வலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் சாருவும், வலைத்தள விருதுகளை பெறும் பதிவாளர்களும்
*****//நான்இன்று விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்குப் பின்னே என்னுடைய 35 ஆண்டுக்கால உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பு எதுவும் இல்லாமல் நொடியில் ஒரு ப்ளாகை ஆரம்பித்துவிட்டு அதில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்க்ளைப் போல் இஷ்டப்படி எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்கள். சினிமா, அரசியல்,சமூகப் பிரச்சினைகள் என்று எதையுமே விட்டு வைப்பதில்லை. அது மட்டுமல்ல; இரண்டு ஆண்டுகளாக ப்ளாகில் எழுதுபவர்நானும் என் சக எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?// *****
வலைப்பதிவாளர்களை பொருத்தவரை ஒரு பைசா லாபம் கூட இல்லாமல், தன் சுய புகழ் பாடாமல், விருது பெறும் ஆசை கூட இல்லாமல், மிகச் சிறந்த கருத்துகளையும், சிந்தனைகளையும் மற்றும் எவ்வளவோ பெரிய விஷயங்களை கூட மிக எளிமையாக சில வரிகளில் தமது வலைத்தளத்தில் எழுதி விட்டு அமைதியாக சென்றுவிடுகிறாரகள்.
ஆனால் ஒரு எழுத்தாளர் தானே மிக சிறந்த எழுத்தாளன் ,இலக்கியவாதி என்று சுயதம்பட்டம் அடித்து மற்ற சக எழுத்தாளர்களையும் மற்றும் பதிவாளர்களையும் (அவருக்கு சொம்பு தூக்கும் பதிவாளர்களை தவிர) மட்டம் தட்டி பேசி கொண்டு இருக்கிறார். அதிலும் யாராவது விருதுகள் வாங்கிவிட்டால் இவருக்கு மனம் பொறுக்காது.
வலைத்தள பதிவாளர்கள் என்றால் அவருக்கு ஒரு இளக்காரம்.அவருக்கு நான் சொல்லி கொள்வதெல்லாம். ஒரு வலைத்தள பதிவாளராகவோ அல்லது சமூக சிந்தனையாளனாகவோ இருக்க இலக்கியம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லை . அது போல இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லோரும் சிந்தனையில் சிறந்தவர்கள் என்றும் இலக்கியம் தெரியாதவர்கள் சிந்தனையற்றவர்கள் என்பதும் இல்லை. மொழிக்கும் சிந்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
உங்களுக்கு மொழி நடை,உவமானங்கள் கையாள தெரிந்திருக்கலாம் ஆனால் அதிமேதாவிகளை போல எண்ணும் உங்களை சிறந்த சிந்தனையாளன் என்று கருத முடியாது . சிறந்த சமூக நோக்கில் எழுதும் வலைப்பதிவாளர்கள் அநேக பேர் வலைதளம் வைத்து நடத்தி வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அநேக மக்களுக்கு தெரிந்து இருக்கிறது.
இலக்கியவாதி என்ற போர்வையில் வெறும் மொழியின் ஆற்றலையும் வசன கையாடல்களையும் வைத்துக்கொண்டு நான்தான் அகில உலகத் தமிழ் இனத்தின் சிறந்த எழுத்தாளன் என்று நீங்கள் குடித்து விட்டு உளர்வது உங்கள் அடிபொடிகளுக்கு வேண்டுமானால் அதிசயமாக ஆச்சிரியமாகவும் இருக்கலாம் ஆனால் நகைப்புக்கு இடமானது என்பது உங்களுக்கு போதை தெளியும் போது புரியும் என்று நினைக்கிறேன்.
எல்லோரும் என் பெயரை சொல்ல வேண்டும் என்னை கவனிக்க வேண்டும் என்னையையே பற்றி பேச வேன்டும் என்று கோணல்மானலாக சிந்தித்து எழுதும் அவருக்கு ஓன்று சொல்ல விரும்புகிறேன் ரோட்டில் குடித்துவிட்டு ஆட்டம் போடுபவனை எல்லோரும் பார்க்கிறார்கள் அல்லது அவனைப்பற்றி பேசுகிறார்கள் என்பதால் அவன் மிக சிறந்த மனிதனாக இருக்க முடியாது.
ஓகே மக்காஸ் நான் பதிவை எழுத ஆரம்பித்ததே சிறந்த பதிவாளர்களை அடையாளம் காட்டி அவர்களுக்கு எனது வலைத்தளம் மூலம் விருது கொடுக்க வேண்டும் என்றுதான். இதை நான் நீண்ட நாட்களாக நினைத்து இருந்தேன். இது அவார்டு வழங்கும் சீஸனாக நான் கருதுவதால் இதை இப்போது வழங்குகிறேன். ஆனால் விருது என்றதும் ஒரு நாகரிகமற்ற ஒரு எழுத்தாளன் நினைவுக்கு வந்ததால் இந்த பதிவு மிக நீளமாக போய்விட்டது.
