உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, April 28, 2011

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா


சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

மனிதயுகம் தோன்றியதிலிருந்து இந்த கணணி யுகம் வரை மனிதன் வளர்ந்து நிறைய மாறி விட்டான். ஆனால் அவன் இன்னும் பெண்களை அடக்கியாளும் தன்மையிலிலும், சிறுமைப்படுத்தும் தன்மையிலிருந்தும் இன்னும் சிறிது கூட மாறவில்லை .

இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த ஆண்கள் ஏன் இன்னும் பெண்கள் விஷயத்தில் பின் தங்கியுள்ளார்கள். முக்கியமாக ஏசியா நாடுகளில் ( இந்தியா, இலங்கை சீனா,) உள்ள ஆண்கள் எப்பொழுதும் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்று நினைக்கிறார்கள். இந்த மாதிரி எண்ணங்களை பெண்கள் மனத்திலும் விதைத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடை பெற்று வரும் இந்த அநாகரிக செயல்களால் பெண்களும் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாரகள். இதில் எப்போது, எப்படி யாரால் மாற்றம் வரும்?


அந்த காலத்திலிருந்து இந்தகாலம் வரையுள்ள வேதங்கள் ,அறிஞர்கள் அல்லது கவிஞர்கள் ஆகட்டும் பெண்கள் விஷயத்தில் ஒரு தலைப் பட்டசமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே அதற்கு சில உதாரணம் கூறலாம்

ரிக் வேதத்தை பார்த்தால் அதில் பெண் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறது..."பெண்ணே! உன் கண்கள் நிலத்தை மட்டுமே பார்க்க வேண்டும். தலை நிமிர்வது குற்றம்.கால்களை குறுக்கி நட, கால் அகல விரித்து உட்காராதே, முகத்தை மறைத்து முக்காடு இட்டுக்கொள்" என்று நிற்பதில் இருந்து உட்காரும் வரையில் பெண்ணின் செயல்களை சமயம் தீர்மாணிக்கிறது

புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே என்ற பாடலில் கணவரின் வீட்டுக்குப் போகும் பெண்ணுக்குதான் எத்தனை எத்தனை புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.எங்காவது , யாராவது மனைவி கூட வாழப் போற கண்ணா உனக்கு சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணா என்று எழுதியிருகிறார்களா? பழகத் தெரியவேண்டும் பெண்ணே...என்ற பாடல் கூட ஒரு பெண்ணுக்குத்தான் எழுதியிருக்கிறாரகள். ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?இன்னு இது போல பலப் பாடல்கள் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித்தருகின்றன. அப்படியென்றால் ஆண்கள் எல்லாம் தெரிந்தவர்களா அவர்கள் வரைமுறை இல்லாமல் எப்படியும் வாழலாமா?என்னடா நியாம் இது

ஆனால் பாருங்கள், இன்று நம் சமுகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பெண்ணை அடங்கியவளாக பலவீனமானவளாக, தைரியமில்லாதவளாகவே திரைப்படங்களிலும் அல்லது வாழ்க்கையிலும் ஒரு தோற்றத்தை கொடுக்க முற்படுகிறார்கள்

இது என்ன நியாயம்? இந்த படித்த இளம் பெண்கள் உள்ளூக்குள் வெந்து தன் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது பொங்கிவரும் கண்ணீரையும் தமக்குள்ளே பூட்டி வைத்து பொருமி... பொருமி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே! என்று எப்படி இந்த நிலமைமாறும் .!பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் உணர்ர்சிகள் ஏதுமில்லாமல் வாழ்கிறார்கள்?

இந்தக் கலாச்சாரங்கள், பண்பாடுகள் நமக்கு மேல் திணிக்கப் பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே நமது பெண்கள் இன்னும் இதை போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே! இனியாவது இந்த இளம் படித்த பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண்... தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண்... அடங்கிப் போக வேண்டிய நிலமை ஏன்?

பெண்கள் குறித்து பெரியார் சொன்னது நம் தமிழ்ப்பெண்கள் நாட்டுக்கு, சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கும், ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்கும் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதும் தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? என்பது எல்லாவற்றையும் நம் குடும்ப பெண்கள் என்பவர்கள் கருதாமல்,புகழ், வீரம், பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல், தாங்களும் ஆக வேண்டும் என்றில்லாமல், இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமூதாயத்தின் கீழ்ப்போக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்."

இவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதானே...?

பெண்களே! இப்போது நீங்கள் நினைக்கலாம் நாம் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் இருப்பதால்,நாம் விடுதலை பெற்று விட்டோம் என்று. ஆனால் அதுதான் இல்லை என்று நீங்கள் போலிச் கலாச்சார சம்பிரதாயங்களையும் அநாவசியமான ஆடம்பர பழக்க வழக்கங்களையும் தூக்கி ஏறிகிறீர்களோ அப்பதுதான் நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியை தொட ஆரம்பிக்கிறீரகள் என்று அர்த்தம். மேலும் முக்கியமாக, உங்கள் குழந்தைகளை ஆண் பெண் என்று பேதமில்லாமல் சரிசமமாக வளருங்கள்.

பரதநாட்டியத்திற்கும்,சங்கீதத்திற்கும், சமையற்கலைக்கும் அதிமுக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தற்காப்புக் கலைகளுக்கும், வீரக்கலைகளுக்கும் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? பெண்ணுரிமை பேசும் பெண்கள் கூட தன்னுடைய பெண்பிள்ளைகளுக்கு வீர
உணர்ச்சியும், தைரியத்தையும் உருவாக்க முற்படுவதில்லை. உரிமையும், சுதந்திரத்தையும் பேசுவது தான் பெண்ணுரிமையா? சிகரெட் பிடிப்பதும், தண்ணீ அடிப்பதும் ஜீன்ஸ் போடுவதும் தொப்புள், தொடை தெரிய ஆடை அணிவது தான் சுதந்திரமா அல்லது சம உரிமையா

உதாரணமாக குழந்தைகளூக்குள் தகராறு வரும் போது பெண் குழந்தையை பார்த்து நீதான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்று தவறாக அறிவுருத்தாதீரகள் "அப்படி செய்தால் அது பெண் குழந்தையின் மூளையில் பதிந்து நாளடைவில் அண்ணன், தம்பி, கணவன், மகன் எல்லோருக்கும் தான் விட்டுக் கொடுத்து வாழவேண்டியவள் என அந்த பெண்குழந்தை மனத்தில் ஆழமாக பதிந்துவிடும் இந்த மாதிரி தவறுகளை மறந்தும் செய்துவிடாதீரகள்.உங்கள் வளர்ப்பில் ஆண் அடக்குபவன் பெண் அடங்க வேண்டியவள் என்ற நிலை முற்றிலும் மாற வேண்டும்
சில சமயங்களில் பெண்கள் உரிமைக்காக பேசினால் பஜாரி, அடங்காப்பிடாரி என்று ஆண்கள் சொல்லுவார்கள் சில முட்டாள் பெண்களும் அவரை ஆதரிப்பாரகள் ஆனால் அப்படி பேசாமல் இக்காட்டான சூழ்நிலை வரும் போது உதறிக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் ஓடுவது தான் எதிராளிக்கு உற்சாகத்தை கொடுக்கிறது அதற்கு இடம் கொடுக்காதீரகள்

முன்னேறிய நாடாக கருதப்படும் நான் வசிக்கும் அமெரிக்காவில் கூட இன்னும் பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் இன்னும் பல அமெரிக்க ஆண்களில் மனதில் இருக்கின்றது அதில் இங்குள்ள பெண்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டாரகள் என்று கூற முடியாது. அதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் வேண்டும். அதற்கு பெண்ணின் முழு முயற்சி தேவை

கூவத்தில் எப்படி சில லாரி தண்ணிர் ஊற்றி நல்ல நீராக மாற்ற முடியாதோ அது போலத்தான் இந்த ஆண்களும். ஆனால் தொடர்ந்து நல்ல தண்ணிர் ஊற்றிக் கொண்டிருந்தால் காலப் போக்கில் அது நல்ல நீராக மாற வாய்ய்புகள் உண்டு/ அது போல பெண்கள் மாற்றங்ககளை விரும்பினால் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் இதனால் பலனடையாமல் போகலாம் ஆனால் வருங்கால பெண்கள் நல்ல பலன் அடைய வாய்ப்புகள் உண்டு

இந்த பதிவை நான் ஏன் பெண்களுக்கா எழுதினேன் என்றால் குனிந்து நிற்பது நீங்கள் தான் . நீங்கள் தலை நிமிர வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதற்கு நீங்கள் முயற்சி செய்வீர்களா என்பதுதான் இப்பொழுது எழும் கேள்வி?

