Tuesday, February 21, 2012


அமெரிக்கனிடம் இப்படியா கேள்வி கேட்பார்கள் இந்த தமிழர்கள்?

எனது முந்தைய பதிவு ஒன்று, "அமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்"  வாசித்து விட்டு,  அதன் தொடர்ச்சியாக, மேலும் சில கேள்விகள் எங்களிடம் உள்ளது கேட்கலாமா என்று கேட்டு இமெயில் அனுப்பி இருந்தனர் (கற்பனை )

ஆஹா  இது நேயர் விருப்பமாச்சே ...... ம்ம்ம்..... சூப்பரு என்று நானும், கேள்விகளை அனுப்புங்க ....என்னால் முடிந்த அளவு பதில்தருகிறேன் என்று ஒரு சேவை மனப்பான்மையுடன்  ரெடியாகினேன்......   சந்தோஷமாக,  கேள்விகள் வந்து குவிந்தன.... அதில்,  மொத்தம்  பத்து கேள்விகள் எடுத்துக்கிட்டு, பதில் ரெடி பண்ண ஆரம்பிச்சேன்.....இதோ அந்த பதில்கள்....
 
முதல் கேள்வியை கேட்பவர்  தோழி ஜோஸபின்  அவர்கள்  (ஜோஸபின் கதைக்கிறேன்.)

மதுரைத்தமிழா நீங்க இருக்கிற அமெரிக்காவில் சமையலுக்கு ஆள் கிடைக்குமா''
மதுரைதமிழன் : ''ஆள் எல்லாம் கிடைக்காதுங்க! காய்கறிதான் கிடைக்கும்!  மேடம் இந்த கேள்வியை ஆப்பிரிக்காவில் இருப்பவர்களிடம் கேளுங்க

இரண்டாவது கேள்வியை கேட்பவர்  சகோதரி ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

மதுரைத்தமிழா உங்க  பதிவுகளை வாசிக்கும் உங்கள் மனைவி   உங்கள் பதிவை பற்றி என்ன நினைக்கறாங்க?
அ. அடாடா  இன்னும் இவருக்கு புலிட்ஸர் அவார்டு கிடைக்கலியே என்றா? . வெட்டியா பொழுத கழிக்காம வேற வேலையப் பாருய்யா என்றா?

மதுரைதமிழன் :ஹீ..ஹீ  அவங்க என் பதிவெல்லாம் படித்துவிட்டு ஆஆஆஆஆஆ என்று அசந்து போவார்கள்

மூன்றாவது கேள்வியை கேட்பவர்  தன சேகரன்.எஸ் அவர்கள்   (சேகர் தமிழ்)

மதுரைத்தமிழா நினைச்சது கிடைக்கலன்னா கிடச்சதை நினைக்கலாம்ங்கறது சரி என்று சொல்லுறாங்களே அது சரியா?.
மதுரைதமிழன் "அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

நான்காவது கேள்வியை கேட்பவர்  வா.கோவிந்தராஜ்  அவர்கள்  (தமிழன்)

மதுரைத்தமிழா :முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதானா?
மதுரைதமிழன் :அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா. அட போங்கப்பா

ஐந்தாவது கேள்வியை கேட்பவர்  ஸ்ரவாணி  அவர்கள்  (தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்)
மதுரைதமிழா பட்டுபுடவைகளை நீண்ட நாள் பாதுகாப்பாக வைக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்.
மதுரைதமிழன் : உங்க வீட்டுல உள்ள ப்ரிட்ஜ்ல வைங்க அது கெடமா நீண்ட நாள் இருக்கும்

ஆறாவது கேள்வியை கேட்பவர்  "பெயர் சொல்ல விருப்பம் இல்லாதவர்" 

மதுரைத்தமிழா முகத்துல  விழும் சுருக்கம் நீங்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
மதுரைதமிழன் அது ரொம்ப எளிதுங்க  முகத்துல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சு பாருங்க எல்லாம் சரியாக போயிடும்

ஏழாவது  கேள்வியை கேட்பவர்  முகுந்தம்மா அவர்கள்  (முகுந்த்அம்மா )
மதுரைத்தமிழா தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
மதுரைதமிழன் கொட்டுவது எல்லாம்  திரவப்பொருள்தானே

