அன்னா ஹசாரே 21 ஆம் நூற்றாண்டின் மகாத்மா (இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது)
சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே (Anna Hazare ), மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் எழுச்சி, இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்த நிலையில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள இந்தியர்களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர்
அன்னா ஹசாரே தமக்காக ஏதும் கேட்கவில்லை இந்திய மக்களுக்காக "லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்' என்பதுதான் அவரது தரப்பு கோரிக்கை
ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக் கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் எனக்கு சரிதான். முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு வரவில்லை என்றால், அது மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற்கொள்ளவில்லை.மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது என ஹசாரே கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என் வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம். காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை. பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள் பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார்.
அன்னா ஹசாரே அவர்களின் ஊழல் எதிர்ப்பு போர் தீயாக பரவ வேண்டும். அந்த தீயில் ஊழல்வாதிகள் பொசுங்க வேண்டும். அதற்காக இணைய தளங்களின் மூலம் இந்த விழிப்புணர்வு பரப்பப்படவேண்டும். விளையாட்டிலும் இலக்கியத்திலும், சினிமா போன்ற கலை துறைகளிலும் உள்ள பிரபலங்கள் இந்த தேசத்தின் மீது தங்களுக்கு இருக்கும் உண்மையான பற்றை காட்டும் வகையில் அறிக்கை விட வேண்டும். ஈமெயில் SMS மூலமாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும். இது மற்றுமொரு சுதந்திரப் போராட்டத்திற்கான அறைகூவல்.
அன்னா ஹசாரே 21 ஆம் நூற்றாண்டின் மகாத்மா அவருக்கு நாம் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருக்கு கரம் கொடுப்போம் ஊழலை ஒழிக்க பாடுபடுவோம்.
தமிழகத்தின் சார்பாக பத்திரிக்கையாளர்களும் கல்லூரி பேராசிரியர்களும் நடிகர்களும் இதற்கு ஆதரவு தந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
நண்பர்களே ஊழலை எதிர்த்து போராடும் அன்னா ஹசாரே அவர்கள் ஒன்றும் வழக்கமான அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், ஒரு காந்தியவாதி. அதனாலதான் அப்துல்கலாம், ரஜினிகாந்த் போன்றவர்கள் முன் வந்து தயவு செய்து வாய்ஸ் தாருங்கள்.
ஏதோ ஒரு வழக்கமான அரசியல்வாதி அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்சி இதை செய்து இருந்தால் இந்தியனாகிய நானும் வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் ஒரு காந்தியவாதிக்கு ஆதரவு கொடுப்பதுதான் மிக சரியாக இருக்கும், இதுதான் மிக சரியான தருணம். அதனால்தான் சொல்கிறேன். தயவு செய்து அனைத்து பெரியவர்களும் ஆதரவு தெரிவித்து இந்தியாவை ஒன்று படுத்துங்கள். கிடைத்த ஒரே ஒரு அறிய சந்தர்ப்பமும் கை விட்டு போய் விடுமோ என்று ஆதங்கமாக இருக்கிறது. தயவு செய்து நாட்டின் நலன் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவு தெரிவியுங்கள் என்று இறைஞ்சுகிறேன்
நமக்கு
தமிழக மக்களே நீங்களும் இதை செய்வீர்களா? இல்லை இலவசங்களுக்காக உங்கள் உரிமைகளை விட்டு கொடுத்து தன்மானத்தை இழந்து நிற்பீர்களா/ தமிழகத்தில் தான் ஊழல் அதிகம்!!!! எனவே ஓன்று சேர்வோம் ...... ஒழித்திடுவோம் வாரீர்.....
அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதா என்றால் என்ன? (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=220515)
We Support Anna Hazare India Against Corruption
Right now, Anna Hazare, a 73-year-old Gandhian, sits in the burning sun fasting, and he will stay until death -- unless the government agrees to consider a powerful lawthat could rid Indian politics of the scourge of corruption. This "Modern Mahatma" is taking the utmost act of courage and determination to push through a bill that would give an independent body the power to punish corruption -- even in the Prime Minister's office. Across the country a movement has exploded, and a media storm of pressure has been sparked that's engulfing Singh. But dirty politicians are desperately trying to water down or kill the law. For the first time in forty three years, we have the chance to change the way politics is done. Let's join together and stand with Anna Hazare to tackle corruption and clean up Indian politics. This is the Biggest Ever Anti Corruption moment which is also Supported by Many Big People like Aamir Khan, Kiran Bedi and a Lot More.
You Can Know More About Him On: His WebSiteand Youtube Video About The Moment
Let us All Join our Hands and Support Him to take Final Strict Action Against Corruption.
ஜெயஹிந்த்..
சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே (Anna Hazare ), மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ளனர். இந்த திடீர் எழுச்சி, இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இந்த நிலையில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள இந்தியர்களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர்
அன்னா ஹசாரே தமக்காக ஏதும் கேட்கவில்லை இந்திய மக்களுக்காக "லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன.எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்' என்பதுதான் அவரது தரப்பு கோரிக்கை
ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக் கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் எனக்கு சரிதான். முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு வரவில்லை என்றால், அது மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற்கொள்ளவில்லை.மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது என ஹசாரே கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என் வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம். காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை. பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள் பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார்.
