உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 10, 2011

அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயண டைரி குறிப்புகள் 2 )


அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயண டைரி குறிப்புகள்  2 )

முதல் பாகம் படிக்க விரும்புவர்கள் இங்கே அமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயண டைரி குறிப்புகள்  1 ) க்ளிக் செய்யவும்.ஒரு வழியாக மக்கள் வெள்ளத்தில் மிதந்து குடும்பத்துடன் வெளியே வந்து என்னை பிக்கப் செய்ய வந்த காருக்காக நின்றபோது  ஹிரோயினை சுற்றி வரும் வில்லன் கூட்டத்தாரின் கார்கள் சுற்றி வருவது போல என்னை சுற்றி அநேக கார்கள் வந்தன கடைசியில்தான் நான் புரிந்து கொண்டேன் அது வாடகை கார்கள் என்று. அதன் பிறகு நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஒவ்வொருத்தராக வந்து எங்க சார் போணும்  சொல்லுங்க நான் கூப்பிட்டு போறேன் என்று கேட்டார்கள். வேண்டாம் என்று சொல்லியே பொறுமை இழந்த நான் கடைசியில் ஒருவனிடம் நான் பாத்துரும் போணும் என்னை கூப்பிட்டு போகிறாயா என்றதும் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அனைவரும் இடத்தை காலி பண்ணினார்கள். ஒருவழியாக காலைத் தென்றலில் மிதந்தபடி வீடுவந்து சேர்ந்தேன்.வீட்டிற்கு வந்து குடும்பத்தாருடன் ஒரு மணி நேரம் பேசிய பின்  பக்கத்து வீட்டு மாமிகளின் இசை கச்சேரி ஆரம்பிக்கும் ஓசை கேட்க ஆரம்பித்தது. அதாங்க கிச்சனில் அவர்கள் உருட்டும் பாத்திரங்களின் ஒசையும் அந்த கச்சேரிகளை ரசித்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் குக்கரின் விசில் சத்தமும் கேட்க ஆரம்பித்தன. வீட்டின் வெளியே ஆட்டோ,கார்,பைக், சைக்கிளின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தன். அதை கேட்ட பின் தான் இன்னும் நகரங்கள் உயிரோட இருக்கும் எண்ணம் வந்தது. நான் வசிக்கும் அமெரிக்காவில் இந்த மாதிரி வாழ்க்கை ஒரு உயிரோட்டமாக இருக்காது. உம்ம்ம்ம்மஇதையெல்லாம் பார்த்து ரசித்தவாறே மாமனாரிடம் என்னங்க அம்மையார் ஆட்சி வந்த பின் கரெண்ட் எல்லாம் எப்படி கட்டாகுதா இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் பெருமையாக கரெண்ட் கட் எல்லாம் அடிக்கடி போகாது தினசரி காலை 10 ல் இருந்து 11 மணிவரைதான் போகும் என்றார். அவர் என்ன முகுர்த்த நேரத்தில் சொன்னரோ 9 மணியளவில் கரெண்ட் கட்டாகியது. அவரும் ஆச்சிரியப்பட்டவரே மின்சாரவாரியத்திற்கு போன் செய்தார் அதற்கு அவர்கள் இன்று ஏதோ சர்விஸ் செய்கிறார்கள் என்றும் அதனால் மாலை 5 மணிவரை கரெண்ட் வாரது என்று கூறி என் வயித்து எரிச்சலை கொட்டிக் கொண்டார்கள்.