சாருவின் கேள்விகளுக்கு ரஜினியின் சூடான பதில்கள்
துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார். எப்படி? பார்வையாளர்களில் ஒருவராக. ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி? அது பற்றியே என்னுடைய கேள்விகள்.
அட மாங்கா இது கூட உனக்கு புரியலையா? துக்ளக் கூட்டத்தில் பேசினால் அரசியலைத்தான் பேச வேண்டிருக்கும். அரசியலே வேண்டாம் என்பதால்தான் பார்வையாளனாக கலந்து கொண்டடேன்
நான் கலந்து கொண்டது இலக்கிய விழா அல்ல எனது எழுத்தாளர் நண்பரான எஸ்.ரா அவரின் பாராட்டு விழா .நான் அதில் கலந்து கொண்டது அவரை பாராட்டமட்டுமே. மாங்கா இது உனக்கு புரிஞ்சுதா இல்லையா?
தமிழ் எழுத தெரிந்தவன் மட்டும்தான் இலக்கியம் பேசலாம் பேச படிக்க தெரிந்தவர்கள் மற்றவர்கள் பேசக்கூடாதா? மாங்கா உன் கூட்டதிற்கு வருபர்களில் எத்தனை பேருக்கு நாலுவரி நன்றாக எழுதவரும் . அடுத்த கூட்டம் நடத்தினால் உன் கூட்டத்திற்கு வருபரிடம் ஒரு தாளை கொடுத்து எழுத சொல்லி பாரு மாங்கா
போஸ்டரில் எனது படத்தை பெரிதாக போட்டதை ஏதோ பெரிய தவறு என்றும் அது இலக்கியவாதிகளை கேவலப்படுத்தியதாக சேழுதி இருக்கிறாய். மாங்க நான் இலக்கியத்தில் பெரிய ஆளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நடிப்பதில் இதுவரை நான் பெரிய ஆளாகத்தான் இருக்கிறேன். மற்ற துறையில் உள்ள புகழ் பெற்றவர் வந்து ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது அவரை கெளரவிக்கும் பொருட்டே எஸ்.ரா என்னுடைய படத்தை போட்டுள்ளார்..உன்னைத்தவிர இதை பார்க்கும் எல்லோருக்கும் அவர் மற்றதுறையில் உள்ளவர்களை மதிக்கும் அவரின் போக்குதான் மிக சிறப்பாக தெரிகிறதே தவிர கேவலமாக தெரிவதில்லை
அவார்டு பற்றி ஏதோ உனக்கு தெரிந்ததை மட்டும் வைத்து குடிகாரன் போல உளறி இருக்கிறாய். அதை பற்றி தெரியவில்லை என்றால் இந்த இணைப்பில் சென்று முழுவிபரங்களை பார்க்கவும். இல்லையென்றால் இதையாவது படிக்கவும்.
தமிழ் இலக்கியத் தோட்டம்
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பது, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் ஒழுங்கு செய்வது, கனடிய நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது போன்ற சேவைகள் இதனுள் அடங்கும். இந்த இயக்கத்தின் முக்கியமான பணி வருடா வருடம் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருத்தருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவிப்பதாகும். இயல் விருது என்றழைக்கப்படும் இந்த சாதனை விருது பாராட்டுக் கேடயமும்1500 டொலர்கள் பணப்பரிசும் கொண்டது. உலகளாவிய ஆலோசனக் குழு ஒன்றின் பரிந்துரையில் வருடா வருடம் இந்த விருது வழங்கப்படும். இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல் வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ அல்லது வேறு வகையில் அளப்பரிய தமிழ் தொண்டாற்றிய ஒருவருக்கோ அளிக்கப்படும். முதலாம் ஆண்டு வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான விருது எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமிக்கும், இரண்டாவது ஆண்டு எழுத்தாளர் திரு கே. கணேசுக்கும், மூன்றாவது ஆண்டு விமர்சகர் திரு வெங்கட் சாமிநாதனுக்கும் நான்காவது ஆண்டு பதிப்பாளர் திரு பத்மநாப ஐயருக்கும் ஐந்தாவது ஆண்டு கல்வியாளர் ஜோர்ஜ் ஹார்ட்டுக்கும் ஆறாவது ஆண்டு நாடகவியலாளர் திரு ஏ.சீ.தாசீசியஸ் அவர்களுக்கும் ஏழாவது ஆண்டு மொழிபெயர்ப்பாளர் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
- சிறந்த அபுனைவு இலக்கியம்
- கவிதை இலக்கியம்
- தமிழ் தகவல் தொழில் நுட்பம்
2008 ம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டொலர் புலமைப் பரிசிலும் உண்டு. அறிவிக்கப்பட்ட தலைப்பில் கட்டுரை எழுதி முதலாவதாக வரும் மாணவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படும். மேலதிக விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும். வருடாவருடம் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் அறிஞர்களின் விரிவுரைகளுக்கு ஏற்பாடு செய்யும்.
