Wednesday, April 20, 2011

சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.





கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..!

எலிக்கு பூனையக் கண்டா பயம்..!

பூனைக்கு நாயக் கண்டா பயம்..!

நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..!

மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..!

அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!



இப்ப நம்பிறீங்களா வாழ்க்கை என்பது ஒரு வட்டம் மக்கா!!!!

பயந்த உங்களுக்கு பயம் நீங்கி சிரிக்க சில ஜோக்குகள்



டாக்டர்: உங்க மருமக ரொம்பப் பயப்படறா‌ங்க..

மாமியார்: ஆபரேஷன் பண்ணிக்கப் போறது நான் தானே? அவளு‌க்கு எ‌ன்ன பய‌ம்?

டாக்டர்: எ‌ங்க ஆபரேஷனை நல்லா பண்ணிடுவேனோன்னுதான் பயப்படறா‌‌ங்க

--------

ஒரு சர்ச்சில் எல்லோரும் முழங்கால் இட்டு பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கும் போது " சாத்தான் அங்கு வந்து அவர்கள் முன்னால் தோன்றினான். அதனைக் கண்டவுடன் எல்லோரும் அலறிக் கொண்டு வெளியே சென்றனர்.

சாத்தான் சுற்றும் மூற்றும் பார்த்த போது ஒரு வயதான ஆள் மட்டும் அழட்டி கொள்ளாமல் அங்கு உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டுருந்தார்.

அவரிடம் சாத்தான் சென்று நான் யார் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டான்.

அதற்கு அவர் அமைதியாக எனக்கு தெரியும் என்று பதில் அளித்தார்.

அப்படித் தெரிந்தும் என்னைக் கண்டு உனக்கு பயம் ஏதுமில்ல்லையா என்று சாத்தான் கேட்டான்.

அவர் எனக்கு பயம் ஏதும் கிடையாது என்றார்

அதற்கு சாத்தான் சொன்னான் நான் நினைத்தால் உன்னை ஒரு நொடியில் அழித்து விடுவேன் என்றான்

அப்படியும் அந்த பெரியவர் பயந்தமாதிரியாக தெரியவில்லை.

ஆச்சிரியப்பட்ட சாத்தான் நான் உன்னை அழித்துவிடுவேன் என்று தெரிந்தும் என்னைக் கண்டு பயப்படாத காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெரியவர் அமைதியாக நான் உன் சகோதரியைதான் கல்யாணம் பண்ணி 40 ஆண்டுகளாக அவளுடன் வாழ்ந்து வருகிறேன் என்றார்.

20 Apr 2011

2 comments:

  1. ஹிஹிஹி முதலாவது super

    ReplyDelete
  2. The Satan joke and the cockroach jokes are hilarious.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.