Thursday, October 13, 2011

வம்பை விலைக்கு வாங்கும் நெல்லைக்காரர்கள்

மதுரைக்காரர் ஒருவர் நெல்லைக்காரரை கூப்பிட்டு என்கிட்ட கொஞ்சம்  ஊர் வம்பு  இருக்கு.  உடனே உங்க பையனை கூப்பிடுங்க என்றார் . நெல்லைக்காரர் எதுக்கு என்று கேட்டார்?
என் பையன் ஊர் வம்பை விலைக்கு வாங்குவான்னு நீங்கதானே சொன்னீங்க! அதுதான் கொஞ்சம் வித்து  நாலு காசு பாக்கலாமுனுதான்



நெல்லை பையன் நாம் ஃப்ரெண்ட்ஸா இருப்போமுனு ஒரு பெண்ணிடம் சொன்னா, அங்கே காதல் ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்.
நெல்லை பொண்ணு நாம் ஃப்ரெண்ட்ஸா இருப்போமுனு ஒரு பையனிடம் ஒரு பொண்ணு சொன்னா அங்கே காதல் ஊத்திகிச்சுன்னு அர்த்தம்



நெல்லைகாரனின் புலம்பல்:

எனக்கு மூணு வயசு இருக்கும் போது எல்லா பெண்களும் என் கிட்ட முத்தம் கேட்டாங்க நானும் கொடுத்தேன். இப்ப அதை நான் திருப்பி கேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க.. நன்றி கெட்ட உலகமடா!

கையில காசு இல்லைன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க. ஆனா கடன் வாங்க முடியும். இதை சொன்னா நம்மல ஒரு மாதிரியா பார்க்கிறானுங்க

ரோட்ல போற பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க. வீட்ல போய் பார்த்தா மாப்ளேன்னு கும்பிடுறாங்க.



மதுரைக்கார நண்பன் நெல்லைக்கார நண்பணிடம் பேசும் போது நண்பா மும்தாஜ் ஞாபகமாக ஷாஜகான் தாஜ்மாஹாலை கட்டினாருடா என்று சொன்னான் அதற்கு நெல்லைகாரன் சொன்னான் போடா முட்டாபயல நானா இருந்த அவ தங்கச்சியை கட்டி இருப்பேன்.



ராவா குடிச்சவனும்...ராப்பகலாக படிச்ச நெல்லைகாரனும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.

இப்படிக்கு : எக்ஸாம் எழுதியே இடிஞ்சு போன நெல்லை மாணவர்கள் சங்கம்



நெல்லை டீச்சர் :இதுவரை நடத்தி முடிச்ச பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தா தயங்கம கேளுங்க என்றார்.
அதற்கு நெல்லை மாணவன் : டீச்சர் நீங்க கணக்கு டீச்சரா இல்லை இங்கிலீஷ் டீச்சரா என்று கேள்வி கேட்டான்.

  

ஒருவர்: என்ன .....மந்திரி நியூஸ் பேப்பரைப் பார்த்துட்டு கோவமாப் போறார்.
மற்றவர்: ஒரு சின்ன எழுத்துப் பிழைக்குத் தான் இத்தனை கோவமாம்.
மந்திரி சனியன்று பாளையங்கோட்டைக்கு விஜயம் செய்தார்ன்னு போடறதுக்கு பதிலா மந்திரி சனியன் பாளையங்கோட்டைக்கு விஜயம் செய்தார்ன்னு போட்டாங்களாம்!



நெல்லை பஞ்ச்:
அதிகமா மேக்கப் போடுற "பொண்ணும்" ரொம்ப நாளா டீக்கடையில் தூங்குற " பன்னும் " நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.



நான் படித்து ரசித்த ஜோக்குகளை  எனது வழியில் மாற்றி  நெல்லை வாசகர்களுக்காக வாரி வழங்குகிறேன். ஏல என்னல சும்மா ஜோக்கு அடிச்சதுக்கெல்லாம் அருவாளை தூக்குகிறிங்க. அதை கிழே போட்டுட்டு அல்வா எடுத்து  வாங்கல என் பாவி மக்கா

7 comments:

  1. அசத்தலான ஜோக்ஸ் பாஸ்

    ReplyDelete
  2. எலேய் எடுரா அந்த அறுவாள..!!:))

    ஆரப்பத்தி ஆரு பேசுறது?..

    நம்மகிட்டயே வேலைய காண்பிக்கிறீரா சார்வாள்..?.

    ReplyDelete
  3. எல்லாம் குறுஞ்செய்தியாக இருந்தாலும் அதையும் பதிவுக்கு ஏத்த மாதிரி மாத்தி போட ஒரு இது வேணும்...

    ReplyDelete
  4. அசத்தல் ஜோக்ஸ்
    அதைக் கொடுக்கிற விதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள் த.ம 3

    ReplyDelete
  5. நல்ல நகைச்சுவைகள் அருமை அண்ணே

    ReplyDelete
  6. ஜோக்செல்லாம் ஓக்கேதான் ஏன் நெல்லைக்காரர்கள்னு தனியா சொல்ரீங்க?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.