இறுதியாக என் நண்பர் கூறியதை நான் இங்கே கூற விரும்புகிறேன். பெண் அடிமை இன்னும் பெண்களிடத்திலே ஒழிய வில்லை,அப்புறம் ஆண் எங்கே பயப்படுவான்.

கடைசியில் இதை படிக்கும் ஆண்கள் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம். இங்கு வந்து படிக்கும் நீங்கள் என்னைப் போல நல்லவர்தான் என்பது எனக்கு தெரியும். அப்பாடி.......... நான் நல்லவன் என்பதையும் இங்கே வந்து இந்த பதிவை படிக்கும் ஆண்களையும் நல்லவர்கள் என்று ஒரு வழியாக இங்கே சொல்லிவிடேன்.ஹீ..ஹீஹீ. என் முதுகு தப்பிக்க இப்படி ஒரு வழி.....
தரமான கருத்துகள் வரவேற்கப் படுகின்றன..

8 comments :

 1. அநாவசியமான ஆடம்பர பழக்க வழக்கங்களையும் தூக்கி ஏறிகிறீர்களோ அப்பதுதான் நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியை தொட ஆரம்பிக்கிறீரகள் //

  மிக சரி..

  இது ஒரு வகை அடிக்ஷன் .. சங்கிலியால் கட்டப்படுகிறோம் என தெரியாமல் இருக்கிறார்கள் பெண்கள்..

  அற்புதமாய் பெண்களின் நல்லது கெட்டதை எழுதியுள்ளீர்கள்..

  ஆரம்பத்தில் அன்புக்காக அடங்கியே போகிறாள் பெண்.. ஒரு நிலையில் எல்லா கட்டுகளையும் உடைத்து வெளிவருகிறாள்..

  ஆனால் அந்நேரத்தில் அவளுக்கு எதிரியாக இருப்பதும் பெண்களே..

  பெண் என்றால் முதல் பட்டம் விபச்சாரி தான்.. அதையெல்லாம் தூசு என துடைத்துபோட்டு முன் னேறி காண்பிக்கணும் பெண்கள்..

  நல்ல ஆண்கள் , பெண்களை மதிப்பவர்கள் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறார்கள்.. ஆக பயப்படவேண்டாம்..

  அதே போல கொடூரமான பெண்களும் எப்போதும் இருப்பார்கள்.. துஷ்டரென விலக்கிடலாம்..

  அடுத்த்வர் வந்து கட்டுகளை அவிழ்ப்பார் என காத்திருக்ககூடாது.. நாமே நம் உரிமைகளை பெற்றுவிட முடியும்..

  மீண்டும் வாழ்த்துகள்.. நல்லதொரு பதிவு..

  ( மிக மகிழ்ச்சியாக இருக்கிறது . சிலர் இப்படி எதையும் எதிர்பாராமல் நல்ல கருத்தோடு பதிவு போடுவது..இப்படி நிறைய பேர் வந்தால் நாடு சீக்கிரம் முன்னேறும்.. )

  ReplyDelete
 2. பெண்ணுக்கு எது மிக அழகு தரும் அணிகலன் என புரிந்துகொள்ளணும்..

  அவள் கம்பீரமானவள்.. அவள் சக்தி.. ஒரு குழந்தையை பத்து மாதம் சுமக்கக்கூடிய வல்லமை பெற்றவள்.. அவளுக்கெதற்கு அணிகலன் என்ற ஆடம்பரம்.. இந்த அணிகலன்களே அவளின் முழுமையான சக்தியை வெளிக்கொணர தடையாக இருக்கிறது..

  அவளுடைய புற அழகு அடுத்த தடை..

  நிஜமான அக சக்தி வெளிவந்தாலே அவளுக்கு விடுதலை.. அதை அவளே வெளிக்கொண்டுவரணும்.. ஒவ்வொரு பிரச்னையையும் சவாலாக எடுக்கணும்..

  மிக அழகாக சொல்லியிருக்குது பதிவு..


  அதுமட்டுமல்ல , பெண்கள் சமமானவர்கள் என சொல்லி வளர்க்கப்படாத ஆணாதிக்கவாதி குழந்தைகளே அல்லல்படப்போகிறார்கள்..

  அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் தன் அன்னையை போல் அடங்கி ஒடுங்கி இருக்கும் மனைவி வாய்ப்பாள் என்பதாகவே இருக்கும்.. அங்குதான் அவனுக்கு மிகபெரிய தோல்வி காத்திருக்கும்.. மனைவி வேலைக்கும் போகணும்.. அடிமையாகவும் இருக்கணும்.. :)

  ஆக ஆண் குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்ணைப்பற்றி பெருமையாக எடுத்து சொல்லி வளர்க்கணும்.. எந்த வேலையும் இழிவல்ல என்பதை புரியவைக்கணும்.. செய்ய பழக்கணும்..

  ஆண் பெண்ணை நம்பியும், பெண் ஆணை நம்பியும் இருக்கக்கூடாது.. அன்பால் மட்டுமே அடிபணிந்து போகலாம்..

  ஈகோ எல்லாம் 50 வயது வரைதான் . அதற்கப்புரம் இருவருக்குமே அடுத்தவரின் துணை மிக அவசியமாகும்..

  ReplyDelete
 3. தரமான விரிவான தெளிவான பதிவு
  தற்காலத்திற்கு அவசியமானதும் கூட
  110 % தரமான பதிவு
  தொடர்ந்து வருகிறேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பெண்ணுக்கு அழகு தைரியம் - ஆனால் கர்வம் அழகில்லை ............. நான் அண்மையில் படித்த நல்ல பதிவுகளில் இதுவும் ஒன்னு சகோ. வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
 5. நல்ல அறிவுரைகள்.. அருமையான பதிவு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. ///இந்த பதிவை நான் ஏன் பெண்களுக்கா எழுதினேன் என்றால் குனிந்து நிற்பது நீங்கள் தான் . நீங்கள் தலை நிமிர வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.////
  ///இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த ஆண்கள் ஏன் இன்னும் பெண்கள் விஷயத்தில் பின் தங்கியுள்ளார்கள்//

  இந்த வரிகள் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் கீ ....பெண்கள் பல வகைகளிலும் வளர்ச்சியடைந்து இருக்கிறார்கள் ஆனால் அதை முறையாக நடைமுறை படுத்த தெரியவில்லை...அதனால் இப்போ நிறைய விகாரத்து..ஆணை அடக்கினால் பெண் வள்ர்ச்சியடைந்ததாக அற்தம் கொள்ளலாமா?ஆணும் பெணும் ஒத்து போக வேண்டும் அதற்க்கு ஆணும் பெணும் மனதளவில் பக்குவபட வேண்டும் முதிற்சியடைய வேண்டும்....அப்போது தான் குடும்பம் நல்ல முறையில் போகும் குழந்தைகளை ஆண் பெண் என்று பேதமில்லாமல் சரிசமமாக வளரும் ,வளர்க்க முடியும்...

  //கடைசியில் இதை படிக்கும் ஆண்கள் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம். இங்கு வந்து படிக்கும் நீங்கள் என்னைப் போல நல்லவர்தான் என்பது எனக்கு தெரியும். அப்பாடி.......... நான் நல்லவன் என்பதையும் இங்கே வந்து இந்த பதிவை படிக்கும் ஆண்களையும் நல்லவர்கள் என்று ஒரு வழியாக இங்கே சொல்லிவிடேன்.ஹீ..ஹீஹீ. என் முதுகு தப்பிக்க இப்படி ஒரு வழி.....///
  இதில் இருந்தே நீங்களும் ஆண்களை கண்டு பயப்படுகிறீர்கள் என்று தெரிகிறது...

  ReplyDelete
 7. பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் , பதிவின் வடிவம், அது சொல்லும் நோக்கம் மிக அழகு. நான் சொல்வதும் இதுவேதான் படிப்போ திறமையோ வேலைக்குச் செல்ல உயர் பதவியை அடைய மட்டுமே உதவுகிறது. ஆனால் வாழ்க்கைக் கல்வி பல நுட்பங்களை வளர்த்துவிடும். அவைதான் அவளை ஒரு அடிமையாக இல்லாமல் மகாராணியாக மாற்றும். மறந்துபோன இவற்றை நினைவுபடுத்த வேண்டும். பெண் நிமிர்தல் என்பது ஆணை அடக்குதல் அல்ல.

  ReplyDelete
 8. ம்ம்... வரிசையா அடுத்ததும் நல்ல பதிவா இருக்கே! வாழ்த்துகள்.

  //அமெரிக்காவில் கூட இன்னும் பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் இன்னும் பல அமெரிக்க ஆண்களில் மனதில் இருக்கின்றது அதில் இங்குள்ள பெண்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டாரகள் என்று கூற முடியாது.//

  ;-))))))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog