அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயணம் - என் மனைவியுடன் சேர்ந்து முதல் காதலியை சந்தித்த அனுபவம் )
நான் வளர்ந்த ஊர் மதுரை என்றாலும் பிறந்த ஊர் செங்கோட்டையாகும் அது குற்றாலத்திற்கு அருகே உள்ள ஒரு ஊர் .அதனால் சிறுவயதில்(5 வயது வரை) எப்போது எல்லாம் குற்றாலத்தில் தண்ணிர் வருகிறதோ அப்போது எல்லாம் சென்று வருவோம்.அதன் பின் மதுரைக்கு வந்த போது விடுமுறை என்றால் செங்கோட்டை சென்று குற்றாலத்தில் குளித்து வருவது ஒரு வாடிக்கை. அந்த வாடிக்கை அமெரிக்கா வந்த போதும் மாறவில்லை. காரணம் குற்றாலம் என் காதலி. சிறு வயது காதலி இன்னும் அவள் எனக்கு காதலிதான். அவள் எப்போதும் குளு குளூ.. சிலு..சிலு வென இருப்பாள். ஆனால் கிட்டே நெருங்கினால் தலையிலேயே கொட்டுவா....ஆனாலும் அவள் கையால் கொட்டப்படுவது என்பது மிக சுகமானதே அதனால் இந்த முறையும் குடும்பத்துடன் சென்று வந்தேன்.
என் குற்றால காதலி பற்றி சில தகவல்கள்:
அதுமட்டுமல்ல சீஸன் நேரத்தில் ஒரே நாளில் அத்தனை அருவியிலும், எத்தனை முறையும் எவ்வளவு நேரம் குளித்தாலும் சளியோ, காய்ச்சலோ வராது. அதுதான் என காதலி பொதிகை மலை மூலிகையின் மவுசு.
தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்கா கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் வழியில் மலையில் உள்ள அத்தனை முலிகைகளையும் தழுவி சில்லென்ற காற்றை அணைத்து பிடித்து வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய் வந்து நம்மை மகிழ்விக்கிறது குற்றால அருவி.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில் இருக்கும் அருவி ஓன்றல்ல இரண்டல்ல மொத்தம் 8 அருவிகள் உள்ளன. என்ன எனக்கு இத்தனை காதலிகளா என்று நீங்கள் பொறாமைபடுவது தெரிகிறது .
என் 8 காதலியின் பெயர்கள் பேரருவி (Main Falls), ஐந்தருவி( Five Falls) பழைய குற்றால அருவி (Old Falls) புலியருவி(Tiger Falls) சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி என பல அருவிகள் சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.( இந்த அருவிகள் பற்றி மிக விரிவாக இன்னொரு பதிவு போடுகிறேன்)
நாங்கள் வழக்கமாக செல்வது மெயின் ஃபால்ஸ்(பேரருவி), பைவ் ஃபால்ஸ்(ஐந்தருவி), ஒல்டு ஃபால்ஸ்(பழைய குற்றாலம்). அருவிகளில் குளித்துவிட்டு பசியோடு வந்த நாங்கள் ஐந்தருவியை விட்டு வெளியே வந்ததும் கார் டிரைவரிடம் ஒரு நல்ல வெஜிடேரியன் ஹோட்டலுக்கு அழைத்து போ என்றோம் அவனும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குகூட்டி சென்றான் அந்த ஹோட்டலை பார்த்ததும் அவனை பார்த்து என்னப்பா ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூப்பிட்டு போக சொன்னால் ஒரு பழைய நிலையில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு கூட்டி வந்திருக்காயே என்று கேட்டோம் அவன் பார்க்க அழுக்ககாத்தான் இருக்கும் ஆனால் சாப்பிட்டு வந்து சொல்லுங்கள் என்று சொன்னான் அவன் ஒரு முஸ்ஸிம் எங்கள் குடும்பத்திற்கு தூரத்து உறவினன் அவனுக்கு என்ன வெஜிடேரியன் பற்றி தெரிய போகிறது என்று மனதில் நினைத்தபடி பசியால் இருந்த நாங்கள் உள்ளே சென்றோம். (எனது குடும்பம் பிராமினும் முஸ்லீமும் கலந்த குடும்பம் அதனால்தான் வெஜிடேரியன் சாப்பாடு...)
சாப்ப்பிட்ட பிறகுதான் அதன் அருமை தெரிந்தது. அவர்களின் சாம்பார் மிகவும் அருமை. எனது பொண்ணோ சாம்பார் என்றால் ஒரு காத தூரம் ஒடுவாள் ஆனால் அங்கு அதை வாங்கி வாங்கி குடித்தாள். அந்த ஹோட்டல் சர்வர்களும் ஒனரும் எங்களை அதிசியமாக பார்த்தனர் மற்ற காய்கறிகளும் பிரமாதம் இந்த அளவு டேஸ்ட் நான் சாப்பிட்ட தமிழ்நாட்டு எந்த ஹோட்டலிலும் கிடையாது. எங்களுக்கு இருந்த சந்தோஷ்த்தில் அங்கு வேலை பார்த்த பலரையும் கூப்பிட்டு பாராட்டி அனைவருக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தோம்.அந்த ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது அது ஐந்தருவியை விட்டு மெயின் ரோட்டுக்கு வந்ததும் வலது பக்கம் திரும்பியதும் வலது புற சைடில் உள்ளது அதற்கு எதிராக ஒரு பெரிய ஹோட்டலும் உண்டு ஆனால் அங்கு செல்ல வேண்டாம்.
குற்றால பகுதியில் உள்ள மிக பெரிய குறை நம் காரில் இருந்து செருப்பு இல்லாமல் அருவிக்கு போகும் உள்ள இடம்தான் மிகவும் அருவருப்பாக உள்ளது. மக்கள் சாப்பிட்டு போட்ட குப்பைகள் , துப்பிய எச்சில்கள் மிக அருவருப்பாக உள்ளது மற்ற இடமாக இருந்தால் ஏதோ அட்சஸ்ட் செய்துவிட்டு போகலாம் ஆனால் நீர் நிறைந்த பகுதிகளாக இருப்பதால்தான் இந்த அருவருப்பு மனதில் தோன்றுகிறது. அதற்கு நாம் ஒரு மாற்று வழியை அறிவது மிக அவசியம்.
நான் பார்த்து அனுபவித்த மூன்று அருவிகளை நீங்களும் பார்த்து அனுபவிக்க நான் எடுத்த வீடியோவின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக..
மெயின் பால்ஸில் நான் எடுத்த விடியோவில் ஒரு பகுதி:
ஐந்தருவியில் நான் எடுத்த விடியோவில் ஒரு பகுதி:
பழைய குற்றாலம்
மெயின் ஃபால்ஸ்
பயணங்கள் தொடரும்......
எனது முந்தைய பயண அனுபவம் படிக்க :
குற்றாலத்திற்கு வருடம் தோறும் சீசனுக்கு செல்வோம் மீண்டும் மீண்டும் குளிக்க தூண்டும் இடம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
உங்கள் காதலியைப் பற்றிய வர்ணனை மிகவும் அருமைங்க . அதுவும் 8 காதலி சுகமாய்தான் இருக்கும் .
ReplyDeleteஉங்க காதலி செம அழகு தம்பி. அவள்மேல் எனக்கும் பாசம் உண்டு. வருசத்துக்கொருமுறை போய் பார்ட்துட்டு சில நாட்கள் அவளுடன் தங்கிவிட்டு வருவது வழக்கம். (நான் என்னமோ கிசுகிசு மேட்டர் சிக்குமேன்னு பவர்கட்லயும் வந்தால்...., சப்புன்னு போய்டுச்சு)
ReplyDeleteவீடியோ குறிப்பாக அடுக்கு அடுக்கு
ReplyDeleteஆக உள்ள பழைய அருவி மிகவும் அருமை.
ஜில் ஜில் பதிவு.
அருமையான அனுபவ பகிர்வு
ReplyDeleteஇன்று ...
ReplyDeleteஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .
@ கோவிந்தராஜ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@சசிகலா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இந்த 8 காதலிகளில் 4 தான் மிக பிடிக்கும்.என் காதலியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது
ReplyDelete@சகோதரி ராஜிக்கு என் தலைப்புகள் கிசுகிசு செய்தியை சொல்லுற மாதிரிதான் இருக்கும் ஆனால் கிசுகிசு இருக்காது. சகோதரி இல்லாத எனக்கு நீங்கள் தம்பி என்று கூப்பிட்டது பிடித்திருக்கிறது நன்றி,
ReplyDelete@ஸ்ரவாணி என் ஜில் என்ற பதிவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete@ராஜபாட்டை உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteபல நாட்களான குறையை இன்றுதான் நிவர்த்தி செய்துள்ளேன்,அது உங்கள் தளத்திற்கு இதுவரை வர நினைத்தும் வராமல் போனதுதான்.இன்று ஃபாளோயர்சில் இணைந்துள்ளேன்,நேரமிருக்கும்போது வந்து படிக்கிறேன்,இந்த பதிவிலியே தெரிகிறது வரவைக்கும் தலைப்பை வைத்துதான் பதிவுகள் இருக்கும்னு,அதுவும் நல்லதுதான்.
ReplyDelete