நான் எனது வலைத்தளம் மூலம் முதலில்இரண்டு நபர்களுக்கு விருதை அறிவிக்கிறேன். இந்த இருவரில் யாருக்கு முதலில் விருது வழங்குவது என்பதில் சிறிது குழம்பிதான் போனேன். ஏனென்றால் இருவரும் மிகவும் தரமான கருத்துகளை மாறுபட்ட விதத்தில் வழங்குவதால் ஏற்பட்ட குழப்பம். சிறிது யோசித்ததில் எனக்கு விடை கிடைத்தது. எப்போதும் பெண் முதலில்(Ladies First) என்ற மரபை பின்பற்றி எனது தளத்தின் முதல் விருதை பெறுபவர் மகிழம்பூச்சரம் என்று வலைத்தளம் நடத்தி வரும் திருமதி.சாகம்பரி (பேராசிரியர்) அவர்களுக்கு வழங்குகிறேன். அதற்கு அடுத்தபடியாக யாதோரமணி (தீதும் நன்று பிற தர வாரா) என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் உயர்திரு.ரமணி அவர்களுக்கு இரண்டாவதாக வழங்குகிறேன்
Click the picture to see LARGE size |
இந்த விருதுகளை நான் வழங்குவதன் நோக்கம் தரமான எழுத்துகளையும் சிந்தனைகளயும் அள்ளி தரும் இவர்களை என் தளம் மூலம் மேலும் பலருக்கு அறிமுகப்படுத்துவதுமே ஆகும். இதனால் அவர்கள் மட்டுமல்ல நானும் எந்த லாபத்தையும் அடைய போவதில்லை. லாபம் அடைவதென்றால் அவர்களின் தரமான கருத்துகளை படிக்கும் நீங்கள் தான்.
மேலும் பல சிறந்த வலைதளங்களுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்படும். உங்களுக்கு தெரிந்த நல்ல வலைத்தளங்களை பின்னுட்டம் மூலம் எனக்கு அறிமுகப்படுத்தலாம்.. அந்த வலைத்தளம் சிறந்த தளமாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
முடிந்தால் இந்த பதிவை அல்லது இவர்கள் இருவரையும் உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் செயல்களும் நல்லவையாக இருக்கும் என்று நினைப்பவன் நான். அதனால் நாம் வலைத்தளத்தில் நல்லதை நினைத்து நல்லதை செய்து நல்ல விதைகளை பதிவுகளாக வருங்காலத்திற்கு இட்டு செல்வோம்.
நன்றி.
எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை
ReplyDelete125 பதிவுகளுக்கு மேலாக வாழ்வியல் குறித்த
அனைவருக்கும் பயன்படும் ஒரு உணர்வு, ஒரு நிகழ்வு ,
ஒரு செய்தி ,அல்லது ஒரு லாஜிக் இப்படி ஏதாவது ஒன்று
இல்லாமல் ஒரு பதிவு கூட எழுதியதில்லை
வாழ்வில் மிகக் கடினமான முயற்சியில் கற்றுக் கொண்டவைகளை
தெரிந்து கொண்டவைகளை எத்தனை எளிமையாகத் தர முடியுமோ
அத்தனை எளிமையாக தர முயன்று கொண்டிருக்கும் எனக்கு
தங்கள் விருது உண்மையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது
நான் நல்ல பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என
எனக்கு உறுதி தருவதாகவும் உள்ளது
தங்கள் அங்கீகாரத்திற்கும் விருதிற்கும் மனமார்ந்த நன்றி
ரமணி சார் நன்றி நாங்கள்தான் உங்களுக்கு சொல்ல வேண்டும். யாரும் குறை சொல்ல முடியாத எழுத்துக்கள். சில சமயங்களில் ஈழுதி என்னடா நாம் கண்டோம் என்ற ஒரு வித அலர்ச்சி ஏற்படும். அது உங்களை போன்றவர்களுக்கு வந்துவிட கூடாதே என்பததே என்னை போன்றவர்களின் கருத்து. பெரியவாரான உங்களை தட்டி கொடுக்கும் வயது எனக்கில்லை என்பதால் இந்த சிறு பாராட்டை எனது வலைதளம் மூலம் உங்களுக்கு தெரிவித்தேன். புரிந்து கொண்டதற்கு மிக மகிழ்ச்சி சார்
ReplyDeleteNalla ennam.
ReplyDeleteNalla sindhanai
Vaalthukkal nanbare
சாருவின் கருத்தை விமர்சித்ததற்கும் நல்ல பதிவர் இருவருக்கு விருது கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாருநிவேதிதா ஒரு சாதாரண மாதநாவல்களில் துப்பறியும் மட்டரகமான கதையை எழுதிக்கொண்டிருந்தவர், இன்று இலக்கியவா(ந்)தியாகிவிட்டார். சிறிது காலம் பாலியல் தொழிலாளி ஒருவரின் சுயசரிதைக்கு உதவிக்கொண்டு இருந்தார் மலையாள கரையோரம், ஒரு நல்ல எழுத்தாளர் என்றால் வலைபதிவர்களை ஊக்குவிக்கவேண்டும் இவர் வலைபதிவர்களை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது கமெண்ட் பாக்ஸ் வைக்க கூட தைரியமில்லாத கோழை!
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
மிக மிகத் தேர்ந்த வலைப்பூ வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளுக்கு மிகவும் நன்றி. அவர்கள் சோர்ந்து போய்விட்டால் நமக்கெல்லாம் ஊக்கமூட்டுபவர்கள் யார்? மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியானவர்களுக்கு மிகச் சரியான காரணத்தால் வழங்கப்படும் இவ்விருதுகள் மிகச் சரியானவர் கரங்களால் வழங்கப்படுவது சிறப்புக்குரியது. தங்களுக்கும் தங்களால் விருது பெறும் தோழி சாகம்பரி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய ரமணி சார் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதகுதியான வலைப்பூக்களுக்கு பொருத்தமான விருதுகள்..
ReplyDeleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்....
@பாபு
ReplyDelete@சே.குமார்
@வீடு. சுரேஸ்
@கீதமஞ்சரி
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
நல்லவர்கள் சொல்லும் விஷயங்களை நாலு பேருக்கு எடுத்து சொல்ல வேண்டும் அது போல கெட்டவர்களை பற்றியும் சொல்ல வேண்டும் அப்போதுதான் யார் நல்லவன் கெட்டவன் என்பது எல்லோருக்கும் எளிதில் தெரியும். அந்த முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
சாருவை பற்றிய உங்கள் கருத்துக்கள் பலரின் கருத்துக்களாக இருக்கிறது....
ReplyDeleteஒருவனை ஒருவன் மட்டம் தட்ட நினைத்தாலே அவன் தன்னை சிறந்தனவாக காட்டிக்கொள்வது முட்டாள்தனம்.
ஒருவரை ஊக்கப்படுத்த நினைக்காவிடினும் பரவாயில்லை.. குறைந்த பட்சம் வாய் மூடிட்டாவது இருக்கலாம்..
எல்லாரும் பிறந்ததும் அதிமேதாவி அல்ல.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
@நிகழ்கால சிவா
ReplyDelete@ ஆமினாம்மா
உங்கள் இருவரின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி.. வாழ்க வளமுடன்
சிறந்த விருது வடிவமைப்பு & சிறந்த தேர்வுகள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும் !
உங்கள் ஊக்கம் அருமை MTG !
எவருக்கும் புரியாதபடி எழுதுபவனும் தன் மனவிகாரங்களை, காம இச்சைகளை எழுத்தின் மூலம் தணித்துக் கொள்பவனும் எழுத்தாளர்கள் அல்லர். தகுதி பெற்ற பல ஜீனியஸ்கள் இணையத்திலும் உண்டு. சாகம்பரி மேடத்தின் எழுத்தும், ரமணி ஸாரின் எழுத்தையும் படித்து வியந்து, பிரமித்திருக்கிறேன் நான். நீங்கள் அவர்களுக்கு கொடுத்த விருதை எனக்குக் கிடைத்தது போல் மகிழ்ந்து உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
ReplyDeleteதங்களுக்கு மிக நல்ல உள்ளம். வாழ்க!
ReplyDeleteஉங்கள் விருது மூலம் அருமையான இரண்டு வலைதள்த்தைப் பற்றி தெரிந்த்து கொண்டேன். நன்றி...
ReplyDeleteவிருது பெற்ற திருமதி.சாகம்பரி (பேராசிரியர்)அவர்களுக்கும், ரமணிசார் அவர்களுக்கும் விருது கொடுத்தவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteகொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய விருது, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...நண்பா சாரு தன்னை பெரிய உளுத்தம்பருப்புன்னு நெனச்சிகிட்டு இருக்காரு போல ஹிஹி விட்டு தள்ளுங்க...!
ReplyDeleteவிருதிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.... (ரொம்பவும் சாதாரணமாக இதை சொல்லவில்லை)
ReplyDeleteஊக்குவிக்கும் பின்னூட்டங்கள் மூலம் என்னுடைய எழுத்து பணியை மேன்மை மிக்கதாக ஆக்கியதுடன் ஒரு அழகிய சிறப்பான விருதும் தந்து மகிழ்வுற செய்துவிட்டீர்கள்.
