Thursday, February 2, 2012



பயந்து போகிற தி.மு.கவும், பாய்ந்து போகிற தே.மு.தி.கவும்,நிதானம் தவறும் அ.தி.மு.காவும் ,நிதானம் காட்டும் மதிமுகவும் பற்றி ஒரு சிறு அலசல்.


வேகம் காட்ட வேண்டிய தி.மு.க நொண்டி குதிரை போல நிதானமாக நடந்து போய் கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் இவர்கள் முந்தைய ஆட்சியில் பண்ணிய தவறுகள்தான். இன்றைய கால அரசியலில். இந்த அளவு நிதானமாக இருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் நிலைதான் அதற்கும். நடப்பதை பார்த்தால் காங்கிரஸின் வழியைதான் திமுக பின்பற்றி கொண்டிருக்கிறது எனபது மிக தெளிவாக தெரியும் உண்மை. தமிழ்நாடு காங்கிரஸில் பல குழுக்கள் ஓற்றுமை இல்லாது இருப்பது போல திமுகவிலும் ஸ்டாலின் குருப், அழகிரி குருப், கனிமொழி குருப், தயாநிதி குருப் மற்றும் அன்பழகன் தலைமையில் உள்ள பேசாமடந்தை குருப், தவிக்கும் உண்மையான தொண்டர்கள் குருப் என பலவித குருப்புகள் செயல்படுகின்றன. தமிழக மக்களுக்காக போரட வேண்டிய இவர்கள் தம் மக்களின் (பிள்ளைகள்) எதிர்கால பதவிக்காக போராடி கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேர்ந்து இருந்தால்தான் பலம் அதிகம் என்ற உண்மையை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்கள் எதிர்காலத்தில் அநாதையாகி போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக போய்கொண்டிருக்கின்றன.


தே.மு,தி.காவை பார்த்தால் பாய்ந்து கொண்டிருக்கிறது, வேகம் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் அதே நேரத்தில் விவேகமும் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இந்த வேகமும் விவேகமும் தமிழ்மக்கள் பிரச்சனைகளில் காட்ட வேண்டும். அதைவிட்டு விட்டு குடிகாரனின் பேச்சு விடிந்தால் போச்சு என்ற மாதிரி இருக்க கூடாது. உண்மையான வீரன் வாய்பேச்சில் நேரத்தை வீணடிக்க மாட்டான் செயலில் காட்டுவான் . மக்கள் சந்தோஷமாக பாய்ந்து வரும் அருவி தண்ணியில்தான்   குளிக்க வருவார்கள் , சாக்கடை தண்ணியில் அல்ல. இதை தே.மு,தி.க தலைவர்கள் இதை உணரவேண்டும்.


நிதானம் தவறும் அதிமுக

ஒரு பெண் குடும்பத்திற்கு வரும் போது ஒளிகாட்டும் குத்து விளக்காக வரும் போது அவளே ஒரு நாட்டுக்கு தலைவராக வரும் போது எப்படி இருக்க வேண்டும் என்பது தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் வயதில் பெரியவரான ஜெயலலிதாவுக்கு இது தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அவரிடம் இப்போது நாம் காண்பதோ நிதானம் தவரும் ஒரு ஆணவத்தைதான். இதனால் இவர் நிலை தடுமாறி விழப்போவது உறுதி. ஆணவக்கார்கள் நிலை தடுமாறி விழும் போது அவர் உடன் இருப்பவர்கள் உதவுவதற்கு பதிலாக கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் மீண்டும் எழமுடியாமல் செய்து விடுவார்கள்.
இதை ஜெயலலிதா அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இவர் ஒரு பக்குவப்பட்ட தலைவரானால் சட்டசபை நிகிழ்ச்சிகளில் எப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். பக்குவபடாத விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு புதியவர் ஏதோ அவர் உணர்ச்சி வசப்பட்டு எதிர்கட்சி என்பதால் ஆளும் கட்சி கொண்டுவந்த விலை உயர்வை கண்டித்து பேசும் போது ஜெயலலிதா அமைதியாக கேட்டு அதன் பிறகு நிதானமாக விலைகள் எதற்க்காக உயர்த்தப்பட்டது என்பதற்கான உண்மையான விபரங்களை அமைதியாக பக்குவமாக விளக்கி இருந்தால் அவர் இன்னும் ஒரு படி மேல் உயர்ந்திருப்பார் ஆனால் ஆணவத்தில் உணர்ச்சி வசப்பட்டு சாக்கடையில் கல்லை எறிந்து தன்னையும் அசிங்கபடுத்தி கொண்டிருக்கிறார். பொறுமை மிக அவசியம் மேலும் இவர் சந்தர்ப்பவசமாக சிறை செல்லும் நிலைவந்தால் கட்சியை தலைமைதாங்கி நடத்த ஒரு ஆளை அடையாளம் காண்பிக்க வேண்டும் இது அவருக்கும் அவரை சார்ந்த கட்சிக்கும் மிக அவசியம் இப்போது அவருக்கு இருக்கும் உண்மையான நண்பர் "சோ" அவர்கள் கூட நடந்த சட்டசபை நிகழ்ச்சியை கண்டு வருந்திருப்பார் காரணம் அவர்தான் ஜெயலலிதா அவர்களை பிரதமர் பதவிக்கு அமர்த்த முயற்சி எடுத்து வரும் சமயத்தில் இப்படி பக்குவம் இல்லாத பெண்ணாக நடந்திருப்பதுதான்.

