Friday, February 17, 2012



அமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்
மதுரைத்தமிழனின் கேள்வியும் நானே பதிலும் நானே.


குற்றாலத்திற்கும் நயகாரவிற்கும் உள்ள வேறுபாடு?
நயகாரா பார்பதற்கும் குற்றாலம் அனுபவிப்பதற்கும்.

அமெரிக்க குடும்பத்திற்கும் இந்திய குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு?
அமெரிக்காவில் காதலிக்கவில்லையென்றால் குற்றம் இந்தியாவில் காதலித்தால் குற்றம்
அமெரிக்காவில் கல்யாணம் ஆகி பெற்றோர்கள் கூட இருந்தால் அசிங்கம் ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகி பெற்றோர்களைவிட்டு வந்தால் அசிங்கம்


அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதா?
அடிமைபடுத்தப்படும் தனம் அமெரிக்கர்களிடம் மாறாது. ஆனால் கருப்பர்களை அடிமைபடுத்துவதை நிறுத்தி இந்தியர்களை அடிமைபடுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்எங்களுக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள் என்று இந்தியர்களை அமெரிக்கா கருதுகிறது.




அமெரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் உள்ள வேறுபாடு?
அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும்



தமிழக அரசியல் கேள்வி பதில்கள் :

அம்மாவுக்கும் தமிழ் மக்களுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
அம்மாவுக்கு தமிழ் மக்கள் கொடுத்தது அதிக பவர் ஆனால் அம்மா மக்களுக்கு திருப்பி தருவது குறைந்த பவர்


தமிழகத்தின் பவர்கட் பற்றி உங்கள் கருத்து என்ன?
மின்சாரம் மின்சாரகனவாகி போனது

நடிகன் அரசியலுக்கு வரலாமா?
நன்றாக நடிக்க தெரிந்தவன் அரசியலுக்கு வரலாம்.


நடிகனுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நடிகன் சினிமாவில் மட்டும் நடிக்கிறான். அரசியல் வாதி நிஜ வாழ்க்கையில் மட்டும் நடிக்கிறான்

வைகோவுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வைகோ ஒரு ஏமாளி, ராமதாஸ் ஒரு கோமாளி



போலிஸ்காரனுக்கும் திருடனுக்கும் என்ன வேறுபாடு?
திருடன் திருடிவிட்டு மாட்டி கொண்டால் போலிஸ் ஸ்டேஷன் போவான் ஆனால் போலிஸ் திருடிவிட்டு அவனே போலிஸ் ஸ்டேஷன் வருவான்.

ஜெயிலுக்கு போகும் அரசியல்வாதிக்கும் திருடனுக்கும் எப்படி நெஞ்சுவலி வருகிறது ?
அரசியல்வாதி மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குள் போனால் நாம் கொள்ளையடித்ததை அனுபவிக்க முடியாதே என்று நினைக்கும் போதே ஆட்டோமெட்டிக்காக நெஞ்சுவலி வரும் ஆனால் திருடன் உள்ளே போனால் வாங்கிய அடிகளால் நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல் போவான்.


குடும்பம் :

குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமா?
அது உங்கள் மனைவி போட்டு தரும் காபியை பொறுத்து இருக்கிறது


மனைவியிடம் அம்மா செய்யும் சமையலை சொல்லி தைரியமாக பாராட்டுவது எப்படி?
அம்மாவின் உணவை நீ ஊட்டிவிடும் போது அதற்கென ஒரு நல்ல சுவை வந்துவிடுகிறது என்று பாராட்டி விடுங்கள்

மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வேறுபாடு?
காதலி சிரித்தே நம் பர்சை காலி செய்வாள் ஆனால் மனைவி நம்மை திட்டி கொண்டே பர்சை காலி செய்வார்கள்.


மனைவியிடம் கன்னத்தில் அடிவாங்கிய கணவர்கள் அதை எப்படி வெளியே சொல்லுவார்கள்?
மச்சி நேற்று எனக்கு என் மனைவிக்கும் வாக்குவாதம் கடைசியில் கோபம் தாங்காமல் நான் என் கன்னத்தால் என் மனைவியின் கையில் ஒங்கி அடித்தேன் பாரேன் என் கன்னம் எந்த அளவிற்கு சிவந்து கிடக்கிறது பாவம் அவள் கையை நினைத்தால் எனக்கு இப்போ பாவமாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் ( ஹேய்ய்ய்ய் யாரது இது உங்கள் அனுபவமா என்று சத்தம் போட்டு கேட்பது..மெதுவாக சத்தம் போடாமல் கேளுங்கள் மக்கா அவள் கையில் மறுபடியும் அடிக்க என் கன்னத்திற்கு சக்தி இல்லை)

என்னங்க மதுரைத்தமிழனின் கேள்விபதில்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

19 comments:

  1. புதுமையாக சிந்திக்கிறீர்கள்.
    சிரிக்க வைக்கிறீர்கள் .
    புனைவு பிரமாதம்.

    ReplyDelete
  2. ஸ்ரவாணி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. //அமெரிக்காவில் கல்யாணம் ஆகி பெற்றோர்கள் கூட இருந்தால் அசிங்கம் ஆனால் இந்தியாவில் கல்யாணம் ஆகி பெற்றோர்களைவிட்டு வந்தால் அசிங்கம்//

    - அருமை. அழகு. அற்புதமான நகைச்சுவைச் சிந்தனை உங்களுக்கு. வார்த்தைகள் இயல்பாகவே நகைச்சுவை சாறு கொண்டுள்ளன. அரசியல், குடும்பம் என்று அனைத்தும் அருமையான கேள்வி பதில்கள். தொடருங்கள் சார்.

    ReplyDelete
  4. @துரைடேனியல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகவும் உற்சாகமுட்டுகின்றன நன்றிகள்

    ReplyDelete
  5. \\அமெரிக்காவில் அடிமைத்தனம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதா?\\ உலக நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் அடிமைகள் என்ற எண்ணம் அண்ணன் அமெரிக்காவுக்கு இருக்கிறது, அது ஈராக், ஆப்கானிஸ்தான் என்ற நாடுகள் மீது நேரடியாகவும் சில நாடுகள் மீது மறைமுகமாகவும் காட்டிக் கொண்டுதான் அண்ணன் இருக்கிறார்.

    ReplyDelete
  6. நல்லா யோசித்திருக்கீங்க. நகைச்சுவையான கேள்வி பதில்கள். நன்றி.

    ReplyDelete
  7. // அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும் //

    இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கணும்.

    ReplyDelete
  8. நல்ல ரசனையான படைப்பு அருமை அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கேள்வி பதில்கள் அனைத்தையும் மிக ரசித்தேன். வலிந்து திணிக்காமல் இயல்பாக நகைச்சுவை இழையோடியிருந்தது அருமை. அதிலும் அந்த கடைசி கேள்வி பதில்... ஹா... ஹா...

    என் சித்தி டாக்டர் கமலம் சங்கர் 1993 முதல் 2006 வரை மதுரைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்தார் என்பதை தாங்கள் அறியத் தருகிறேன். நீஙகள் அந்த பீரியடில் படித்தவரா?

    ReplyDelete
  10. அமெரிக்கன் உடல் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும் ஆனால் உள்ளமோ கருப்பாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் உடல் பார்க்க கருப்பாகவும் உள்ளம் வெள்ளையாக இருக்கும்

    அருமையான கேள்வி பதில் அசத்திடிங்க போங்க .

    ReplyDelete
  11. அம்மாவின் உணவை நீ ஊட்டிவிடும் போது அதற்கென ஒரு நல்ல சுவை வந்துவிடுகிறது என்று பாராட்டி விடுங்கள்-- நல்ல சிந்தனை...

    ReplyDelete
  12. Hilarious, different concept , please continue this question answer session.

    ReplyDelete
  13. கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! பின்னுாட்டம் மட்டும் அவரவர்களே!

    ReplyDelete
  14. நம்மூரில் அடிமைதனமே இல்லீங்களா...அப்புறம் சாதின்னு ஒண்ணு வைச்சிருக்கோமே அது எதுக்குங்க?

    என்னங்க இது இவ்வளவு கருப்பான உள்ளம் கொண்டவர்களுடைய ஊரில் எதுக்காக பொழப்பு நடத்தணும். வெள்ளை மனமுடைய இந்தியருடன் வசிக்க இந்தியாவிலேயே தங்கலாமே?

    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நம்மள அடிச்சுக்க ஆளே கிடையாது!

    ReplyDelete
  15. வைகோவுக்கும் ராமதாசுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
    வைகோ ஒரு ஏமாளி, ராமதாஸ் ஒரு கோமாளி

    உண்மைதான்

    ///என்னங்க மதுரைத்தமிழனின் கேள்விபதில்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?//

    ரெம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  16. தங்கள் கேள்வி பதில்
    மிக மிக அருமையாக உள்ளது
    மனதார ரசித்துச் சிரித்தேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர்ந்தால் மகிழ்வோம்

    ReplyDelete
  17. Good post. Keep it up. All the Best!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.