நான் உடனே ஒரு குளியல் போட்டுவிட்டு குழந்தையை கூட்டிக்க்கிட்டு மொட்டை மாடிக்கு சென்று மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு என் குழந்தைக்கு கதை சொல்லியவாறு சுற்றிலும் நோட்டம் விட்டேன். அப்போது தென்றல் வேகமாக ஒரு பக்கத்தில் இருந்து விசியது என்னடா என்று பார்த்தால்  சேலை கட்டிய பெண்களின் கூட்டம் ஓன்று சந்தோசமாக பேசியபடி நின்றது. எங்களை போல அமெரிக்காவில் வசிக்கும் ஆண்களுக்கு சில்க் ஸ்மிதா அல்லது நமிதாவின் ஆட்டத்தை பார்த்தால் கூட அவ்வளவு சந்தோசம் வராது ஆனால் இந்த சேலை கட்டும் பெண்களை பார்த்தால் ஏற்படும் சந்தோசத்திற்கு இணையாக ஏதும் இருக்காது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வரும் ஆண்களுக்கு முன்னால் நீங்கள் சேலை காட்டி நின்றால் அவர்களுக்கு நீங்கள் ஒரு தேவதை போல இருப்பீர்கள். என் குழந்தையிடம் என்னடா அது என்ன லேடிஸ் ஹாஸ்டலா என்று கேட்ட போது அவள் சொன்ன பதிலில் இருந்து ஒரு வழியாக புரிந்து கொண்டேன் அது பெண்களின் மாறுவாழ்வு இல்லமென்றும் அது தமிழக அரசால் நடத்தப்படுகிறது என்றும் அறிந்ததும் மனதில் ஒரு சோகம் வந்து குடி கொண்டது.இந்த மாதிரி பெண்களுக்கு மறுவாழ்வு கண்டிப்பாக கொடுக்க வேண்டுமென்று நினைத்த உடனே கீழ் இருந்து  என்னங்க நான் வொர்க் போயிட்டுவாரேன் என்ற மனைவியின்   குரல் ஒலித்தது. அப்போதுதான் நமக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற உணர்வு.மறுவாழ்வு இல்லத்திலோ துணைவர்கள் இல்லாமல் பெண்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தார்கள் ஆனால் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நாமோ எப்படா இந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து மறுவாழ்வு வாழ போகிறோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. எல்லாம் இக்கரைக்கு அக்கறை பச்சைதான்.இப்படியாக சென்னையில் இரண்டொரு நாள் காலம் தள்ளியவாறு நெல்லைக்கு  ரயிலில் 2 டயர் ஏசியில் பயணம் செய்தேன். காலையில் நெல்லையில் இறங்கியதும் என் சகோதரன் தன் காரை எடுத்து வந்து எங்களை பிக்கப் செய்து நெல்லை டவுணுக்கு அவன் வீட்டிற்கு பேசியவாறே ஓட்டி சென்றான். அப்போது என் மனைவி வெளியே வேடிக்கை பார்த்தாவாறு வந்தவள் தீடிரென்று என் சகோதரனை பார்த்து கத்தினாள் என்னங்க நீங்க பேசிக்கிட்டே ராங்கான பாதையில் செல்லுகிறிர்கள் என்றாள் அதற்கு அவன் நான் சரியாகதான் செல்கிறேன் என்றவாறு காரை ஒட்ட்டினான் என் மனைவியோ ஐய்யோ இது ஒரு வழிபாதை என்று போட்டிருக்கிறதே என்றாள் அதற்கு அவன் சாலைவிதியை மீறியவாறு காலையில் போலீஸ் யாரும் 9 மணிக்கு முன்னால் வர மாட்டான் என்றவாறே வேகமாக ஒட்டி சென்றான் இப்படி போன்றவர்களின் விதிமீறல்களால் தான் பல விபத்துக்கள் ஏற்படுகீறது என்பதை ஏன் உணரமாட்டார்கள் என்பது எங்களுக்கு இன்னும் புரியவில்லை.