அன்னா ஹசாரே அவர்களின் ஊழல் எதிர்ப்பு போர் தீயாக பரவ வேண்டும். அந்த தீயில் ஊழல்வாதிகள் பொசுங்க வேண்டும். அதற்காக இணைய தளங்களின் மூலம் இந்த விழிப்புணர்வு பரப்பப்படவேண்டும். விளையாட்டிலும் இலக்கியத்திலும், சினிமா போன்ற கலை துறைகளிலும் உள்ள பிரபலங்கள் இந்த தேசத்தின் மீது தங்களுக்கு இருக்கும் உண்மையான பற்றை காட்டும் வகையில் அறிக்கை விட வேண்டும். ஈமெயில் SMS மூலமாக இந்த செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும். இது மற்றுமொரு சுதந்திரப் போராட்டத்திற்கான அறைகூவல்.
அன்னா ஹசாரே 21 ஆம் நூற்றாண்டின் மகாத்மா அவருக்கு நாம் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவருக்கு கரம் கொடுப்போம் ஊழலை ஒழிக்க பாடுபடுவோம்.
தமிழகத்தின் சார்பாக பத்திரிக்கையாளர்களும் கல்லூரி பேராசிரியர்களும் நடிகர்களும் இதற்கு ஆதரவு தந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
அப்துல்கலாம், ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள்
.இது ஒரு மிகவும் மிகவும் அறிய சந்தர்ப்பம். அப்துல்கலாம் அய்யா, ரஜினிகாந்த் போன்ற நல்ல உள்ளங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும், இளைஞர்கள் அனைவரும் அணி திரண்டு ஊழலுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடுவார்கள்.
நண்பர்களே ஊழலை எதிர்த்து போராடும் அன்னா ஹசாரே அவர்கள் ஒன்றும் வழக்கமான அரசியல்வாதி இல்லை. அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், ஒரு காந்தியவாதி. அதனாலதான் அப்துல்கலாம், ரஜினிகாந்த் போன்றவர்கள் முன் வந்து தயவு செய்து வாய்ஸ் தாருங்கள்.
ஏதோ ஒரு வழக்கமான அரசியல்வாதி அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்சி இதை செய்து இருந்தால் இந்தியனாகிய நானும் வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் ஒரு காந்தியவாதிக்கு ஆதரவு கொடுப்பதுதான் மிக சரியாக இருக்கும், இதுதான் மிக சரியான தருணம். அதனால்தான் சொல்கிறேன். தயவு செய்து அனைத்து பெரியவர்களும் ஆதரவு தெரிவித்து இந்தியாவை ஒன்று படுத்துங்கள். கிடைத்த ஒரே ஒரு அறிய சந்தர்ப்பமும் கை விட்டு போய் விடுமோ என்று ஆதங்கமாக இருக்கிறது. தயவு செய்து நாட்டின் நலன் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவு தெரிவியுங்கள் என்று இறைஞ்சுகிறேன்
நமக்கு
தமிழக மக்களே நீங்களும் இதை செய்வீர்களா? இல்லை இலவசங்களுக்காக உங்கள் உரிமைகளை விட்டு கொடுத்து தன்மானத்தை இழந்து நிற்பீர்களா/ தமிழகத்தில் தான் ஊழல் அதிகம்!!!! எனவே ஓன்று சேர்வோம் ...... ஒழித்திடுவோம் வாரீர்.....
அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதா என்றால் என்ன? (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=220515)
We Support Anna Hazare India Against Corruption
Right now, Anna Hazare, a 73-year-old Gandhian, sits in the burning sun fasting, and he will stay until death -- unless the government agrees to consider a powerful law
You Can Know More About Him On: His WebSite
Let us All Join our Hands and Support Him to take Final Strict Action Against Corruption.
ஜெயஹிந்த்..
அவரது முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நானும் இதை கொண்டு என் நண்பர்களிடம் சேர்ப்பேன்.
ReplyDeleteஇந்தியா, ஆரோக்கியமான பாதையில் முன்னேறி செல்லும் என்ற நம்பிக்கை துளிர்த்து இருக்கிறது.
ReplyDeleteஅண்ணா ஹசாரேவின் பின் அணித்திரள இளைஞர்களாகிய நாங்கள் தயார் எமது முந்தைய சமூகம் தான் அதனைத் தடுக்கப் பார்க்கின்றது .................... எம் வாழ்நாளில் வாழும் காந்தியாக அண்ணா எனக்குத் தெரிகிறார் .
ReplyDeleteபலே பிரபு நண்பர்களிடம் மட்டுமல்ல நீங்கள் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இதைப்பற்றி பேசுங்கள். புரியாதவர்களுக்கு புரிய வையுங்கள். நமக்கு தேவை நல்ல மாற்றம்.
ReplyDeleteசித்ரா மேடம் எனக்கு இந்த செய்தியை பார்த்ததும் மனதெல்லாம் ஒரு இனம் புரியாத சந்தோஷம். நமது நாட்டிலும் புரட்சி ஏற்படும் அது மற்ற நாட்டினரைப் போல அல்ல காந்தி காட்டிய வழியில்தான் என்று. உங்கள் எழுத்தால் நீங்களும் இதைப் பற்றி உங்கள் ப்ளாக்கில் எழுதி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், நன்றி
ReplyDeleteஇக்பால் செல்வன் உங்களைப் போல நல்ல இளைஞர்கள்தான் நம் நாட்டுக்கு தேவை. எந்த சமுகம் உங்களை தடுக்க பார்கிறதோ அதை உங்கள் உயிர் போனாலும் உடைத்து ஏறியுங்கள்.நம் நாடு வல்லரசாக ஆக வேண்டாம் அது நல்ல அரசாக ஆனால் போதும். முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteநிச்சயமாக ஒரு மிகப்பெரிய நல்லதொரு மாற்றம் ஏற்படத்தான் போகிறது.
ReplyDeleteநம்புவோம். நிச்சயம நடக்கும்.
பதிவுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம்.