முழு ஈடுபாட்டுடன் பதிவுகளை எழுதுவதற்கு அமைதியான மனநிலை தேவைப்படுகிறது. உண்மையை சொல்லப் போனால் சமீபத்தில் பல்வேறு மாறுபட்ட சூழ்நிலைகளினால் என்னுடைய எழுதும் வேகம் குறைந்துவிட்டது. இது போன்ற பாராட்டுக்கள் என்னை புத்துணர்வு பெற வைத்துள்ளன.
100% உத்தரவாதம் தந்துள்ளதை எனக்கு முன் வைக்கப்பட்ட கைகாட்டி பலகையாக கொண்டு தரமான பதிவுகளை தந்து பதிவுலகத்தில் பயணிப்பேன். மீண்டும் நன்றி.
தன்னுடைய சிறப்பான சிந்தனைமிக்க பதிவுகளின் மூலம் என்னை கவர்ந்த திரு.ரமணி சாருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னைப் போன்ற பெண்கள் எழுத முடியாத அலச முடியாத தர்க்க ரீதியான விசயங்களை 'அவர்கள் உண்மைகள்' மூலம் படிக்க முடிகிறது. ஒரு வாசிப்பாளராக என்னால் அக்கரையுள்ள பதிவுகளை இவ்விடம் பார்க்க முடிகிறது. அனைத்தயும் படிக்கிறேன். முடிந்த போது பின்னூட்டம் இடுகிறேன். நன்றி.
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. என்னைப்போன்ற மொக்கை பதிவர்களுக்கு விருது இல்லையா? ஹி ஹி
ReplyDelete@ஸ்ரவாணி உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி..
ReplyDeleteநான் டிஸைன் செய்த விருதையும் அதனை பெற்றவர்களை பாராட்டியதற்கும் மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்
@கணேஷ் உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDeleteரமணி சார், சாகம்பரி மேடம் பெற்ற விருதை நீங்கள் பெற்ற விருதாக நீங்கள் கருதியாக சொன்னது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது இந்த பெறும்மனாப்பான்மை சாருவுக்கு இருந்து இருந்தால் அவர் மிகவும் போற்றதக்க மனிதராக இருந்து இருப்பார்
@பரமசிவம் உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete@ 'எனக்கு பிடித்தவை" வலைத்தள உரிமையாளரே உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete@தனசேகரன் உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete@நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி
ReplyDelete@விக்கி உலகம் உங்களின் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிகவும் நன்றி சாருவின் நினைப்புதான் அவர் பிழைப்பை கெடுக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை நண்பா
ReplyDelete@சாகம்பரி மேடம்
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி. விருதை நீங்கள் ஏற்றுகொண்டதால் உங்களை விட அந்த விருதுக்குதான் மதிப்பு கூடுகிறது.உங்களின் எழுத்துக்கு முன்னாள் இது ஒன்றுமில்லை. ஒன்றுமட்டும் நிச்சயம் உங்கள் எழுத்து பத்திரிக்கை உலகில் பெயர் சொல்லும் இடத்தை பிடிக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
@சாகம்பரி
ReplyDelete//ஒரு வாசிப்பாளராக என்னால் அக்கரையுள்ள பதிவுகளை இவ்விடம் பார்க்க முடிகிறது. அனைத்தயும் படிக்கிறேன்//
இதுதான் நான் பெற்ற விருதுவாக நினைக்கிறேன் நன்றி.
அதுமட்டுமல்லாமல் பெண்கள் பலரும் வந்து படிக்கும் வலைதளமாக இருப்பதால் தரம் குறைவாக இல்லாமல் இருப்பதற்கு நன்கு கவனம் செலுத்துகிறேன்
@சி.பி செந்தில் குமார் நீங்கள் பெற்ற நண்பர்கள்தான் உங்களுக்கு கிடைத்த "பெரிய விருது" அதைவிட வேற என்ன விருது வேண்டும் நண்பரே
ReplyDeleteமிக சிறப்பான எழுத்துக்களுக்கும், முயற்சிக்களுக்கும், சிந்தனைகளுக்கும் எப்படி நன்றி சொல்வது என்று முழித்துக் கொண்டிருந்தேன்.
ReplyDeleteநல்ல முயற்சிகளை விருது வழங்கி ஊக்குவிக்கும் தங்களின் சேவை பாராட்டுக்குரியதாகும். தன்னலம் கருதாத தங்கள் உழைப்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
கீழ்கண்ட வலைபதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
அரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் உருவாகும் முழு மகாபாரதம்...
http://mahabharatham.arasan.info/
முழு மஹாபாரதம்
கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட "The Mahabharata" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்... தயாரிப்பில்...)