்யமான குழுக்கள், சமூகங்கள் மற்றும் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் உலகத்தைப் பற்றி உங்களிடம் உள்ள அனைத்து ஒரே மாதிரியான  எண்ணங்களை உடைப்பார்கள்.



12. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் சரியான பக்கத்தில் இருக்க வேண்டும்

        

வாய்ப்புகள் இரண்டு முறை தட்டுவதில்லை, ஆனால் சில நேரங்களில் ஒரே பக்கத்தில் இரண்டு முறை தடுமாறும். எனவே கண்களைத் திறந்து வைத்திருங்கள்.



நீங்கள் விஷயங்களை எவ்வாறு   பார்க்கிறீர்கள் உணர்கிறீர்கள் என்பது பற்றியது. அடுத்த முறை உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் பேஸ்புக்கைக் குறைவாகப் பயன்படுத்தும்படி சொல்லும்போது, ​​அது உங்களுக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை எவ்வாறு கற்பிக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆங்கில தளத்தில் படித்
தை  என் பாணியில் தமிழில் தந்து இருக்கிறேன்

13 comments:

  1. எவ்வளவு அருமையாக பல உண்மைகளை சொல்லி விட்டீர்கள்...

    அதில் 11-வது மிகவும் கவர்ந்தது...

    ReplyDelete
    Replies
    1. இங்கே பதிந்தது எல்லாம் என் கருத்துக்கள் அல்ல யாரோ எழுதிய கருத்துக்கள் அந்த கருத்துக்கள் எனக்கு பிடித்ததால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்

      எனக்கு அதிகம் பிடித்தது 11 தான்

      Delete
  2. மிகவும் அருமையாக கூறியிருக்கிறீங்க. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே பதிந்தது எல்லாம் என் கருத்துக்கள் அல்ல யாரோ எழுதிய கருத்துக்கள் அந்த கருத்துக்கள் எனக்கு பிடித்ததால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்

      Delete
  3. மிக சரியாக சொன்னீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. இங்கே பதிந்தது எல்லாம் என் கருத்துக்கள் அல்ல யாரோ எழுதிய கருத்துக்கள் அந்த கருத்துக்கள் எனக்கு பிடித்ததால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்

      Delete
  4. 10, 11 , பிடித்து இருக்கிறது.

    ReplyDelete
  5. சிறப்பான தொகுப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. நான் தான் அங்கே இல்லையே :)  ரீசண்டாதான் ஓடிப்போய் மொத்தமா டிலீட் செஞ்சுட்டு வந்தேன் :)ஆனாலும் பகிர்வு அருமை .யப்பா நிறைய கத்துக்கிட்டேன் நிறைய பார்த்தாச்சு மோஸ்ட்லீ முகமூடி போட்ட முகங்கள் ,Narcissistic குணங்கள் chauvinismfeminism fake betrayal இன்னும் நிறைய சொல்லிட்டேபோலாம் .நான் ஒரு innocent-bystander என் வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டிக்கறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மூடிவிட்டு வந்ததில் எனக்கு உடன்பாடுகிடையாது அதன் மூலமே பலரின் உண்மையான முகங்கள் தெரியும் அப்படி தெரிந்த பின் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது எளிது... ஆனால் இப்ப அந்த முகங்களின் சுயம் தெரியாமல் பலரிடம் நீங்கள் பழகி கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் என் எண்ணம்

      Delete
  7. பகிர்வை கண்டு கொண்டோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.