எட்டாவது  கேள்வியை கேட்பவர்  சசிகலா அவர்கள் (தென்றல்)

மதுரைத்தமிழா  உங்க பையனை வீட்டுலே பார்க்க முடியவில்லையே எங்க போயிட்டான்?
என் பையனும்  கரண்ட்டும் ஒண்ணுதான் ... இரண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

ஓன்பதாவது கேள்வியை கேட்பவர்  ரமணி  அவர்கள்  (தீதும் நன்றும் பிறர் தர வாரா...)
மதுரைதமிழா:உங்க சொந்த ஊர் எது ?
மதுரைதமிழன் :அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க

பத்தாவது  கேள்வியை கேட்பவர்  ஆமினா  அவர்கள்  (குட்டி சுவர்க்கம்)
மதுரைதமிழா :உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
மதுரைதமிழன் : பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களோ அவங்க பக்கம்.



படிக்காதவர்கள் படிக்க

அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி?

9 comments:

  1. கல கல கேள்விப்பதில்கள்.எல்லாரையும் கலாய்ச்சுடீங்க சபாஷ்.

    அருமைப் பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்லதாம்யா இருக்கு மதுரை தமிழா

    ReplyDelete
  3. இரண்டாவது கேள்வியை கேட்பவர் சகோதரி ராஜி அவர்கள் (காணாமல் போன கனவுகள்)

    மதுரைத்தமிழா உங்க பதிவுகளை வாசிக்கும் உங்கள் மனைவி உங்கள் பதிவை பற்றி என்ன நினைக்கறாங்க?
    அ. அடாடா இன்னும் இவருக்கு புலிட்ஸர் அவார்டு கிடைக்கலியே என்றா? ஆ. வெட்டியா பொழுத கழிக்காம வேற வேலையப் பாருய்யா என்றா?
    >>>
    சகோதரரே என் கேள்வி இப்படிலாம் இருக்காது. எப்பவாவது உங்க கருத்துக்களை படிக்குற எங்களுக்கே கண்ணை கட்டுதே. எப்பவுமே கூட இருக்காங்களே உங்க மனைவிக்கு எப்படி கண்ணை கட்டும். அதிலிருந்து அவங்க எப்படி தப்பிக்குறாங்கன்னு தான் கேட்பேன்.

    ReplyDelete
  4. நல்ல கேள்விகள்... அருமையான பதில்கள்.. அழகான பதிவர் !!!

    ReplyDelete
  5. அன்புள்ள நண்பருக்கு வணக்கம்...

    வலைப்பதிகளை தாங்கள் வெற்றிகரமாக எழுதி வருவதை அறிவோம். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

    தமிழ் இணைய உலகில் திரட்டிகளின் பங்கு மிகப்பெரியது. தமிழில் திரட்டிகள் பல இருந்தாலும் புதிதாக hotlinksin.com என்னும் திரட்டியை துவக்கியுள்ளோம். வலைப்பதிவர்களாகிய தாங்கள் தங்கள் இடுகைகளை இந்த திரட்டியில் இணைத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், hotlinksin.com திரட்டி குறித்த செய்தி ஒன்றை தங்கள் வலைப்பதிவில் எழுதிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    அன்புடன்

    ஹாட்லிங்க்ஸ் இன் டாட் காம் குழு

    ReplyDelete
  6. நான் கூட பதில்கள் மொக்கையா இருக்குமோன்னு நினைத்தேன்.. கலக்கிட்டீங்க.. சூப்பரா (சுவாரசியமாக) இருந்தது உங்க பதில்கள் :-)

    ReplyDelete
  7. Ennathu! Thel thiravapporula? Ithu eppo irunthu? Nallave kalIkkureenga sir neenga

    ReplyDelete
  8. ஆஹா , அருமையான ஐடியா !
    அப்போ வெஜ்ஜீஸ் ஐ எல்லாம்
    பீரோவுக்கு 'transfer ' பண்ணிட வேண்டியது தான் .
    ரசித்து சிரித்தேன்.
    பாம்பு நடக்காது. நம்மை ஓட வைக்கும் .
    சொந்த ஊர் எது ன்னு இனி நான் யாரையும்
    கேட்டு பல்பு வாங்க மாட்டேன் ப்பா.
    கலக்கல் MTG !

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.