Monday, February 27, 2012



அழகிரியாக ஆக போகிறாரா அம்மா ஜெயலலிதா.

சங்கரன் கோவிலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளிலிருந்தும் வேட்பாளார்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் "திருமங்கலம்"  இடைத்தேர்தல் எப்படி அழகரியின் கெளரவப் பிரச்சனையாக இருந்ததோ அதே போல் அதிமுக ஆட்சியில் "சங்கரன் கோயில்" தேர்தல் அம்மாவின் கெளரவப்பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த தேர்தலை ஜெயலலிதா எப்படி எதிர் கொள்ள போகிறார் என்பதை இந்தியா முழுவதும் கவனித்து கொண்டிருக்கிறது.

எல்லாம் "தான்" தான் என்ற அகந்தையில் இருக்கும் ஜெயலலிதா .கடந்த தேர்தலில் அமோக வெற்றிக்கு காரணம் தான் மட்டும்தான் என்ற அகந்தையில் பேசி விஜயகாந்தை தூக்கி எறிந்திருக்கிறார்.தன்னை அரியனையில் தூக்கி வைத்த மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தாமல் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு இன்னும் செல்வாக்கு இருக்கு என்று கர்வம் கொள்ளும் இவர். இந்த தேர்தலில் ஒரு  முறை பிரச்சாரம் செய்து வேட்பாளரை அறிமுகப்படுத்தி விட்டு உட்கார்ந்து இருக்கலாமே அதை விட்டு விட்டு தன் முழு மந்திரி சபையையே அங்கு அனுப்பி வேலை செய்துவது எதற்காக ? தன் செல்வாக்கின் மீது அவருக்கே நம்பிக்கை இன்மையைத்தான் இதை காட்டுகிறது

இந்த தேர்தலில் பண ஆறாக மாற போகிறாதா  அல்லது அராஜாகம் ஆறாக மாறப் போகிறதா சங்கரன் கோவில் என்று இருட்டில் முழ்கி இருக்கும் தமிழக மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

எனது சிந்தனையெல்லாம் சங்கரன் கோவில் மக்கள் எண்ண செய்யப் போகிறார்கள் என்பதுதான்.

அவர்கள் அதிமுகவிற்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் ஜெயலலிதா செய்வது எல்லாம் சரிதான் என்று ஆமோதிப்பது போல ஆகிவிடும். ஆனால் தோற்கடித்தால் சங்கரன் கோவிலுக்கு எதிர்காலத்தில் அம்மா ஓன்றும் செய்யமாட்டார்கள் என்று மக்கள் பயப்படலாம் ஆனால் அவர்கள் ஓன்றை மறக்க வேண்டாம் அம்மா ஜெயித்தாலும் ஒன்றும் செய்யபோவதில்லை அதற்கு உதாரணம் இப்போதைய அவர் செயலையே எடுத்து காட்டலாம். இந்த சந்தர்ப்பம் ஜெயலலிதா அவரின் தலையில் கொட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பம். இதை சங்கரன் கோவில் மக்கள் பயன் படுத்துவார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அடுத்தாக அவர்கள் திமுக வை ஜெயிக்க வைத்தால் அவர்கள் கடந்த காலத்தில் செய்த தவறை எல்லாம் எளிதில் மறந்துவிட்டது போல ஆகிவிடும். அப்படி செய்தால் அது அரசியல்வாதிகளை தவறுகள் செய்ய தூண்டுமே தவிர குறைக்க வழி வகுக்காது.

அடுத்து தேமுதிகவை ஜெயிக்கவைத்தால் சட்டசபையை கேலி கூத்தாக்கா மேலும் ஒரு நபரை அனுப்பிவைத்தாகவே கருதப்படுமே தவிர வேறு எதற்கும் உதவாது.

இறுதியாக இருப்பது மதிமுக அந்த கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்தால் சட்ட மன்றத்தில் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை. ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கட்சி தலைவரை தட்டி கொடுத்தது பாராட்டுவது போலத்தான். அதனால் அந்த கட்சி தலைவர் வைகோ மக்களுக்காக இன்னும் அதிகமாக குரல் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை மேலும் அவர் கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைப்பதால் மற்ற கட்சிகளுக்கு தலையில் குட்டியது போல இருக்கும் அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாளியக கருதும் அவர்களின் செயல்களும் மாறும்.

ஆனால் மக்களே குட்டுவதோ குமறுவதோ கும்மி இருட்டில் இருப்பதோ உங்கள் கையில்தான். சிந்தியுங்கள்! முடிவு செய்யுங்கள்
27 Feb 2012

1 comments:

  1. நீங்கள் சொல்லிப் போகும் கருத்து சரிதான்
    இப்படியெல்லாம் யோசித்தா மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் ?
    அசத்தலான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.