இதை படித்தாயா மாங்கா உனக்கு ஏதாவது புரிந்ததா? பார்த்தாயா கடந்த 11 ஆண்டுகளாக அவர்கள் சிறந்த அறிஞர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறார்கள். இது ஏதோ உன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு அவர்கள் தரும் ஒஸி அவார்டு அல்ல .அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இந்த அவார்டு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கபடுகிறது. இதற்கு என்று வீண்ணப்பங்கள் அந்த தளத்தில் தரப்பட்டுள்ளது. இதற்கென பல அறிஞரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு அவார்டும் 1500 டாலரும் பரிசாக கொடுக்கப்படுகிறது. முடிந்தால் அடுத்த ஆண்டு அவார்டுக்கு முயற்சி செய் அதைவிட்டு விட்டு சின்ன பயபுள்ள மாதிரி மூக்கால் அழுகாதே மாங்கா
இது பெரிய அவார்டா அல்லது சிறிய அவார்டா என்பது எனக்கு முக்கியமல்ல என் நண்பர் அவார்டு வாங்கி இருக்கிறார். அது எனக்கு முக்கியம் & மிக சந்தோசம் இப்பவாவது நான் சொல்லுவது உனக்கு புரியுதா மாங்கா?
படிப்பில் கஷ்டப்பட்டு சாதனை புரிந்த மகன் அதற்க்காக அவார்டு வாங்கும் போது தன் படிக்காத தந்தையை அழைத்து பேச சொன்னால் அதில் கேவலம் ஏதும் இல்லை அந்த படித்த மகனை பாராட்ட அவரும் படித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது மாதிரிதான் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. மாங்கா புரிஞ்சிக்கோ
உன்னிடம் சில கேள்வி;
நீ நடத்தியது எக்ஸைல் விமர்சனக் கூட்டமா அல்லது நாலு எச்சககலைகள் சேர்ந்து நடத்திய ரஜினி, எஸ்.ரா பற்றிய பொருமல் கூட்டமா?
தமிழ் இலக்கியத்தை ஏதோ காப்பாற்ற வந்தவன் போல பேசுகிறாயே. நீ எழுதும் புத்தகத்திற்கு தலைப்பு வைக்க தமிழில் வார்த்தைகள் கிடைக்காமல் போனதால்தான் நீ எக்ஸைல் என்று பெயர் வைத்தாயா அல்லது உன் அகராதியில் அது தமிழ் வார்த்தைதானா? கொஞ்சம் விளக்கம் சொல்லேன். நான் படிக்காதவன் இலக்கியம் பற்றி அறியாதவன். உன்னால் சொல்ல முடியுமா?
நீ என்னிடம் கேள்விகள் கேட்பதாக இருந்தால் உன் ப்ளாக்கிலேயே கேள்விகள் கேட்டு இருக்கலாமே. அதைவிட்டு விட்டு பெரிய புடுங்கியாக கூட்டத்தில் கடுமையாக கேள்வி கேட்க போகிறேன் என்று என் பெயரைப் போட்டு 'சீப்" விளம்பரம் தேடிக் கொண்டாயே அதற்கு நீ என்ன சொல்லப் போகிறாய் அல்லது சீப்பாக விளம்பரம் தேடும் இலக்கியவாதிகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொன்ன உன் சக எழுத்தாளர் வாலி என்ன சொல்லப் போகிறார் உன்னுடைய இந்த் சீப்பான விளம்பரத்தை பார்த்து?. மாங்க கொஞ்சம் விளக்கம்தாயேன் உனக்கு சூடு சொரனை இருந்தால்?
ரஜினிகாந்த் ஒரு பதிவாளராக இருந்தால் இப்படிதான் பதில் அளித்து இருப்பார். இது ஒரு முழு கற்பனை செய்தியே
படிக்காதவர்கள் படிக்க :
இணையத்தில் ஒரு நாகரிக பிச்சை எடுக்கும் எழுத்தாளரும், நல்ல செயல்களை செய்யும் பதிவாளர் கூட்டமும்
படிக்காதவர்கள் படிக்க :
இணையத்தில் ஒரு நாகரிக பிச்சை எடுக்கும் எழுத்தாளரும், நல்ல செயல்களை செய்யும் பதிவாளர் கூட்டமும்
சாரு பாஷையில் சாருவுக்கு புரிகிற மாதிரி
ReplyDeleteமிக அழகாக பதில் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்
படம் மிகப் பிரமாதம்
ஹா..ஹா..ரஜினி சாருவைப் போல தரம் தாழ்ந்து இவ்வாறு பேச மாட்டார். ஆனால் சாருவைப் போல தரம் தாழ்ந்து ரஜினி ரசிகன் கண்டிப்பாக பதிவில் சொன்னதைப்போல பேசுவான்.
ReplyDeleteஎக்ஸைல் விற்பனைக்கு ரஜினியை பயன் படுத்த சாரு முடிவு செய்துவிட்டார், அதனால் ரஜினியில் தலையை கொஞ்ச நால் உருட்டுவார்.
நல்லப் பதிவு
@ரமணி சார்
ReplyDelete@Naren இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்படி பேசும் சாரு அவர்புத்தகத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போமே என்று புதியவர்கள் யாரும் அவரின் புக் வாங்கி பணம் செலவழிக்க கூடாது என்பதுதான் என் எண்ணம். இதைதான் அவர் செய்கிறார். அப்படியாவது 10 பேர் எக்ஸ்ட் ராவாக புக் வாங்க மாட்டார்களா என்பதற்குதான் இவர் ஆடும் இத்தனை ஆட்டம்
சரியான செருப்படி அந்த பொம்பள பொறுக்கிக்கு
ReplyDelete