நிதானமாக இருக்கும் மதிமுக

கலைஞர் குடும்பத்தை தவிர மற்றும் எவராலும் குற்றம் சொல்லமுடியாதபடி நிதானமாகவும் பக்குவமாகவும் மக்கள் மன்றத்தில் அடி எடுத்து வைத்து வருகிறார் உயர் திரு. வைகோ அவர்கள். மக்களுக்காக போராடிவரும் இவர் மக்கள் ஆதரவு முழுமையாக பெறமுடியாமல் வருகிறார். காரணம் மக்கள் மயக்கதில் இருப்பதுதான். ஆனாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல சிறிது சிறிதாக மக்கள் இவர் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக பிரகாசமாக இருக்காதான் செய்கிறது. சில தலைகள் கிழே சாய்ந்த பிறகு அவருக்கு வரப்போகும்  முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.


எப்போதும் எதிர்பாராமல் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும். மாறி வரும் மாற்றங்கள் தடுக்க முடியதாவை. புதியமாற்றங்கள் தமிழகத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை கொடுத்து முன்னேற்ற பாதையில் செல்லும் என்று நம்புவோம்

9 comments:

  1. சம கால அரசியல் குறித்த அலசல் அருமை
    விஜய காந்த் மற்றும் புரட்சித் தலைவி குறித்து சொல்லிப்போனது சரி
    வை.கோ விஷயம்தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
    அவர் விடுதலைப் புலிகள் மற்றும் முல்லைப் பெரியார் தவிர்த்து
    தமிழக அளவில் எந்த விஷயங்களையும் முன்னிலைப் படுத்தவில்லை
    என்பது என் அபிப்பிராயம்.பார்ப்போம்
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ///அன்பழகன் தலைமையில் உள்ள பேசாமடந்தை குருப்,/// peraasiriyar pinnal(veettukku munnaal)group-appavum-ippavum-eppavum kidaiyave kidaiyaathu!kalaignarukkum avarukkum idaiyil sandai moottaatheerkal.
    VAIKO nalla arasiyalvaathi.thamizh ina parraalar.aanaal avar pinne ponavarkal kathi, enna aacchu?entha kaalaththilum avar aatchikku varamudiyathu.athuthaan inraiya nilai.JJ maarave maattaanga.thathavai ethirththu ivangalukku ottu pottatharku 5 varudam vedikkai parththukondu varuvathai anubavippom!vera vazhi!

