Wednesday, February 15, 2012




கலைஞரின் அதிகாரம் காற்றில் பறக்கிறதா????

கட்சியை வளர்த்து அதில் மிக அதிகாரமிக்க தலைவனாக கம்பிரமாக வளைய வளைய வந்த கலைஞர்  எப்போது தம் குடும்பத்திற்காக கட்சியை பயன்படுத்த தொடங்கினாரோ அப்போதே தன் கம்பிரத்தை இழக்க தொடங்கினார்.மக்களிடம் மதிப்பு இழக்க தொடங்கிய அவர் இப்போது கட்சிகாரர்களிடமும் மதிப்பு இழக்க தொடங்கியுள்ளார்.

கட்சி கட்டுபாடுகளையும் கொள்கைகளையும் பின்பற்றாதவர்களை தூக்கி எறிந்த அவர் இப்போது கட்சி கட்டுபாடுகளை மிறுபவர்களை வேடிக்கை பார்க்க தொடங்கியுள்ளார்.

இதற்கு உதாரணம்தான் இப்போது சேலம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. கட்சி தலைமை அறிவிப்புபடி ஒவ்வோரு ஊரிலும் இளைஞர் அணிக்கு ஸ்டாலின் ஆள் சேர்க்கும் போது என் பகுதியில் நான் தான் தேர்ந்தெடுப்பேன் என்று விரபாண்டி ஆறுமுகம் அறிவித்து செயல்பட்டுள்ளார். அவருக்கு முரசொலியில் மூலம் அப்படி செய்யக்கூடாது என்று அறிவுருத்தப்பட்டுள்ளதே தவிர அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

என்னுடைய பகுதியில் வேறு யாரும் நுழையக் கூடாது என்று விரபாண்டியார் துணிந்து போர்க்கொடி தூக்க, அதற்கு முரசொலியில் பெட்டிச் செய்தி போட்டுத் தலைமை அறிவுறுத்தி இருப்பது கட்சியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுபோல அதிமுகவில் நடந்திருந்தால் ஜெயலலிதா தயவுதாட்சண்யமில்லாமல் கட்சியிலிருந்தே வெளியேற்றப்பட்டிருப்பார். அந்த தைரியம் கலைஞருக்கு இல்லையே என்பதுதான் இப்போது தொண்டர்களிடயே பரவலாக நடக்கும் பேச்சாக இருக்கிறது..

தொண்டர்களின் கட்சியாக இருந்த திமுக இப்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது. இதை எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை. பூனைக்கு யாரு மணிகட்டுவது என்று யோசிக்கும் நேரத்தில் நான் தைரியமாக வந்து கட்டுகிறேன் என்று வீரபாண்டி ஆறுமுகம் வந்துள்ளார். ஆனால் இவர் பரிதி இளம்வழுதி போல அமைதியாக செல்லமாட்டார் என்று திமுக வட்டாரத்தில் பேசபடுகிறது. கலைஞரை  நேசிக்கும் இவர் எந்த நேரத்திலும் அதிமுக அமைச்சர்களை போல தன்மானம் இழந்து அடிபணிந்து வாழமாட்டார் என்பது உறுதி

உண்மையில் கலைஞரின் அதிகாரம் காற்றில் பறக்கிறதா அல்லது அவரை எதிர்பவர்கள்தான் காற்றில் பறக்க போகிறார்களா என்பதை தொண்டர்களும் மக்களும் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.