Monday, February 6, 2012



வெட்கம் கெட்ட தலைவர்கள் இப்போது வெட்கப்படுகிறார்கள்.

2011-ல் கொலைவெறி என்ற வார்த்தை மிக பிரபலம் அதுபோல 2012 வெட்கப்படுகிறேன் என்ற வார்த்தை மிக பிரபலமாக தமிழகத்தில் உலாவி வருகின்றது, அந்த வெட்கத்தை நாம் இங்கே கொஞ்சம் பார்ப்போம்.


தேர்தலுக்கு முன்பு தன் கூட இருந்தவர்களை வெட்கப்படாமல் வெளியே அனுப்பி வைத்துவிட்டு, கருப்பு எம்ஜியாருடன் கூட்டு வைக்க வெட்கத்துடன் காத்து இருந்து, தான் நேரில் பார்த்து பேச வெட்கப்பட்டு, பல தூது அனுப்பி ,கூட்டு சேர்ந்து ஆட்டம் போட்டு இப்போது கருப்பு எம்ஜியாருடன் கூட்டு சேர்ந்ததுக்ககாக வெட்கப்படுகிறேன் என்று வெட்கப்படாமல் சொல்கிறார் இந்த ஜெயலலிதா.

இப்படி சொல்ல ஒரு தலைவருக்கு வெட்கமாய் இல்லை??


இன்னொரு தலைவரோ பொதுக்கூட்டத்தை கூட்டி தன் பிள்ளைகள் கட்சியை குடும்ப சொத்தாக நினைத்து தான் மடியும் முன்னே அதை பாகம் பிரிக்க அடித்து கொள்கிறார்களே என்று பொதுக்குழுவின் முன்னால் வெட்கப்பட்டு போய் கண்ணிர் விட்டு அழுகிறார்.
எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?

இப்படிபட்ட  நபர்களைத்தான் நாம் தலைவராக கொண்டிருக்கிறோம் என்று அப்பாவி தமிழக மக்கள் வெட்கப்பட்டு தலை குனிந்து உள்ளனர்.


என் மனதில் தோன்றிய வெட்கங்களை இங்கே பதிவாக தந்துள்ளேன். நீங்கள் பார்த்து வெட்கபட்ட விஷயங்களை உங்களுக்கு நேரம் இருந்தால் பின்னூட்டமாக இடுங்கள் அதை மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்

 ------------------------------------------------------------------------------------------------------------------
படிக்காதவர்கள் படிக்க மிக நல்லபதிவு இது .படிக்கதவறாதீர்கள்


இதற்கு பின்னுட்டத்தில் கருத்துக்கள் சொன்ன பிரபலங்கள் :

எண்ணங்கள் சாந்தி :பெண்களுக்காகவும் பெண்ணுரிமைக்காக போராடுபவர்.
ரமணி சார் : தரமான மாறுபட்ட சிந்தனைகளை கவிதை வடிவில் தருபவர்
இக்பால் செல்வன் : மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட இளைஞன்
தேனம்மை லெக்ஷ்மணன் : வலைத்தளங்களிலும் பத்திரிக்கை உலகிலும் பலதரப்பட்ட விஷ்யங்களை எழுதி வரும் பெண்.
சாகம்பரிதமிழகத்து பேராசிரியர் பல தரமான பதிவுகளை இடுபவர். பெரும் மதிப்புகுரியவர்
ஹீசைனம்மா : தரமான பதிவுகளை தரும் பலருக்கும் அறிமுகமான இஸ்லாமிய பெண்மணி


இவர்கள் சொன்னது கருத்து அல்ல அவர்கள் என் பதிவிற்கு தந்த அவார்டுகள்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.




1 comments:

  1. சும்மா நச்சுன்னு வெட்கம் இல்லாதவர்களை பற்றி சொன்ன உங்க நேர்மை பிடிச்சிருக்கு மக்கா...!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.