    ReplyDelete
  3. சரியான அலசல்.
    கடந்து வந்த பாதையையும் ,தாண்டி வந்த தடைகளையும் மறந்து
    வெற்றி போதையில் தடுமாறுகிறார் ஜெயலலிதா .
    தன்னை சுற்றியுள்ளவர்களது புகழ்மொழிபோதையில்
    களமிழந்த கலைஞரைப்பார்த்து பாடம் கற்றுக்கொள்ளவிடில்
    மீண்டும் ஜெயா களம் இழப்பது உறுதி.
    கழகத்துள்ளோரை குடும்பமாக கலைஞர் நினைத்திருந்தால்,
    குடும்பத்தாரை மட்டுமே கழகமாக நினைக்காமல் இருந்திருந்தால்,
    இந்நிலை அவருக்கு வந்திருக்காது.
    அவரது நிலை அவுரங்கசேப்பின் அந்திம காலத்தையே நினைவுபடுத்துகிறது.....
    தொண்டர்கள் உணர்ச்சி வசப்படலாம்.தலைவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது.
    வைக்கோ வைப்பொருத்த மட்டில் கற்பனையில் கோட்டை கட்டும் கவிஞராகவே தெரிகிறார்.
    மருத்துவரைப்பொருத்த மட்டில் அவருக்கே வைத்தியம் தேவைப்படும் நிலை தான்.
    தேசிய கட்சிகளான காங்கிரஸ் ,பி ஜே பி ,பொதுவுடைமைவாதிகள் நிலை
    அதைவிட ஐயோ பாவம் என்ற நிலையில் தான் உள்ளது.
    விஜயகாந்த் நிலைமையை புரிந்து செயல் பட்டால் காலம் போகும் போக்கு
    அவருக்கு சாதகமாய் விடும் போலத்தான் தெரிகிறது......

    ReplyDelete
  4. உங்கள் கூற்று மிகச்சரியே. இன்றைய அரசியலை நல்லா அலசியிருக்கீங்க சகோ

    ReplyDelete
  5. எங்கோ அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து கருத்துகளை பதிவிடும் மதுரைத் தமிழரே, இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நெருப்பில் சின்ன நெருப்பு பெரிய நெருப்பு எதுவும் அழிக்கும் சக்தி உள்ளதே. குறை நிறை எல்லாம் அலசுங்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல். வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  6. தலைப்பில் பொருள் குற்றம் உள்ளது மதுரைத் தமிழன். தேமுதிகவுடன் கூட்டணி என்பதை என்னை சுற்றியிருந்தவர்களின்(இருந்த அன்பது இறந்த காலம்) கட்டாயத்தினால்தான் ஏற்றுக் கொண்டேன் என்று சட்டசபையில் அறிவிப்பு செய்திருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை read in between the lineல் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அடி எடுத்துவைக்கக் கூட எதிர்கால லாபத்தை எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் .......

    ReplyDelete
  7. //இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக பிரகாசமாக இருக்காதான் செய்கிறது. சில தலைகள் கிழே சாய்ந்த பிறகு அவருக்கு வரப்போகும் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.//
    சான்ஸே இல்லை :)

    ReplyDelete
  8. தொலைதூர நாட்டில் இருந்து பல பத்திரிக்கைகள் ஆங்கில தமிழ் தினசரி மற்றும் வார இதழ்கள் படித்தும் பல வலைத்தளங்கள் சென்றும் வருவதால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதன் மூலம் என் அறிவுக்கு எட்டியதை எந்த கட்சியும் சாராமல் என் மனதில் பட்டதை எழுதி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் எழுதி இருந்தேன் அதை படித்து கருத்துகள் தெரிவித்த தாய் நாட்டில் வசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்


    இங்கு வருகை தந்து கருத்திட்ட
    @ரமணி சார்
    @சுகுமார் சார்
    @ராஜி மேடம்
    @படுகை செல்வா சார்
    @பால சுப்பிரமணியன் ஐயா
    @சாகம்பரி மேடம்
    @ராபின் சார்

    அனைவருக்கும் அன்பு நன்றிகள்

    ReplyDelete
  9. //நிதானமாக இருக்கும் மதிமுக

    கலைஞர் குடும்பத்தை தவிர மற்றும் எவராலும் குற்றம் சொல்லமுடியாதபடி நிதானமாகவும் பக்குவமாகவும் மக்கள் மன்றத்தில் அடி எடுத்து வைத்து வருகிறார் உயர் திரு. வைகோ அவர்கள். மக்களுக்காக போராடிவரும் இவர் மக்கள் ஆதரவு முழுமையாக பெறமுடியாமல் வருகிறார். காரணம் மக்கள் மயக்கதில் இருப்பதுதான். ஆனாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல சிறிது சிறிதாக மக்கள் இவர் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக பிரகாசமாக இருக்காதான் செய்கிறது. சில தலைகள் கிழே சாய்ந்த பிறகு அவருக்கு வரப்போகும் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.//
    உண்மை இதுவே
    நல்ல அலசல்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.