ஒரு வழியாக அவன் வீட்டிற்கு சென்றால்  வீட்டில் தென்னை மரமும் ,முற்றமும்  சிலு சிலு வென்ற காற்றும் அருமையாக இருந்தது. அங்கு குளிர்ந்த தண்ணிரில் குளித்து வீட்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு அங்கு இருந்து நாங்கள் கேரளா (திருவனந்தபுரம்) சென்றோம். (வாவ் தமிழகத்தில் இருந்து அங்கு போகும் ரோடு மிக அருமையாக போட்டிருந்தார்கள். நான் பார்த்து வியந்ததில் அந்த ரோடும் ஓன்று.)அங்கு எனது மூத்த சகோதரன் மிடில் ஈஸ்டில்  இருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்து விட்டு அவன் திருவனந்த புரத்தில் வாங்கிய வீட்டில் ரெஸ்ட் எடுத்து  கொண்டிருந்தான். குடும்பத்தோடு. அவனையும் குழந்தைகளையும் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த தடவையாவது பார்த்துவிடுவோம் என்று சென்றோம்.


Click to see LARGE size photo

அவன் கட்டிய வீடு மிகவும் ரம்மியமாக , எல்லாவித மரம் செடி கொடிகளுடன் இருந்தது . மிக சுத்தமான காற்று ,ஏசி என்பதற்கு அவசியம் இல்லாதவாறு இருந்தது.  அவன் வீட்டில் என்னை கவர்ந்தது அவனது கிச்சன் ஆகும் இரண்டு கிச்சன் ரூம்கள் அடுத்து அடுத்து ஓன்று மார்டனாகவும் மற்றோன்று பழைய மாடல் வீறகு அடுப்பு  வைத்து கட்டப் பட்டிருந்தது.  தமிழகத்தை பார்த்து விட்டு கேரளாவை பார்க்கும் போது  எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவர்கள் இன்னும் இயற்கையை  அழிக்காமல் இன்னும் பாதுகாத்து வருவதை பார்த்து.10 வருடங்களுக்கு பிறகு அவன் குழந்தையை பார்த்தோம். மூன்று சகோதர்களாகிய நாங்கள் சேர்ந்து குடும்பத்தோடு இருந்து பேசியது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.அங்கு தங்கிய நாளில் ஒரு நல்ல ஆயுர்வேதிக் பெண் டாக்டரை சந்தித்து விட்டு வரும் வழியில் ஒரு ஹோட்டலுக்கு சென்று, உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த போது ,அவர்கள் அன்றைய மெனுவை வாசலில் எழுதி வைத்திருந்ததை பார்த்ததும் எங்களுக்கு சிரிப்பு வந்தது .அதில் அவர்கள் hyderabad  biryani  என்று எழுதுவதற்கு பதிலாக hydera   bad  biryani என்று எழுதி இருந்தார்கள். கடைக்காரகளிடம் அதை கூப்பிட்டு சொன்ன போதிலும் நாங்கள் சொன்னது அவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அவர்களும் எங்கள் கூட சிரித்து விட்டு போனார்களே தவிர மாற்றி எழுதவில்லை.

 என் பயணம் இன்னும் தொடரும்.....

மீண்டும் அடுத்த பதிவில் குற்றாலம், மதுரை, பெங்களுர் ,சென்னை, ஈரோடு கடம்பூர், துபாய் போன்ற இடங்களுக்கு சென்ற பயண அனுபவம் பற்றி எழுதுகிறேன். ( அடுத்த பதிவில் சென்னையில் உள்ள ஆயுள் கைதி வரைந்த அரசியல் தலைவர் ஒவியம் இடம் பெறும். யார் அந்த ஆயுள் கைதி அவர் வரைந்த அரசியல் தலைவர் யார் ? )

5 comments :

 1. நீங்கள் ரசித்தவற்றை ரசனையுடன் பகிர்ந்து கொள்கிரீர்கள். படங்களும் நல்லா இருக்கு,

  ReplyDelete
 2. மூன்று சகோதர்களாகிய நாங்கள் சேர்ந்து குடும்பத்தோடு இருந்து பேசியது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

  மகிழ்ச்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. சகோதரர் வீடு அசத்தலாய் இருக்கிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog