உண்மைகள் சிரிக்கின்றன இங்கே......
1. நாம் வெற்றிக்கான திறவுகோலை (சாவி)கண்டுபிடிக்கும் போதுதான் எவனோ ஒருவன் வந்து பூட்டை மாற்றிவிடுகிறான்.
2. நாம் செல்லும் போதும் மட்டும் வெற்றிக்கான பாதைகள்...எப்போதும் அன்டர் கன்ஸ்டிரக்ஷனாகவே ( Under construction )உள்ளது.
3. ஆல்கஹால் அருந்துவதால் எந்த வித பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அதேதான் பால் குடித்தாலும் எந்த வித பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது.
4. நாம் வாழ்க்கையில் விரும்புவைகள் எல்லாம் ஒன்று விலை அதிகமாக இருக்கிறது அல்லது தடை செய்யப்பட்டவைகளாகவும் இல்லையென்றால் உடலை பெருக்க வைக்க கூடியதாகவும் உள்ளது. ஹும்ம்ம்ம்
5. பேங்கிலிருந்து உங்களுக்கு லோன் வேண்டுமென்றால அந்த பேங்கிற்கு சென்று உங்களுக்கு லோன் தேவையில்லை என்பதை ஆதார பூர்வமாக நிருபியுங்கள் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
6. எல்லோரும் பணக்காரனாக திட்டம் வைத்து இருக்கிறோம் ஆனால் அது வொர்க் ஆவதில்லை.
7. ஏதாவது நம் கையில் இருந்து கிழே விழுந்தால் அது எப்போதும் எளிதில் எடுக்கமுடியாத ஒரு மூலையில்தான் போய் விழுகிறது.
.
8. நாம் சீக்கிரம் பஸ் ஸ்டாப்புக்கு வந்தாலும் பஸ் லேட்டாகவே வருகிறது... நாம் லேட்டாக பஸ் ஸ்டாப்புக்கு வந்தாலும் அப்பொழுதும் லேட்டாகவே வருகிறது.
9. நாம் எப்போது ஒரு பொருள் வாங்கினாலும் அதை வாங்கிய பிறகுதான் அதே பொருள் இன்னொரு இடத்தில் மிக மலிவாக கிடைப்பது நமக்கு தெரியவரும்.
10. நம்மிடம் பேப்பர் இருக்கும் போது பேனா இருக்காது , பேனா இருக்கும் போது பேப்பர் இருக்காது ஆனால் இரண்டும் இருக்கும் போது எழுத ஓன்றும் இருக்காது.
11. நாம் ஆபிஸுக்கு எப்போது லேட்டாக போவோமோ அன்றுதான் எப்போதும் லேட்டாக வரும் நமது மேனேஜர் சிக்கிரம் வந்து நம் கழுத்தை அறுப்பான்.
12. நாம் காரில் எங்கையாவது போகும் போது நாம் போகும் சாலை மட்டும் மிக டிராபிக்காகவும் ஆனால் எதிர் சாலை மட்டும் எப்போதும் காலியாக இருக்கும்.
13. நாளை நமக்கு தேர்வு என்றால் இன்று இரவு நிச்சயம் பவர் கட் இருக்கும்.( ஹீ.ஹீ இப்போது இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது).
14. நாம் பாத்ருமில் இருக்கும் போதுமட்டும்தான் நம் வீட்டின் வாசல் பெல்லும் அல்லது செல்போன் பெல்லும் ஒலிக்கும்.
15. சிகரெட் பிடிப்பவர்கள் விடும் புகை எப்போதும் சிகரெட் பிடிக்காதவர்கள் மூஞ்சி இருக்கும் திசையில் மட்டும் போகும்.
என்னங்க நான் சொன்னது எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்த உண்மைகள்தானே. நான் சொல்ல மறந்த உண்மைகள் உங்களுக்கு தெரிந்தால் பின்னுட்டமாக சொல்லாமே!!!!!!
தத்துவ உண்மைகள் சிரிக்க .... சிந்திக்க ...
ReplyDeleteசுவை. அருமை.
8 முதல் 12 வரையிலான அனைத்து விஷயங்களையும் வரிக்கு வரி ஆமோதித்து ரசித்தேன். அருமையான பகிர்வு. ஆனா கடைசி படத்துல சொல்லியிருக்கிற கவலை மட்டும் எனக்கில்லை. ஏன்னா... நான் யோசிக்கிறதே இல்லையாக்கும்...
ReplyDelete@ஸ்ரவாணி உங்கள் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி
ReplyDelete@கணேஷ் சார் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//8 முதல் 12 வரையிலான அனைத்து விஷயங்களையும் வரிக்கு வரி ஆமோதித்து ரசித்தேன்/////
உங்கள் மேனேஜர் போன் நம்பர் தருகீறிர்களா அவரிடம் உங்களுக்கு 11 விஷயம் பிடித்து இருக்கிறது என்று சொல்லனும்.
எனது எழுத்துக்கள் உங்களைப் போல உள்ள பெரியவர்களையும் ரசிக்க வைத்தன என நினைக்கும் மிக சந்தோஷமாக இருக்கிறது
பார்ரா...ம்.
ReplyDeleteஉண்மைகள் சிந்திக்க வேண்டியவை
மிகவும் உண்மை&ரசித்தேன்.
ReplyDelete*ஒன்றைத் தேடும்போது் அது கிடைக்குதோ இல்லயோ இதற்குமுன் தேடிய ஒன்று கிடைத்துவிடும்.
*நமக்கு எதாவது வேலை இருக்கும்போதுதான் யாராவது வருவார்கள்.
*சற்று சோம்பேறித்தனமாக என்று வீட்டை சுத்தமில்லாமல் வச்சிருக்கமோ அப்பதான் யாராவது வருவார்கள்.
இன்னும் நிறைய இருக்கு,இத வச்சே நானும் ஒரு பதிவிடலாம் போலருக்கே.....
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உண்மையின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஎப்படிங்க இப்படியெல்லாம் பதிவு போடுறீங்க.அருமை பிரமாதம்
ReplyDeleteஉண்மையில் உண்மைகள் சிரிக்கத்தான் வைத்தன.
ReplyDeleteஅனைத்தும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது
ReplyDeleteஎல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் போலவும் தெரிகிறது
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
@மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களின் கருத்து மனசாட்சியின் கருத்தாக வந்திருக்கிறது. சிந்தித்தால் உண்மைகள் பிறக்கும் என்பது உண்மைதான்
@திருமதி BS ஸ்ரீதர் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களை இந்த பதிவு ரசிக்க வைத்தது என்பதில் எனக்கு சந்தோஷம்
///இன்னும் நிறைய இருக்கு,இத வச்சே நானும் ஒரு பதிவிடலாம் போலருக்கே.....///
போடுங்கள். இது ஒரு தொடர் பதிவாக ஆகட்டும். நீங்கள் பதிவு போட்டால் அதற்கான லிங்கை அனுப்புங்கள்
@இராஜராஜேஸ்வரி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி
@DhanaSekaran .S உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//எப்படிங்க இப்படியெல்லாம் பதிவு போடுறீங்க.அருமை பிரமாதம்//
ஏட்டிக்கு போட்டியாக அல்லது குண்டக்க மண்டக்க யோசித்தால் பதிவுரெடியாகிவிடும் நண்பா
@மதுமதி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDelete//உண்மையில் உண்மைகள் சிரிக்கத்தான் வைத்தன.// சில உண்மைகள் சிரிக்க வைக்கும் ஆனால் சில உண்மைகள் கேலி சிரிப்பாக போகிவிடும் என்பதும் உண்மை
@ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇந்த பதிவை படிப்பதின் மூலம் நீங்க ரொம்ப அடிப்பட்டு இருக்கீங்கன்னு தெரியுது சகோ
ReplyDeleteஎன் கணவர் இதை வரிக்கு வரி படித்து ரசித்துச் சிரித்தார்...
ReplyDeleteமர்பி மொழி ஸ்டைலில் கலக்கறீங்க போங்க ....